மற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
>> Friday, March 30, 2007
மற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடு. மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பி ஒரு சிங்கம் காட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத் துரத்திக்கொண்டே வந்தனர் மிருகக்காட்சி சாலை காவலாளிகள்.
காட்டுக்குள் வந்த சிங்கம், அங்கே இன்னொரு சிங்கத்துடன் நட்பாகியது. அந்தச் சிங்கத்தைத் துரத்தி வந்த காவலாளிகளிடம் மாட்டிவிட நினத்தது.
''ஜூ எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா?'' என்று ஆரம்பித்து, மிருகக்காட்சி சாலை பற்றிப் பல கதைகளை எடுத்துவிட்டது.
''ரொம்பப் பிரமாதமா இருக்கும். வேளாவேளக்குக் கறி கொண்டு வந்து போட்டுருவாங்க. நாம அலைஞ்சு திரிஞ்சு வேட்டையாட வேண்டியதில்ல. சும்மா படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தா போதும். சுகமான வாழ்க்கை. ரொம்பப் பாதுகாப்பான இடம்.''
இதையெல்லாம் கேட்டதும் காட்டுச் சிங்கத்துக்கு ஆசை. ''அங்கே எப்படிப் போவது?'' என்று கேட்டது.
''இதோ இப்போ கூண்டுடன் ஆட்கள் வருவார்கள். அவர்களிடம் போனால், கூட்டிப் போய் விடுவார்கள்'' என்றது 'ஜூ' சிங்கம்.
அது சொன்னது போலவே வண்டி வந்தது. காவலாளிகள் வந்தார்கள். காட்டுச்சிங்கம் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அவர்களுடன் சென்றது.
மிருகக்காட்சி சாலைக்குள் வந்து ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டப் பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று அதற்குப் புரிந்தது. அழுதது. புரண்டது. கத்தியது. ஆனால்... ஏமாந்தது ஏமாந்ததுதான்.
நீதி: மற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
SOURCE: INTERNET
0 comments:
Post a Comment