துக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்.
>> Friday, April 27, 2007
துக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்.
மேடைப் பேச்சு பயிற்சியின் நிறைவு விழாவில் பேசிய பாதிரியார் போஸ்கா.... ஒரு மணி நேரத்திற்கு சந்தோஷமாய் உணர்ச்சி பொங்கப் பேசுவது எப்படி? அப்போது உங்களின் முகபாவனைகள், உடல் மொழிகள் எப்படியிருக்க வேண்டும்? என விரிவாய் பேசினார்.
ஆனால், கடைசி சில நொடிகளுக்குள் மன வேதனையடந்து துக்கம் பொங்கப் பேசுவது எப்படி? என்பதை இப்படிச் சொன்னார்.
''ஒரு மணி நேரம் நான் சொன்னபடியெல்லாம் செய்தால் போதும். சந்தோஷம் பொங்கப் பேசலாம்... ஆனால், துக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்.
நீங்கள் எப்போதும் பேசுவதை போல் பேசினாலே போதுமானது''
பேச்சில், மூச்சில்... நடையில், நடத்தையில்...
நம் துக்கங்கள் இறுக்கம்மிகு முகங்களாக வெளிப்படுகிறது.
உங்களின் போக்கை ஆராயுங்கள். உங்களை உங்களுக்கே படம் பிடித்துக் காட்டும்
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment