பிளாஸ்மா' டி.வி. 'எல்.சி.டி' டி.வி. ரெண்டுல எது நல்லது?
>> Sunday, February 11, 2007
பிளாஸ்மா' டி.வி. 'எல்.சி.டி' டி.வி. ரெண்டுல எது நல்லது. பார்த்தால் ஒண்ணுபோலத்தான் தெரிகிறது. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுமே ஸ்லிம் அண்ட் ப்ளாட் ஸ்கிரீன் என்பதைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் இல்லை பிளாஸ்மா டி.வி.யில் ஜெனான் கேஸினால் ஆன லட்சக்கணக்கான பல்புகளை ஒளிரச் செய்து படம் உருவாகிறது. எல்.சி.டி.யில் வெண்ணிற ஒளிக்கதிரை லிக்விட் கிரஸ்டலின் வழியாகச் செலுத்தி நிறமாலையாகப் பிரித்துப் படம் உருவாகிறது. இரண்டுமே வளர்ந்து வரும் ஒரு தொழில் நுட்பம். எது நல்லது என்பது நமது தேவையைப் பொறுத்தது.
எல்.சி.டி. அடிப்படையில் டேட்டா டிஸ்ப்ளேவுக்காக உருவாக்கப்பட்டது. இப்பொழுது தொலைக்காட்சி தொழில் நுட்பத்தை அதில் புகுத்தி வருகிறார்கள். பலபேர் அமர்ந்து பார்க்கும் பொழுது, திரைக்கு நேராக இருப்பவர்களுக்கு துல்லியமாகவும் பக்க வாட்டில் மங்கலாகவும் தெரியும். இதைத்தான் வியூ ஆங்கிள் என்று சொல்வார்கள். அது எல்.சி.டி.யில் குறைவு. அதேபோல், கலர் நேச்சுரலாகத் தெரிவதற்கு கான்ட்ராஸ்ட் ரேஷியோ முக்கியம். அதுவும் எல்.சி.டி.யில் குறைவுதான். சாதகமான அம்சம், படங்கள் துடிக்காமல் சீராகத் தெரியும். ஷார்ப்னஸ் அதிகமாக இருக்கும். வெளிச்சமான இடத்திலும்கூட தெளிவாகப் பார்க்க முடியும்.
பிளாஸ்மா டி.வி.யைப் பொறுத்தவரை திரையின் அளவு பெரிதாக பெரிதாக படத்தின் குவாலிட்டியும் கூடும். குறையாது. கான்ட்ராஸ்ட் ரேஷியோ அதிகம் என்பதால் கலர் இயல்பாக இருக்கும். படத்தின் தரம் எல்லா இடத்திலும் ஒரே சீராக இருக்கும். வியூ ஆங்கிள் அதிகம். எங்கிருந்து வேண்டுமானாலும் நன்றாகப் பார்கக முடியும். குறைபாடு என்றால், எல்.சி.டியைவிட, விலை கூடுதல். வாழ்நாள் குறைவு. கரண்ட் செலவு அதிகம். மிக அருகில் இருந்து பார்க்க முடியாது.
முடிவாகச் சொல்வதென்றால் பெரிய வீடு, பெரிய திரை, பிளாஸ்மா பெஸ்ட். சின்ன வீடு. 30' குறைவான ஸ்கிரீன் என்றால் எல்.சி.டி. ஓ.கே. விலை அதிகம் என்பதால் ஆயுசுக்கும் ஓடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதிக பட்சம் ஆறேழு வருடம். தவிர, இதற்கு மேலும் நீங்கள் ஆராய்ச்சி செய்தால் முன் வழுக்கைத் தவிர்க்க முடியாததாகிவிடும்.
0 comments:
Post a Comment