மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்கு உள்ளேயே தான் இருக்கிறது.
>> Tuesday, April 10, 2007
மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்கு உள்ளேயே தான் இருக்கிறது.
ஜு_மல்கி வந்து சில மாதங்களே ஆனது அந்தப் புதிய ஊரில் முரடன் ஒருவன் அவரை வம்பு செய்யும் நோக்கோடு வந்திருந்தான்.
ஜு_மல்கியின் குடிசைக்கு வெளியில் கரகரப்பான குரலில் முரடன், ''ஏய்! யார்ரா அது வீட்டுக்குள்ளே! இங்கே எவனோ ஞானின்னு புதுசா ஒருத்தன் வந்திருக்கானாம்ல, அவனை வெளில வரச்சொல்... அவனா நானா?ன்னு பார்த்துடலாம்!'' என்று கத்திவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
ஜு_மல்கி மெதுவாக வெளியே வந்து, ''அப்படி யாரும் இங்கே இல்லீங்களே!''
முரடன், ''என்ன ஏமாற்ற முயற்சிக்காதே! நீதான் அது. மக்கள் சொன்ன எல்லா அடையாளமும் உன்கிட்ட இருக்கு... நீ ஞானிதான்.''
ஜு_மல்கிக்கு வந்த சிரிப்பை தவிர்த்துவிட்டு, ''இல்லீங்க. நான் என்ன ஞானின்னு ஒருபோதும் சொன்னதே இல்லை. நான் சாதாரண மனுஷன். மக்கள்தான் அப்படி சொல்றாங்க'' என்றார்.
முரடன், ''அதிருக்கட்டும்.... உனக்கு எல்லாமே தெரியுமாமே! நான் இரவு முழுவதும் வேட்டையாடுவேன். உன்னால் முடியுமா?'' என்று பெருமை பொங்க கேட்டான்.
ஜு_மல்கி, ''இதுக்கு சிங்கமாவோ, புலியாகவோ பிறந்தா போதுங்களே! அதுக்காக மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமில்லயே...''
ஞானியின் இந்த பதிலடிக் கேள்வியால் உள்ளுக்குள் கொஞ்சம் தடுமாறினான். முரடன். இதுநாள் வரை எதைப் பெரிய சாதனயென்று நினத்திருந்தானோ அதை சாதாரண மிருக குணமென ஞானி கூறியதில் மனதளவில் பெரிய அடிவாங்கியதைப் போன்று உணர்ந்தான்.
முரடன், ''அதிருக்கட்டும், என்னைக் கண்டால் இந்த ஊரே கட்டுப்படும். எல்லோரும் எனக்கு பயப்படுவார்கள்.''
ஜு_மல்கி, ''இந்த ஊரில் யாராவது உனக்கு மரியாதை தருகிறர்களா... வெறும் பயத்தால் மக்களைக் கட்டுப்படுத்த அரக்கன் போதுமே... மனிதனாகப் பிறக்கணும்னு அவசியமே இல்ல.''
சாதனை என்று முரடன் நினத்திருந்த மனத்தூண்கள் ஞானியின் சோதனயில் ஆட்டம் கண்டுவிட்டன. ''எல்லோரும் பயப்படறாங்களா? மதிக்கறாங்களா?...'' என்ற கேள்விகள் முரடன் மனதில் மீண்டும் மீண்டும் வர ஆரம்பிக்க... ஜு_மல்கி தொடர்ந்து, ''மனசு கெட்டுப் போய் கிடக்கு. அதனால தூங்க முடியல. தூக்கம் வரல. மனசுல கொஞ்சங் கூட ஈரமில்லாமல் மிரட்டினால் அப்பாவி மக்கள் பயப்படுவாங்கதான். இதுல பெருமப்படும் அளவுக்கு சாதனை எங்க இருக்கு? உனக்குள்ளே வேதனை இருக்கு. அவ்வளவுதான்'' என்று கூறிவிட்டு ஜு_மல்கி குடிசைக்குள் சென்றுவிட்டார்.
பதில் பேச முடியாமல் சிந்தனையில் இருந்த முரடன் அப்படியே வீடு சென்றான். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக வெளியே வரவில்ல. மக்களைப் பார்க்கவில்ல. முரடன் மூன்று நாட்களாக எவ்வளவு முயன்றும் இரவு அவனால் தூங்க முடியவில்ல. விஷயம் தெரிந்து மக்கள் நிம்மதி அடந்தனர்.
மனம் சோர்ந்துபோய் வெளியே வந்த முரடனின் நடை மாறிவிட்டது. யாரயும் மிரட்டத் தோன்றாமல் நடந்தான்.
இதுவரை பயந்து ஒதுங்கியவர்கள் இன்று கண்டுகொள்ளாமல் போவதைப் பார்த்த முரடன்.... ஒருவேளை! ஞானி கூறியபோல் நான் மனுஷனாக வாழவே இல்லை என்று யோசிக்க யோசிக்க துக்கம் தாளாமல் ஓடிவந்து ஞானி ஜு_மல்கியின் குடிசை வாசலில் விழுந்தான்.
முரடன் முதுகில் தட்டிக் கொடுத்த ஜு_மல்கி, ''தகுதி பெற்றுவிட்டாய்! அழாதே. மனிதனாக பிறந்ததின் நோக்கத்தை அனுபவமாக உணர அடிப்படைத் தகுதி பெற்றுவிட்டாய். எழு!'' என்று ஆரத் தழுவிக் கொண்டார். முரடனைக் கூட முல்லை மலர் போல் மாற்றுவது இதுபோன்ற ஞானிகளுக்கு எளிது. ''ஏன் பிறந்தோம்?'' என்ற கேள்வி உணர்வுபூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான் பதில் அறிந்து கொள்ள அடிப்படைத் தகுதி.
இதுநாள் வரைக்கும் அந்த மனிதன் அடைந்ததாக நினைத்த இன்பமெல்லாம் உண்மையல்ல என்பதைத் தெரிந்து சொன்னபோதே ஞானம் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.
நம்மிடம் இருக்கும் புத்தம் புதிய கார், சலவைக் கல்லால் கட்டிய பங்களா, பட்டங்கள், வேலையாட்கள் என்று எதுவுமே நிரந்தரமான ஆனந்தத்தை அளிப்பதல்ல. உண்மையான ஆனந்தம் நிலையான நிம்மதியானது எப்போதும், எதனாலும் அசைக்க முடியாதது.
மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்கு உள்ளேயே தான் இருக்கிறது. ---SOURCE:> INTERNET.
------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment