வியப்பான மூளை
>> Wednesday, February 7, 2007
வியப்பான மூளை.
கோடிக்கணக்கான செல்களின் கூட்டமைப்பே நம உடல். அதில் மூளயில் மட்டுமே 1400 கோடி செல்களுக்கு மேல் உள்ளன. முழு உடம்பையும் இந்த மூளை மண்டலமே கட்டுப்படுத்துவதால் அங்கே தனி கவனமும், அது குறித்த பாதுகாப்பும் மிகவும் தேவையாகின்றன. மூளையத் தாக்கும் நோய்களுக்கு நாம் இடம் தராமல் இருக்கவேண்டும்.
வியப்பான மூளை :
எல்லாவித வேலைகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்கு அதிகமான ஆக்சிஜன் தேவையாகிறது. உடல் பயன்படுத்தும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளையே விழுங்குகிறது. சிறிது நேரம் ஆக்சிஜன் தடைப்பட்டாலும் மூளையின் செல்கள் பழுதடைகின்றன அல்லது இறக்கின்றன.
மூளையின் செயலுக்கேற்ப ஒரு மணி நேரத்திற்கு 35 லிட்டர் இரத்தம் அங்கே செல்கிறது. ஒரு லட்சம் முதல் 10 லட்சம் பல்வேறு வேதியியல் வினைச்செயல்கள் ஒவ்வொரு நிமிடமும் முளையில் நடைபெறுகின்றன. மூளையின் முழுத்திறன் என்னவென்று, உண்மையில் இதுவரை அறிய முடியவில்லை.
சோவியத் விஞ்ஞானிகள் குறைந்தபட்ச மதிப்பீட்டில் மூளையின் திறனை அறிய முயன்றனர். அதுவே ஒன்றின் பக்கத்தில் 105 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை எவ்வளவு பூஜ்யங்களப் போடமுடியுமோ அந்த எண்ணிக்கையில் செயல்புரியும் ஆற்றல் தெரிந்தது.
பாதிக்கும் நோய்கள் :
மூளை-தண்டுவட திரவ சுழற்சியில் எங்கேனும் தடை ஏற்பட்டால், மூளை அல்லது தண்டுவட பரப்பில் அதிக அழுத்தம் தோன்றும். இதற்கு ''ஹடிரோ செபலஸ்'' என்று பெயர். இப்படி மிகவும் அசாதாரணமாகவே தோன்றும். எனினும், சில நேரத்தில் அப்பகுதிகளில் கட்டி ஏற்பட்டால் அதன் விளைவாக இப்படி நேர்வதுண்டு.
கருவில் மண்டையோடு இணையும்முன் மூளை-தண்டுவட திரவ சுழற்சியில் தடை ஏற்பட்டால், அதன் விளவாக, தலையே மிகப் பெரிதாக வளர்ந்து விடுவதுண்டு. இதை அறுவை சிகிச்சை முறையில் 'கதீட்டர்' என்னும் ரப்பர் வடிகுழாய் உதவி கொண்டு தேங்கி நிற்கும் திரவத்தை வேறு பகுதிக்குத் திருப்பி விடுவார்கள்.
மூளைச்சவ்வு அழற்சி ஒரு கடுமையான மூளைத் தொற்றாகும். இது குழந்தைகளிடயே பரவலாக வரும். பொதுவாக கக்குவான், இருமல், காதுத் தொற்று முதலிய நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடும். தாய்க்கு காசநோய் இருந்தால் அதன் விளைவாக பிறக்கும் குழந்தைக்கு பிறந்த சில மாதங்களிலேயே காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி ஏற்படும்.
அறிகுறிகள் :
காய்ச்சல், தலைவலி, உடல் இளைப்பு, கழுத்து, தலைவிறைப்பு, வாந்தி, வழக்கத்திற்கு மாறான அங்க அசைவுகள், பசியின்மை, முதலானவை இதன் அறிகுறிகளாகும். உடனடியாக மூளைச்சவ்வு அழற்சி தாக்கும் அபாயமுண்டு. மருத்துவ உதவியைப் பெறவேண்டியது மிகவும் அவசியமாகும்.
மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்கள் சிலருக்கு அவ்வளவு வலுவுடயதாக இருக்காது. எனவே அந்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு அவை வெடித்து மூளையில் இரத்தப்பெருக்கு ஏற்படும். இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும். சில நேரத்தில் இரத்தநாளம் வழியாகச் செல்லும் ரத்தம் உறைந்து போய்விடும். இதற்கு 'திராம்பஸ்' என்று பெயர். மூளை பெறும் ஆக்சிஜன் தடைபட்டு, செயலற்றுப் போகிறது. இதையே பாரிசவாயு அல்ல முடக்குவாதம் என்கிறோம். தகுந்த சிகிச்சை உடனடியாக எடுப்பதன் மூலம் இதை நிவர்த்திக்க வழி உண்டு.
சில வைரஸ்கள் இரத்தத்தின் மூலமாக மூளைய அடைநது; மூளைக் காய்ச்சல், மூளை அழற்சி நோய்கள உண்டுபண்ணிவிடுகிற.து போதை மருந்துகள், சாராயம் போன்றவற்றால் இப்படி நேர்ந்துவிடுகிறது மூளையின் செயல் திறமை பாதிப்படைகிற.து விபத்தின் காரணமாக தலையில் அடிபட்டால், தற்காலிக நினைவுக்குறைவு, தலைசுற்றல், வலிப்பு முதலியவையும் தோன்றிவிடும்.
பேச்சைக் கட்டுப்படுத்தும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் பேச்சு கோர்வையாக வராது. நினைத்ததை சொல்லமுடியாது. எழுதமுடியாது. இதற்கு 'அபாஸியோ' நோய் என்று பெயர்.
உடல் இயக்கத்தைக் கட்டுப்படுததும் நரம்புச் செல்கள் அடங்கிய தொகுதியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் ஓய்வு நிலையில் உடலெங்கும் ஒருவித நடுக்கம் இருந்துகொண்டிருக்கும். மற்ற நேரத்தில் விறைப்பு நிலையில் இருக்கும். இதை 'பார்க்கின்ஸன்' நோய் என்பர்.
போலியோ வைரஸ்கள், ரேபிஸ் வைரஸ், பன்றி வைரஸ் போன்றவையும் இயக்க நரம்புகளைப் பாதித்து உடலியக்கத்தை முடமாக்கிவிடுகின்றன.
மூளை தொடர்பான பல சிக்கல்கள் இன்றைய மருத்துவ விஞ்ஞானம் அவிழ்த்துவிட்டது. ஆனால் ''காக்ககாய் வலிப்பு'' மட்டும் இன்னும் பிடிபடாமல் பறந்துகொண்டிருக்கிறது.
முடிவில்லை :
நிதம் நிதம் மூளை குறித்து ஆராய்ந்தும், எழுதியும், அனுமானித்தும் வந்தாலும் அது நீண்டுகொண்டே போகும் ''சிந்பாத்'' கதை போலிருக்கிறது. புரியாத புதிரான மூளையில் இன்னொரு புதிருமுண்டு. என்ன தெரியுமா? மூளையில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால், வெளியே தெரியாவண்ணம் மற்ற செல்களே அவற்றைச் சரிசெய்து கொள்கின்றன. ஆக பிரச்சினை என்பது நம்மால் வெளியிலிருந்து உள்ளே போனால்தான் உண்டு.
மூளையின் முழு பரிமாணத்தையும் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
---------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR
0 comments:
Post a Comment