**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

Showing posts with label பயங்கரவாதம். Show all posts
Showing posts with label பயங்கரவாதம். Show all posts

புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2)

>> Monday, July 22, 2013

இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.

குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1

"இந்து-முஸ்லிம் கலவரம்" என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், "இனச் சுத்திகரிப்பு" என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.

ஆச்சரியமாக இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புத்தமதத் துறவிகள்! "ஆசையே துன்பங்களுக்குக் காரணம்" என போதித்து "உயிர்களைக் கொல்லாமை"யைக் கொள்கையாகக் கொண்டிருந்த புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள்!

முஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் கதறக்கதற வெட்டிச் சாய்க்கும் பௌத்த காவிகள்.


கலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற அசோகர், ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்து உயிரற்ற ஜடமாகக் கிடப்பதைக் களத்தில் கண்ட, அக்கணத்திலேயே போர்க் கவசத்தைத் துறந்து வாழ்நாளில் இனிமேல் போர் புரிவதில்லை என உறுதி பூண்டதோடு, அதற்குப் பின்னர் வாழ்க்கை முழுவதும் புத்தரின் "உயிர்களைக் கொல்லாமை" கொள்கையைப் பரப்புவதில் செலவழித்ததாக வரலாறு கூறுகிறது.

போர்புரிவதைத் தர்மமாக எண்ணிய மாபெரும் மன்னர்களையே சாத்வீகமானவர்களாக மாற்றியமைத்த புத்தரின் கொள்கையை இன்றைய புத்த மதத்துறவிகள் மாற்றியமைக்கிறார்களா என்ன?

புத்த மதத்தின் அடிப்படையான மூன்று (புத்தம், தர்மம், சங்கம்) ரத்தினங்களைக் குறிக்கும் வகையில் 969 என்ற பெயரில் மியான்மரில் துவக்கப்பட்ட அமைப்பு, புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துவக்கப்பட்டது எனத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால், "அஸின் விராத்து" என்ற புத்த பயங்கரவாதி இந்த அமைப்பில் சேர்ந்ததிலிருந்து அதன் பாதை புத்தரின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சாவு மணி அடித்தது.

இந்தியாவுக்கு ஒரு பிரவீன் தொகாடியா, தமிழ்நாட்டுக்கு ஒரு இராமகோபாலன் போன்று பர்மாவுக்கு விராத்து என்று சுருக்கமாகச் சொன்னால் இவனைக் குறித்து புரிந்து கொள்வீர்கள். தன்னைத் தானே "பர்மாவின் பின் லேடன்" என்று அழைத்துக் கொள்ளும் இவன் தனது மேடைப்பேச்சுகளிலும் இணைய தளங்களிலும் பகிரங்கமாகக் கொக்கரிக்கும் ஸ்லோகன் "பர்மிய முஸ்லிம் பெண்களைத் தேடித் தேடிக் கற்பழியுங்கள்" என்பதே.

பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.

அன்பும் கருணையும் புத்தரின் அடிப்படை முழக்கங்கள் என்கின்றனர். ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் தத்துவங்களைக் கடைபிடித்த துறவிகள், சிறு எறும்பைக் கூடத் துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பாதம் படும் இடங்களில் எல்லாம் விசிறி கொண்டு வீசிக் கொண்டு நடப்பர் என நாம் சிறுவயதில் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

அத்தகைய தத்துவங்களைப் பரப்புவதாகக் கூறிக்கொண்ட 969 அமைப்பில், விராத்து இணைந்த பின்னரான நவீன தத்துவங்களில் சில:

நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக் கொண்டு தூங்க முடியாது.

நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை புத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்.

கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக புத்த-இஸ்லாமியக் கலப்பு.

அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களைக் கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.

மதமும் இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.

இஸ்லாமியரின் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்
.

மேற்கண்டவையெல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டும்தான்.

இத்தகைய விஷக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே வன்முறையினைத் தூண்டியதோடு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்குத் தலைமை தாங்கி 8 முஸ்லிம்களைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸின் விராத்தை மியான்மர் அரசு கைது செய்து 2003ஆம் ஆண்டில் சிறையில் அடைத்தது.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற விராத்தை, அரசியல் காரணங்கள் சொல்லி 2010 ஆம் ஆண்டே விடுவித்தார் மியான்மர் அதிபர் தைன் சைன். விராத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாமல், அவனது பிரிவினைவாதக் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பாதுகாத்தும் வருகிறார் அதிபர் தைன் சைன்.

சிறையிலிருந்து விடுதலையான விராத்துவின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் பன்மடங்கானது. தற்போது பர்மாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுவதற்கு இவனது நடவடிக்கைகளும் இவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் அதிபர் தைனுமே காரணம்!

969 அமைப்பு மூலம் விராத்து பரப்பும் வன்முறைப் பேச்சுகளால் தூண்டப்பட்டு, புத்த துறவிகளின் தலைமையில் முஸ்லிம்களின்மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் என முஸ்லிம்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பிடம் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்குக்கூட மியான்மரின் தைன் அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. சில வசதி படைத்தவர்கள் மட்டும் பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துவிட்ட நிலையில், ஏழைகள் செல்வதற்கு இடமில்லாமல் சொந்த நாட்டினுள்ளேயே அகதிகளாய் ஊர் ஊராகச் சுற்றிவரும் பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

பர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதையும் எஞ்சியுள்ள இலட்சக்கணக்கானோர் நாடு கடத்தப்படுவதையும் கண்களால் கண்ட Human Rights Watch வெளியிட்ட153 பக்கங்கள் அடங்கிய கண்ணீர் அறிக்கையின் பெயர் "உங்களால் பிரார்த்திக்க மட்டுமே இயலும்" - All You Can Do is Pray

அன்பைப் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகள் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய தவறான வதந்திகளைப் பரவ விட்டுப் பிற மக்கள் மனதில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைத்தார்கள் என்று கார்டியன் கடந்த 18 ஏப்ரல் 2013 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் விராத்துவின் பயங்கரவாத முகத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் தாக்குதலில் தற்போது முழு வெற்றி கிடைத்தால், பர்மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இம்முறையினை விரிவாக்குவோம் எனக் கொக்கரித்துள்ளான் விராத்து.

(காண வேண்டிய வீடியோ : http://www.guardian.co.uk/world/video/2013/apr/16/burma-bin-laden-buddhist-monk-video ) விராத்துவின் பயங்கரவாத முகத்தை ஆதாரங்களுடன் விவரித்து, ஜூலை 1, 2013 இன் அட்டைப்படக் கட்டுரையாக டைம் இதழும் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விதழை பர்மா அரசு தடை செய்தது. பர்மா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பு நடத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மாதிரியே இது.

பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.

துறவிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் பின்னாளில் அது தமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காண முடிகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்தத் துறவிகளின் இந்த இன அழிப்பிற்கு எதிராக இதுவரை வாயைத் திறக்காததில் பர்மாவில் துறவிகளின் ஆளுமை பயங்கரம் உறைய வைக்கிறது.

"969 அமைப்பின் இந்த இன வன்முறையினைச் சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வில்லையேல், ஜெர்மனியின் நாஜி இன அழிப்பின் மறுவடிவமாக 969 அமைப்பு மாறும்!" எனச் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய புத்தமதம், பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நிலையில் சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் மக்களின் மனதில் தஞ்சம் புகுந்தது பழைய வரலாறு.

இந்திய மண்ணில் முன்னொரு நாளில் தனக்கு ஹிந்துத்துவா செய்த அதே சூழ்ச்சியை, புத்தம் இன்று பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை, முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ ஃபாசிஸத்தின் நூற்றாண்டு காலத் திட்டமிட்ட சதிகளுடன் இணைத்து விரிந்த பார்வை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

- அபூ ஸாலிஹா

பகுதி-1 | பகுதி-3  (விரைவில்)

Thanks to source: SATYAMARGAM

மேலும் படிக்க... Read more...

இலங்கை : முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்.

>> Sunday, March 17, 2013

தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம்களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும்.

சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம்களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதிகளும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல்பட்டு வருவது ஆச்சரியமானதாகும்.

பர்மா பாணியில் முஸ்லிம் படுகொலைக்களமாக இலங்கையை மாற்ற இனவாதிகள் துடிக்கின்றனர். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கவும் அவர்களது அரசியல், ஆன்மீகத் தளங்களைத் தகர்க்கவும் திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். சட்டத்தின் கைகளை இலங்கை அரசு கட்டிப் போட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயங்களை அழிக்கும் நடவடிக்கையாக 450 வருடம் பழமை வாய்ந்த தர்கா ஒன்று சிங்களத் துறவிகளாலும் இனவெறி கொண்ட இளைஞர்களாலும் தகர்த்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. அப்போது காவல்துறை கையை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது.

இனவெறி வானொலி எப்.எம். அலைவரிசையினூடாக பகிரங்கமாக அழைப்பு விடுக்கப் பட்டு தம்புள்ளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜித் சேதமாக்கப்பட்டது. மஸ்ஜிதை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் அணிதிரண்டு சென்று இதைச் செய்தபோதிலும், பௌத்த துறவிகள் அதிகாரத் தோரணையில் செயற்பட்ட போதும் இலங்கை பாதுகாப்புப் படைகள் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். எவர் மீதும் சட்டத்தின் எந்த அதிகாரமும் பாயவில்லை.

குருநாகலை எனும் பகுதியில் இருக்கும் இரு சின்ன பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த துறவிகள் கிளர்ச்சி செய்தனர். பள்ளியைச் சூழ இருந்து பௌத்த மதக் கிரிகையைச் செய்தனர்.

தெஹிவளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜிதில் தொழுகை நடத்தக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குர்நாகலில் குளியாப்பிடி எனும் பிரதேசத்தில் பௌத்தத் துறவிகளும் இனவாதிகளும் இணைந்து நடத்திய ஊர்வலத்தில் பன்றியின் படம் வரையப்பட்டு அதில் ‘அல்லாஹ்’ என எழுதப்பட்ட படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு பொம்மை செய்து அதில் அல்லாஹ் என எழுதி கொடும் பாவி எரித்தனர். இருந்த போதும் இதில் ஈடுபட்ட எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அநுராதபுரத்தில் ஒரு பகுதியில் குடியிருக்கும் முஸ்லிம்கள் அந்தப் பகுதியை விட்டு வேறு இடம் செல்ல வேண்டும் என்றும் அங்கு அமைந்துள்ள பள்ளியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் எச்சரிக்கை விட்டனர். அப்பகுதி மக்கள் போலிசில் முறையிட்டனர். அதற்கு பின்னரும் சென்ற ஹஜ்ஜுப் பெருநாள் இரவு நேரத்தில் அந்தப் பள்ளிவாசல் இனவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தினத்தில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சிக்குப் பின்னர் கூட சட்டத்தின் கண்கள் இறுக மூடிக்கொண்டே இருந்தது.

காலி, கேகாலை உள்ளிட்ட நான்கு பிரதேசங் களில் உள்ள மஸ்ஜிதுகள் மீது இரவு நேரத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டு ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டன. எனினும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

மாலை வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் மூன்று முஸ்லிம் மாணவிகளை ஒருவர் ‘ஹிஜாப் அணியக் கூடாது’ எனக் கூறி தடியால் அடித்து எச்சரித்துள்ளார். அதுகுறித்து போலீசில் புகார் செய்து சம்பவ இடத்திற்குச் சென்ற போது; அங்கு ஒருவர் நின்றுள்ளார். அவர் ஒரு மன நோயாளி எனக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் எம்மை அடித்தவர் இவர் இல்லையென்று கூறியபோதிலும் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களை எச்சரிக்கும் இந்த நடவடிக்கை மனநோயாளியின் செயல்பாடு எனக்கூறி மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கொழும்பு, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் மாடு அறுக்கும் இடங்களுக்குச் சென்ற பௌத்த துறவிகளும் இனவாதிகளும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டே இருக்கின்றது. ‘முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டாம்’ எனப் பிரச்சாரம் செய்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடராக நடைபெற்று வருகின்றது. சிங்கள மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் சென்று முஸ்லிம் விரோத மனப்பான்மையை ஊட்டும் விதமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. ‘முஸ்லிம் ஹோட்டல்களில் உண்ண வேண்டாம். அவர்கள் உணவில் மலட்டுத் தன்மை ஏற்படுத்தக் கூடிய மருந்துப் பொருள் போட்டுத் தருகின்றனர்’ என்ற பிரச்சாரத்தால் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களது ‘வட்டிலப்பத்தை’ சிங்கள சகோதரர்கள் விரும்பி உண்பார்கள். பெருநாள் என்றாலே வட்டிலப்பம் வேண்டும் என்று கேட்பார்கள். இந்த நட்புறவை சிதைக்கும் விதத்தில் உங்களுக்குத் தரும் வட்டிலப்பத்தில் முஸ்லிம்கள் எச்சில் துப்பித் தருகின்றனர் எனப் பிரச்சாரம் செய்து வெறுப்பை ஏற்றி வருகின்றனர்.

இலங்கை ஜம்இய்யத்ததுல் உலமா வழங்கும் ஹலால் சான்றிதழ் மூலம் இலங்கை உற்பத்திகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறைந்த தொகையையே பெறுகிறது. இருப்பினும் இதனால் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோடிக்கணக்கில் நிதி சேர்த்து அல்காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கி வருவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு வளர்க்கப் பட்டு வருகின்றது.

மஹர சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் 100 வருடங்களாக இருந்து வருகின்றது. அந்தப் பள்ளியை அகற்றக் கோருகின்ற அதே வேளை அந்தப் பள்ளியின் சுவரில் பன்றி உருவத்தை வரைந்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியுள்ளனர். அவர்கள் வெளியே இருக்கும் துண்டுப் பிரசுரங்களில் ‘அல்லாஹ் - பல்லா’ (சிங்களத்தில் நாய் என்பது இதன் அர்த்தமாகும்)

‘பொது பல சேனா’ என்ற ஒரு அமைப்பே இந்த தீவிரப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது. அவ்வப்போது வேறு வேறு பெயர்களில் சில இனவாத செயல்களையும் செய்து வருகின்றனர். இவ்வாறு பகிரங்கமாக இனவாத செயல்பாடுகள் முன்னெடுக்கப் பட்டும் கூட இலங்கை அரசு இதனைக் கட்டுப் படுத்த எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்த பாயாவையும் சந்தித்துப் பேசிய பின்னரும் கூட எந்த தங்கு தடையுமின்றி ஜனாதிபதியின் சொந்த ஊரில்கூட முஸ்லிம் எதிர்ப்பு ஊர்வலத்தை அவர்கள் நடத்தி விட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயல்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் ஆசியுடனும் அனுசரணையுடனுமே முன்னெடுக்கப்படுகின்றன என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதை மறுக்கும் விதத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம்களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளங்களை இழந்து பௌத்த சிங்களக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இனவாதிகளின் எண்ணமாகும்.

இந்த பௌத்த மயமாக்கல்கள்; சிங்கள மேலாதிக்கத்திற்கு இன்று முஸ்லிம்கள் இரையானபோதும் அது அத்துடன் நிற்கப் போவதில்லை. தொடர்ந்து ஏனைய சமுதாயங் களையும் காவு கொள்ளவே முயற்சிக்கும். எனவே, இந்த இனவாதம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தமிழர்களின் வாழ்வுரிமையை நசுக்கிவிட்டு தற்போது முஸ்லிம்களைக் குறிவைத்து சிங்கள மேலாதிக்கம் காய் நகர்த்தி வருவதை சர்வதேச உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Thanks to: TMMK

மேலும் படிக்க... Read more...

விஷரூபகமலை தாக்கும் மணிவண்ணன் அமீர் சீமான்.

>> Wednesday, March 6, 2013

விஸ்வரூபம்-மணிவண்னன் அதிரடி பேட்டி.

தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார்?”-சீமான்.

விஸ்வரூபம் தவறான படம்தான்!- இது அமீர் பேச்சு!!

முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார். - மணிவண்னன்

விஸ்வரூபம் படத்தை எடுத்து கமல் முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார். - மணிவண்னன்

பேட்டியின் வீடியோ

முஸ்லிம் பெண்கள், மாணவர்களுக்கு அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்கர்கள் எந்த குழந்தையும் கொலை செய்ய வில்லை என கமல் படம் எடுத்துள்ளார்.

இது அமெரிக்க அரசியலாகும் என நடிகரும் இயக்குனருமான மணிவண்னன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார்?”-சீமான்

நாம் தமிழர் கட்சியின் சீமான் பேச்சு அனைவரையும் உணர்ச்சிமயமாக்கியது.

”எந்த மதத்தில்தான் தீவிரவாதம் இல்லை. குஜராத்தில் நடந்த கலவரம் எந்த மதத் தீவிரவாதம்?

கோத்ரா ரயில் எரிப்பு எந்த மதத் தீவிரவாதம்?

இந்திரா காந்தியைச் சுட்டது சீக்கிய மதத் தீவிரவாதம்.

காந்தியைச் சுட்டது இந்து மதத் தீவிரவாதம்.

ஒசாமா பின்லேடன் போய் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதம் என்றால், அதற்குப் பதிலாக ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அடித்தது கிறிஸ்துவ மதத் தீவிரவாதம்.

தமிழனைக் கொன்றது பௌத்தத்தைத் தாங்கி நிற்கும் சிங்களத் தீவிரவாதம்.

குஜராத்தில் நடந்த கலவரத்தில் 3,000 பேர் கொன்றொழிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர், ‘நான் 300 பேரைக் கொன்றிருக்கிறேன்’ என்று பெருமிதத்தோடு முழங்குகிறார்.

கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து வீசுகிறான். இதைப் பதிவுசெய்தால் எந்த மதத்தின் தீவிரவாதமாக வரும்?

இப்படி ஒரு படத்தை எடுக்க கருத்துச் சுதந்திரம் இருக்குமா?

பௌத்த சிங்களத் தீவிரவாதம் செய்ததை இன்று எல்லாத் தொலைக் காட்சியும் காட்டுகிறது. இதைப்பேச, பட மெடுக்க யாராவது உண்டா? படம் எடுத்தால், தணிக்கைத் துறை அனுமதிக்குமா? படத்தைத் திரையிட ஆள் உண்டா?

வஞ்சிக்கப்படுகிற சிறுபான்மை மக்களுக்கு எல்லாம் இது நடக்கும்.

சதாம் உசேனைக் கொல்ல நினைத்து உள்ளே புகுந்த அமெரிக்கா கொன்று குவித்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சம். இதைப்பேச யாரும் இல்லை. தாலிபன் தீவிரவாதியா, இல்லையா என்பதை அந்த மக்களிடம்தான் கேட்க வேண்டும்.

நீ இங்கிருந்து கருத்துச் சொல்ல முடியாது. தங்கள் மண்ணின், மக்களின் உயிருக்கான போராட்டம் இது என்று தலிபான்கள் சொல்லி விட்டனர். அதைத் தீவிரவாதம் என்று சொல்ல நீ யார்?

கமல்ஹாசனை எல்லோரும் பெரிதாக மதிக்கிறோம். பாபர் மசூதியை இடித்தபோது அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் கலைஞன் கமல்ஹாசன்தான். அன்றைக்கு இதே சமூகமக்கள் அவரைப் பெரிதாகக் கொண்டாடினர். ஆனால், ‘விஸ்வரூபம்’ போல படம் எடுத்ததில் சில சங்கடங்களும் இருக்கின்றன.

கமல் நஷ்டப்பட்டுப் போனேன் என்றவுடன், வீட்டுப் பத்திரம், கையெழுத்திட்ட வெற்றுக் காசோலை என்று லட்சக்கணக்கான பேர் அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால், 554 மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். அந்தத் தமிழச்சிகளுக்கு ஒற்றை ரூபா காசு யாரும் அனுப்பவில்லை.

காவிரியில் தண்ணீர் வராததால் இறந்த 19 விவசாயிகள் குடும்பங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பினார்களா என்றால் இல்லை” என்றார் கொந்தளிப்பாக. மறுபடியும் பிரச்னை ஏற்படாமல் இருந்தால் சரி

நன்றி – ஜூனியர் விகடன்

தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான்!- இது அமீர் பேச்சு!!

Posted by: Shankar Updated: Wednesday, March 6, 2013, 11:44 [IST]

சென்னை: தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்! விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள். எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது.

ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். இப்போதுதான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும்.

யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/03/ameer-blasts-viswaroopam-portraying-talibans-bad-171014.html

சொடிக்கி படிக்கலாமே.
>>>>> PART 1. முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். - <<<<<


>>>> PART 2. இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். <<<<<<


>>> PART 3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?.<<<<


மேலும் படிக்க... Read more...

இவர் இந்தியாவின் மனசாட்சி. - ஆனந்த விகடன்.

>> Friday, March 1, 2013

ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்தும் கட்ஜு தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

இவர் இந்தியாவின் மனசாட்சி! 

நான் ஏன் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த விரும்பவில்லை?’ - இப்படி ஒரு தலைப்பில் கட்டுரை எழுதத் துணிச்சல் வேண்டும். அது மார்கண்டேய கட்ஜுவுக்கு இருக்கிறது.

அதுவும் பால் தாக்கரே மரணத்தை ஒட்டி இணையதளத்தில் கருத்துச் சொன்னதற்காக இரண்டு மும்பை மாணவிகள் கைது செய்யப்பட்ட சமயத்தில் இப்படி எழுதினார் கட்ஜு.

அதற்கு முன்னும் பின்னும் நாட்டுநடப்புகள் குறித்து பட்டவர்த்தனமாக கட்ஜு வெளியிடும் கருத்துகள் ஒவ்வொன்றும் இந்திய அரசியல் அரங்கில் மாபெரும் சலனங்களை உண்டுபண்ணுகின்றன.

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற பதவி அத்தனை அதிகாரம் மிக்கது இல்லை.

ஆனால், மார்கண்டேய கட்ஜு தலைவராக வந்த நாளில் இருந்து அதிரடிகளுக்குப் பஞ்சமே இல்லை.

சமீபத்தில், 'பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத் தப்போவதாகச் சொல்லப்படுகிறது. 1933-ல் ஜெர்மானியர்கள் செய்த தவறை, 2014-ல் இந்திய மக்கள் செய்துவிடக் கூடாது’ என்று எழுதினார். ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு எழுதியதற்காக கட்ஜு பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்த, அதற்கு காங்கிரஸ் பதில் சொல்ல... சர்ச்சைகள் தொடர்கின்றன.

ஆனால், கட்ஜு இத்தகைய எதிர்ப்புகளுக்கு ஒருபோதும் அஞ்சியவர் அல்ல. அவருக்கு பா.ஜ.க.,காங்கிரஸ் என்ற கட்சி பேதமும் இல்லை.

அவரது முக்கியமான விமர்சனக் கணைகள் அனைத்தும் மீடியாக்களையே குறி வைக்கின்றன.

ஒரு தனியார் சேனலின் நேர்காணலின் போது, ''நமது மீடியா மக்களை மடையர்களாக்கும் வேலையைச் செய்கிறது. ரோமாபுரி அரசன், 'மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியவில்லை எனில், சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்’ என்று சொல்வானாம். அதுபோல இங்கு மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்காமல் டி.வி. பார்க்கவைக்கிறோம்.

அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில், ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை மீடியா பரப்புகிறது!'' என்று கட்ஜு தெரிவித்த கருத்து, ஊடக உலகையே உலுக்கிப் போட்டது.

ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்தும் கட்ஜு தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

'ஹஜ் பயணத்துக்கு அரசு மானியம் வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்ற மனு வந்த போது, அதை டிஸ்மிஸ் செய்தார்.

ஒடிஸாவில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ''மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்'' என்று அதிரடியாகச் சொன்னார்.

ஆனால் அவரே, இஸ்லாமியமாணவர்கள் தாடி வைத்துக் கொள்வது தொடர்பான ஒரு வழக்கில், ''இதை அனுமதித்தால் நாடு 'தலிபான்’ மயமாகிவிடும்'' என்று சொன்ன போது பெரும் கொந்தளிப்பு உருவானது.

இந்து மத அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படும் போது, இஸ்லாமிய அடையாளங்களுடன் அனுமதிக்கப்படுவதில் என்ன தவறு என்று பலரும் கேட்டனர்.

உடனே, தனது கருத்தைத் திரும்பப் பெற்றதோடு அதற்காக மன்னிப்பும் கோரினார்.

1946-ல் லக்னோவில் பிறந்த கட்ஜு, காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்.என்.கட்ஜு அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். பண பலமும் செல்வாக்கும் மிக்க குடும்பப் பின்னணி என்ற போதிலும் கட்ஜு, சாதாரண மக்களை நோக்கியே சிந்தித்தார்.

சம்ஸ்கிருதம், உருது இரு மொழிகளிலும் சம அளவு புலமைகொண்ட கட்ஜு, 'இந்தியாவில் உருது மொழிக்கு இழைக்கப்படும் அநீதி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை முக்கியமானது.

''உருது, வெளிநாட்டு மொழி; அது முஸ்லிம்கள் மட்டுமே பேசும் மொழி... என்ற இரண்டு நம்பிக்கைகளுமே முழுப் பொய். உருது, இந்திய மண்ணில் உருவான மொழி. கடந்த தலைமுறை வரையிலும் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களாலும் உருது பேசப்பட்டது'' என உருதுக்காக உறுதியாக வாதாடியவர்.

தமிழ் மீதும் பெரும் பற்று கொண்டவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சில காலம் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தவர்.

பால் தாக்கரே பற்றிய தனது கட்டுரையை, 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியார் பாடலில் இருந்து தொடங்கியவர்.

20 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியபோது கட்ஜுவின் நீதிமன்ற அறை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஒரு வாரத்துக்குக் குறைந்தது 100 வழக்குகளையேனும் விசாரிப்பார்.

'லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பெண்ணுக்கான உரிமைகளை நிலை நிறுத்தும் முக்கியமான தீர்ப்பு இவர் வழங்கியதுதான்.

மூளை மரணம் அடைந்த நிலையில் உள்ளவர்களைக் கருணைக் கொலை செய்வது தொடர்பான வழக்கில், 'இது தொடர்பான சட்ட விதிகளைத் தளர்த்திக்கொள்வதைப் பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கருணைக் கொலைகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு எழுதினார்.

அவரே, 'கௌரவக் கொலைகள் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடுவோரைத் தூக்கில் போட வேண்டும்’ என்று காட்டம் காட்டினார்.

இந்திய சாதியச் சடங்குகளை விடாமல் பின்பற்றும் மக்களைக் கண்டு கடுப்பாகி, '90 சதவிகிதம் இந்தியர்கள் முட்டாள்கள்’ என்றார் கோபத்துடன்.

''இந்திய - பாகிஸ்தான் பிரச்னை தீர்வதற்கு ஒரே வழி, இரண்டு நாடுகளும் ஒன்று சேர்வது தான்'' என்றார் அதிரடியாக. இவை அதிர்ச்சி அலைகளை உருவாக்கலாம். ஆனால், அவரது நோக்கம் அது அல்ல. அவர் தீர்வுகளை விரும்புகிறார். அதை நோக்கி இடைவிடாமல் இயங்குகிறார்.

அவர், இந்தியாவின் மனசாட்சி!-  ஆனந்த விகடன்.

நன்றி: விகடன்.காம்

***********


தாக்கரேவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது?

இன்றைய தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் : மருதன்.

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.

பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’

ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)

ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.

தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது.

மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை.

ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.

தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு.

இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர்.

அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள்.

இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள். இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.

பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும்.

இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம்.

மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.

நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்?

ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது.

ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும். வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.

எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

கீழுள்ள சுட்டிகளை சொடுக்கி படிக்கவும்.

மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு

நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! - உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு

திணிக்கப்படும் அவமரியாதைகளை புறந்தள்ளுவோம். -

மேலும் படிக்க... Read more...

உண்மை தீவிரவாதிகள் யார் !! (EXCLUSIVE REPORT) இது எத்தனை பேருக்கு தெரியும்..?

>> Wednesday, February 27, 2013

இஸ்லாத்தையும் தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம். இது எத்தனை பேருக்கு தெரியும்..?



தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே.

உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது.

அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை.

ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1.அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,

2.FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.

3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்

4.நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,


எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...

ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!

என்று கூறுகின்றன.

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!


பயங்கரவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்...

1.1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர் அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார். மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

2.1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

3.1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

4.1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

5. 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

6.1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள்.

முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!

இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

7.1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

8.1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

9.முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.

இது எத்தனை பேருக்கு தெரியும்..?

10.1968 ஆகஸ்ட் 11.28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

11.1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.

12.இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

13.அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.

நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

14.1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.

அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

15.நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.

1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

16.பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

17.1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.

18.1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.

19.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.

20.1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

21.1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

A) இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு

B) ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு

C) உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

D) மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிரவாத அமைப்பு

இது மட்டுமா நம் இந்தியாவில் கூட

A)பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

B) திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

C) அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.

D) ஆர்.எஸ்.எஸ் எனும் காவி தீவிரவாதம். இது இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது.

மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே இந்து மகா சபை என்னும ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவனால் சுட்டுக்கொல்லப்பட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.நமது தேச தந்தையை கொன்ற பெருமை இந்த இயக்கத்தையே சாரும். அதுவும் எப்படி பாருங்கள்.

1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இந்த இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

E. சிவசேனா... சொல்லவே தேவையில்லை.

பால் தாக்கரேயின் முழக்கம் (?) பற்றி ஏஷியா டைம்ஸ் இப்படி அறிவித்தது:

"இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்" என்று சிவ சேனைத் தலைவர் கூறினார். 

இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.

சங்பரிவார்கள் அமைப்பு இன்னும் ஒரு படி மேல போயி ஒரு Hindu Unity எனும் தளம் உருவாக்கி கொல்லப்பட வேண்டியவர்கள் குறித்த ஒரு LIST ஐ தயாரித்து வைத்து இருக்கிறது.,

F. நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் –

2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள். 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. b>(காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்) b>எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.

இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக



?60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்

?இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்

?தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...

யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ,

I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ,

மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ,

உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ,

பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ,

L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ,

ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ,

A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை.

ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..?

இறுதியாக உங்களிடம் சில கேள்விகள் !!

தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

1) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

2.சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

3) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

4) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

5)கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

6) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

7) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

8)குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

9) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

10) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

11)விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

12) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

13)மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

14)ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?



2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி

2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது.

23 பேர் பலி. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை.

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!


நன்றி :Dr.ZAHIR NAIK

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் (IIM)



REFERENCE : http://www.foxnews.com/story/0,2933,161827,00.html

http://satp.org/

http://en.wikipedia.org/wiki/Naxalite

All_Tripura_Tiger_Force

Friedländer, Saul. Nazi Germany and the Jews. New York: HarperCollins,

1997.http://en.wikipedia.org/wiki/World_War_I

http://www.loonwatch.com/2010/01/not-all-terrorists-are-muslims/

http://ta.wikipedia.org/sivasena

http://hinduunity.org/hitlist.html

http://www.naanmuslim.com


நன்றி : NELLAI POPULAR FRONT 1

நன்றி :http://asiananban.blogspot.sg/2013/01/exclusive-report.html


மேலும் படிக்க... Read more...

மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி!

>> Friday, February 22, 2013

இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டு மக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!

நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு.

“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்:

அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் .

அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி.

அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தில் இன்றைக்கு மோடியை இந்திய மக்களில் ஒரு பெரும்பான்மையான கூட்டம் சித்தரிகின்றது.

இதனை ஏதோ கும்ப மேளாவின் போது வெறும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாத்திரம் கூறவில்லை , இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பகுதியான “கல்வி அறிவு பெற்றவர்கள் (?)” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு (?)” உள்ள இளைஞர்களும் கூட நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தில் திசை திருப்ப பட்டு இவ்வாறு கூறுகின்றனர் .

ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் டில்லியில் இருந்து போபாளிற்கு விமானம் மூலம் பயணித்தேன் . எனக்கு அருகில் அமர்ந்திருதவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர். நான் அவரிடத்தில் மோடி அவர்களை குறித்து கருத்து கேட்டேன் . மோடியை பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேச்சின் இடையில் நான் குறுக்கிட்டு ,சில கேள்விகளை முன் வைத்தேன் . நான் அவரிடத்தில் 2002 குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பற்றி கேட்டேன் .

முஸ்லிம்கள் எப்போதும் குஜராத் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கி கொண்டே இருந்தனர் , ஆனால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க பட்டுள்ளனர் , இதற்க்கு பின்னரே குஜராத் மாநிலத்தில் அமைதியான சூழல் குடிகொண்டது என்று பதில் அளித்தார்.

அது மயானத்தில் நிலவும் அமைதிக்கு ஒப்பானது. அமைதியுடன் நீதியும் ஒன்று சேராத வரை , என்றைக்கும் அமைதி மாத்திரம் தனித்து நீடித்து நிலைத்துவிட முடியாது .இதை நான் கூறிமுடித்தது தான் தாமதம் , அவர் என்னிடத்தில் கோபித்தவராக என்னிடமிருந்து விலகி சென்று மற்ற்றொரு இருக்கையில் அமர்ந்துவிட்டார் .

ஆனால் இன்றைக்கு உண்மை நிலவரம் என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்திற்கு எதிராக குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்த்து குரல் கொடுக்கவே அஞ்சுவதற்கு காரணம் அவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடலாம் , தாக்கபட்டுவிடலாம், என்கின்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதால் தான் .

இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் (200 மில்லியனுக்கும் அதிகமான சமுதாயம் ) மோடீ அவர்களை கடுமையாக எதிர்பவர்களே ( ஆனால் மிக சொற்ப அளவிற்க்கான முஸ்லிம்கள் மாத்திரம் ஏதோ காரணத்திற்காக இதை ஏற்பதில்லை )

சந்தேகம் கொள்ளத்தக்க ஏதேச்சையான செயல்கள் :குஜாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் , முன்னர் கோத்ரா ரயில் சம்பவத்தில் 59 இந்துக்கள் கொள்ளபட்டதர்க்கான “ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத ” (ப்ராதிக்ரியா ) ஒரு பதிலடியே என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர் .

இதை நானாக கற்பனை செய்து கூறவில்லை : முதலாவதாக கோத்ரா சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றது என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது .

இரண்டாவதாக , யார் அந்த கோத்ரா சம்பவத்திற்கு காரணமோ அந்த குறிப்பிட்ட மனிதர்களை அடையாளம் கண்டு ,மிக கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் ,

ஆனால் இதற்காக எப்படி குஜராத்தில் வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது அரங்கேறிய அந்த கொடூர தாக்குதலை நியாய படுத்தமுடியும் ? .

குஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம் தான் , மீதம் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே .

2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாரைசாரையாக படுகொலை செய்யப்பட்டனர் , வீடுகள் எரிக்கப்பட்டன , இன்னும் பல்வேறு விதமான கொடூர சம்பவங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டனர்.

2002-ஆம் ஆண் டில் முஸ்லிம்கள் இன படுகொலையை செய்யப்பட்டதை ” ஏதேச்சையான- முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத (ப்ராதிக்ரியா ) ” ஒரு பதிலடியே என்று இவர்கள் கூறுவது எனக்கு ஜெர்மனி நாட்டில் நவம்பர் மாதம் 1938 ஆம் அண்டு நடந்த “கிரிஸ்டல்நாக்ட்” சம்பவத்தை நினைவூட்டுகிறது .

ஜெர்மனி நாட்டு விரகர் ஒருவரை யூத இளைஞன் , நாஜிக்களால் தனது குடும்பத்தை சித்ரவதை செய்பட்ட காரனத்தால் சுட்டு கொன்றுவிடுகிறான்.

இதற்காக ஜெர்மனியில் இருந்த முழு யூத சமூகத்தையும் நாஜிக்கள் தாக்கினர் , படுகொலை செய்தனர் , அவர்களின் தேவாலயங்களை எரித்தனர் , கடைகளை சூறையாடினர் .

ஜேர்மானிய நாஜி அரசாங்கம் இதை குறித்து ” ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்டபடாத” சம்பவம் என்றே கூறியது , ஆனால் உண்மையில் இது முன்னரே திட்டம் தீட்டபட்டு , மூர்க்கமான ஒரு கும்பலை பயன்படுத்தி நாஜி அதிகாரிகளால் அரங்கேற்றபட்டதாகும். வரலாற்று சான்றுகளின் படி , இந்திய நாடு ,வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஒரு நாடாகும் ,

இதன் விளைவாக நம் நாடு பலதர பட்ட மனிதர்களையும் பெற்றது .எனவே அனைத்து வகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக மதச்சார்பின்மை கொள்கை உள்ளது – அதாவது அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான உரிமையையும் , மரியாதையையும் வழங்குதல் என்ற கொள்கை.

இந்த கொள்கையை கொண்டவர் தான் மன்னர் அக்பர் , இதை நம் மூதாதையர்களும் (பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரின் சகாக்கள் ) பின்பற்றி இந்த செக்யுலரிச (மதச்சார்பின்மை) கொள்கையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை வகுத்து தந்தனர்.

இதை நாம் பின்பற்றாத வரையில் நம் நாடு ஒரு நாள் கூட அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம் நாடு பலதரப்பட்ட மதங்கள் , ஜாதிகள், மொழிகள், இன குழுக்கள் என பல வேற்றுமைகளை கொண்டுள்ள ஒரு நாடு. ஆகவே இந்தியா இந்துக்களுக்கு மாத்திரம் உரித்தான ஒரு நாடு இல்லை .

இந்நாடு முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , பார்சிகள் , ஜைனர்கள் என மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் சரிசமமான அளவில் , சொந்தமான ஒரு நாடு .

இங்கு இந்துக்கள் தான் முதல் தர குடிமக்களாக வாழ முடியும் , மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர குடிமக்களாக தான் வாழ முடியும் என இல்லை . அனைவரும் முதல் தர குடிமக்களே !

.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அந்த கொடூர தாக்குதல்களும் , ஆயிரதிருக்கும் மேலான முஸ்லிம்களை கொன்று குவித்ததையும் எப்போதும் மறக்கவோ , மன்னிக்கவோ முடியாது .

இதில் மோடி அவர்களுக்குள்ள தொடர்பை அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களை வைத்து கழுவினாலும், கரையை கழுவவோ/நீக்கவோ முடியாது .

திரு மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்றும் இது வரை அவரை எந்த நீதிமன்றமும் ஒரு குற்றவாளி என அறிவித்ததில்லை எனவும் மோடியின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இங்கு நான் இந்திய நீதி துறையை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை.

ஆனால் மோடி அவர்களுக்கு இந்த படுகொலை சம்பவங்களில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது .

குஜாரத்தில் மிக பெரிய அளவில் ,அந்த கொடூர சம்பவங்கள் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்தவர் மோடி .

இதில் மோடி அவரகளுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என கூறுவதை யார்தான் நம்ப முடியும் ? என்னை பொறுத்த மட்டில் என்னால் நிச்சயமாக இதை நம்ப முடியாது.

இதற்க்கு ஒரு எடுத்துகாட்டை கூறுகிறேன் : எஹ்சான் ஜாப்ரி என்பவர் அதிகம் மதிக்கப்பட கூடியவர் , ஒரு வயது முதிர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். இவர் குஜராத்தில் உள்ள அஹ்மதாபாத்தின் சமன்பூரா என்னும் இடத்தில வசித்து வந்தவர் . இவர் வீடு முஸ்லிம்கள் அதிகம் வாழ கூடிய குல்பர்கா வீடுகள் சமூகத்தில் இருந்தது . எஹ்சான் ஜாப்ரிக்கு நடந்த சம்பவத்தை நேரில் கண்ட இவரின் வயது முதிர்ந்த மனைவி சக்கியா ஜஃப்ரி தெரிவித்தவை இன்றைக்கும் பதிவில் உள்ளது .

பிப்ரவரி 28,ம் தேதி 2002 ஆம் ஆண்டில் , வெறிபிடித்த ஒரு கும்பல் இவர் வீட்டின் பாதுகாப்பு வலயத்தை கேஸ் சிலிண்டிரை வைத்து தகர்த்தெறிந்தன. உள்ளே நுழைந்து , அங்கிருந்த எஹ்சான் ஜாப்ரி அவர்களை தர தரவென வீட்டின் வெளியே இழுத்து , கை ,கால்களை வாழால் வெட்டினர், அதற்க்கு பின் இவரை உயிருடன் எரித்தே விட்டனர் .

இதே போல் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் ,அதிகமான முஸ்லிம்களின் வீடுகளை எரித்து நாசமாக்கினர். இத்தனைக்கும் ,சமன்புரா என்னும் இடத்திலிரிந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் , 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அஹ்மதாபாத்தின் போலிஸ் கமிஷனர் அலுவலகம்.

முதலமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்றே தெரியவில்லை என்று கூறினால் அதை எப்படி நம்புவது ?.

சம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்திலிருந்து சக்கியா ஜஃப்ரி தனது கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கிடைக்க போராடி வருகிறார் .

சக்கியா ஜஃப்ரி அவர்கள் பதிவு செய்த மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் மறுத்து விட்டது மாவட்ட நீதிமன்றம் .(இதற்க்கு காரணம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது தான் ).

10 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி , சக்கியா ஜஃப்ரியின் எதிர்ப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளலாம் என கூறியுள்ளது .

இவ்வழக்கு தீர்ப்பு வழங்கபடாமல் இன்னமும் நிலுவையில் உள்ளதால் ,இவ்விஷயத்தை பற்றி இதற்க்கு மேல் நான் அதிகம் கூற விரும்பவில்லை.

மோடி அவர்கள் குஜராத்தை பெரிதும் முன்னேற்றி விட்டதாக கூறிகொள்கிறார் . ஆகவே ” முன்னேற்றம் ” என்றால் என்ன என்பதை சரி பார்ப்பது அவசியம்.

என்னை பொறுத்தவரை “முன்னேற்றம் ” என்பதற்கு ஒரு பொருள் தான் இருக்கமுடியும் , அது ‘ பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது ‘ என்பது தான். பொது மக்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் உயர்த்த படாமலிருக்கும் நிலையில், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும் மின்சாரத்தையும் வழங்குதையெல்லாம் , முன்னேற்றம் ” என்று கூற முடியாது .

கேள்விக்கிடமான முன்னேற்றம்: இன்றைய நிலவரப்படி , குஜராத்தில் 48 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இந்த எண்ணிக்கை ,நம் நாட்டின் சராசரி ஊட்டச்சத்து குறைவு விழுக்காட்டை காட்டிலும் அதிக விகிதமாகும் .மேலும் குஜராத் மாநிலத்தில் மழலை இறப்பு விகிதமும் அதிகம், பிரசவ பெண்களின் இறப்பு விகிதமும் அதிகம் , பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களில் ,வறுமை கோட்டில் உள்ளவர்கள் ,57 சதவிகிதம்.

திரு ராமச்சந்திரன் குஹா அவர்களின் “தி ஹிந்து ” பத்திரிக்கையில் (இந்தியாவை ஆட்சி செய்யவிருக்கும் மனிதர் , பிப்ரவரி 8 – என்ற தலைப்பில் ) வெளியிடப்பட்ட கட்டுரையில் குஜராத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது , கல்வி தரம் வீழ்ந்து வருகிறது , ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு மிகவும் அதிகரித்து கொண்டே உள்ளது .

குஜராத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான ஆண்களின் எடை உயர விகித குறியீடு 18.5 க்கும் விட குறைவு -( நம் நாட்டின் 7 வது மிக மோசமான மாநிலம் ) என தெளிவாக கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டின் யு.என்.டீ.பீ யின் (UNDP) அறிக்கை குஜராத்தை ஒவ்வரு மாநிலத்தின் பல பரிமாண வளர்சிகளான: சுகாதாரம், கல்வி, வருமான அளவு போன்றவற்றின் பட்டியலில் 8 வது மாநிலமாக குஜராத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

பெரிய முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் செய்ய ஏதுவாக அனைத்து சூழல்களையும் உருவாக்கிதருபவர் என கூறிவருகின்றனர் , ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் , இந்தியாவில் தொழிலதிபர்கள் மாத்திரம் தான் மக்கள் என்பவர்களா ?

உண்மையிலேயே நாட்டு வளர்ச்சியை பற்றி கவலை கொள்பவர்களாக இருப்பின் , நான் இங்கு கூறிய அனைத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு இந்திய நாட்டு மக்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

அல்லது நம் நாட்டு மக்களும் ஜெர்மனி மக்கள் 1933 ஆம் ஆண்டில் இழைத்த தவறை போல தவறு செய்தவர்களாக ஆகிவிடுவர் .

நன்றி : “தி ஹிந்து” நாளிதழ். http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 21, 2013, 20:24 THANKS TO: http://www.tntj.net/132923.html

சொடுக்கி : நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! நீதிபதி மார்கண்டேய கட்ஜு !!!படியுங்கள்

மேலும் படிக்க... Read more...

புலிகள் செய்த‌ சிசுக்களின் கோரப் படுகொலைகள்.

>> Wednesday, February 20, 2013

புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலை.

இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்

இந்த பதிவு தமிழருக்கு எதிரான பதிவல்ல.புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத முஸ்லீம் இன ஒழிப்பு தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலைக்கு எதிரான பதிவே.

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் நடுநிலைவாதியா? அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா? எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான்

ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா? இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா?

அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?

சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைவரான உங்களின் அண்ணனால் செய்யப்படவில்லை என்றால்!! ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே…! இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா?

இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா?

2009 மே 18 ஆம் திகதி இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ”சூரியதேவன்” வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயதுச் சிறுவன் புதல்வர் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் படங்கள் காட்டுமிராண்டித்தனமான படுகொலை செய்துள்ளது என்று புலிப் பினாமிகள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தலைவன் ”சூரியதேவன்” இரண்டு சதாப்த காலமாக ஆடிய பயங்கரவாத தாண்டவத்தில் எத்தனை பிஞ்சுகள் சிதறிப் போயின,

எத்தனை குழந்தைகள் பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர்,

நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது.

”சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்” என்று சனல் 4 வினால் காட்டப்பட்டு இருக்கின்ற பயங்கரவாதியின் மகன் 12 வயதுச் சிறுவன் விடயத்தில் அக்கறை கொள்ளும் மேற்கு சாதாரண பிஞ்சுகள் கொல்லப்பட்டதை பெரிதாக கருதியது கிடையாது .

ஏறாவூர் பிச்சிநகர் முஸ்லிம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் நடத்தியஇனச்சுத்திகரிப்பில் 31 பிஞ்சுகள் , 45 ஆண்கள் 28 பெண்கள் பலி எடுக்கப்பட்டார்கள்.

இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான் .

கிழக்கே ஆகஸ்ட் 1990 இரண்டு காத்தான்குடி பள்ளிவாசல்களுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள்.

அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யபட்டனர்.

ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துடிக்கப் பதைக்க சுட்டுகொன்றார்கள்.

 எந்த மேற்கு ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் என்ற கேள்விக்கு நிறைய விடைகள் உண்டு இங்கு விடைகளை தவிரித்து சில விபரங்களை பார்ப்போம் .

காத்தான்குடி ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும், ஏறாவூர்  கிராமங்களுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் படுகொலை செய்த சிறுவர்களின் சில படங்கள் :
படங்கள் மீது கிளிக் செய்து பெரிதாக பார்க்க முடியும்:


அதேபோன்று 116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில்  கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்


ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்

ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

எம். ஐ. ஜரூன் -(10 வயது)

எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)

எம். கமர்தீன் -(12 வயது)

எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

ஏ. எல். மக்கீன்-(12 வயது)

எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

எம். எஸ். பைசல்-(13 வயது)

எம். பீ ஜவாத்- (13 வயது)

யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

எச். எம். பௌசர்-(14 வயது)

ஏ. ஜௌபர்- (14 வயது)

எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

ஏ. சமீம்- (14 வயது)

எம். இஸ்ஸதீன்- (15 வயது)

எம். எம். எம். பைசல் -(15 வயது)

எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்



ஏ.அப்துல்லாஹ்

THANKS TO SOURCE: http://lankamuslim.org/2012/03/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/

THANKS TO SOURCE: http://muhasabanet.wordpress.com/2012/03/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/

சொடுக்கி பகுதி 1 புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. படியுங்கள்

சொடுக்கி  பாகம் 2. புலி பயங்கரவாதம். .புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம். படியுங்கள்

சொடுக்கி  பகுதி 3 புலி பயங்கரவாதம். .புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..  படியுங்கள்.
 
*************


மேலும் படிக்க... Read more...

அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"

>> Thursday, January 20, 2011


ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை..




இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிகையான
"இந்தியா டுடே" யில் வெளியான
“Saffron brigade's dark secret exposed” 
“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்."
விடியோக்க‌ள்
*******




Saffron brigade's dark secret exposed
Thursday | July 15, 2010 | 00:00 IST

Headlines Today accesses material-in the form of video tapes and witness accounts available with investigators-that puts elements within the Sangh Parivar under the scanner.

“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்." விடியோக்க‌ள்



Saffron brigade's dark secret exposed Part 1 of 13

Saffron brigade's dark secret exposed Part 2 of 13

Saffron brigade's dark secret exposed Part 3 of 13


Saffron brigade's dark secret exposed. Part 4 of 13

Saffron brigade's dark secret exposed. Part 5 of 13

Saffron brigade's dark secret exposed. Part 6 of 13


Saffron brigade's dark secret exposed. Part 7 of 13

Saffron brigade's dark secret exposed. Part 8 of 13

Saffron brigade's dark secret exposed. Part 9 of 13


Saffron brigade's dark secret exposed. Part 10 of 13


Saffron brigade's dark secret exposed. Part 11 of 13


Saffron brigade's dark secret exposed. Part 12 of 13

Saffron brigade's dark secret exposed. Part 13 of 13
*************

இதையும் அவசியம் காணவும்
இந்தியாவின்உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.

*****************************


இதை படியுங்கள்.

************



இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

அயோத்தி தீர்ப்பு ‍நீதியானதா? பேரா.அருணன். VIDEO.

>> Monday, December 27, 2010

அயோத்தி பாப்ரிம‌சூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது. அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை. இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.

பாபர் மஸ்ஜித் நீதியை தேடும் பயணங்கள்
உரை: பேரா. அருணன்
தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர்-06 அன்று நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பேரா. அருணன் ஆற்றிய உரை.
Prof.Arunan Speech Part-01 உரை பகுதி -01



Prof.Arunan Speech Part-02 உரை பகுதி -02



Prof.Arunan Speech Part-03 உரை பகுதி -03

**********

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

அப்பட்டமான உண்மை. 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால்?. PART 1.

>> Monday, July 26, 2010

அப்பட்டமான உண்மை.
9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?.

அவசியம் பார்க்க வேண்டிய விடியோ.

Who is behind 9/11 Twin Tower terror attack? answer by Dr.Zakir Naik in Tamil



========
இதன் தொடர்பு மேலும்



இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம் என்றால் தீவிரவாதியா? (DIRECTOR) இயக்குனர் அமீர்.

>> Saturday, December 27, 2008

இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது.

முஸ்லிம்களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது.

இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொகலாயர்கள் எப்படிப் படையெடுத்தார்கள் என்று சொன்னோமோ அதே போல் தீவிரவாதிகளான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற்பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது.

இதை உடைக்க ஆசை.

இதேபோல் உண்மையான ஈழப் பிரச்னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னையையும் படமெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''

ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு.

அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள்,

நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன.
ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை?

இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை?

அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியானார்கள்?

இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்தியனுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லையென்றால் வாழ்வது எதற்கு?

மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.'' --இயக்குனர் அமீர்.
31.12.08 குமுதத்திலிருந்து.
***************************************************
அரசு பதில்

பொன்விழி, அன்னூர்.

**போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம் எழுப்பியது சரியா?

அதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. 31.12.08 குமுதத்திலிருந்து

READ:- பதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது? காங்கிரஸ்- திக்விஜய்சிங் கேள்வி

மேலும் படிக்க... Read more...

தீவிரவாதிகளுக்கு மோடி, தொகாடியா பேச்சை காட்டி பயிற்சி.

>> Friday, December 5, 2008

டெல்லி: நரேந்திர மோடி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோரின் வீடியோ படங்களைக் காட்டி தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை போலீஸ் பிடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் இந்தத் தகவல்களை அளித்துள்ளான்.அஜ்மலிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள மேலும் சில விவரங்கள்..

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பிரவீன் தொகாடியா ஆகியோர் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதை எங்களுக்குக் காட்டி உத்வேகமூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், குஜராத் கலவரம் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்த வீடியோ படங்களும் எங்களுக்குக் காட்டப்பட்டன. இதன் மூலம் எங்களுக்கு வெறியூட்டப்பட்டது.

பிதாயீன் தாக்குதல்களுக்குத் தேவையான கடுமையான பயிற்சிகள் எனக்குத் தரப்பட்டன. நானும் மற்றவர்களும் கலந்து கொண்ட பயிற்சி முகாம்களில், எங்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள், எங்களை கடுமையாக அடிப்பார்கள்.
இதன் மூலம் எதிரிகளிடம் சிக்கி விசாரணைக்கு உட்படும்போது வலியைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை கிடைக்கும் என்பதற்காக இந்த பயிற்சி.

எங்களுக்கு பல்வேறு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜாகியூர் ரஹ்மான் என்கிற சச்சு என்பவர்தான் எங்களுக்கு தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். பஹாதுல்லா, முப்தி சயீத், உஸ்தாத் அப்துல் ரஹ்மான், அபு ஆனுஸ் ஆகியோரும் எங்களுக்குப் பயிற்சி அளித்தனர் என்று கூறியுள்ளான் அஜ்மல்.இவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் என்றும், ஐஎஸ்ஐயுடன் இணைந்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 16:43

http://thatstamil.oneindia.in/news/2008/12/04/india-terrorists-were-shown-footage-of-modi.html


பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.

மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) நன்றி : விடுதலை

மேலும் படிக்க... Read more...

(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- "பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.

>> Monday, December 1, 2008

அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.


மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.


இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.

அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'

துணிச்சலின் மறுபெயர் கார்கரே

மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர்
கைதாகக் காரணமாக இருந்தார்.

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.

இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

நன்றி: தட்ஸ் தமிழ்

READ


நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஹேமந்த் கர்கரேவின் மனைவி.


"ஞாநி" குமுதம்-பயங்கரவாதத்தின் நிறம் காவி!


குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.

VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.

விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-

விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி


யோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர்


அலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றன.

*********************************************

குண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..

ஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் ..செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..இவை தவிர்க்கப்பட வேண்டும்..

எல்லா மதத்தினர்..ஜாதியினர்..இடையே..புல்லுருவிகள் உண்டு..அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம். - வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP