கடன்
>> Wednesday, February 14, 2007
காலையில் போன் அழைத்தது. கரீம்எடுத்தான். கும்பகோணத்தில் தாய்மாமா ஜாபர் ; இறந்துவிட்டதாகத் தகவல்!
முதலில் அதிர்ந்தவன், பிறகு மகிழ்ந்தான்.
காரணம் வீடு கட்டுவதற்காக மாமாவிடம் வாங்கியிருந்த ஒரு லட்ச ரூபாய் கடன். அவன் அவரிடம் கடன் வாங்கியிருந்த விஷயம் யாருக்கும் தெரியாது.
கும்பகோணம் சென்றான். மாமாவின் மனைவியோ மாமாவின் மகனோ இதுபற்றிக் கேட்கவில்ல. அவனுக்குள் சந்தோஷம் தாங்கவில்லை.
இது நடந்து இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும். கும்பகோணத்திலிருந் மாமா மகன் அப்துல் கையில் ஒரு மஞ்சள் பையோடு வந்திருந்தான்.
தந்தையின் மரணத்துக்காக தாடி வளர்த்திருந்தான். வாப்பாவின் சாவு மகன் அப்துல் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
அந்த ஒரு லட்ச ரூபாய்... என்று அப்துல் இழுத்தபோது, கரீம் துணுக்குற்றான்.
''வாப்பாவின் நாட்குறிப்பில் கரீம் ஒரு லட்ச ரூபாய் என்று எழுதியிருந்தது. வாப்பா பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும் அல்லவா? ஆகவே கொண்டு வந்துள்ளேன். பிடியுங்கள் என்று மஞ்சள் பையை நீட்டினான்.
அடுத்த நொடி... கூனிக்குறுகிப் போனான் கரீம் அப்துலின் நேர்மையின் முன்பு தான் ஒரு அருவருக்கத்தக்க ஜந்துவாக உணர்ந்தான்.
தன் மனசாட்சியின் குரலாகப் பேச ஆரம்பித்தான்
கரீம்
அப்துல் உங்க அப்பா என் தாய்மாமன். என்னிடம் அவர் கடன் வாங்கவில்லை. நான்தான் அவரிடம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கினேன்.கள்ளம் ஒழிந்து தெளிந்த மனதுடன் பேசிய கரீம், உள்ளே சென்றான் பணத்தை எடுப்பதற்காக.
0 comments:
Post a Comment