கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? கண்டறியும் கருவி விற்பனை
>> Saturday, April 21, 2007
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? கண்டறியும் கருவி விற்பனை இணையதளம் மூலம் மோசடி - மருத்துவர்கள் எச்சரிக்கை
புதுடில்லி, ஏப். 20- கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு பெண் சிசுவாக இருந்தால் பலர் அதனை அழிக்க தொடங்கினர். நாடு முழுவதிலும் இப் பிரச்சினை அதிகரித்த நிலையில் , மத்திய அரசு இதற்கு தடை விதித்தது.
கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து சொல்லும் ஸ்கேன் நிறுவனங்களுக்கு பெரும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று 1994 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்கேன் மூலம் அறிந்து கொண்டு பெண் சிசுவை அழிக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன.
ஆனால், தற்போது புதிய வடிவில் ஒரு பிரச்சினை புறப்பட்டுள்ளது. ‘உங்கள் கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய வேண்டுமா? எங்களுடைய கருவியை வாங்கி பரிசோதனை செய்யுங் கள். உங்களுக்கு 99 . 9 சதவீதம் துல்லியமாக முடிவு கிடைக்கும். எங்களுடைய முடிவு தவறு என்றால், நீங்கள் கருவிக்காக கட்டிய பணத்தைத் திருப்பித் தருகிறோம். உலகின் எந்த மூலைக்கும் இக்கருவியை அனுப்பி வைக்க நாங்கள் தயார்’ என்ற அறிவிப்புடன் இணையதளத்தில் இரத்த சோதனைக்கு பயன்படும் சிறிய கருவி கூவிகூவி விற்பனை செய்யப்படுகிறது.
இக்கருவியை வாங்கும் பெண்கள் தாங்கள் கருத்தரித்த எட்டு வாரங்களுக்குள் ரத்தத்தை சோதனை செய்து அதை வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தால், அங்கிருந்து இ-மெயில் மூலம் வயிற்றில் இருக்கும் கரு ஆணா, பெண்ணா என்பதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்கள்.
இந்த விளம்பரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, மத்திய அரசு எடுத்த நடவடிக் கையைத் தொடர்ந்து இணைய தளத்தில் இப்போது இக்கருவி அனுப்பப்படும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலிருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது
.
இது ஒருபுறமிருக்க, இக் கருவியினால் பயன் ஏதும் அல்லை. இது மோசடி நடவடிக்கை என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
-----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment