சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழும். அதை யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியாமல் பலர் தயங்கிக் கொள்ளக்கூடும். உங்கள் சார்பாக சில கேள்விகளுக்கு இராஷபாளையத்தைச் சேர்ந்த சிறப்பு நிபுணர் கு. கணேசன் பதிலளிக்கிறார்.
டாக்டர், சர்க்கரைநோய் மாத்திரகளை எப்போது சாப்பிட வேண்டும்? உணவுக்கு முன்பா? பின்பா? சில டாக்டர்கள் உணவுக்கு முன்பாகச் சாப்பிடச் சொல்கிறார்கள். வேறு சில டாக்டர்கள் உணவுக்குப் பின் சாப்பிடச் சொல்கிறார்கள். யார் சொல்வது சரி?
உங்கள் சந்தேகம் முற்றிலும் சரி. இதைப் படிக்கின்ற வாசகரும் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் அவருக்கும் இந்தச் சந்தேகம் வந்திருக்கும். வழக்கமாக சர்க்கரைநோய்க்குத் தரப்படும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையில் பணிபுரிந்து சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்கின்றன.
சில மாத்திரைகள் கணையத்திலுள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்து, ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். சில மாத்திரகள் உடல்தசைகளில் காணப்படும் இன்சுலின் எதிர்ப்புநிலை (Insulin Resistance )
யைச் சரிசெய்து நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இன்னும் சில மாத்திரகள் சிறுகுடலில் உணவு செரிமானமாவதைத் தாமதப்படுத்தும். அதன்மூலம் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் உடனே அதிகரித்து விடாமல் பார்த்துக்கொள்ளும்.
வேறு சில கல்லீரலிலிருந்து சர்க்கரை வெளியாகி ரத்தத்தில் கலப்பதைத் தாமதப்படுத்தும். ஆக, நீங்கள் சாப்பிடும் மாத்திரையைப் பொறுத்து அதை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.
பொதுவாக, கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற கிளபென்கிளமட், கிளமிபிரட், கிளகிளசட், கிளபிசட் போன்றவற்றை உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும். காரணம், இவை ரத்தத்தில் கலந்து கணையத்தை அடைந்து இன்சுலினைச் சுரக்கச் செய்ய, குறைந்தது அரைமணி நேரம் ஆகும். மாத்திரை சாப்பிட்டு அரைமணி நேரம் ஆனபிறகு உணவு சாப்பிட்டால் உணவிலுள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலப்பதற்கும் இன்சுலின் சுரப்பதற்கும் சரியாக இருக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கப்படும். இதன் விளைவாக சர்க்கரைநோய் கட்டுப்படும். இதேபோல் உணவு செரிமானமடைவதைத் தாமதப்படுத்கின்ற அகர்போஸ் மாத்திரைகள் மற்றும் மெக்ளிடினட் மாத்திரைகளயும் உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும். இன்சுலின் எதிர்ப்புநிலையைச் சரிசெய்யும் மெட்பார்மின், பயோகிளிட்டசோன், ரோசிகிளிட்டசோன் போன்றவற்றை உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்.
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் தரப்படுகிறதே... வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டியது அவசியமா?
இயற்கை உணவுகளான பால், பழம், காய்கறிகளில் நமக்குத் தேவையான அளவுக்கு வைட்டமின்கள் உள்ளன. இவற்றைத் தினமும் சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை. வறுமை காரணமாக இந்த உணவுகளச் சாப்பிட இயலாதவர்களும் வயிற்றில் அஜீரணக் கோளாறு உள்ளவர்களும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடவேண்டியது அவசியம்.
சில சர்க்கரை நோய் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது அவற்றின் பக்கவிளவாக, வைட்டமின் பி12 அளவு ரத்தத்தில் குறைவதுண்டு. அப்போது அந்த வைட்டமின் குறையை ஈடுகட்ட வைட்டமின் பி12 கலந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். பொவாகவே நமக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள் உடலில் சேரும் அளவு குறையும். வயிற்றில் செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கும் இதே பிரச்சினை ஏற்படும்.
சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லாத நிலைமையில் இந்த வைட்டமின் குறைபாடு நரம்புகளை பாதித்து பாதங்களில் எரிச்சல், மதமதப்பு, தொடுவுணர்வின்மை போன்ற தொல்லைகளைத் தரும். இவற்றைத் தவிர்க்கவும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டியது அவசியம்.
அறுபது வயதுக்கு மேல் சர்க்கரைநோய் வராது என்று கூறுவது உண்மையா?
அறுபது வயதுக்கு மேல் ஒருவருக்கு முதன்முதலாக சர்க்கரைநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்படுவது வெகு அரிது. பொவாக அதற்கு முன்பே சர்க்கரைநோய் வந்துவிடும். என்றாலும், வம்சாவழி காரணமாக வருகின்ற சர்க்கரைநோய் எந்த வயதிலும் வரலாம்.
எங்கள் வீட்டில் யாருக்கும் சர்க்கரைநோய் இல்லை. எனவே, எனக்கு சர்க்கரைநோய் வரவாய்ப்பில்லை என்று நம்புகிறேன். இது சரியா?
இப்படி நினப்பது சரியில்லை. ஒரு குடும்பத்தில் யாருக்குமே சர்க்கரைநோய் இல்லை என்றாலும், அவர்களின் உறவினர்கள் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால் இவர்களுக்கும் சர்க்கரைநோய் வர வாய்ப்புள்ளது. சர்க்கரைநோயை ஒரு பரம்பரை நோய் என்கிறோம். பரம்பரை அல்லது வம்சாவழி என்பது அப்பா அம்மா மற்றும் உடன்பிறந்தவர்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை.
முப்பாட்டன், முப்பாட்டி, தாத்தா, பாட்டி குடும்பத்தினர்கள் என்று பல தலைமுறைகளிலிருந்து ஒரு சங்கிலித் தொடர்போல் வருவது. இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் போதும். அந்தப் பரம்பரையில் பிறப்போரில் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரைநோய் வரலாம்.
இன்சுலின் ஊசி போடத் தொடங்கினால் ஆயுள் முழுவதும் அதைப் போட வேண்டிய வரும் என்கிறார்களே. இது உண்மையா, டாக்டர்?
இது முழு உண்மையில்லை. அறுவைச் சிகிச்சை, மாரடைப்பு, நோய்த்தொற்று, பெண்கள் கர்ப்பம் தரித்தல் போன்ற சில அவசர நேரங்களில் சர்க்கரைநோய் மாத்திரகளைவிட, இன்சுலின் ஊசிதான் உடனடி பலனத் தரும். அந்த அவசர நிலமை சரியானதும் இன்சுலின் ஊசியை நிறுத்திவிட்டு மாத்திரைக்கு மாறிக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயில் முதல்வகை சர்க்கரை நோயாளிகள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் உடலில் இன்சுலின் சிறிதளவும் சுரக்காது. இவர்கள் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்.
இன்சுலின் ஊசியைக் குளிர்சாதனப்பெட்டியில்தான் வைக்க வேண்டுமா? வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதவர்கள் என்ன செய்வது?
இன்சுலின் ஊசிமருந்தைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பாகாப்பதுதான் நல்லது. என்றாலும், குளிர்சாதனப்பெட்டி இல்லாதவர்கள் கவலைப்படத்தேவையில்ல. இப்பொழுது வருகின்ற இன்சுலின் ஊசிமருந்கள் அறையில் உள்ள வெப்பநிலையில் (Room Temperature) வைத்திருந்தாலும் அவற்றின் செயல்திறன் குறையாத அளவிற்குத் தயாரிக்கப்படுகின்றன.
ஆகையால் மருந்துக்கடையில் இன்சுலின் ஊசிமருந்தை வாங்கியதிலிருந்து சுமார் 8 வாரங்களுக்கு வீட்டில் உள்ள சாதாரண வெப்பநிலையில் வைத்துக்கொள்ளலாம். அப்போதும் அதன் செயல்திறன் குறையாது. எட்டு வாரங்களுக்கு மேல் இன்சுலின் ஊசிமருந்தை அறைவெப்பநிலையில் வைத்திருக்க இயலாது. குளிர்சாதனப்பெட்டியில்தான் வைத்துப் பாதுகாக்கவேண்டும்.
சர்க்கரைநோயை நிரந்தரமாகக் குணமாக்க முடியுமா?
சர்க்கரைநோயை நிரந்தரமாகக் குணப்படுத்துவதற்கு மேல்நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் முக்கியமான. கணையமாற்று அறுவைச் சிகிச்சை. உடலில் கணையம் சரிவர வேலை செய்யாதபோது சர்க்கரைநோய் வருகிறது.
ஆகையால் உடலில் சரியாக இயங்காத கணையத்தை நீக்கிவிட்டு, மாற்றுக் கணையத்தைப் பொறுத்தும் இச்சிகிச்சை பல நாடுகளில் செய்யப்படுகிறது. மற்றொரு சிகிச்சைமுறை இது. கணையத்தில் உள்ள ஐலெட் திசுமாற்றுச் சிகிச்சையில் பீட்டா செல்களை மட்டும் மாற்றும் புதிய சிகிச்சையும் செய்யப்படுகிறது.
இந்த இரு சிகிச்சைமுறைகளும் இப்போது பரிசோதனை அளவில் உள்ளன. இன்னும் இந்தியாவில் செய்யும் நிலை வரவில்லை. மேலும் இச்சிகிச்சைகளுக்கு ஆகும் மருத்துவச்செலவு தற்போது மிகமிக அதிகம். இன்னும் சில ஆண்டுகளில் இவை நடைமுறைக்கு வரலாம். அப்போது சர்க்கரைநோய் நிரந்தரமாகக் குணமாகலாம்.
எனக்குச் சர்க்கரைநோய் ஏற்பட்டபின்பு உடல் மிகவும் இளைத்துவிட்டது. எடை குறைந்துவிட்டது. என் உடல் எடையை மீண்டும் அதிகரிக்க முடியுமா?
சர்க்கரைநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளபோது, உடலுக்குச் சேரவேண்டிய ஊட்டச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஆகியவை வெளியேறி விடுகின்றன. அதனால் உடல் எடை குறைந்துவிடுகிறது. இதற்கு முதலில் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு இன்சுலின் ஊசிமருந்து உதவும்.
இன்சுலின் என்பது ஒரு அனபாலிக் இயக்குநீர். இதை உடலில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் எடை தானாகவே அதிகரிக்கும். சர்க்கரைநோய் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் இன்சுலின் அளவைக் குறைத்துவிடலாம். நல்ல சத்துள்ள உணவை சரியான அளவில் நிறைய காய்கறிகளுடன் சாப்பிடுவதுடன், தேவையான அளவிற்கு இன்சுலினயும் போட்டுக் கொண்டால் உடல் இளைக்காது, எடை குறையாது.
சர்க்கரை நோயாளிகள் கண்தானம், இரத்ததானம் செய்யலாமா?
சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இரத்ததானம் செய்யலாம். பொதுவாக சர்க்கரைநோயாளிகளுக்கு விழித்திரையில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆரம்பநிலையில் இதைக் குணப்படுத்திவிடலாம். அதைக் கவனிக்கவில்லயென்றால், விழித்திரையில் இரத்தம் கசிந்து, விழியில் நீர்த்தேக்கம் ஏற்படும்.
இப்போதும் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், இந்த நீர்த்தேக்கம் கண்ணின் மையப்பகுதியான நிறமிலி இழைமைத்தைப் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகள் ஏற்படாதபோது கண்ணையும் தானம் செய்யலாம்.
சர்க்கரை நோயினால் பாதிப்படைந்துள்ள பெண்களுக்குக் கருப்பை பாதிக்கப்படுமா?
சர்க்கரைநோயினால் பாதிப்படைந்துள்ள பெண்களுக்குப் பிறப்புறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. குறிப்பாக காளான் தொற்று ஏற்படும். அரிப்பு, தோல் சிவத்தல், வெள்ளைபடுதல் போன்ற தொல்லைகள் வரும். மற்றபடி கருப்பையை நேரடியாகப் பாதிக்காது.
நான் தினமும் யோகா செய்கிறேன். அத்தோடு நடைப்பயிற்சியும் செய்ய வேண்டுமா? வெறும் வயிற்றில் நடந்தால் எனக்குக் கிறக்கமாக வருகிறது. இதற்கு என்ன செய்வது?
முறைப்படி யோகாசனம் செய்தும் சர்க்கரைநோய் கட்டுப்படவில்லை என்றால் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வெறும் வயிற்றில் நடப்பது சிரமமாக இருந்தால் பால், பிஸ்கட், காபி அல்லது தேநீர் சாப்பிட்டபின்னும் நடைப்பயிற்சி செய்யலாம். தவறில்லை.
நான் என் குடும்ப டாக்டர் சொல்கிறபடிதான் உணவு சாப்பிடுகிறேன். தினமும் அரைமணிநேரம் நடக்கிறேன். மாத்திரகளையும் மறக்காமல் சரியான வேளையில் சாப்பிட்டு விடுகிறேன். இருந்தாலும் எனக்கு சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில்தான் உள்ளதே தவிர, முழுமையாக குணமாகவில்லை. நேற்று என் பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரும் ஒரு சர்க்கரைநோயாளிதான். கேரளாவுக்குச் சென்று ஏதோ ஒரு மூலிகைமருந்து சாப்பிட்டாராம். ஒரு மாதத்தில் சர்க்கரைநோய் குணமாகிவிட்டதாம். அந்த மூலிகையை நானும் சாப்பிடலாமா?
சர்க்கரைநோய்க்கு அலோபதி மருந்தென்றாலும் சரி, ஆயுர்வேத சிகிச்சையென்றாலும் சரி, ஹோமியோபதி ஆனாலும் சரி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை. அதே நேரத்தில், எந்த மருத்துவத்திலும் இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த இயலாது என்பதுதான் தற்போதைய நிலமை.
நீங்கள் கூறுவதுபோல் கேரளாவில் தரப்படும் மூலிகை மருந்தால் சர்க்கரைநோய் நூற்றுக்குநூறு குணமாகிறது என்பது உண்மையாக இருந்தால் இந்நேரம் அந்த மருந்தைக் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். ஆகவே மற்றவர்கள் கூறுவதை அப்படியே நம்பி ஏமாந்துவிடாதீர்கள். நீங்கள் சாப்பிடும் மருந்தைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். சந்தேகம் வரும்போது உங்கள் குடும்ப டாக்டரிடம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
----------------------------------
இன்சுலின்.
ஊசி மூலம் இனி வேண்டாம்...
இன்றுவரை நீரிழிவு நோய்க்கான இன்சுலின், ஊசிமூலம்தான் உடலில் செலுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இன்சுலினை வாய் வழியாக உட்கொள்ளும் முறையை பெங்களூரைச் சேர்ந்த பயோகான் என்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனம் சோதித்து வருகிறது. இதில் பல சாதகமான விஷயங்களும் இருக்கின்றன. வாய் வழியாக இன்சுலினை உட்கொள்ளும்போது, நமது உடலில் இயற்கையாக இருக்கும் இன்சுலின், குளுகோஸை கட்டுப்படுத்த எப்படி செயல்படுகிறதோ அதே பயனை, வாய் வழியாக உட்கொள்ளும்போது அடையலாம்.
அவ்வாறு செல்லும் இன்சுலின், வயிறு மற்றும் குடல்களைத் தாண்டி கல்லீரலை அடைந்து பின்பு ரத்த நாளங்கள் வழியாக மண்ணீரல் தசைகளை அடைகிறது. இங்குதான் இயற்கையாக இன்சுலின் உருவாகிறது. கல்லீரலில் குளுகோஸ், குளு கோஜனாக சேமித்து வைக்கப்பட்டு, தேவையான நேரத்தில் குளு கோஸாக வெளியிடப்படுகிறது. ஊசி வழியாக செலுத்தப்படும் இன்சுலின் கடைசியில்தான் கல்லீரலை அடைகிறது. குளுகோஸ் உற்பத்தி கல்லீரலில் இருக்கும் இன்சுலின் அளவைப் பொறுத்து தான் அமையும்.
சாப்பிடாமல் இருக்கும்போது, கல்லீரல் குளுகோஸை அதிகமாக உற்பத்தி செய்கிறது. சாப்பிட்ட பிறகு இன்சுலின் தூண்டுதலின் பேரில் கல்லீரல் குளுகோஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. இன்சுலின் ஊசிமூலம் செலுத்தப்படுவதை விட, வாய் வழியாக உட்கொள்வதே ரத்தத்தில் குளுகோஸ் அளவை குறைக்கும் சரியான வழிமுறை யாகும்.
மேலும் படிக்க... Read more...