நீங்கள் நிறையப் பேசுகிறவரா? நீங்கள் அடிக்கடி குறை சொல்வீர்களா?
>> Wednesday, February 28, 2007
நீங்கள் நிறையப் பேசுகிறவரா? நீங்கள் அடிக்கடி குறை சொல்வீர்களா?
பொருளாதார நிபுணர் : இந்தியா! என்ன ஒரு முன்னேற்றம். பொருளாதாரம் என்னம்மா வளருது?
சாதாரண பொதுஜனம் :ஆமா! ஆமா! சுவர்க்கத்தை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கு. அதனால் கடவுள்தான் காப்பாத்தணும்.
இதுபோல், சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டேயிருப்பது, ஒரு மனக்குறைபாடு. பேசுங்கள். நன்றாய்ப் பேசுங்கள். அது விழிப்புணர்வை அதிகப்படுத்தும். அதே நேரத்தில், சுயக்கட்டுப்பாடு இல்லாமல் வாயிலிருந்து வந்ததெல்லாம் அளந்து விட்டுக் கொண்டிருந்தால், அது உங்களை விழிப்புணர்வின்மையில் ஆழ்த்தும்.
நீங்கள் அடிக்கடி குறை சொல்வீர்களா?
அம்மா : ராஜி, பெரியவனானா என்ன ஆவே?
ராஜி : மிருகங்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்...
அம்மா: ஏன்?
ராஜி : ஏன்னா! மிருகங்கள்தான் டாக்டர் பற்றிக் குறை சொல்லாது.
நான்கு பேர் சொல்லும் குறைகளுக்குப் பயப்படுபவர்கள்... இந்த ஜென்மத்தில் ஜெயித்ததாக சரித்திரமில்லை.
மற்றவர்கள் குறை சொன்னால், நீங்கள் நிச்சயம் குறைந்து போக மாட்டீர்கள்.
குறை சொல்வதை மிகைப்படுத்திப் பார்க்கும் பலவீனப்பட்ட மனம், பலமானால் யாரும் உங்களைப் பாதிக்க முடியாது.
நேருக்கு நேர் அசிங்கமாய்ப் பேசினால்கூட, அழகாய் அந்தச் சூழ்நிலையைக் கையாண்டு, அதனால் எந்தப் பாதிப்பும் அடையாமல், ஆனந்தமாக இருப்பீர்கள்.
அரவிந்தன் மிகவும் நல்லவர், உண்மையப் பேசுபவர். ஆனால் கோபக்காரர்.கண்ணனோ பொய் சொல்வதில் வல்லவர். மக்களிடம் மிகவும் சாந்தமாய்ப் பேசுவார்.
இவ்விருவரையும் இந்த மாறுபட்ட குணங்களால் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளுவதைவிட, முதலாமவரிடம் இருக்கும் கோபத்தை விட்டுவிடுங்கள். இரண்டாமவரிடம் இருக்கும் பொய்யை விட்டுவிடுங்கள்.
முதலாம் நபரின் நல்ல குணத்தையும், இரண்டாம் நபரின் நல்ல குணத்தையும் எடுத்க்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்யும்போது, அன்னப் பறவையாவீர்கள். அன்னப்பறவை, எவ்வளவுதான் பாலில் தண்ணீர் கலந்திருந்தாலும், பாலை மட்டும் குடிக்கும்.
இதேபோன்று உலகில் மற்றவரின் நல்ல கருத்துகளை
மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆனந்தப் பறவையாக மாறுவீர்கள். ஆனந்தமாய்ச் சிறகடிப்பீர்கள்.
எனக்கு சக்தி குறைபாடு. உடல் அடிக்கடி சோர்வு அடைந்துவிடுகிறது. நான் என்ன செய்ய?
நீங்கள் சுட்டிக்காட்டும் சக்திக்குறைவு நிஜமானதல்ல.
உடல் சோர்வு உங்களை விட்டு ஓடிப்போகும் அளவிற்கு, சுறுசுறுப்பு உள்ளே நுழைய அனுமதியுங்கள்.
ஏதாவதொரு வேலையைச் செய்துகொண்டே இருங்கள். ஆனந்தம் பிறக்கும். அதில் புதிய சக்தியும் தோன்றும்.
0 comments:
Post a Comment