விடுதலைப் போரின் முன்னோடிகள் முஸ்லீம்கள்...பிரிட்டிஷ் காலனியத்துக்கு எதிராக முதன்முதலாக மக்கள் இயக்கம் ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள்.
>> Tuesday, April 17, 2007
விடுதலைப் போரின் முன்னோடிகள் முஸ்லீம்கள்...
தேசிய எழுச்சியில் முஸ்லீம்களின் பங்களிப்பு சிறப்பானது என சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள்ளார்
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முதலில் முன்வந்தவர்கள் முஸ்லீம்கள். இந்த உண்மையை மறக்கவும் மறைக்கவும் செய்வதற்கு வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் அர்.சி. மஜும்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டார்கள்.
பிரிட்டிஷ் பிரச்சாரம் மூலமாக இந்திய முகமதியர்கள் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு எதிரானவர்கள் என்ற கருத்து பரப்பப்பட்டது. ஆனால் தேசிய எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு சிறப்பானது என சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள்ளார்.
பாரம்பரிய வரலாற்றாசிரியர்கள், நானா சாகிபையும், தாந்தியா தோப்பியையும், ஜான்சி ராணியையும், கன்வர் சிங்கையும் வீர நாயகர்களாக வாழ்த்துவார்கள். இவர்கள் கண்டுகொள்ளாத பல உண்மைகள் உள்ளன.
1857ல் முதல் சுதந்திரப் போராட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பைசாபாத்தின் மௌலவி அகமதுல்லா ஷாவை யார் நினைத்துப் பார்க்கிறார்கள். அவரை உயிருடனோ பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பிட்டிஷ் அரசு 50,000 ரூபாய் இனாம் அறிவித்தது.
பிரிட்டிஷ் காலனியத்துக்கு எதிராக முதன்முதலாக மக்கள் இயக்கம் ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள்.
முகலாய ஆட்சியாளர்களை தோற்கடித்துதான் ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தினார்கள். சமூகப் பண்பாட்டு தளங்களில் முஸ்லிம்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
கான்வாலிஸ் பிரபுவின் நிலவரிச் சட்டத்தால் முஸ்லிம் மன்னர்கள் அளித்த வக்ப் சொத்துக்கள் பல இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது.
பாரசீக மொழிக்கு கிடைத்து வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டது. முஸ்லிம் பண்டிதர்கள் பலர் வேலை இழந்தனர்.
பிட்டிஷ் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்த நெசவுத் தொழில் நசிந்தது.
கிறித்தவ மிஷினரிகளுக்கு பல சலுகைகளும் முன்னுமைகளும் அளிக்க கவர்னர் ஜெனரலின் தூதுவரான ஹெர்பர்ட் எட்வேட்ஸ் 1853ல் உத்தரவிட்டார். அதற்கெல்லாம் பிறகு தான் டெல்ஹவுசியின் சீர்திருத்தங்கள் சதி, குழந்தைத் திருமணம் போன்ற அனாச்சாரங்கள் தடை செய்யப்பட்டன.
ஹென்றிக் பிரபு எற்படுத்திய சீர்திருத்தங்களால் உயர்சாதி இந்துக்கள் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களுடன் இணைய முன்வந்தனர்.
பிட்டிஷ்காரர்களின் முக்கிய எதிரி முஸ்லிம்கள்தான் என 1843ல் கவர்னர் ஜெனரல் எலன்பரோ வெலிங்டனில் ட்யூக்சிற்கு எழுதிய கடிதம் பறைசாற்றுகிறது. (W.C. Smith, Modern Islam in India - Lahore p.179)
அந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் உலமாக்கள், பண்டிதர்கள் அகிய ஆன்மீக அரசியல் தலைமையில் அணி திரண்டனர்.
1703ல் பிறந்த ஷா வலியுல்லா அந்த மறுமலர்ச்சிக்கு ஏற்கனவே வித்திட்டார். அவருக்குப் பிறகு இமாமுல் ஹிந்த் ஷா அப்துல் அஜீஸ் தஹ்லவி இந்தியா போர் பூமி (தாருல் ஹர்ப்) என பிரகடனம் செய்தார்.
அவரது பத்வா, ஒரு புனிதப்போருக்கு முஸ்லிம்களை ஆயத்தமாக்கியது. இவருக்குப் பிறகு இனாயத் அலி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றிணையாதவர்கள் வெளியேறட்டும் என கூக்குரலிட்டார்.
சய்யத் அஹ்மத் நிறுவிய முஜாதீன் இயக்கம் வங்காள தலைமை நீதிபதி நோர்மனையும், வைஸ்ராய் மேயோவையும் கொலை செய்தது.
வங்காளத்தில் மௌலவி சரீஅதுல்லா மகன் தாதுமியான் தலைமை தாங்கிய ஓபராஇஸி இயக்கம் பிட்டிஷ்காரர்களுக்கு எதிராக கலகம் செய்தது.
கிழக்கு வங்காளத்தில் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய நாசிர் அலி(டிட்டுமீர்) முதலில் நில உடைமைக்கு எதிராகக் கலவரம் செய்தார்.
1857ல் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் முஸ்லிம்களின் முக்கிய பங்கேற்புடன் நடந்தது. பண்டிதர்களும், சூபிகளும் அவர்களுடன் பெரும்பாலும் முஸ்லிம் ஆட்சியாளர்களும் ஒன்றி ணைந்து பகதூர்ஷா தலைமையில் நடந்தது.
கலவரத்தில் முஸ்லிம் சிப்பாய்களையும், பொது மக்களையும் அணி திரட்டினர் பைசாபாத் மௌலவி அகமதுல்லா, தில்லி பண்டிதர் பஸ்லுல் ஹக் கைராபாத் ஆகியோரின் பத்வாக்கள்தான் அதற்கு தூண்டுகோலாக இருந்தது.
ஒரு இந்து சமீன்தார் சதி செய்து, அவரது உதவியால் அகமதுல்லா பிடிக்கப்பட்டார். மௌலவியின் தலை வெட்டப்பட்டது. பிரிட்டிஷ் மாஜிஸ்டிரேட் இனாமாக 50,000 ரூபாய் பரிசளித்தார்.
தீன் தீன், பிஸ்மில்லா என்று முழக்கமிட்டு முஸ்லிம் சிப்பாய்கள் பிரிட்டிஷ் தோட்டாக்களுக்கும் பீரங்கி களுக்கும் முன்னால் வந்து விழுந்தனர் என Trotter என்பவர் கூறுகிறார்.
(History of British Empire in India Vol II p.335)
மௌலானா இமாதுல்லா, அப்துல் ஜலீல், லியாகத் அலி, பீர் அலி, குலாம் ஹுசேன் ஆகியோர் 1857 கலவரத்துக்குத் தலைமை தாங்கினர்.
20ம் நூற்றாண்டில் விடுதலைக்காக நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இருந்தது கிலாபத் ஒத்துழையாமை இயக்கம். இதன்மூலம் இந்து - முஸ்லிம் ஒற்றுமை ஒங்கியது.
மௌலானா அப்துல் பாரி, மௌலானா மஹ்மூத் ஹுசேன் ஆகியோர் தலைமையில் அலி சகோதரர்கள் நடத்திய கிலாபத், காந்தியின் வருகையுடன் ஒரு தேசியப் போராட்டமாக உருவெடுத்தது.
மஹ்மூத் ஹசனும் அவரது சிஷ்யன் உபைதுல்லா சிந்தியும் உருவாக்கிய ஜம்ஆயத்துல் அன்சாரும் அப்துல் பாரி, மௌலானா இனாயத்துல்லா, டாக்டர் எம்.எ. அன்சாரி, அலி சகோதரர்கள் உருவாக்கிய அஞ்சுமன் குத்தாமே கஅபா ல இவைதான் முதலில் கிலாபத்துக்கு தொடக்கமாக அமைந்தது.
கிலாபத்துக்கான பண்டித தலைமையை உறுதிப்படுத்த தேவ்பந்த், பிரங்கி மஹல் உலமாக்களை ஒன்றிணைந்து அப்துல் பாரி தலைமையில் 1919ல் ஜம்இய்யத்துல் உலமா ஹிந்த் உருவாக்கப்பட்டது.
இத்துடன் உருது ஊடகங்கள் உருவாக்கிய பேரலையில் பிரிட்டிஷ் கோட்டைகள் நடுங்கின. மௌலானா சபர் அலிகானின் சமீந்தார், முகம்மதலியின் ஹம்தர்த், ஆசாத்தின் லால் ஆகிய இதழ்கள் முஸ்லிம் எழுச்சிக்கு உயிர் கொடுத்தன.
அலியின் ஆங்கிலப் பத்திரிகையான காம்ரேட்ன் தீ துப்பிய எழுத்துக்கள் பிட்டிஷ்காரர்களின் தூக்கத்தைக் கலைத்தது.
கிலாபத்தின் முதற்கட்டத்திலேயே பல முஸ்லிம் தலைவர்கள் சிறையில் அடைக் கப்பட்டனர். பலர் நாடு கடத்தப் பட்டனர். அலி சகோதரர்கள் சிறைவாசம் அனுபவித்தனர்.
இதற்குப் பிறகுதான் ஒத்துழையாமை எனும் கருத்துடன் காந்தி யும் காங்கிரசும் முன்வந்தன. சிறையிலிருந்த அலிக்கு காந்தி கடிதம் எழுதினார்.
"உங்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டியது எனது சுயநலம். நாமிருவருக்கும் பொதுவான லட்சியம் உண்டு. அதை அடைவதற்காக எங்களது சேவையைப் பயன்படுத்த நான் ஆசைப்படுகிறேன்" (Gandhi to Mohamed Ali Nov 1918 Gail Minault The Khilafat Movement p.68)
பிரிட்டிஷ் ஒத்துழைப்பு ஹராம் என ஒன்றிணைந்த (முத்தபிக்) பத்வா வெளியிட் டனர். இந்தியா முழுவதும் இந்த பத்வாவின் பிரதிகள் அனுப்பப்பட்டன. கிலாபத் இயக்கம்தான் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் (பூர்ண சுவராஜ்) வேண்டுமென்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தது.
அஹமதாபாத் காங்கிரசில் இதற்கான அறிக்கையை மௌலானா ஹஸ்ரத் மொஹானி கொண்டு வந்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்த தீர்மானத்தை காந்தி எதிர்த்தார். (The Indian Struggle 1920-42 p.69)
பூர்ண ஸ்வராஜுக்கான முஸ்லிம் முழக்கம் உயர்சாதி முணுமுணுப்பை ஏற்படுத்தியது. மாளவ்யா, லஜ்பத்ராய், அரோபிந்தோ, பிபின் சந்திரபால் போன்றோர் காந்திக்கு எதிரானவர்கள். அத்துடன் காங்கிரசுக்கு உயர்சாதி கட்சி எனும் முகம் வந்தது. முகமதலி உட்பட்ட முஸ்லிம் தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். ஆசாத் உள்ளிட்ட சிலர்தான் அங்கு இருக்க முடிந்தது.
1937ல் அஹமதாபாத்தில் கூடிய இந்து மகாசபை மாநாட்டில் தலைமை வகித்துக் கொண்டு சவார்கர் அறிவித்தார் இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருக்க முடியாது. அது இரண்டு நாடு. இந்துவும் முஸ்லிமும் என்றார்.
சவார்க்கரின் இந்த கடுஞ் சொற்பொழிவிலிருந்துதான் பாகிஸ்தான் என்ற கருத்தியல் முஹம்மதலி ஜின்னாவுக்குக் கிடைத்தது.
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment