தொலைபேசியக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
>> Monday, April 2, 2007
நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாய் மாறிப்போன தொலைபேசியக் கண்டுபிடித்தவர், அலெக்சாண்டர் கிரஹாம் பெல்.
அவரது இல்லத்துக்கு ஒருவர் வந்தார்.
''ரொம்ப அற்புதமான கருவியைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். ரொம்பப் பயனுள்ளது'' என்று பாராட்டினார்.
''ஆமாம். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எளிதாயிருக்கும்'' என்றார் கிரஹாம் பெல்.
''உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் தொலைபேசியில் உரையாடினீர்களா? அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்களே?'' என்று கேட்டார், வந்த நபர்.
''அவர்களிடம் இதுவரை நான் தொலபேசியில் பேசவில்லை!''
வந்தவருக்கு ஆச்சர்யம்.
''அப்படியா? ஏன்?''
''என் மனவிக்கும் மகளுக்கும் காது கேட்காது'' என்றார் பெல்.
------------------------------
செல்போனக் காதில் வைத்து மணிக்கணக்கில் பேசும் பெண்கள் பற்றி?
அவர்கள் புத்திசாலிகள். நன்றாகக் கவனித்துப் பாருங்கள், எல்லாம் இன்கமிங் கால்களாகத்தான் இருக்கும்.
SOURCE: KUMUDAM. NANDRI TO: KUMUDAM.COM
0 comments:
Post a Comment