இரத்தக் காய்ச்சல்
>> Saturday, February 10, 2007
இரத்தக் காய்ச்சல்
அடிபட்டால் ஏற்படுகிற காயத்தின் வழியாக கிருமிகள் இரத்தத்தினுள் சென்று ஏற்படுகிற நோய். மனிதர்கள் அல்லது விலங்குகளின் மலத்தில் வளருகிற இக்கிருமி சாலை விபத்துகளின் போது மனிதர்களை எளிதில் பாதிக்கிறது.
கீழே விழுவதால் ஏற்படுகிற சிராய்ப்பு, காது குத்துதல் மற்றும் பச்சை குத்துதல், ஊசி மற்றும் கூரிய முனைகளால் ஏற்படுகிற காயம், காலில் முள் குத்துதல், சிறு குழந்தைகளுக்கு தொப்புள் கொடியை சுத்தமில்லாத கத்தியால் வெட்டுதல், காதில் சீழ் போன்றவைகளின் போது இந்நோய் ஏற்படுகிற வாய்ப்புகள் உள்ளன.
அறிகுறிகள்
சீழ் வடிகிற புண் (சில பொழுதுகளில் புண் ஆறியிருந்தாலும் இந்நோய் வரலாம்)
.
விழுங்குவதில் சிரமம், தாடை இறுக்கம், கழுத்து தசைகளின் இறுக்கம், கடுமையான வலியுடன் கூடிய வலிப்பு, உடல் முழுவதும் விரைப்பாகி கழுத்தும் முதுகும் பின்னோக்கி வளைந்து விடுதல், சத்தத்தைக் கேட்டால், வெளிச் சத்தைப் பார்த்தால் உடல் விரைப்பு மேலும் அதிகமாகுதல், சிறு குழந்தைகளுக்கு பிறந்த பத்து நாள்களில் தொடர்ந்து அழுதல், பால் உறிஞ்ச முடியாமை தொப்புளில் சீழ், தாடை இறுக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதை எளிதில் உறுதிப்படுத்த முழங்காலுக்கு கீழ் லேசாக தட்டினால் பாதம் விசுக்கென்று தூக்கும் (இயல்பாக அப்படி இராது). இரத்தக் காய்ச்சல் உறுதிபடுத்தினால் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும். இதை எளிதில் தடுக்கலாம். இரத்தக் காய்ச்சல் தடுப்பு ஊசிகளை குழந்தைகளுக்கு முறையாக போடவேண்டும். பெரியவர்களுக்கும் காயம் பட்டால் போடுவது அவசியம்.
0 comments:
Post a Comment