இவ்வளவு பெரிய அரண்மனை, சத்திரமா?''
>> Thursday, March 1, 2007
இவ்வளவு பெரிய அரண்மனை, சத்திரமா?''
இரவு தங்குவதற்காக ராஜாவின் அரண்மனைக்கு வந்தார் ஒரு துறவி.
''இந்த சத்திரத்தில் இரவு தங்கிக் கொள்ளவா?'' என்று ராஜாவிடம் கேட்டார். ராஜாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
''என்ன, இது சத்திரமா?'' கோபமாகக் கேட்டான் ராஜா.
''ஆமாம். இது சத்திரம்தானே!''
''எப்படி சொல்கிறீர்கள்? இவ்வளவு பெரிய அரண்மனை, சத்திரமா?''
''சரி, உனக்கு முன்னால் இந்த அரண்மனையில் இருந்தது யார்?''
''என் அப்பா!''
''அவருக்கு முன்னால்?''
''என் தாத்தா!''
''அவருக்கும் முன்னாள்?''
''அவருடைய அப்பா!''
''அப்படியென்றால் எல்லோரும் கொஞ்ச கொஞ்ச காலம் இங்கே தங்கிச் சென்றிருக்கிறார்கள். சத்திரத்தில்தானே இப்படி தங்கிச் செல்வார்கள்?'' துறவி சொன்னதன் அர்த்தம் அரசனுக்குப் புரிந்தது.
0 comments:
Post a Comment