அந்த 526 பள்ளிவாசல்கள்?
>> Wednesday, April 18, 2007
அந்த 526 பள்ளிவாசல்கள்?
குஜராத் கோர படுகொலைகளை யாராலும் மறக்க இயலாது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.
இழப்பீடுகள், நிவாரண உதவிகள் அந்த அப்பாவிகளுக்கு மறுக்கப்பட்டன. முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை. நரேந்திர மோடி அரசு முன்நின்று நடத்திய வெறியாட்டங்கள் ஓர் தேசிய அவமானமாக கருதப்பட்டது.
இனப்படுகொலையின் சூத்திரதாயான நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அமெக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்ல விசா மறுக்கப்பட்டது. அந்த வகையில் மோடி உலகப் புகழ்(!) பெற்று விட்டார்.
2002ல் நிகழ்ந்த குஜராத் கோரக் கலவரத்தில் 526 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்ததை எண்ணி முஸ்லிம்களும், நடுநிலையாளர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
அன்றிருந்து முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களை மீண்டும் கட்ட, புனர மைக்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இடிப்பதற்கு பேர் போண அவர்கள் கட்டுவதற்கு உதவுவார்களா என்ன?
கேளாக் காதினராய் மோடி அரசு இருந்து விட்டது. இதுகுறித்து தேசிய சிறுபான்மை ஆணையம் 2002 ஏப்ரல் இரண்டாம் தேதி கடிதம் ஒன்றை குஜராத் முதல்வர் மோடிக்கு எழுதியது. இக்கடிதம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, அந்தக் கடிதம் வந்ததாகவே மோடி அரசு காட்டிக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 294 பள்ளிவாசல் கட்டிடங்கள் ஓரளவு பழுது பார்க்கப் பட்டன. இதற்கு எந்த அரசும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தேசிய சிறுபான்மை ஆணையம் மோடி
அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தது. அண்மையில் கடந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் கடிதத்திற்கு சுருக்கமான பதில் ஒன்றை குஜராத் அரசு அனுப்பியது.
அதில் நிவாரண உதவிகள் குறித்து எவ்வித விளக்கங்களும் குறிப்பிடப்பட வில்லை. மாறாக தேசிய சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் உள் நோக்கம் கொண்டது என்றும், தவறான வழிகாட்டுதல் எழுதப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தெளிவான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
மீதமுள்ள 232 பள்ளிவாசல் கட்டிடங்களை மறுகட்டமைக்க போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேவையான பொருளாதார உதவியை வழங்கி குஜராத்தில் சிதிலமடைந்து கிடக்கும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment