குழந்தைகள்- அசுத்தப்படுத்தி அலங்கோலமாக்க
>> Tuesday, February 13, 2007
ரஹிமின் பாஸ் குத்புதின் புது வீட்டைப் பார்க்கிற ஆசையில் அக்தர் கரிம் இருவரையும் அழைத்து வந்துவிட்டாளே தவிர, ரமீஸாவுக்கு உள்ளூரபயம்.
இரண்டும்கெட்டான் குழந்தைகள். வீட்டிலே அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை. இங்கே வந்து...........
அன்புடன் வீட்டைச் சுற்றிக் காட்டினார்கள் குத்புதின் தம்பதிகள்.
சுவர்களில் அழகிய ஓவியங்கள். பூக்கிண்ணங்களில் அடுக்கப்பட்ட அன்றலர்ந்த மலர்கள், க்யூரியோக்கள், பளிச்சென்று சுத்தமாக இருந்தது வீடு.
'நம்ப வீடும் இருக்கே' என்று ரஹீம் தாழ்ந்த குரலில் அலுத்துக் கொண்டது நியாயமானதான் என்று ரமீஸா நினைத்தாள்.
கண்ணாடி டம்ளரில் ஐஸ் குலுங்க ஜூஸ் வந்தது. மறுநிமிடம் 'பணால்'...... அக்தர் டம்ளரைக் கீழே போட்டு உடைத்துவிட்டு திருதிருத்தான். கரீம் பூக்கிண்ணத்தைச் சாய்த்து தண்ணீரைக் கொட்டிவிட்டு பயத்துடன் பார்த்தான்.
'கிளம்பறோம்' பிள்ளைங்களுக்கு சுத்தம்னா என்னன்றதே தெரியாது' கோபத்துடன் எழுந்த ரஹீமை, குத்புதின் உட்காரச் சொன்னார்.
'குழந்தைங்க அப்படித்தான் இருக்கும். இந்த அறையை அசுத்தப்படுத்தி அலங்கோலமாக்க ஒரு குழந்தை இல்லயேன்னு நாங்க ஏங்கிக்கிட்டிருக்கோம்..' அவர் குரல் கனத்தது........
0 comments:
Post a Comment