''அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும்போது"
>> Thursday, April 26, 2007
சங்கரன் முடிவெட்டிக்கொள்ள சலூனுக்குப் போக ஆயத்தமானான்.
போட்டிருந்த சலவை சர்ட்டையும், பாண்ட்டையும் கழற்றிவிட்டு சலவைக்குப் போடவேண்டிய அழுக்குத் துணியிலிருந்து பழைய சட்டையயும், வேட்டியையும் அணிந்து கொண்டுபோனான். அவன் அப்பா, சித்தப்பா, அண்ணன் உள்பட சலூனுக்கு வரும் எல்லாரும் அப்படிச் செய்வதான் வழக்கம்.
சலூனில் ஆட்கள் நிரம்பியிருந்தனர். ஆனால், முடிவெட்டுபவர் குளித்துவெள்ளை வெளேர் சலவை ஆடைகளுடன் 'பளிச்' சென்று இருந்தது கண்ணைப் பறித்தது.
முடிவெட்டும் தொழிலாளி சங்கடத்துடன் அருவருப்பால் அடிக்கடி முகம் சுளித்ததை சங்கரன் கவனிக்கத் தவறவில்லை.
''அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும்போது, நாமும் சுத்தமாக வரவேண்டும் என்பதானே அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்''_என்ற நியாயம் அவனுக்கு மனதில் உறைத்தது.
சங்கரன் எழுந்து வீட்டுக்குக் கிளம்பினான்_நன்றாக டிரஸ் செய்து கொண்டு மீண்டும் வருவதற்கு! ---SOURCE: INTERNET.
-----------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
நம்மை அசிங்கமாக நினைத்துக் கொள்வாரே என்று நினைத்து கழுத்துப் பட்டியில் அழுக்குப் படியாத சட்டையைத்தான் எப்பவும் போட்டுக்கிட்டு முடி வெட்டப் போவேன் :-).
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment