சின்னவீடு
>> Saturday, February 10, 2007
சின்னவீடு
காலையிலிருந்தே படபடப்பாகத்தான் இருந்தது ஜரீனாவுக்கு.
'தேட் ஐ' டிடெக்டிவ் மகாதேவன் இன்றுதான் வரச் சொல்லியிருந்தார். நிச்சயமாய் ஏதோ விபரீதம் இருக்கிறது. இல்லையென்றால், சந்தேகப்பட ஒன்றுமில்லை. பி ஹேப்பி மேடம்! என்று போனிலேயே விஷயத்தை முடித்திருப்பார்.
பத்து வருஷம் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது. கணவன் ஊரில் இருக்கும் நாட்கள் குறைவுதான். பெங்களூர், கொச்சி என்று பல இடங்களில் சாஃப்ட்வேர் கம்பெனி வைத்திருப்பவருக்கு எப்போதும் சென்னையிலேயே இருக்க முடியுமா? திடீரென்றுதான் சந்தேகம் ஏற்பட்டது. எல்லாம் வீண் பிரமை என்று உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் டிடெக்டிவ் 'தேட் ஐ'யை அணுகியிருந்தாள்.
குழந்தைகள் பள்ளிக்குச் சென்றம் மாருதியைக் கிளப்பிக்கொண்டு விரைந்தாள் ஜரீனா. டிராபிக் நெரிசலில் அண்ணா சாலைய அடைவதற்குள் மணி 12 ஆகிவிட்டது.
பெரியதொரு கவரை நீட்டினார் டிடெக்டிவ் மகாதேவன். அவர் கண்களில் கனிவு...
'சார்...!' அவளுக்கு நடுக்கமாயிற்று.
'மேடம்! 16 வருஷம் முன்னாலேயே இக்பாலுக்கும் ; ஆமினாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கிறது. ஸிக்ஸ் இயேர்ஸ் பிஃபோர் யுவர் மேரேஜ்... ஒரே மகள், . வய து 13.... கொச்சியில் அரண்மனைபோல் பங்களா....'
'ஓ!' விம்மலை அடக்கிக்கொண்டாள். வேதனை மேலிட முறுவலித்தாள்.
'சாரி, மேடம். இதோ படங்கள்...'
'பார்க்கத் தேவை இல்லை. அவருக்கு சின்னவீடு இருக்குமென்று சந்தேகப்பட்டேன். நான்தான் சின்ன வீடு என்று புரிகிறது. தேங்க் யு 'பார் த ட்ரூத்!' எழுந்தாள்.
0 comments:
Post a Comment