அமெரிக்காவின் இரத்த வெறி
>> Sunday, February 4, 2007
அமெரிக்காவின் இரத்த வெறி
இன்றைக்கு உலகம் முழுவதும் அதிர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் உள்ளாகியிருக்கிறது சதாம் உசேன் மரணம். நேற்று வரை அவர் வாழ்ந்த நிலை என்ன? அமெரிக்காவை எதிர்த்த காரணத்தால் நேர்ந்த கதி என்ன? என்பதை உலகம் ஒப்பிட்டு பார்க்க மறுக்கிறது. ஒப்பிட்டுப் பார்த்து, நியாயம் உணர்ந்து அமெரிக்காவை ஒரு உலுக்கு உலுக்கி இருக்க வேண்டாமா உலக நாடுகள்? தன்னிச்சையாக் தான் தோன்றித் தனமாக செயல்படும்
அமெரிக்காவுக்கு முடிவுரை எழுதுவது எப்போது?
-லிபியாவின் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து, லிபியாவின் மக்கள் தலைவன் முகம்மது கடாஃபியை கொடும் சித்ரவதைக்கு ஆளாக்கியவர்கள் இந்த அமெரிக்கர்கள்.
- ஈரானுக்குள் அத்து மீறி நுழைந்து, வன்முறை வெறியாட்டம் ஆடி, அந்நாட்டுப் பிரதமர் மொசாடேவை பதவி நீக்கம் செய்த ஆணவப் பேர்வழிகள் இவர்கள்.
-சிலி மக்களுக்கு தாங்கொணா துயரைக் கொடுத்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் விளைவித்து, அந்நாட்டு மக்கள் பெருமளவில் நேசித்த அலண்டேவை மரணக் குழிக்குள் தூக்கி வீசி ஆட்டம் போட்டது இந்த அமெரிக்காதான்.
-நிகரகுவா மக்களை மரண பயத்தில் நிற்க வைத்து, பொது இடத்தில் போராளிகளின் கை, கால்களை வெட்டி, விரைகளைப் பெயர்த்தெடுத்து, கண்களைத் தோண்டி, நாக்கைப் பிடுங்கி, குரல்வளையை நெறித்து, இதயத்தை அறுத்து வெளியே எடுத்து... அந்நாட்டின் நாயகன் டேனியல் ஓர்ட்டேகாவை ஓட ஓட விரட்டிய கொடுங்கோலன் இந்த அமெரிக்கன்.
- தென் அமெரிக்காவின் வெலாஸ்கே இபாரா! ஆட்டுவிக்கும்படி நாங்கள் ஆடமுடியாது என்றார். சுண்டைக்காய் நாடு சுயமரியாதை பேசுவதா என மூர்க்கத்தனமாய் மோதி அழித்தது அமெரிக்கா.
- 1989இல் நிகழ்ந்த பனாமா சோகத்தையும், ஆப்பிரிக்க மக்களின் உயிர் காக்கும் மருந்து தொழிற்சாலையை சூடான் நாட்டில் சுட்டு அழித்ததையும் நாம் மறக்கவியலாது.
இவைதவிர வியத்நாம், கியூபா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிதஸ்hன், பாலதீஸ்னம், ஜோர்டான், சிரியா, அங்கோலா, நமீபியா, ஜிம்பாவே, மொசாம்பிக், ஜாம்பியா, கானா, எத்தியோப்பியா, காங்கோ, பெனின், தான்சான்யா, கென்யா, லெபனான், கொரியா என அமெரிக்காவின் இரத்தக்கறை வரலாறு நீண்ட நெடியது.
இவையெல்லாம் இன்று மறக்கடிக்கப் பட்டன.
சதாம் உசேன் மூலமாக மீண்டும் நாம் நினைவு கூர்வோம். இந்த உலகிற்கு சதாமின் இரத்தம்தான் கடைசியாக இருக்கவேண்டும்.
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
0 comments:
Post a Comment