சிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...!
>> Tuesday, February 13, 2007
சிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...!
இரு இளம் பெண்கள் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளும் போது சொந்த பந்தங்களைப்பற்றி விசாரிக்கிறார்களோ இல்லையோ அவரவர் அழகு பராமரிப்பு சம்மந்தமான விஷயங்களைப் பேச தவறுவதில்லை.
அதிலும் என்னடி இப்படி கறுத்துப் போயிட்டே ஏதாவது ஒரு கிரீம் யூஸ் பண்ண வேண்டியதுதானே என்று சில அட்வைஸ்களையும் பரிமாறிக் கொள்வதுண்டு.
இதற்கெல்லாம் காரணம் சிவப்புத்தோல் மட்டும்தான் அழகு என்ற மாயத்தோற்றம்; பரவிக் கிடப்பதுதான்.
ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய தென்னாப்பிரிக்க நாட்டு பெண்களிடம் சிவப்பழகு மோகம் அதிகமாக இருந்தது.
ஏராளமான இளம் பெண்கள் கீரீம்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தினர். ஆனால் இதைப் பயன்படுத்திய பலருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால் ஐரோப்பிய நாடுகள் கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
அரசு அதிகாரிகள் அந்த கிரீம்களை ஆய்வு செய்த போது அதில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாதரசம் சேர்க்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.
இதன் பிறகு 'ஹைட்ரோ குய்னோன்' எனும் ரசாயனம் கலந்த சிவப்பழகு கிரீம்கள் வந்தன.
நம் தோலில் உள்ள மெலனின் எனும் நிறமி தான் உடலின் நிறத்தை நிர்ணயிக்கிறது. தோல் புற்று நோயை உருவாக்கக் கூடிய அல்ட்ரா-வயலட் சூரியக்கதிர் வீச்சுகளில் இருந்து தோலைப் பாதுகாக்கும் வேலையையும் செய்கிறது இந்த மெலனின்!
சிவப்பழகு கிரீமில் உள்ள ஹைட்ரோ குய்னோன் இந்த மெரனின் ஒரு சதவிதத்தை நீக்குகிறது மெலனின் உற்பத்தியையும் மட்டுப்படுத்துகிறது.
இந்த கிரீம் தோலை வெளுக்கச் செய்து விடுகிறது. ஆனால் இதை அதிகமாகப் பயன்படுத்தினால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
முகத்தில் அடிக்கடி கீரீம் பூசினால் மேல் தோலைத்தாண்டி ரசாயணம் ரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது .
இதனால் கல்லீரல், சிறுநீரக பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
கிரீம்களால் நமது உடலின் நிறத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் ஒன்றை நன்றாகப்புரிந்து கொள்ளுங்கள். சிவப்பழகு கிரீமால் நம் இயல்பான நிறத்துக்கு மேல் வெளுக்க முடியாது.
பொதுவாக பயன்படுத்தும் அனைத்து ரசாயண கலவையையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
சிவப்புத்தோல் மட்டும்தான் அழகானது என்று நினைத்து தனக்கு கிடைக்காத நிறத்தை எப்படியும் பெற்றே தீருவேன் என்று ரசாயண கிரீம்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் சிவப்பழகுக்கு பதில் பலவித நோய்கள்தான் பரிசாக கிடைக்கும்.
0 comments:
Post a Comment