டென்ஷன்-படபடப்பு மன இறுக்கம்
>> Wednesday, January 31, 2007
டென்ஷன்-படபடப்பு மன இறுக்கம்
மருந்து மாத்திரயில்லாமல் டென்ஷன் - படபடப்பு - மன இறுக்கம் - அமைதியின்மையிலிருந்து விடுபட வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக் கொள்வது ?
வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினரோடு சுற்றுலா தலங்களுக்கோ வெளியிடங்களுக்கோ சென்று வாருங்கள்.. இயல்பாகவே புதிய இடம் புதிய மனிதர்கள் புதிய அனுபவம் மனதிற்கு இதமான விஷயம்.
நிஜத்தில் வாழ பழகுங்கள் நேற்று நடந்தவைகளையோ நாளை நடக்க இருப்பவகளையோ நினத்து மனதிற்குள் படபடப்பை கூட்டிக் கொள்ளாதீர்கள். இப்போ இந்த நிமிடம் தான் நிஜம் என்கிற மனநிலையோடு இந்த நிமிடத்தை ரசிக்கப் பழகுங்கள் மனசு ரம்மியமாகும்
.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வேலைக்கு புறப்படும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தாமதமாக புறப்படுவதால் ஒவ்வொரு நிமிடமும் தேவையில்லாமல் டென்ஷன் அதிகரிக்கும். அதனால் தேவையில்லாத வியாதிகளுக்கு நீங்கள் அனுமதி கொடுத்துவிடுவீர்கள்.
வாட்ச் கட்டுவதை இரத்தக் கொதிப்பு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி நேரம் பார்த்து டென்ஷன் ஆவதை இது தவிர்க்கும்.
நல்ல காற்றோட்டமான வெளிச்சமான வீடுகளை தேர்ந்தெடுங்கள். நாம் வாழும் வீடு கூட சில சமயங்களில் தேவையில்லாமல் மனது இறுக்கத்தை தரும்.
இரத்தக்கொதிப்பு சர்க்கரை வந்த பிறகு முறையான உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதே போல தவறாமல் பரிசோதனைய மேற்கொள்ளுங்கள்.
திருமணமானவர்கள் என்றால் முறையான செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுங்கள். உடலுறவின் போது பீட்டா எண்டார்பீன் உடலுக்குள் சுரப்பதால் மன இறுக்கம் குறையும் உடல் உற்சாகமடையும்.
எரிச்சலான விஷயங்களிலும் எரிச்சலூட்டும் மனிதர்களிடமிருநது;ம் விலகி இருங்கள். அது உங்கள் மனதை இறுக்கத்திலிருந்து விலக்கி வைக்கும்
.
கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களால் மன இறுக்கம் மன அழுத்தம் உண்டாகலாம். அதற்கு சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது
.prozac. zoloft. paxil போன்ற மருந்களை கர்ப்பகாலத்தின் நடுப்பகுதியில் பயன்படுத்தினால் கருவில் உள்ள குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு உண்டாகும் வாய்ப்புள்ளது பல்மனரி ஹெபர் டென்சன் என்பது இந்த வியாதியின் பெயர்.
இந்த நோய் ஆயிரத்தில் ஒன்று அல்ல இரண்டு குழந்தைக்கு மட்டுமே வரும் ஆனாலும் இது மிகக் கொடிய தன்மையுள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பத்தில் ஒன்று இறந்துவிடுமாம். மிதமான பாதிப்பு ஏற்பட்டால் காது கேட்கும் திறன் பாதிப்பு மூளைத் திறன் பாதிப்பு போன்ற ஆபத்துக்கள் உருவாகும்.
அதனால் முறையான மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் மட்டுமே கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்கிறது ஒரு இணய தளச் செய்தி.மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
2 comments:
உபயோகமான தகவல்களுக்கு நன்றி வாஞ்ஜூர் நானா அவர்களே.
ALHAMDHULILLAH
VANJOOR.
Post a Comment