குப்பையெல்லாம் கிடந்தால்
>> Saturday, April 7, 2007
''ஏய் சுதா, இங்க வா... இந்தக் கிழிந்த பேப்பரை எல்லாம் எடு'' அதட்டினாள் அம்மா நீலா.
வேக வேகமாக ஓடி வந்தாள் சுதா. அவள் தம்பி மகேஷ், பேப்பரை அங்குமிங்கும் கிழித்துப் போட்டிருந்தான்.
''அப்பாவுக்குத் தான் இந்த மாதிரி குப்பையெல்லாம் கிடந்தால் பிடிக்காதுல்ல'' மறுபடியும் அதட்டினாள் நீலா.
பலராமனுக்கு வீடு படு சுத்தமாக இருக்க வேண்டும். குப்பை ஏதேனும் கிடந்தால் கண்டபடி திட்டி விடுவான்.
குளிக்கச் சென்ற அப்பா வருவதற்குள், சுதா பேப்பரை எல்லாம் பொறுக்கினாள். வீடு ஒரே நிமிடத்தில் பளிச்சென்றான.
பலராமன் பாத்ரூமிலிருந்து வந்தான். வீட்டை அங்கும் இங்கும் ஒரு பார்வை பார்த்தான்.
நீட்டாக டிரஸ் செய்து, டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான் வேலைக்கு.
மாநகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் ஏறினான் பலராமன், நகரைச் சுத்தப்படுத்துவதற்காக!
NANDRI TO KUMUDAM.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment