''என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது''
>> Friday, April 20, 2007
''என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது'' என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் .
''என்ன பழக்கம், சொல்லு'' என்றார்.
''அடிக்கடி கோபம் வருகிறது. எனக்குப் பிடிக்காத காரியங்கள் நடக்கும்போது கோபம் வந்துவிடுகிறது. அந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது?''
''சொல்கிறேன். முதலில் நீ எப்படி கோபப்படுவாய்? கொஞ்சம் காட்டு'' என்றார் .
''என்ன சொல்கிறீர்கள். எனக்குப் புரியவில்லயே?''
''உன்னிடம் கோபம் இருக்கிறது என்றாயே... அதைக் காட்டு என்றேன்''
''கோபம் வந்தால்தானே காட்ட முடியும். இப்போ கோபம் இல்லையே!''
''அப்படியானால் கோபம் உன்னுடய குணம் அல்ல. உன்னுடயது என்றால் எப்போம் உன்னிடமே இருக்குமே. அதனால் அடுத்த முறை கோபம் வரும்போது, இது எனக்குச் சொந்தமானதல்ல என்று மறுத்துவிடு. கோபம் திரும்பி ஓடிவிடும்'' என்றார் .
அவனும் செய்தான். சில வாரங்களிலே கோபம் அவனிடம் வரவை நிறுத்திக் கொண்டது. SOURCE: INTERNET.
-------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment