இதுவும் ஒரு வியாபார தந்திரம்தான். புரியுதா?
>> Tuesday, April 10, 2007
இதுவும் ஒரு வியாபார தந்திரம்தான். புரியுதா?
மாலிக்குக் கவலையாக இருந்தத. ஹோட்டல் தொடங்கி இவ்வளவு நாட்கள் ஆகியும் இதுவரையில் நினத்த அளவிற்குக் கூட்டத்தைக் காணவில்லை.
ஏதாவது ஒன்றிரண்டு பேர் சாப்பிட வருவதோடு சரி. ஐந்து சர்வர்கள நியமித்திருந்தார். நல்லவேளை மதிய உணவுக்கு மட்டும் என்ற அளவில்தான் தற்சமயம் ஹோட்டலைத் தொடங்கியிருந்தார்.
அன்று நண்பர் வந்திருந்தார். அவரும் வெற்றிகரமாக வேறு இடத்தில் ஹோட்டல் நடத்துபவர்தான். மாலிக் தன் கதையைச் சொன்னார். நண்பர் ஹோட்டலைச் சுற்றிப் பார்த்தார். சர்வர்களைப் பார்த்தார். அவருக்குக் காரணம் புரிந்தது. மாலிக்கின் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டுப் போனார்.
இரண்டு வாரங்கள் கழித்து ஹோட்டலில் ஓரளவு நல்ல கூட்டம் வரத் தொடங்கி இருந்தது. மாலிக் போனில் நண்பனுக்கு நன்றி சொன்னார்.
ரொம்ப சந்தோஷம். அன்னிக்கு நான் வந்தப்ப உன்னோட சர்வர்களெல்லாம் பசியோட டையர்டா நிக்கறதைப் பார்த்தேன். அவங்களுக்கே சக்தியில்லேன்னா முகத்திலே மகிழ்ச்சியில்லேன்னா அவங்களாலே மத்தவங்கள எப்படிக் கவனிக்க முடியும்? தொழிலாளி மகிழ்ச்சியாக இருந்தாத்தான் முதலாளி மகிழ்ச்சியாக இருக்க முடியும். இதுவும் ஒரு வியாபார தந்திரம்தான். புரியுதா?
ரொம்ப தேங்ஸ்ப்பா. நீ சொன்னது போல முதலில் சர்வர்களுக்குப் பதினொரு மணிக்கே வயிறு நிறையச் சாப்பாடு போடறேன். அதனால அவங்க மகிழ்ச்சியோட சக்தியோட வர்றவங்கள ஓடியாடி உபசரிக்கிறாங்க. வர்றவங்களும் சந்தோஷமாயிடறாங்க. மெது மெதுவா கூட்டம் வரத் தொடங்கியாச்சு.... SOURCE: > INTERNET.
---------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment