தண்ணீர்தான். அதற்குத்தான் மனிதன் அடித்துக் கொண்டு சாகப் போகிறான்.
>> Monday, April 2, 2007
தண்ணீர்தான். அதற்குத்தான் மனிதன் அடித்துக் கொண்டு சாகப் போகிறான்.
பூமியில் உள்ள நதிகளை உலகம் முழுமைக்கும் பொவானதாக அறிவிதது விட்டால், வீண் சண்டைகள் இருக்காது அல்லவா?
அமெரிக்காவின் ஒரு பொருளாதார அறிஞர்' சில வருடங்களுக்கு முன்னால் ஒரு தியரியை வெளியிட்டார். 'உலகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வு ஏழை மக்களுக்குக் கிடையாது. அவற்றின் அருமை தெரியாமல், அதைப் பாழடிப்பதான் அவர்களின் வேலை. அதனால் அவர்களிடமிருந்து இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்கை வளங்களைத் தனியார் மயப்படுத்தி விட வேண்டும்'' என்பதான் அவருடய ஆபத்தான தியரி.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இந்தக் கொள்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உலகம் பூராவும் இயற்கை வளங்களைத் தனியார் மயப்படுத்த ஆரம்பித்து விட்டன.
மலைகள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், ஏன் கடல் பகுதி கூட இப்போது தனியார் மயமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த அழகில் நதிகளைப் பொதுவானதாக அறிவிப்பதாவது?
எதிர்காலத்தில் உலகின் நம்பர் ஒன் பிஸினஸாக இருக்கப்போகும் பொருள் வேறு ஒன்றுமில்லை, தண்ணீர்தான். அதற்குத்தான் மனிதன் அடித்துக் கொண்டு சாகப் போகிறான்.
SOURCE: ARASU-KUMUDAM. NANDRI TO: KUMUDAM
0 comments:
Post a Comment