நிஜநிலைமை தெரிந்தால்...
>> Sunday, February 11, 2007
நிஜநிலைமை தெரிந்தால்...
நான் மேக்கப் போடவில்ல
1779_ம் ஆண்டுக்கும் 1837_ம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஜோ கிரிமால்டி என்பவர், ஒரு நகைச்சுவை சர்க்கஸ் கோமாளி.
1808_ம் ஆண்டில் ஒருநாள் மாலைப்பொழுதில் மான்செஸ்டர் நகரில் இருக்கும் டாக்டர் ஜேம்ஸ் ஹாமில்டனிடம், ஒரு நோயாளி மனது சரியில்ல என வந்தார்.
''சிரிக்கப் பழகுங்கள், வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்'' என்றார் டாக்டர்.
''எப்படிச் சிரிக்கப் பழகுவது?'' என்றார் நோயாளி. அதற்கு டாக்டர், ''இன்றிரவு நடைபெறும் சர்க்கஸ் காட்சிக்குப் போய், அங்கு கிரிமால்டி என்ற கோமாளியின் வேடிக்கயைப் பாருங்கள்'' என்றார்.
நோயாளி சிரித்துவிட்டு, ''டாக்டர்! மேக்கப் போடாமல் இருப்பதால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்ல. நான்தான் கிரிமால்டி'' என்றார்.
சாதனையின் உச்சியில் உட்கார்ந்திருக்கும் மனிதர்களைப் பார்த்து மனமொடிந்து போவீர்கள்.
அவர்களின் நிஜநிலைமை தெரிந்தால்... ஆச்சரியத்துக்குப் பதில் அழுகைதான் வரும்! உள்ளுலகம் முதிர்ச்சியில்லாமல், வெளி உலகில் சாதனையின் உச்சிவரை செல்வது..
புல் தரையில் சாவியை வைத்துவிட்டு, நூறாவது மாடியில் இருக்கும் தன் அறைக்கு நடந்தே செல்வதற்கு சமம்...
உள்ளுலகின் ஆழம் பார்க்காமல், வெளியுலகின் உயரம் பார்க்க முயற்சித்தவன் கதை. அது பாதகம்.
0 comments:
Post a Comment