தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக
>> Monday, April 30, 2007
தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள் தலைவரான ஜார்ஜ் டெனட் (George Tenet) குற்றம் சாட்டியுள்ளார்.
ஞாயிறு, 29 ஏப்ரல் 2007--- புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு ஐநா ஒப்புதல் இல்லாமலேயே தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள் தலைவரான ஜார்ஜ் டெனட் (George Tenet) குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திரு டெனட், அமெரிக்க துணை அதிபர் டிக் செனியையும் வெளியுறவு அமைச்சரான கொன்ண்டலீசா ரைசையும் வெளிப்படையாகவே சாடினார்.
இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாகக் கற்பனையான காரணம் கூறி அதன் மீது போர் தொடுத்த புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு திரு டெனட் CIA தலைவராக இருந்த போது அவர் அளித்த உளவு அறிக்கையின் அடிப்படையிலேயே போர் தொடுத்ததாக அறிவித்தது.
இதைத் தற்போது வன்மையாக மறுத்துள்ள திரு டெனட், புஷ், செனி மற்றும் ரைஸ் ஆகிய மூவரும் நம்பிக்கைத் துரோகிகள் என்று சாடியுள்ளார். தான் சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்றும், உண்மையில் அதற்கு மாற்றமான அறிக்கையே அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இராக் மீதான தாக்குதல் அட்டவணை குறித்த செய்தி தமக்குக் கிடைத்ததும் இது தவறான தகவலின் பேரில் தொடுக்கப்பட்ட போர் என்று தாம் வலியுறுத்தியதாகவும், அப்போது புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ரைஸ், காலம் கடந்துவிட்டதாகக் கூறி தனது அறிக்கையை நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
பொய்யான தகவல்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட இராக் போரில் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து வரும் புஷ் அரசு தன்னை பதவிவிலகச் செய்து பலிகடா ஆக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க செனட் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.-------NANDRI: SATYAMARGAM
--------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment