தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு
>> Wednesday, February 7, 2007
இரவுத் தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு
தூக்கம்
இரவுத் தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு வரும் ஓர் எச்சரிக்கை! இரவில் 5 மணி நேரத்துக்கு மேல் தூங்க முடியாதவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நோய் வரும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைவாகத் தூங்கினால் பசி எடுக்கும். சுரக்கும் இன்சுலின் அளவு சீராக இருக்கும் என்பது முந்தைய ஆய்வின் முடிவு. தற்போதைய ஆய்வின் முடிவின் விளைவு வேறு விதமாக உள்ளது.
நடுத்தர வயதுள்ளவர்கள் இரவில் குறைந்த நேரம் தூங்கினால் ரத்தக் கொதிப்பு வரும் என்று கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு தங்கள் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட 4,810 பேர்களில் 647 பேர்களுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தது. இவர்கள் இரவில் 5 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கி இருக்கிறார்கள். அதோடு இவர்களின் உடல் உடையும் அதிகரித்து உள்ளது. தவிர இவர்களுக்கு நீரிழிவு நோய், மன அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாகி இருக்கிறது. பகல் தூக்கத்துக்கும் அடிமையாகி விடுகிறார்கள். அதே நேரத்தில் இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்கியவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை.
இரவில் நன்றாகத் தூங்குகிறேனா?
இரவில் நான் நன்றாகத் தூங்குகிறேனா என்பதே குழப்பமாக உள்ளது. என் மனைவியைக் கேட்டால் நன்றாகத் தூங்குவதாகச் சொல்கிறாள். இதற்கு என்ன காரணம்?
விளக்கம் தருகிறார், அப்பல்லோ மருத்துவமனயின் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் என். ராமகிருஷ்ணன்.
''நமது தூக்கம் 1,2,3,4, REM என்கிற ஐந்து நிலைகளில் நடக்கிறது. முதல்நிலை தூக்கம் சிறு சப்தத்தில் கலந்துவிடும். இரண்டாம் நிலையும் மூன்றாம் நிலையும் சிற்சில சமயத்தில் நம்மை திடுக்கிட வைக்கும். ஆனாலும் தொடரும். நான்காவது மற்றும் அதை அடுத்த REM ஆழ்ந்த தூக்கம். கனவுகள் வருவதெல்லாம் அப்பொழுதுதான். ஒவ்வொருவருக்கும் இந்த ஐந்து நிலைகளில் தூக்கம் நிகழ்கிறது. குறிப்பாக, நம் தூக்கத்தில் 50 முதல் 60 சதவீதம் இரண்டாவது நிலையிலும், 20 சதவீதம் 3வது, 4வது நிலையிலும், 5 சதவிகிதம் மட்டும் REM மிலும் நிகழ்கிறது. இப்படி, தூக்கம் முறையாக நிகழ்ந்தால், மறுநாள் உற்சாகமாக இருக்கும்.
இப்படி இல்லாமல், நமது தூக்கம் சில நிலைகளில் மட்டுமே முடிவடையும் போதுதான் தூங்கினாலும், மறுநாள் தூக்கமின்மையை உணர்கிறோம். தூங்குவதற்குமுன் காப்பி, டீ குடிப்பது, சாக்லெட், பானங்கள் அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்திற்குத் தூங்கச் செல்ல வேண்டும். இப்படி தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தும் செய்ய வேண்டியதைச் செய்தும் தூக்கம் நிறைவாக இல்லையென்றால், ஸ்லீப் ஸ்டடி செய்து பார்க்கலாம். இதிலும் எந்தக் குறைபாடும் தெரியவில்லை என்றால் கவுன்சிலிங் செய்தால் சரியாகிவிடும்.''
கட்டில் மெத்தை மாதிரி தூக்கத்தையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம். வாங்க முடியாதிருப்பது தூங்குவதற்கான நேரத்ததைதான். கால்சென்டர் கல்ச்சரில் விழித்தால், காசு என்றாகிவிட்டது. அதுவும் வினாடிக்கு இவ்வளவு' என்று விலைபேசப்படும் பொழுது விற்கப்படுவது தூக்கம்தான். வரி விளம்பரங்களில் 'வாங்க விற்க' பகுதியில் இடம்பெறாமல் இருந்தால் சரி! 'நல்லிரவு!' நண்பர்களே...
பெட் காபியைப் போல் பெட் டீ உண்டா?
காபி சோம்பேறி பானம். டீயோ சுறுசுறுப்பின் அடையாளம். அதிகாலைப் படுக்கையில் தூக்கக் கலக்கத்தில் காபிதான் பொருத்தம். தூக்கம் கலைந்த பின் டீ ராஜா. காபி கேபிடலிஸ்ட். டீயோ தொழிலாளர் வர்க்கம்.
-------------------
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
1 comments:
இரவுத் தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு வரும் மிக சரி.
நான் சிங்கப்பூரில் 2004 ஆம் ஆண்டு சரியாக முன்று மாதங்கள் காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரையும், சில நேரங்களில் இரவு முழுக்கவும் தொடர்ச்சியாக வேலை செய்த அனுபவம் உண்டு. சில நேரங்களில் மன அழுத்ததின் காரணமாக (ஸ்லிம் லிம் டவர்) கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து விடலாம் என்று கூட தோன்றும்.
பிறகு சென்னையில் 2007ஆம் ஆண்டு தகவல் தொழில் நூட்பத்தில் அமெரிக்கா சார்ந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆறு மாதம் சரியான தூககம் இல்லாமல் வேலை செய்ததில் உயர் இரத்த அழுத்தம் எனது 29தவது வயதில் எனக்கு வந்தது.
காலையிலிருந்து இரவு முழுக்க முழித்திருந்து வேலை செய்வதொல்லாம் ஒரு வேலையா? என்று மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு முயற்ச்சி செய்து தற்பொழுது இறைவன் அருளால் மஸ்கட்டில் நல்ல வேலை இருக்கிறேன்.இறைவன் அருளால் உயர் இரத்த அழுத்தமும் சரியாகிவிட்டது.
Post a Comment