பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை
>> Saturday, April 21, 2007
பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை.
சென்னை பார் கவுன்சில் வழக்கறிஞர் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உற்சாகப் பேச்சு
பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பிரபலமான வழக்கறிஞர். அவர் வெளிநாட்டிற்குச் சென்று படித்த பிரபலமான வழக்கறிஞர். அம்பேத்கர் அவர்கள் எப்படி மிகப் பெரிய வழக்கறிஞரோ அதுபோல ஜின்னா அவர்கள்.
ஜின்னா அவர்கள் லண்டனிலேயே வழக்கறிஞர் தொழிலை நடத்திக் கொண்டு இருந்தவர். அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.இதை உங்களுக்கு நினைவூட்டினாலே போதும். நீங்கள் சிந்தித்துக் கொள்ளலாம்.
லண்டனிலே லார்ட்ஸ் (Lords) என்று சொல்லக்கூடிய பிரபுக்கள் உண்டு. அந்தப் பிரபுக்களில் ஒவ்வொருவருக்கும் அரண்மனை மாதிரி இடங்கள் இருக்கும். அந்த அரண்மனைகளுக்கு `சாரட்’ வண்டிகள் உண்டு.
ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து
அதிலேயும் ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து உண்டு. ஏழு குதிரைகளை இந்த பிரபு மட்டும் பூட்டிக் கொண்டு வண்டியில் செல்லலாம். அய்ந்து குதிரைகள் பூட்டிய வண்டியை இவர் மட்டும்தான் பயன்படுத்தலாம்.
இவர் மூன்று குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வரலாம். மற்றவர்கள் இதுபோன்று செய்தால் இவருடைய உரிமையை மீறியதாக ஆகும். இதெல்லாம் பழைய காலத்து சம்பிரதாய முறை. நடைமுறை சட்டங்கள் இங்கிலாந்து நாட்டிலே.
புதிய பணக்காரர் அய்ந்து குதிரைகள் பூட்டிய வண்டியில்
இங்கிலாந்து நாட்டிலே புதிதாகப் பணக்காரரான ஒருவர். அவர் பிரபு இல்லையென்றாலும்கூட பெரிய தொழிலதிபராக வந்திருக்கின்ற காரணத்தால் யார் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அந்தப் பகுதியிலே செல்ல முடியுமோ அப்படிப்பட்ட பகுதியிலே இந்த புதிய பணக்காரர் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக்கொண்டு, நான் பிரபல பணக்காரனாகிவிட்டேன் என்ற அந்த பெருமையோடு அந்த வழியே சென்ற நேரத்திலே இதைக் கண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவிலே இவர்மீது நஷ்ட ஈடு கோரி சடடப்படி என்னுடைய உரிமையை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். சட்டத்தை அவர் மீறியிருக்கின்றார்.
பாரம்பரிய பிரபுத்துவ உரிமை
அய்ந்து குதிரைகளைப் பூட்டக்கூடிய உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. பாரம்பரியமாக உள்ள எங்களுடைய பிரபுத்துவ செயலை இது அவமானப்படுத்துவதாகும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் நஷ்ட ஈடு என்று கேட்கும்பொழுது, மில்லியன்ஸ் பவுண்டு அளவுக்கு அவர்கள் நஷ்ட ஈடு கேட்பார்கள்.
ஒவ்வொரு வழக்கறிஞரிடமும் கேட்டார்
அந்த புதியப் பணக்காரர் ஒவ்வொரு பிரபலமான வழக்கறிஞரைப் போய்ப் பார்த்தாராம். அந்த வழக்கறிஞர் ஒவ்வொருவருமே நீங்கள் அய்ந்து குதிரையைப் பூட்டினாயா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்கள்
இவரும் `ஆம்’ பூட்டினேன், அவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். ஆதாரத்தை நிரூபித்திருக்கிறார்கள் என்று இவர் சொல்லியிருக்கிறார். எனவே, இந்த வழக்கிலே நாம் வெற்றி-பெறமுடியாது. எனவே நாங்கள் இந்த வழக்கை எடுத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேறு வழக்கறிஞரிடம் சென்று விடுங்கள் என்று ஒவ்வொரு பிரபல வழக்கறிஞரும் இவரைத் தள்ளிவிட்டார்களாம்.
ஜின்னா மட்டுமே வழக்கை எடுத்துக் கொண்டார்
மகமதலி ஜின்னா அவர்கள் பாரிஸ்டராக இருந்தார். மற்றவர்களைப் போல இவர் ஒன்றும் மூத்த வழக்கறிஞர் அல்ல. இந்த வழக்கைப்பற்றி ஜின்னா அவர்கள் கேட்டுவிட்டு நான் இந்த வழக்கை எடுத்து நடத்துகிறேன் என்று சொன்னார்.
எல்லோருக்கும் இது ஆச்சரியம். தோற்றுப் போகிற வழக்கை ஜின்னா அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார் என்று.
ஜின்னா வாதாடுவதைப் பார்க்கக் கூட்டம்
நீதிமன்றத்தில் ஜின்னா அவர்கள் எப்படி வாதாடப் போகிறார் என்பதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அய்ந்து குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி எது? எந்தெந்த குதிரைகள் எல்லாம் வண்டியில் கட்டப்பட்டன என்பதை எல்லாம் நேரில் பார்த்து ஜின்னா விசாரித்துவிட்டார்.
வெட்னரி சர்ஜன் என்று சொல்லக்கூடிய மிருக வைத்-தியர் ஒருவரையும் பக்கத்திலே வைத்துக் கொண்டார் ஜின்னா. நீதிமன்றத்திலே வாதாட ஆரம்பித்தார்.
ஃபோட்டோ ஆதாரம் உள்ளது
நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. யார் வழக்கு போட்டாரோ அவருடைய வழக்கறிஞர் வாதாடினார். பிரபுகளாகிய எங்களுக்கு அய்ந்து குதிரைகளை வைத்து ஓட்டக்கூடிய உரிமைச் சட்டம் எங்களுக்கு இருக்கிறது என்பவைகளை எடுத்துச் சொல்லி விவாதம் செய்தார்.நீங்கள் வண்டி ஓட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. ஃபோட்டோக்கள் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னார்.
நீதிபதிகள் கேள்வி
இதிலே நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பிரிவிகவுன்சில் நீதிபதிகள் கேட்டார்கள்.
குதிரைகளை ஆங்கிலத்தில் Horses என்று சொல்லுகின்றோம். ஆனால், ஜின்னா அவர்கள் வாதாடும்பொழுது சொன்னார். எதிர்க்கட்சிகாரர் அய்ந்து குதிரைகளை ஓட்டி வந்தார் என்று சொல்லுகிறார். நான் சொல்லுகிறேன் Four Horses and one Mare (பெண் குதிரை) என்று சொன்னார்.
நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை
என்னுடைய கட்சிக்காரர் நான்கு ஆண் குதிரைகளோடும், ஒரு பெண் குதிரையோடும் சேர்த்து வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். பெண் குதிரைக்குரிய பலம் ஆண் குதிரைக்கு இல்லை. எனவே அதை ஒரு குதிரையாகக் கருத முடியாது. சந்தேகம் இருந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
வழக்கையே தள்ளுபடி செய்யுங்கள்
எனவே இந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜின்னா இப்படி வாதாடினார் என்று எங்களுடைய மூத்த வழக்கறிஞர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம் அது. இன்னமும் எனக்கு அது நினைவிருக்கிறது.
ஜின்னா அகராதியைப் பார்த்தார்
நுண் மான் நுழைபுலத்தோடு ஜின்னா அவர்கள் Horse என்றால் என்ன போடப்பட்டிருக்கிறது? அதற்கு உரிய பொருள் என்ன என்று பார்த்தார். ஆண் குதிரைக்கு என்ன பெயர், பெண் குதிரைக்கு என்ன பெயர் என்று பார்த்தார். இந்த வழக்கிலே அவருடைய அறிவைப் பயன்படுத்தினார்.
வழக்கில் ஒவ்வொரு சொல்லும் முக்கியம்
பிறகு அந்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே வழக்கில் ஒவ்வொரு சொல்லும் ரொம்ப மிக முக்கியமானது.
வழக்கறிஞர் தொழிலிலே திரும்பத் திரும்ப சட்டத்தைப் படிக்கவேண்டும். திரும்பத் திரும்ப ஆய்வு செய்யவேண்டும் அதுதான் மிக முக்கியமானது.---------
கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.முழுமையாக படிக்க-- http://viduthalai.com/20070420/news15.htm
-------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment