**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சிறுவர்கள்- சினிமாவும், சீரியலும்.

>> Monday, February 12, 2007

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

குழந்தைகளை அவர்களது குழந்தைப்பருவத்தில் அன்புடன் அரவனைத்துக் உச்சி முகர்ந்து கொள்ள வேண்டும், அவர்களுக்காக இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்பதுடன் அவர்களது 7 முதல் 10 வயது வரையிலான பிஞ்சுப் பருவத்தில் தொழுகையை எத்தி வைத்து விடவேண்டும், என்பதை அறிந்தோம் அடுத்து அவர்களுக்கு வீட்டில் நல்லொழுக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.

உளூவும், தொழுகையும் .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நினைவு கூரப்படுகின்ற வீடு உயிருள்ள வீடாகும். அல்லாஹ்வை நினைவு கூறப்படாத வீடு இறந்த வீடாகும். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

குடும்பத் தலைவராகிய ( தாய், தந்தையர் ) நீங்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் நிறைவேற்றி விட்டு சுன்னத்தான 12 ரக்அத்களையும் முடிந்தளவு வீட்டில் தொழ முயற்சிக்க வேண்டும், இந்த காலத்தில் தாய்மார்கள் தொழுவதற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் ( தடுக்கப்பட்டிருப்பதால் ) தாயும் வக்து தவறாமல் வீட்டில் தொழுதிட வேண்டும்

அவ்வாறு செய்தால் இதைப் பார்க்கக் கூடிய சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு தாய், தந்தையைப் போல் நாமும் தொழ வேண்டும் என்கின்ற சிந்தனை வரும் அத்துடன் உளூச் செய்வதையும் கூடுமானவரை வீட்டில் செய்ய முயற்சிக்க வேண்டும் நீங்கள் உளூவை பரிபூரணப் படுத்துவதையும் நபிவழியில் தொழுவதையும் அவர்களை கவனிக்கச் சொல்லி அதன்படி தொழச் செய்ய வேண்டும்.

விளையாட்டு.

சிறுவர்கள் என்பதால் அதிகம் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள் அதனால் வீட்டில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உடற் பயிற்சி போன்ற விளையாட்டுக்களில் அவர்களை புகுத்தி விடவேண்டும்,

பொழுது போக்கு என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் சீட்டுக்கட்டு, கேரம், தாயம், பகடை, சதுரங்கம், இன்னும் உங்கள் ஊர்களிலுள்ள சூதுக்குப் பயன்படுத்தும் விளையாட்டுக்களையும் வீட்டிற்குள் பிள்ளைகளை வைத்துக்கொண்டு விளையாட முயற்சித்து விடாதீர்கள். இன்று பெரும்பாலும் இந்த விளையாட்டுக்களே பணம் வைத்து நடத்தப்படும் சூதுக்காக பயன்படுத்தப் படுகின்றன.

அவர்கள் வெளியில் சென்று பார்க்கும் போது வீட்டில் சாதாரணமாக விளையாடிய சீட்டு விளையாட்டை வெளியில் காசு வைத்து விளையாடுவதை கவனித்தால் அதுவும் இவனுக்கு அது விளையாடத் தெரியும் என்ற நிலையிருந்தால் காசு வைத்து விளையாடி விடுவான் ( சூது ஹராம் என்று அப்பொழுது அவனுக்குத் தெரியாது அதற்குள் வெறித்தனமாக நுழைந்தப் பின் அது ஹராம் என்றால் அவனுடைய மனநிலை அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் அவர்கள் வெளியிலிருந்து தாமதித்து வருவதை அறிந்தால் அவர்களை முன்விட்டுப் பின் தொடருங்கள் அவர்கள் வெளியில் சென்று என்ன செய்துவிட்டு வருகிறார்கள் என்று நோட்டமிடுங்கள். ஏன் தாமதம் என்றுக் கேட்டால் நன்பனுடைய வீட்டில் இருந்தேன் என்றுக் கூறுவான் ஆனால் கோலி விளையாடப் போயிருப்பான் இந்த கோலி விளையாட்டுத்தான் சூது விளையாட்டின் பேசிக் ( அடித்தளம் ) ஆகும்

மேலும் சிறுவயது பாலகர்கள் கோலி விளையாடும் இடத்திற்கு சென்றுப் பார்த்தால் நீங்களே வெட்கி தலைகுணியக்கூடிய அளவுக்கு அருவருப்பான தீய வார்த்தைகள் பேசப்படுவதைப் பார்க்கலாம்.

மேலும் அவர்கள் கோலி விளையாட்டிலிருந்து பரினாமம் பெற ஆசைப்படுவார்கள் கோலி ' யின் பரினாமம் ' கேரம் ' கேரத்தின் பரினாமம் ' சதுரங்கம் ' என்று அசுர வேகத்தில் பரினமித்துக் கொண்டிருப்பார்கள் இவைகளில் நின்று நிலையாக விளையாடுவதற்கு தெம்பாக ' கிக் ' ஏற்றிக் கொள்ள ஆசைப்படுவார்கள் ' கிக் ' உடலில் ஏறிவிட்டால் அது சூது விளையாட்டோடு நிருத்தி விடாது ' கிக் ' ' கிளு கிளுப்பை ' தேடிச் செல்லும் விபச்சாபரத்தில் வீழ்ந்து விடுவான் .

சினிமாவும், சீரியலும்

இதெல்லாம் சரிதான் என்று சினிமா எடுத்துச் சொல்லும் இவைகளை எல்லாம் செய்வதற்கு அதிகப்படியான பணம் தேவைப்படும் அவ்வளவு பணத்தையும் தாய், தந்தையர் கொடுக்க மாட்டீர்கள் ஆனால் அதற்கு தேவைப்படும் பணத்தை எவ்வாறு ஈட்டுவது என்பதை சினிமாவும், சீரியலும் எடுத்துக் கூறும்.

ஜேப்படி, வழிப்பறியிலிருந்து, கொலை செய்து கொள்ளையடிப்பது வரை சினிமாவும், சீரியலும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ' அடல்ட்ஸ் ஒன்லி ' என்று போட்டிருப்பார்கள் தியேட்டருக்குள் நுழைந்துப் பார்த்தால் பொடிசுகள் தான் சிகரெட்டை புகைத்துக் கொண்டிருப்பார்கள். அங்கு தான் அவர்களுக்கு மது, மாது, சூதுவில் மூழ்குவது எப்படி என்றும் அவற்றை அடைவதற்கு எவ்வாறு ஜேப்படியிலிருந்து, கொலை செய்து, கொள்ளையடிப்பது வரை லெக்சர் நடக்கும்.

தமிழகத்தைக் உலுக்கிய சிறுவர் கொலை
சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய சிறுவர்கள் கொலை இதற்கு பெரும் சான்றாகும் பதினெட்டு வயதிற்குட்பட்ட பாலகர்கள் போலீஸ் அதிகாரிகள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு விழிப் பிதுங்கும் அளவுக்கு அவர்களது சேட்டைகள் இருந்திருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மது, மாது, சூது, கொலை, அனைத்தையும் பிஞ்சிலேயே செய்து முடித்து விட்டு வெம்பி வெதும்பி விட்டனர் இவைகளை எல்லாம் தாங்கள் கற்றுக்கொண்டது சினிமாவில் தான் என்பதுடன் பதினெட்டு வயதிற்குள் இவைகளை எல்லாம் செய்துவிட்டால் தண்டனை கிடையாது என்று சினிமாவில் கூறக் கேட்டுள்ளோம் என்றுக்கூறி இருக்கிறார்கள் என்றால் ? இந்த சினிமாவையும், சீரியலையும் தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்து கை தட்டி, உச்சிக் கொட்டி ரசிக்கும் தாய், தந்தையரே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அதனால் அவர்களை அதிகம் வெளியில் சுற்றித் திரிய விடாமல் அவர்களுடைய பள்ளி நேரங்கள் போக எஞ்சி உள்ள நேரங்களை கூடுமானவரை ஹோம் ஒர்க் செய்ய ஆர்வம் ஊட்டுவதுடன், இஸ்லாமிய வரலாற்றுகளில் வீர சிறுவர்கள் பற்றி ஏராளமான பல குறிப்புகள் உள்ளன அவற்றை ஆய்வு செய்து தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இஸ்லாமிய போதனைகளை ஊட்டி வளர்ப்பதற்கு அவர்களுடைய பள்ளி நேரங்கள் போக மீதி நேரத்தை பயன்படுத்துங்கள். முதல் ஆசியரியர் தாய், தந்தையரும் முதல் பள்ளிக்கூடம் தங்களது வீடும் தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தாய்மார்களே! உங்களது வீட்டில் வக்து தவறாமல் தொழுகிறீர்களோ இல்லையோ வக்து தவறாமல் சீரியல் பார்க்கிறீர்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது சீரியல் முடிந்தப் பின்னரே தொழுகைகளை கோழி கொத்துவது போல் கொத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் மறுக்க முடியாது உங்களுடைய பச்சிளம் பாளகர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவைகளைப் புறக்கனிக்க முயற்சி செய்யுங்கள். டிவியைப் புறக்கனித்து விடுங்கள் என்று நாம் கூற வரவில்லை அதில் வரும் தீமைகளைப் புறக்கனித்து விடு;ங்கள் என்றுக் கூறுகிறோம். )

ஒழுக்கத்தைப் பேனுதல்
தந்தையரே ! உங்கள் குழந்தைகளுக்கு முன்பாக நீங்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், என்ன இது அவர்கள் நமக்கு முன்பாக ஒழுக்கமாக நடந்து கொள்வதா ? நாம் அவர்களுக்கு முன்பாக ஒழுக்கமாக நடந்து கொள்வதா ? என்று நினைக்கக் கூடாது சிலப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு புகைப்பார்கள் அதுவும் ஈசிச் சேரில் சாய்ந்துகொண்டு மிக லாவகமாக புகையை ஆழமாக இழுத்து ரவுண்டு கட்டி விடுவார்கள், அதைப் பார்த்த கனமே இது போன்று நாமும் புகையை ரவுண்டு கட்டி விட்டால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை அவர்களுடைய பிஞ்சு மனதில் ஆழமாக வேரூன்றி விடும். ( சாதாரணமாக சுவைத்து புகைத்தாலும் )

வெளியில் போனதும் தருதலை ஒன்று பெட்டிக்கடை ஓரத்தில் 'தம்' அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடன் இணைந்து மனதில் வேரூன்றிய ஆசையை தனித்துக்கொள்ள முற்படுவான் செயல் வடிவத்திற்கு கொண்டு வந்து விடுவான் அதனால் பிள்ளைகளுக்கு முன்பாக புகைப்பிடிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மொத்தத்திலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் சிகரெட் புகைப்பதெல்லாம் ஒன்றுமில்லை எனும் அளவுக்கு சமுதாயத்தில் கருதப் பட்டு விட்டதால் வீட்டிலும் தங்களது குழந்தைகளுக்கு முன்பதாக அமர்ந்து புகைப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது.

அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும்போது ஒழுக்கத்தைப் பேணத் தவறாதீர்கள், தீய விஷயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒவ்வொரு வக்து தொழுகைக்கும் ஜமாத்தை நோக்கிப் புறப்படுங்கள், குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள், பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடுங்கள் வீட்டில் பேணவேண்டிய இஸ்லாமிய ஒழுங்கு முறைகளை பின்பற்றி நடக்கத் தவறாதீர்கள்.

சிறுவரான தமீம் இப்னு ஹத்லம், இப்னு மஸ்¥த் (ரலி) அவர்கள் முன்னிலையில் ஸஜ்தா வசனத்தை ஓதினார். அவரிடம் இப்னு மஸ்¥த் (ரலி) அவர்கள் 'நீர் ஸஜ்தாச் செய்வீராக! ஏனெனில் இந்த விஷயத்தில் நீரே நமக்கு இமாமாக இருக்கின்றீர்' என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர்(ரலி) நூல் புகாரி 1075.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் குறைந்தது ... வருடங்கள் பணியாளராக பணியாற்றியவர்கள் போற்றுதலுக்குரிய நபித் தோழர் ஆனாலும் அவர்கள் சிறுவர் தமீம் அவர்களையே ஸஜ்தாவுக்கு முற்படுத்தினார்கள் அந்தளவுக்கு அந்த காலத்தில் சிறுவர்கள் மார்க்க அடிப்படையில் சிறந்து விளங்குபவர்களாகத் திகழ்ந்ததை மேற்கானும் நபிமொழி உணர்த்துகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP