குழந்தைகள் விடாமல் அழுது கொண்டிருந்தால்
>> Wednesday, February 7, 2007
குழந்தைகள் விடாமல் அழுது கொண்டிருந்தால்
சிறு குழந்தைகள் விடாமல் அழுது கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு சுளுக்கு, உறை விழுந்துவிட்டது என்றும், குடல் ஏற்றம் என்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளை டாக்டரிடம் காண்பிக்காமல் அதற்கென்று தனியாக இருக்கும் அனுபவசாலி நபர்களிடம் சென்று குழந்தைகளை க் காட்டுகிறார்கள். அவர்கள் குழந்தைகளை தலைகீழாகத் தொங்கவிட்டு என்னவோவெல்லாம் செய்து, குணப்படுத்துகிறார்கள். இந்த முறை சரிதானா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மாலதி சத்தியசேகரன்.
''குழந்தைகள் அழுவது என்பது, ஒரு வகை வெளிப்பாடுதுதான். வாய் திறந்து பேச முடியாத குழந்தையால், 'அய்யோ! என் உடம்பில் பிரச்னை. என்ன கவனியுங்களேன்! என்று சொல்லாமல் சொல்வதுதான் அழுகை. வயிறு பசிக்குது துணி ஈரமாகி விட்டது என்கிற மாதிரி சாதாரண காரணங்களால் குழந்தை அழலாம். அல்லது மார்பில் சளி; வயிற்று வலி போன்ற பெரிய காரணங்களால்கூட குழந்தை அழும். இந்த அழுகையை ஒரு எச்சரிக்கையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை ஏன் அழுகிறது என்கிற காரணத்தை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும். சின்னச் சின்ன காரணமாக இருந்தால் குழந்தையை நம் தோளில் சுமந்து, தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாலே போதும். நாம் ஆதரவாக இருக்கிறோம் என்கிற உணர்வே குழந்தைய ஓரளவுக்குக் குணப்படுத்தி விடும்.
ஆனால், குழந்தை வாய் விட்டு வீல், வீல் என்று அழுகிறது என்றால், ஒரு குழந்தை நல மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியம்.
அதை விட்டுவிட்டு குழந்தையை தலைகீழாகப் பிடித்து தொங்க வைப்பதோ, உருவிவிடுவதோ, உருட்டி விடுவதோ கூடாது. இப்படிச் செய்வதன் மூலம் குழந்தையின் மூளயில் ரத்தம் கசிந்து உயிருக்குக்கூட ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவ்வாறு செய்யவே வேண்டாம்.''
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR
0 comments:
Post a Comment