தமது விருப்பங்களைத் திணிக்கும் பெற்றோர்களால் குழந்தைகள் மரணம்!
>> Wednesday, February 28, 2007
தமது விருப்பங்களைத் திணிக்கும் பெற்றோர்களால் குழந்தைகள் மரணம்!
புதுடில்லி, பிப். 14- தங்களின் குழந்தைகள் படிப்பிலோ, விளையாட்டிலோ சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் வருத்துவது அதிகரித்துள்ளது.
டென்னிஸ் விளையாட்டில் உலக சாம்பியனாக தன் மகள் ஆக வேண்டும் என்ற ஆசையால் தந்தை படுத்திய கொடு-மைக்கு டில்லியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் மாரடைப்புக்கு உள்ளாகி பலியாகி உள்ளான்.
டில்லியில் வசித்து வந்த பிஸ்வதீப் பட்டாச்சார்யா, மேற்கு வங்க மாநில அளவில் டேபிள் டென்னிஸ் சப் ஜூனியர் பிரிவில் நான்காம் இடத்தில் இருந்தான். அவனை உலக அளவில் சாம்பியனாக ஆக்க வேண்டு மென்பது அவனது தந்தையின் ஆசை. இதனால் ஓய்வே இல்லாமல் அவனை தந்தை பயிற்சியில் ஈடுபடுத்தினார்.
விளையாட்டில் சிறுதவறு நேர்ந்தாலும் பிஸ்வதீப்பை தந்தை அடித்து உதைத்தார். ஓயாத உழைப்பு மற்றும் அடி உதையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பிஸ்வதீப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இது பற்றி அவன்தாய் கூறியதாவது: “பிஸ்வதீப்பை என் கணவர் நாள்தோறும் கொன்று வந்தார். சிறு தவறு செய்தாலும், கம்பு, பிளாஸ்டிக் குழாய், ஆகியவற்றால் அடிப்பார். அதே வலியையும் வேதனையையும் அவரும் உணர வேண்டும். அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.” இவ்வாறு அச்சிறுவனின் தாய் கூறினார்.
இதே போல் படிப்பிலும், மற்ற விளையாட்டுகளிலும், பிற துறைகளிலும் தங்களின் சாதனை புரிய வேண்டும் என்பதற்காக அவர்களைப் பெற்றோர் தண்டிக்கும் போக்கு அதிகரித்து வந்துள்ளது.
“பள்ளியில் இருந்து திரும்பியதும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும்படி என் தந்தை கூறுவார். நான் பாடகனாக வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், என் தந்தை நான் டெண்டுல்கரைப் போல வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்” என்று டில்லியைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவன் கூறினார்.
குழந்தைகளின் மீது அதிக சுமையை சுமத்தி நமது விருப்பங்களை அவர்கள் மீது திணிப்பதன் மூலம் அவர்களது உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பும் மற்றும் யுனிசிப் அமைப்பும் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment