தானங்கள் செய்வது நல்லதா?
>> Wednesday, February 21, 2007
ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு ஞானிக்கும் நடந்த உரையாடலின் தொகுப்பு இதோ:
தானங்கள் செய்வது நல்லதா?
நல்லது. ஆனால், தானம் செய்பவருக்கு அந்த தானங்களே ஆபத்தாகவும் திரும்பலாம்.
எப்படி?
தானமளிக்கும்போது, மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார். இதனால் அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம்.
அப்படியென்றால் உண்மையாய் உதவ நினப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.
தானம், சேவை என்ன வேறுபாடு?
தானம், 'நான் கொடுக்கிறேன்' என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய் கொண்டது.
சேவை, 'மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா' எனும் பண்பை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது.
சேவையின் மகத்துவம்?
சேவை செய்யும் போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களைமறியாமல் எளிமைத்துவத்தை கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.
சேவையை யார் செய்யலாம்?
திமிர்பிடித்தவன்கூட பத்து பைசாவை பிச்சைக்காரனுக்கு தூக்கியெறிந்து விட்டு... 'நான் தானம் செய்தேன்!' என காலரை தூக்கிவிட்டுப் பேசலாம்.
சேவை, சேவகனால் மட்டுமே சாத்தியம்.
அன்பு என்பது?
வெறுப்பு கலக்காத நேசம். எதிர்பார்ப்பு இல்லாத ஊக்கம்.
காமம், காதல், அன்பு ஒப்பிடுங்கள்.
காமம் ஹார்மோன்களின் குட்டி கலாட்டா.
காதல் உணர்ச்சிகளின் குட்டி கலாட்டா.
அன்பு உணர்வுகளின் சங்கமம்.
சந்தர்ப்பவசத்திற்காக பொய் பேசினாலும் அது அநீதிதானே?
பொய் என்பதே பொய். இதில் அநீதி எனும் பேச்சுக்கு இடமேயில்லை.
பொய்யே பொய்யா?
குடித்ததால் அடித்து சித்ரவதைச் செய்யும் குடிகாரன், ''என் மகன் உள்ளே ஒளிந்திருக்கிறானா?'' என கேட்கும்போது ''அவன் இங்கில்லை. முதலில், நீ இங்கிருந்து இடத்தை காலி செய்'' எனச் சொல்வதை அநீதி என்பதான் அநீதி. இங்கு பொய்யே பொய்யாகிறது
இன்னும் கொஞ்சம் விளக்குங்கள்?
ஒரு பாவமும் செய்யாத ஒருவனை ஒரு துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு சின்ன பொய் சொல்லலாம் என்றால் அதை பொய் என்று சொல்லத் தேவையில்லை.
உண்மை பற்றி...
மற்றவரை நோகடித்து, நாசம் செய்யவல்லை, ஒரு கிராம் பொய்கூட கலக்காத உண்மை, பேசும் பொய்யைவிட மோசமான அது அநீதி. இது பொய் பேச போடப்படும் தூபம் அல்ல. நீதி நெறிகளால் நெறிக்கக் கூடாது. என உணர்ந்தும் ஒரு முயற்சி.
ஏன் மனிதன் மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறான்?
இன்பத்தின் உச்சத்தை ஒருமுறை கூட தொடாததாலும், தொடர்ந்து தவறாகவே அதைத் தொட முயற்சிப்பதாலும் துன்பங்களில் விழுகிறான்.
நடக்கும்போது தியானம் செய்யுங்கள். ரோட்டில் நடக்கும்போதும், கடற்கரையில் நடக்கும்போதும் விழிப்புணர்வோடு இருங்கள்.
பூமியை மிதித்து மிதித்து நடக்காமல் மதித்து மதித்து நடக்கத் துவங்குங்கள்.
0 comments:
Post a Comment