**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.

>> Wednesday, November 2, 2011

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “

மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……
எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
ஓ மானுடனே! சிந்திப்பாயா ? உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.
பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.

அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே ! உன் சகோதரர்களை பார் ?.

மனிதர்கள் மட்டுமா?
அல்குரான் 55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. …. (ஸுஜூது ‍= வணங்குதல்)

Muslims pray in every place

Images of Muslims praying everywhere

Muslims pray in the streets of France.

Muslims praying in the streets of France

Muslims pray in the street in Rome

வின்வெளியில் வின்கலத்தினுள் தொழுகை.
Dr. Sheikh Muszaphar Shukor Praying in outer space

MASHA'ALLAH !! Muslim Guy Praying in Public - New York [HQ]

If You Are Muslim Then Must Watch You'll Cry

Muslims pray in a Church, USA.

This is what happened to a Muslim to pray in America .

World's most Beautiful View In Germany

**********

Muslim Prayer, Everywhere, No Excuse to Miss it.

ஒன்றே குலம். ஒருவனே தேவன்.

அருட்கொடையாம் தொழுகை.
ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய், நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உடற் சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகமெங்கும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்
இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.
ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '
என கூறுகிறார்.

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.
***********

முஸ்லீம்கள் மீது யோகாவை திணிக்க வேண்டாம். முஸ்லீகளுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும்யோகா.
****************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

37 comments:

mohamedali jinnah November 2, 2011 at 2:11 PM  

மிகவும் பெரிய முயற்சி. அரிதான விடியோக்கள் கண்டு மற்றவர் காண வழி வகுத்த உங்களுக்கு இறைவனது அருளுண்டு .அன்புடன் எங்கள் வாழ்த்துகள் எப்பொழுதும் உண்டு .
azakAllah Khairan. I hope InshAllah you will continue updating the site and adding other helpful features and information regarding islam

ADMIN November 2, 2011 at 2:35 PM  

ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதம். நல்ல பல விஷயங்களை சொல்கிறது. பகிர்வுக்கு நன்றி.! ஒன்றே குலம் ஒன்றே தேவன் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு..!! பகிர்வுக்கு நன்றி..!!

ADMIN November 2, 2011 at 2:37 PM  

நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

VANJOOR November 2, 2011 at 3:59 PM  

ASSALAMU ALAIKKUM W.R.B.

HELLO MY ELDER BROTHER NIDURALI SAHIB,

APPRECIATE YOUR ENCOURAGEMENT AND "DUA".

I AM PUBLICLY PROUD TO ANNOUNCE HEREWITH THAT I AM STILL FAR BEHIND YOU.

REGARDS.
VANJOOR.

VANJOOR November 2, 2011 at 4:12 PM  

அன்பின் தங்கம்பழனி,

வருகைக்கும்,

கருத்துக்கும்,

இணைந்ததற்கும்,

அழைப்புக்கும்

நன்றி.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

suvanappiriyan November 2, 2011 at 4:18 PM  

வாஞ்சூர் அண்ணன்!

மிகச்சிறந்த காணொளிகளை தேடிப் பிடித்து கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி!

விச்சு November 2, 2011 at 5:07 PM  

நல்லதொரு காணொளிகள்.வாழ்த்துக்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ November 2, 2011 at 5:27 PM  

அஸ்ஸலாமு அளிக்கும் வரஹ்...
சகோ.வாஞ்சூர்,

முன்பொருமுறை...

"எங்கும்...எந்த நிலையிலும்...எப்படியும்...! (Photo Gallery)"

...என்று ஃபோட்டோ கேலரி பதிவு ஒன்று போட்டேன்.

ஆனால், மாஷாஅல்லாஹ் நீங்கள் ஒரு வீடியோ கேலரி பதிவு போட்டு கலக்கிட்டீங்க. மனதைத்தொடும் அற்புத வீடியோக்கள் இவை. பகிர்வுக்கு நன்றி சகோ.வாஞ்சூர்.

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:239)

வலையுகம் November 2, 2011 at 5:49 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பகிர்வுக்கு நன்றி

Shanmugam Rajamanickam November 2, 2011 at 7:42 PM  

காணொளிகளை பாத்துட்டு வரேன்...

ஓசூர் ராஜன் November 2, 2011 at 9:09 PM  

தங்களது அர்பணிப்பு , முயற்சி பிரமிக்க வைக்கிறது. பாராட்ட வார்த்தைகள் இல்லை! அல்லா உங்களுக்கு மகத்துவம் செய்வார்!

VANJOOR November 2, 2011 at 9:49 PM  

ந‌ம்மீது இறைவன் அருளால் சாந்தியும் ச‌மாதானமும் நில‌வ‌ட்டும்.


சுவனப்பிரியன்
விச்சு
முஹம்மத் ஆஷிக்_citizen of world~
ஹைதர் அலி
சண்முகம்
ஓசூர் ராஜன்

தாங்க‌ளின் வ‌ருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுத‌ல்க‌ளுக்கும்

உள்ள‌மார்ந்த‌ ந‌ன்றி.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

குறையொன்றுமில்லை. November 2, 2011 at 10:05 PM  

ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதம். நல்ல பல விஷயங்களை சொல்கிறது. பகிர்வுக்கு நன்றி.! ஒன்றே குலம் ஒன்றே தேவன் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு..!! பகிர்வுக்கு நன்றி..!!

VANJOOR November 2, 2011 at 10:18 PM  

சகோதரி லக்ஷ்மி அவர்களின்

வருகைக்கும்
பாராட்டுதலுக்கும்
கருத்து உடன்பாட்டுக்கும்

நன்றி.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

Karthikeyan Rajendran November 2, 2011 at 11:17 PM  

அருமையான முயற்சி தொடரட்டும் , இந்த பதிவு நிச்சயம் பல ஹிட்சுகளை அல்லும், வாழ்க! வளர்க!!!

apsara-illam November 3, 2011 at 1:28 AM  

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அவர்களே.தங்களின் வலைப்பூவை இன்றுதான் ஸாதிகா அக்காவின் பக்கம் மூலம் அறிந்தேன்.
மாஷா அல்லாஹ் நிறைய நல்ல பதிவுகளை உங்கள் பக்கத்தில் பதித்துள்ளீர்கள்.ஒவ்வொன்றும் படிக்க வேண்டிய அருமையான விஷயங்கள்.
ஒவ்வொன்றாக நிதானமாக படித்து கருத்துரையிடுகிறேன்.(இன்ஷா அல்லாஹ்).
தங்கள் எழுத்துக்களுக்கு பாராட்டுக்களும்,இன்னும் நிறைய நல்விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்களும் பல.

அன்புடன்,
அப்சரா..

VANJOOR November 3, 2011 at 11:17 AM  

சகோதரர் ஸ்பார்க் கார்த்தி யின்
வருகைக்கும்
பாராட்டுதலுக்கும்
வாழ்த்துக்க‌ளுக்கும்

நன்றி.

அல்ஹ‌ம்துலில்லாஹ்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்

VANJOOR November 3, 2011 at 11:23 AM  

வ‌ அலைக்குமுஸ்ஸ‌லாம் (வ‌ர‌ஹ்)

அன்பின் அப்ச‌ரா,

என‌க்கு 73 வ‌ய‌து ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌தம்மா.

தேய்ந்து விட்ட சக்கரம் ஏதோ அவன் அருளால் சுழன்று கொண்டிருக்கிறது.

உங்க‌ளைப் போன்றோர்க‌ளின் ஊக்க‌மும் ஆத‌ர‌வும் பாராட்டுத‌ல்க‌ளும் தான் புத்துண‌ர்வு ஊட்டி த‌ள்ளாமை உண‌ராது வ‌லைத்த‌ள‌த்தில் இய‌க்கி செல்லுகிற‌து.

வ‌ருகைக்கும்
ஆத‌ர‌வுக்கும்
பாராட்டுதலுக்கும்
வாழ்த்துக்க‌ளுக்கும்

நன்றி.

அல்ஹ‌ம்துலில்லாஹ்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

Admin November 3, 2011 at 12:48 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைத்து வீடியோக்களும் அருமை.

ஆமினா November 3, 2011 at 4:33 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜஸக்கல்லாஹ் ஹைர்...
அப்பா அருமையான அரிதான வீடியோக்களை காணும் வாய்ப்பை தந்தமைக்கு ! மாஷா அல்லாஹ்

இன்னும் இதுபோல் பலர்பயனடையும் வகையில் செயல்பட எந்நாளும் எல்லாம்வல்ல அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு கிடைக்க துஆ செய்தவளாக

ஆமினா முஹம்மத்

VANJOOR November 3, 2011 at 7:03 PM  

வ‌ அலைக்குமுஸ்ஸ‌லாம் (வ‌ர‌ஹ்)

செல்வ‌ன் அப்துல் பாஸித்!

வ‌ருகைக்கும்
பாராட்டுத‌லுக்கும்

ந‌ன்றி.

வாஞ்சையுட‌ன் வாஞ்சூர்.

VANJOOR November 3, 2011 at 7:06 PM  

வ அலைக்குமுஸ்ஸ‌லாம் ( வ‌ர‌ஹ்)
அம்மா ஆமினா முஹ‌ம்ம‌த் !

வ‌ருகைக்கும்
பாராட்டுத‌லுக்கும்
ஆத‌ர‌வுக்கும்
க‌னிவான‌ “துஆ” வுக்கும்

ந‌ன்றி .

வாஞ்சையுட‌ன் வாஞ்சூர்.

Aashiq Ahamed November 3, 2011 at 9:53 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

அன்பு அப்பா அவர்களுக்கு,

அருமை...தங்களின் சிறப்பான அழைப்பு பணிக்கு என்றும் இறைவன் துணை நிற்பானாக...ஆமீன்.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

தி.தமிழ் இளங்கோ November 4, 2011 at 12:54 AM  

வணக்கம்! முஸ்லிம் சமுதாயக் கருத்துக்களை தெரிந்து கொள்ள உங்கள் வலைப் பதிவை அடிக்கடி படிப்பேன். விமர்சனம் எழுதியது இல்லை. தாங்கள் தொகுத்துள்ள வீடியோ காட்சிகள் சிறப்பான தொகுப்பு. மேலும் எளிய அழுத்தமான சுருக்கமான விளக்கம்.

MohamedAli November 4, 2011 at 7:18 AM  

அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பிற்கினிய நண்பர் வாஞ்சூர் அவர்களுக்கு அன்புடன் நண்பர் A.S.முஹம்மது அலி எழுதும் மின் மடல். நலம், நலமறிய ஆவல். நிற்க! தங்களின் வலைச்சரத்தில், உலகில் இறைவனை எங்கெங்கெல்லாம் எந்த நிலையிலும் மனிதன் எப்படி எல்லாம் வணங்கி தொழுது தனது நன்றிக்கடனை இறைவனுக்கு செலுத்துகின்றான் என்பதை தங்கனின் வீடியோ பதிவுகள் மூலம் இன்று பார்த்து பரவசமடைந்தேன். அருமையான பதிவுகள். தங்களின் இப்பணி மிகவும் பாரட்டத்தக்கது. வல்ல இறைவன் தங்களுக்கு ரஹமத்தான பாக்கியங்களை தந்து அருள்வானாகவும் என்றும் அன்புடன் A.S.முஹம்மது அலி

VANJOOR November 4, 2011 at 12:04 PM  

வ‌ அலைக்குமுஸ்ஸ‌லாம் (வ‌ர‌ஹ்)

அன்பின் ஆஷிக் அஹ‌மத் !

வ‌ருகைக்கும்
ஆதரவுக்கும்
பாராட்டுக்கும்
க‌னிவான "துஆ" வுக்கும்
ந‌ன்றி.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

VANJOOR November 4, 2011 at 12:08 PM  

வ‌ல்ல‌ இறைய‌வ‌னின் அருளால் ந‌ம் அனைவ‌ரின் மீதும் சாந்தியும் சமாதான‌மும் நில‌வ‌ட்டும்.

அன்பின் தி.தமிழ் இளங்கோ !

வ‌ருகைக்கும்
மகிழ்வூட்டத்துக்கும்
ஆதரவுக்கும்
புரிந்துணர்வுக்கும்
நல்லிணக்கத்துக்கும்
பாராட்டுக்கும்

ந‌ன்றி.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

VANJOOR November 4, 2011 at 12:45 PM  

வ‌ அலைக்குமுஸ்ஸ‌லாம் (வ‌ர‌ஹ்)
அன்பின் A.S. முஹம்மது அலி !

எனது 73 ம் வயதில் இந்த அளவு இயங்குவதே அந்த வல்லவனின் பேரருள் தான்.

வ‌ருகைக்கும்
ஆதரவுக்கும்
பாராட்டுக்கும்
க‌னிவான "துஆ" வுக்கும்
ந‌ன்றி.

அயராது தொடரும் யாவருக்கும் பய‌னுள்ள சமூக சேவையான தங்களின் “பெட்டகம்" வலைப்பதிவின் வாச‌க‌ன் நான்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

Dhanalakshmi November 4, 2011 at 1:29 PM  

armayana videos.......

VANJOOR November 4, 2011 at 2:04 PM  

DEAR DHANALAKSHMI

THANK YOU FOR YOUR

VISIT
ENCOURAGING COMMENTS.


THE WELCOMING BANNER "Make everybody smile...." IN YOUR BLOG
IS JUST WONDERFUL.


REGARDS.
VANJOOR

G u l a m November 5, 2011 at 9:37 AM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வழக்கம்போல் வாஞ்ஜூர் அப்பாவின் தனிச்சிறப்பு இந்த பதிவு சேர்க்கையிலும் மிளிர்கிறது.,

இன்னும் ஆயிரமாயிரம் ஆக்கங்கள் உங்கள் மூலமாக இந்த உம்மத்திற்கு கிடைக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

உங்களுக்கும் - உங்கள் குடுபத்தாருக்கும் இந்த பெருநாளும் இனிய பெருநாளாக அமைந்திட இறைவனிடம் துஆ செய்தவனாய்...

VANJOOR November 5, 2011 at 10:46 AM  

வ அலைக்குமுஸ்ஸ‌லாம் (வரஹ்)

அன்பின் குலாம் !

அல்ஹம்துலில்லாஹ்.

வருகைக்கும்
பாராட்டுதலுக்கும்
கனிவான் "துஆ" வுக்கும்

பெருநாள் வாழ்த்துக்கும்

நன்றி.

தாங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.


வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

imamhabeeb blog November 5, 2011 at 6:10 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பகிர்வுக்கு நன்றி ple vist my blog......imamhabeeb.blogspot.com

VANJOOR November 5, 2011 at 7:16 PM  

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

அன்பின் இமாம் ஹபீப் !

வருகைக்கு நன்றி.

த‌ங்க‌ளுடைய வ‌லைப்பூவை படிக்கிறேன்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

Nasar November 6, 2011 at 1:45 AM  

அஸ்ஸலாம் அலைக்கும் ......
தோழரே...... அரிய பல விடியோக்களை ஓரே எடத்தில் காண வாய்ப்பு நல்கிய எல்லாம் வல்ல
அல்லாவுக்கே புகழ் அனைத்தும் .........
தாங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இத் தளத்தின் அணைத்து வாசகர்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
வஸ்ஸலாம் --

VANJOOR November 6, 2011 at 11:12 AM  

வ‌ அலைக்குமுஸ்ஸ‌லாம் வ‌ர‌ஹ்.

அன்பின் நாஸ‌ர் !
வ‌ருகைக்கும்
பாராட்டுதலுக்கும்

பெருநாள் வாழ்த்துக‌ளுக்கும்

ந‌ன்றி

ID MUBARAK TO YOU AND YOUR FAMILY

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

F.NIHAZA November 11, 2011 at 3:36 AM  

மாஷா அல்லாஹ்....

என்றென்றும் உங்கள் சேவை தொடர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP