ஃப்ளாட் வாங்கப் போகும்போது நமது பார்வைக் கோளாறா? அல்லது பார்த்து வாங்க வேண்டிய முறை ஏதும் உள்ளதா?
>> Thursday, April 5, 2007
ஃப்ளாட் வாங்கப் போகும்போது, சிலசமயம் 1000 சர அடி ஃபிளாட்கூட ரொம்ப சிறிதாக இருப்பதுபோல் தெரிகிறது. இதற்குக் காரணம் நமது பார்வைக் கோளாறா? அல்லது பார்த்து வாங்க வேண்டிய முறை ஏதும் உள்ளதா?
ஃப்ளாட்டைப் பொறுத்தவரை அதன் அளவை இரண்டுவிதமாக கணக்கிடுவார்கள். கட்டிடத்தின் சுவர்கள், காமன் ஏரியா எனப்படும் பொது இடங்கள், ஓ.டி.எஸ். என்றழைக்கப்படும் வெளிச்சம், காற்று வருவதற்காக உருவாக்கப்பட்ட வெற்றிடங்கள் இவற்றை உள்ளடக்கிய பரப்பளவு. இதை பிளின்த் ஏரியா என்பார்கள். பெரும்பாலான பில்டர்கள் 1000 சதுர அடி பிளாட் என்று குறிப்பிடும்பொழுது பிளின்த் ஏரியாவைத்தான் சொல்வார்கள்.
நீங்கள் தரப்போகும் விலையும் அதற்குத்தான். ஆனால் நம்முடய சிந்தனயெல்லாம் வீட்டின் உள்ளளவைச் சுற்றியே இருக்கும். உண்மையில் அறையின் சுவர்களுக்குள் அடங்கும் அந்த உள்ளளவைக் கணக்கிடுவதை கார்பெட் ஏரியா என்று சொல்வார்கள். நாம் கார்பெட் ஏரியா எவ்வளவு என்று தெரிந்துகொள்ளாமல் பிளின்த் ஏரியாவையே கார்பட் ஏரியாவாக நினைத்துக் கொள்ளும்போதுதான் ஃபிளாட் சின்னதாக இருப்பதாகத் தோன்றுகிறது.
தனி வீடுகளைப் பொறுத்தவர பிளின்த் ஏரியா 1000 சதுர அடி என்றால் கார்பட் ஏரியா 750_ல் இருந்து 800 சர அடி வரை இருக்கும். பிளாட் என்று வரும்பொழுது, 600_முதல் 650 சர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.
எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிற்கும் இறுதியில் நமக்குக் கிடக்கும் கார்பெட் ஏரியாவிற்கும் உள்ள வித்தியாசம் 30 முதல் 35 சதவிகிதத்திற்குள் இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர்.
அதற்குமேல் காமன் ஏரியா இருந்தால் அவ்வளவு இடம் எங்கே, எதற்காக ஒக்கப்பட்டுள்ளது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் விற்கும் பொழுது இந்தப் பிரச்னை எழும்.
கார்பெட் ஏரியா அதிகமாக அதிகமாக அந்த பிளாட்டின் மதிப்பும் அதிகமாகும்! இல்லையென்றால் சின்ன வீட்டை அதிக பணம் கொடுத்து வாங்கி விட்டோமோ என்கிற குற்றவுணர்வில் இருந்து நீங்கள் மீளவே முடியாது!
SOURCE: KUMUDAM--- NANDRI TO: KUMUDAM.
----------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க: --வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment