தடுமாறுபவன்+வாழ்க்கையை ஆன்மிகத்தோடு
>> Thursday, February 1, 2007
தடுமாறுபவன்
ஒரு சமயம் போர் முனையில் நெப்போலியனின் படைகள் இரவு நேரத்தில் திடீர்த் தாக்குதலுக்கு உள்ளான.
அப்போது நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்ததால், எப்படி அவன் ஆலோசனையப் பெறுவது என, படைத்தளபதி சங்கடமடைந்து, கூடாரத்திற்குள் பிரவேசித்தான். அப்பொழுது அரசனின் மேஜை மீது காகிதம் ஒன்று இருப்பதைப் பார்த்தான்.
அதில் இதுபோன்ற இக்கட்டான சம்பவம் நடக்கலாம் என, ஏற்கெனவே யூகித்து, அதற்கான வழிவகைகளை அரசன் எழுதி வைத்திருந்தான்.
அதன்படி தளபதி எதிர்த் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றான்.
எந்த மனிதனால் தன் எதிர்காலம் பற்றி பத்து அடி தாண்டி யோசிக்க முடிகிறதோ... அவனே சாதனையாளன்.
தனக்கோர் தொல்லை ஏற்படும்போது தடுமாறுபவன், தன் எதிரேயுள்ள வாழ்வின் ஒரு அடி வரை மட்டுமே பார்ப்பவன்.
தடுமாறினாலும், அடுத்து செய்யவேண்டியது என்ன என யோசிப்பவன் எதிரே உள்ள வாழ்வின் இரண்டாம் அடி வரை பார்ப்பவன்.
தொல்லையின் துவக்கத்தையும், முடிவையும் தெளிவாய் யூகித்து தீர்வைத் தேட ஆரம்பிப்பவன், வாழ்வின் மூன்றாவது அடிவரை பார்ப்பவன்.
இதற்கு மேல் உள்ள அடிகள், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத படிக்கட்டுகள்.
இதுவரை வந்து பாருங்கள். நெப்போலியனையே தாண்டிச் செல்லும் சூட்சுமம் கண்முன்னே காத்திருக்கும்.
--------------------------
வாழ்க்கையை ஆன்மிகத்தோடு
உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு, ஓர் அழகான கருத்து
''குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ ஆன்மிகத்தை கையில் எடுத்துச் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்கமாட்டாய்.
சாதாரண பலாப் பழம் அறுக்கும் போது, வெறும் கையால் அதைச் செய்தால் பழத்தின் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக் கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும்.
அதே பழத்தை, ஒரே ஒருமுறை எண்ணெயில் கை நனைத்துவிட்டு செய்தால் விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமே இருக்காது.
ஆன்மிகமும் இது போன்றது தான்.
ஆன்மிகத்தோடு வாழ்க்கையை எதிர் கொண்டால், வாழ்க்கையை அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சுழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம்.''
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
0 comments:
Post a Comment