மனைவியின் இயல்பு
>> Saturday, April 7, 2007
மனைவியின் இயல்புஒரு பனை மரத்திலே இரண்டு குருவிக கூடுகட்டி குடும்பம் நடத்திக்கிட்டு இருந்ததுக.
பக்கத்திலே நின்ன பனைக சிலதிலே. பாளை சீவி, கலயம் கட்டி வச்சிருந்தாக பனையேறிக. கலயத்துள்ளே சுண்ணாம்பு தடவி பதநி வடிய வைப்பாங்க. சில கலயத்துலே சுண்ணாம்பு தடவாம கள்ளு வடியச் செய்வாங்க.
ஒரு நா, ஆண் குருவிக்கு பதநி குடிக்கணுமின்னு ஆசை ஏற்பட்டுது. கலயம் கட்டியிருந்த பனை மரத்துக்குப் போச்சு. கலயத்து மேலே வசதியா உட்கார்ந்து, உள்ளே தலையைப் புகுத்தி பதநி குடிச்சுக்கிட்டிருந்தது.அந்த நேரம் பார்த்து பனையேறி வந்துட்டான். ஏ திருட்டுப்பய குருவியின்னு கருவிக்கிட்டு, பாளை சீவுற அரிவாளை வீசினான். குருவியின் சிறகுலே சரியான வெட்டு.
குருவி பயந்து போயி, அலறி அடிச்சு, தப்பிச்சோம், பிழைச்சோமின்னு, ரத்தம் சிந்தச் சிந்த கூட்டை நோக்கிப் பறந்து வந்தது.
கூட்டுக்குள்ளே பெண் குருவி சுகமாயிருந்துது. தன் சோடியின் கூச்சல் கேட்டும் அது எட்டிப் பார்க்கலே.ஆண் குருவி அழுகிற குரலில்“சாணான் களமுடிவான்சிறகை அரிந்துவிட்டான்கதவை திறயேன்டிகாரணத்தைக் கேளேன்டி”என்று ஒப்பாரி வைத்தது.
பெட்டைக் குருவி உள்ளே இருந்தபடியே பதில் குரல் கொடுத்தது.“ஓலை சலசலங்கையிலேஓடி வந்தால் ஆகாதோ?பாளை படபடங்கையிலபறந்து வந்தால் ஆகாதோ?கள்ளு குடிச்ச மயக்கத்திலேஆள் அரவம் கேட்கலியோ?”என்று புருசன் குருவியைக் குறை கூறியது அது.
கதை அவ்வளவுதான். புருசனைக் குறை கூறுவதும், சதா விமர்சிப்பதும் பெண்டாட்டியின் இயல்பாக அமைந்துவிடுகிறது என்பதைச் சுட்டுவதற்காக எழுந்த கதை இது.
பெரும்பாலும் இதைப் பெண்கள் பேசி மகிழ்வது வழக்கம். அது ஒரு முரண்பாடுதான்!குறிப்பு: வல்லிக்கண்ணன் அவர்கள் தன் வாழ்நாளில் இறுதியாக எழுதிய நாட்டார் கதைகள் இவை. SOURCE: KEETRU.COM.
மற்ற பதிவுகளை படிக்க: >> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment