**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.

>> Wednesday, April 30, 2008

சிரிக்கத் தெரிந்தால்தான் நகைச்சுவை உணர்வு வரும். ஆனால், நம்மில் பல பேருக்கு சிரிப்பின் நன்மை, ஆற்றல் பற்றி எதுவும் தெரியாது.

கடனே என்று சிரிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.

‘கழுதை அறியுமா கற்பூர வாசனை?’ அதுமாதிரிதான். நாம் சிரிப்பைப் பற்றி நன்றாக அறிந்தால்தான் வாழ்க்கையை நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்ல முடியும். நான் சொல்வதை காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேளுங்கள்...!

நன்றாகச் சிரிப்பவர்கள், நோயின்றி வாழ்வார்கள். பிரச்னைகளை எளிதாகத் தீர்த்து விடுவார்கள். சிரிப்பில் பலவிதம் இருக்கிறது.... மனதொன்றி வாய் சிரிக்க. வயிறு குலுங்கச் சிரிக்கிறவர்கள் மனநோயை அண்ட விடமாட்டார்கள். வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகி எதையும் இயல்பாக எடுத்துக் கொள்வார்கள்.

நாம் அதிகம் சிரிக்கும்போது என்டோர்பின் ((Endorphin) என்ற ஹார்மோன் உடலில் சுரக்கும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சுவாசிக்கும் முறையும் சீரடைந்து நுரையீரல் பலப்படும்.

புன்சிரிப்பு சிரிக்கும்போது, முகத்திலுள்ள தசைகளின் விறைப்பு தளருகிறது. அதனால் பத்து வயது குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். கடுகடுவென்று சினம் கொள்ளும்போது முகத்துத் தசைகளில் முப்பத்து நான்கு தசைகள் இயங்குகின்றன. ஆனால், புன்னகையின் போதோ, பதின்மூன்று தசைகள் மட்டுமே

இயங்குகின்றன. புன்சிரிப்பு நல்லதுதான். ஆனால், வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்தல் அதனினும் நல்லது. அடிக்கடி வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்குத் தலையில் வழுக்கை விழுவதில்லை.

உளவியலார் சிரிப்பை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். ‘‘சீருடன் வாழச் சிரியுங்கள்’’ என்னும் முதுமொழியை இன்றைய உளவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் சிரிப்புக்கு ஒரு முதலிடம் உண்டு. உடம்பில் குருதியைச் (இரத்தம்) செலுத்துவது போன்ற நன்மை சிரிப்பால் ஏற்படுகிறது என்று சொல்லலாம். உடல், உள்ளம் இரண்டிற்கும் ஒருங்கே நலம் அளிக்கும் தன்மை கொண்டது சிரிப்பு.

உண்மையான சிரிப்பு, உள்வடிவச் சுரப்பிகளை மென்மையாக வருடிவிட்டு, அவற்றின் சுரப்பிகளைப் பெருக்குகிறது. குறிப்பாக இரைப்பை, குடல், கணையம் முதலிய உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் சிரிப்பால் ஊக்குவிக்கப்படுகின்றன. மூளையின் அடிபாகத்தில் பட்டாணிக்கடலை அளவில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது. அதில் வளர்ச்சி உயிரணுக்கள் (ஹார்மோன்கள்) சரியான நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளையைத் தெளிவு பெறச் செய்கிறது.

மனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சி, உடல் நோய்கள் அணுகாதவாறு காத்துக்கொள்ள உதவுகிறது. இவ்வுண்மையை மருத்துவ உலகம் பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்துள்ளது. நோயாளிகள் சிரிப்பது, அவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது. சிரிப்பு, குருதியிலுள்ள (இரத்தம்) கொழுப்புச்சத்தின் (கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து நெஞ்சக நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பதை அண்மையில் சோவியத் அறிவியலார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் ‘குருதி (இரத்தம்) அழுத்த நோய்க்கும் இது நல்ல மருந்து.

நகைச்சுவை நாடகங்களுக்குச் சென்று மகிழுங்கள் அல்லது நகைச்சுவை நூல்களைப் படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்’ என்று கூறுகின்றனர். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நகைச்சுவை உடையவர்களாகவும், மிகுதியாகச் சிரிப்பவர்களாகவும் இருப்பார்களானால் பல மருத்துவமனைகள், நலத்துறை நிலையங்கள் மூடவும் நேரலாம்.

ஏன் வன்முறை, போர்களும் கூட ஒழிந்துவிடும் என்று புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார் என்றால் சிரிப்பின் மாபெரும் ஆற்றலை என்னென்பது!...

நகைச்சுவை உணர்ச்சியில்லாமல் இயல்பான வாழ்வு கூட வாழ முடியாது. நகைச்சுவை உணர்ச்சியற்ற மனிதர்கள், எந்தத் தொழிலையும் வெற்றியுடன் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வுண்மையை ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரிய சிக்கல்களுக்குச் சிறந்த முடிவு காண சிரிப்பு உதவுகிறது என்று ரோமானியக் கவிஞர் ஹொரேஸ் கூறியுள்ளார். சிரிப்பில்லாத மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நண்பர்கள் வட்டம் இருக்காது. எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று இருப்பார்கள். இந்த மனப்பாங்கு இவர்கள் முன்னேற்றத்திற்குப் பெருந் தடைக்கல்லாய் இருக்கும்.

நம் நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களின் சிரிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்நிலை மாறி, ‘நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள் என்பதில் நம்நாடு முதலிடம் பிடிக்க வேண்டும்.

உலகில் சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான் இருக்கிறது. அந்தப் பள்ளி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. அங்கே ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வந்தால் ரோட்டில் தன் நிலை மறந்து திரியும் மனநலம் சரியில்லாதவர்கள் உருவாகும் நிலை படிப்படியாகக் குறைந்து மனநலம் சரியாக இருக்கின்ற சமுதாயம் உருவாகும். புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் சிரிப்பதற்கென்றே ஒரு சங்கத்தைத் துவக்கினார்.

அதற்குப் பெயர் ‘பம்பூகு’. பம்பூகு என்றால் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்வது. தவிர, வேறு குறிக்கோள் கிடையாது. மாந்தருக்கு நேரும் துன்பங்களைச் சிரிப்பதன் மூலம் மறந்து சீர் செய்து கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி ஒரு வியப்பான சங்கத்தினைத் தொடங்கினார் போலும் அந்த எழுத்தாளர்.

ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிரிக்கத் தெரியாதவர் வாழ்வே அறியாதவரே! கடைசியாக ஒரு விஷயம், சிரிப்பு என்பது மனிதனுக்கு நல்ல மருந்து. ஆனால், சில வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் சிரிக்கும்போது, என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு’ என்று மிரட்டி, சிரிப்பு என்பது அசிங்கமானது என்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்.

இதனால் வளர்ந்து பெரியவனாகும் சூழ்நிலையிலும் சிரிப்பை மழுங்கடித்து எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே காணப்படுவார்கள். அதனால்தான் பெற்றோர்களே, குழந்தைகளை அருகில் அழைத்து ஏதாவது ‘ஜோக்’ சொல்லச் சொல்லி, நீங்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரியுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் சிரிப்பு அலை உருவாகும். இதனால் குழந்தைகள் பெற்றோர் இடைவெளி குறையும். குழந்தைகள் நட்புடன் பழகி ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசுவார்கள்.

கணவனும்_மனைவியும் ‘ஜோக் அடித்தால்’ அவர்களிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் அதிக நெருக்கம் கொள்வார்கள். சண்டைகள் அற்ற புரிதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். அபூர்வா. SOURCE: INTERNET
------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்!! .. ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்!!

>> Tuesday, April 29, 2008

ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்.
பாரம்பர்ய உணவா? அப்படின்னா இன்னாதுப்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவிற்கு அந்நிய உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆதிக்கப்பிடியில் சிக்கித் தவிப்பது ஸ்டார் ஹோட்டல்கள் + ஹைக்ளாஸ் ஃபேமிலிகள் மட்டுமல்ல. சாலையோர நடைபாதை உணவகங்களும் அதை நம்பிச் சாப்பிடும் கஸ்டமர்களும் தான். இப்போதெல்லாம் உணவுகள் வேகவைக்கப்படுவதைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கிறது. உணவுகளை வாணலியில் போட்டு வறுத்து பாதியை கீழே கொட்டி மீதியை ப்ளேட்டில் கொட்டி ஃபாஸ்ட்டாக கொடுக்கப்படும் உணவுகளுக்கு ஏக போக வரவேற்பு.

ஆகவே சாதாரண மக்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட வேண்டுமெனில் தங்கள் சொத்தையே எழுதி வைத்துவிட்டுத்தான் வரவேண்டும். எனவேதான் விலை குறைந்த சாலையோர உணவுகளை பலர் விரும்பியும், விரும்பாமலும் சாப்பிடுவதன் காரணம். வெளியூரிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பேச்சுலர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் கேஸ் சிலிண்டர் கிடைக்கப் பெறாமல் நடைபாதைக் கடைகளை நோக்கி நடை போடுவதும் இன்னொரு காரணம்.

சரி, எது எப்படியோ சாலையோர உணவகங்கள் ஏழைகளின் அக்க்ஷய பாத்திரமாகவும், பேச்சுலர்களின் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலாகவும் மாறிப் போனாலும் இதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம். ஏனெனில் சுகாதாரமற்ற குடிநீர், தரம் குறைந்த உணவு வகைகள், சுத்தமில்லாத பாதுகாப்பு, சுவை கூட்ட உடலுக்குத் தீங்கைக் கொண்டு வரும் எசன்ஸ் கலப்பது என தரமற்ற உணவுகளால் பலவிதமான நோய்களும் பிரச்சினைகளும் நம்மை தாக்கி மரணப்படுகுழியில் தள்ள பல் இளித்து நிற்கின்றன சாலையோரங்களில்.

சாலையோர உணவக ஓனர்களின் வயிற்றில் அடிக்கும் விஷயமாக இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும் ஓர் விழிப்புணர்வு விஷயமாகும். எனவேதான் தரமற்ற உணவுகளால் என்னமாதிரியான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படும்? இதைத் தடுக்க என்ன வழி? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என பல கேள்விகள் மூளையைச் சீண்ட ஆரம்பித்திருக்கின்றன.

‘‘சாலையோரக் கடைகளில் சுத்தமான தண்ணீர் கிடையாது. சமையல் அறை அவுங்களுக்குத் தனியா இல்லை. இதனால் ஏற்படுகிற ஆரோக்கியக் கேடுகள் அவங்களுக்குத் தெரியாமலேயே இருக்கு. இதை அறியாமைன்னு கூடச் சொல்லலாம். 99 சதவீதம் கையை சுத்தமா கழுவுறதுமில்ல, கையுறை (க்ளவுஸ்) அணியறதுமில்ல. இதனால அவங்க உடம்புல இருக்குற ‘கொக்கிப்புழு’ சாப்பிடுறவங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கு. சமைக்கிறவங்க சுத்தமா இருந்தாலும் சமையல் முறைகளிலும் சத்தம் தேவை. சமைச்ச உணவுகள் சரியா மூடி வைக்காம வாகனங்களின் மாசு நிறைந்த காற்று பட்டு நச்சுக்கிருமிகள் உள்ளே புக வாய்ப்பு இருக்கு.

அதுவும் பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்னு எல்லாத்திலேயுமே கலர் பவுடர், எசன்ஸ் எல்லாம் கலக்குறாங்க. இதனால நிச்சயமா உடம்புல பாதிப்பு ஏற்படும். தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு போனப்போ, சாலையோர உணவுகளை அவ்வளவு சுத்தமாக கையுறை அணிந்து உணவு பரிமாறுவதைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஆனா நம்ம ஊர்ல அப்படியில்லைன்னு நெனைக்கும் போது கொஞ்சம் வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கு.

இதுக்கு அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான் சரியான பயிற்சிகளைக் கொடுத்து சாலையோர உணவகங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முன் வரணும். நுகர்வோர்களை(வாங்கிச் சாப்பிடும்)யும் பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்கணும்.

சமீபத்துல சாலையோர கடைகளில் மாமிசம் டேஸ்ட்டா இருக்கவும், நல்லா வேகணும்ங்கிறதுக்காகவும் பேராசிட்டமல் மாத்திரையை கலக்கிறாங்கங்கிறது தெரிய வந்திருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.

இப்படி ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளில் கலப்படமோ, தரம் குன்றியதாக சுகாதாரம் அற்றதாக இருந்தால் உங்களின் நகராட்சி, அல்லது மாநகராட்சி, சுகாதார அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். அதுவே கிராமப்புறமாக இருந்தால், சுகாதார நோய்த்தடுப்பு மற்றும் உணவு ஆய்வாளர் அல்லது மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவரிடம் புகார் கொடுத்தால் ‘1954 உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் வந்துடுச்சு. தொடர்ந்து உணவுக் கலப்படம், தரமற்ற உணவுகளைத் தயாரித்து விற்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றுக் கோளாறோ அல்லது உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்பட்டால் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களில் புகார் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதோடு நஷ்டஈடும் வழங்கப்படும். அதேபோல சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் பதிவு பெற்ற உணவகங்களில் சாப்பிடுவது நுகர்வோருக்குப் பாதுகாப்பானது. பாதிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக புகார் செய்யத் தயங்க வேண்டாம்’’ என்கிறார் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் க.ராஜாராமன், ஐ.ஏ.எஸ்.

இதனால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் குறித்து குடல் இரைப்பை மற்றும் லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்

பி. சதீஷிடம் கேட்டோம் ‘‘இதில் சிந்தித்துச் செயல்பட வேண்டியது மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அதாவது உணவு சுகாதாரம், என்ன இருக்கிறது? எந்த மாதிரியான சமையல் முறை? என்பதை கவனிக்க வேண்டும். உணவை சூடாகச் சாப்பிட்டால் நுண்ணுயிர்க் கிருமிகள் உணவில் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் எதில் வைத்து சாப்பிடுகிறோமோ அதிலும் பாதிப்பு இருக்கக்கூடும். சுத்தமில்லாத பாத்திரமாக இருந்தால் பாக்டீரியா, வைரஸ், அமீபா போன்ற கிருமிகள் உணவு வழியாக நமக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். ஆக, உணவு, பாத்திரம், தண்ணீர், மூன்றும் முக்கியம்.

உணவு சுகாதாரம், இல்லை என்றால் பாக்டீரியா மூலம் டைஃபாய்டு போன்ற வியாதிகள் வந்து இம்சிக்கக்கூடும். வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைட்டிஸ் ஏ,இ) வர வாய்ப்பிருக்கிறது. அதுவே அமீபா என்றால் வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதெல்லாம் சுகாதாரமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள்.

இதுவே உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் தரமான அரிசியா? தேவையான அளவு காரமா? உப்பு, எண்ணெய், தரமானதுதானா? அளவு சரியா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் நெஞ்செரிச்சல், அல்சர், கேஸ் ப்ராப்ளம் எல்லாம் ஏற்படும்.

அடுத்து சமையல் முறை. உணவு நன்கு வேக வைக்கப்பட்டதாக இருந்தால் பிரச்சினை இல்லை. சரியாக வேகாமல் பாதி அளவு வெந்திருக்கும் ஃப்ரைடு ரைஸ், பிரியாணிகளால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், எல்லாம் ஏற்படக்கூடும். அதே போல் எண்ணெயை திரும்பத் திரும்ப (ரீ யூஸ்) பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, கேஸ் ப்ராப்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற குறிப்பிட்ட பல பிரச்சினைகள் சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்வதால் அல்சர் போன்ற பிரச்சினைகள் வருவதோடு இரைப்பை மற்றும் சிறுகுடலில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே, ஏற்கெனவே அசிடிட்டி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதுபோன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் குடல் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துதான் காப்பாற்றும் சூழல் ஏற்படும்’’ என்று எச்சரிக்கிறார்.

‘‘சாலையோர உணவகங்கள் என்பது சுய வேலைவாய்ப்பு. வேலைக்கு ஆள் சேர்க்கத் தேவையில்லை. ஏழை எளியவர்கள் அனைவரும் (பணக்காரர்கள் விரும்பினால்) சாப்பிட முடியும். ஏனென்றால் உடனுக்குடன் கேட்டதும் சூடாக அதே நேரத்தில் விலை கம்மியாகவும் கிடைக்கும். எனவே பலர் சாலையோர கடைகளை விரும்பிச் செல்கிறார்கள். இதுக்கு சட்டம் போட்டு இவர்களை ஒடுக்குவதை விட ட்ராஃபிக் பாதிக்காதவாறு, சுத்தமாக, சுகாதாரமாக உணவுகளைத் தயாரித்து விற்க அரசாங்கத்தின் மூலம் திட்டம்தான் போட வேண்டும்.

அதற்கான சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தந்த ஏரியாவுக்கு இத்தனை கடைகள் என்று பிரித்து சரியான இடத்தைக் கொடுத்து அருகில் சுத்தமான குடிநீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். விலைக்கு ஏற்ப அங்கு சாப்பிடும் உணவுகள் கலப்படம் நிறைந்தவையாகவும், எண்ணெய், காய்கறிகள், சிக்கன், மட்டன்களில் தரம் குறைந்ததாகவும் இருக்கும்.

இவற்றையெல்லாம் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். வெயில் காலம் வேறு ஆரம்பித்துவிட்டதால் உணவு கெட்டுப் போயிருந்தால் கூட தெரியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் சிட்டிஸன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப் துணை இயக்குனர் ஷோபா ஐயர்.

கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் இயக்குனர் சந்தானராஜ் கூறும்போது, ‘‘சாலையோரக் கடைகளில் சரியான தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. வாகனப் புகைகள் உணவில் புகும். உணவின் குவாலிட்டியும் குறைவு.

போண்டா, பஜ்ஜிகளை பேப்பரில் வைத்துக் கொடுப்பார்கள். அந்த பேப்பரில் உள்ள எழுத்து அச்சு நம் உடலுக்குள் சென்றால் இரத்த சோகை வியாதி ஏற்படும். சிலர் உணவில் சுவை கூட்டவும், மணமூட்டவும் அஜினமோட்டோ கலக்குறாங்க. இதனால் எந்த நன்மையுமில்லை. கேன்சர் மாதிரியான பிரச்சினைகள் வரும். ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் கேன்சர் போன்ற பிரச்சினைகள் வரும்.

எல்லாப் பொருட்களாலுமே கலப்படும் வந்துவிட்டது. பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கும் உணவுகளிலேயே பாதிப்புகள் இருக்கின்றன. சம்பாதிக்கும் நோக்கத்தோடு ‘‘யாரோ சாப்பிட்டு என்ன ஆனால் நமக்கென்ன என்ன?’’ என்று அலட்சியத்தோடு வாங்கி சமைக்கும் போது எந்த மாதிரி பிரச்சினைகள் வருகிறது என்பதை சொல்லித் தானா தெரிய வேண்டும்’’.

டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) இதுபற்றி கூறும் போது, ‘‘சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது.

கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது.

ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை. முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.

எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக் குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (HACCP) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை’’ என்கிறார்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.

‘‘222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட்’ படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது. அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது. சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும்/. இதற்கு ‘Aflotosin’ விஷத்தன்மை என்பார்கள். சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது.

இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’

ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!

ம.மனோ, --KUMUDAM HEALTH

ஹைவே ஹோட்டல்கள் .ஹை டெக் தில்லு முல்லுகள்.

இங்கே சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரிய பாவப்பட்டவர்கள். ஏனெனில், தன் வாழ்நாளில் யாரிடமும் வாங்காத பேச்சுக்களையும் திட்டுகளையும் இங்கே சிறுநீர் கழிக்கும் இருபது முப்பது நொடிகளுக்குள் வாங்கிவிடுவார்கள். இன்னும் ஒரு சிலரோ, ரத்தம் சொட்ட உருட்டுக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.

உலகிலேயே மிக அசுத்தமான இடத்தில் காஸ்ட்லியான வியாபாரச் சந்தை எதுவென்றால், அது தமிழகமெங்கும் விரவியிருக்கும் மோட்டல்கள்தான். ஆம்! மோட்டல் எனப்படும் பேருந்து பயணத்தில் சாலையோர உணவகங்களில்தான் மேலே சொன்ன மகா கொடுமைகள்.

‘‘கீரையில உப்பு அதிகம். உருளைக்கிழங்கு வேகவே இல்லை. ரசம்ங்கிற பேர்ல கோமியம். அரை வேக்காட்டில் புழுத்துப்போன சாப்பாட்டுக்கு அம்பது ரூபா புடுங்கறீங்களே’’ என்று பயணி ஒருவர் சென்னை செல்லும் வழியிலுள்ள மோட்டலுக்குள் எகிற,

அவரை அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்டு விட்டனர். கேள்வி கேட்டவர் இன்று மாதச் சம்பளத்தை இழந்து கைகால் ஊனமுற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

‘‘ஒரு காப்பியைக் கொடுத்துட்டு பத்து ரூபாய் என்கிறீங்க. காப்பியில பால் சுத்தமாவே இல்ல. என்னய்யா காப்பி விக்கிறீங்க?’’ என்று கொதித்துப்போன வழக்கறிஞர் காபியைக் காட்டிலும் சூடாகியிருக்கிறார். கடைசியில் இருதரப்பிலுமே கைகலப்பில் முடிந்திருக்கிறது.

தாறுமாறான விலை. தரங்கெட்ட மினிமம் கியாரண்டி. அவர்கள் வைத்ததே சட்டம் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்கள் சில சாம்பிள்களே!

‘‘மோட்டல்கள் இருக்கும் நட்ட நடு காட்டுப்பகுதியில் அவர்களை மீறி யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அந்தளவிற்கு மோட்டலில் வேலை பார்க்கும் ஆட்கள், அடியாட்கள் ரேஞ்சிற்கு அதட்டி மிரட்டி வியாபாரம் செய்வதுதான் அவர்களின் பெரிய பலம்’’ என்கிறார் சமூகநல ஆர்வலர் ஒருவர்.

காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான உயரதிகாரி ஒருவர், ‘‘அடிக்கடி சென்னை போய்ட்டு வரக்கூடிய ஆளுங்க நான். நானே பல இடங்களில் அவங்களோட செயல்பாட்டை கண்டு கோபப்பட்டிருக்கேன். ஒருமுறை விக்ரவாண்டி மோட்டல்ல சாப்பிட நேர்ந்தது. ரெண்டு தோசையை வச்சாங்க. என்ன கறின்னு தெரியலை? கிண்ணத்துல கறியைக் கொண்டு வந்து வச்சாங்க. நான் கேட்டது தோசை மட்டுந்தான்.

ஆனா, அவங்களா கறின்னு கொண்டு வந்து வச்சுட்டு சட்டை பண்ணாம போய்ட்டாங்க. நான் எதிர்த்துக் கேட்டப்போ, ‘இதுதான் இருக்கு. சாப்பிடறதா இருந்தா சாப்பிடுங்க. இல்லைன்னா அறுபது ரூபா பணத்தைக் கொடு’ங்கன்னு பில்லை வச்சுட்டான். நாம பேச சாய்ஸே தரமாட்டாங்க.

நான் பிரச்னை பண்ணிட்டேன். உடனே அங்கிருந்த கேஷியர் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி ‘அண்ணந்தான் இன்சார்ஜ். அங்க பேசுங்கன்’னு காலரைத் தூக்கி விடுறான்!?’’ என்கிறார்.

‘‘பிஸ்கெட், வாட்டர் பாட்டில் எல்லாமே ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும். சில இடங்களில் பொம்பளைங்க பாத்ரூம் போறதுக்கு மட்டும் அஞ்சு ரூபாய்க்கு அதிகமா வாங்கிறாங்க. ஏன்னா அவங்களால மோட்டலை சுத்தி வேற எங்கேயும் போகமுடியாது. ஆம்பளைக போனா உருட்டுக்கட்டையால அடிச்சு ஆளைகாலி பண்ற மாதிரி அடாவடி வேலைகளாம் பண்ணி பெட்டுல படுக்க வைச்சுருவானுக. இதெல்லாம் பாக்கிறப்ப வயித்தெரிச்சலாத்தான் இருக்கு’’ என்று குமுறுகிறார் இன்னொரு பயணி.

சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் தனியார் வங்கி ஊழியரோ,

‘‘அரை கப் பால் பதினைஞ்சு ரூபா. காஞ்சு போன எலணி இருபது ரூபா. ஒரு கப் புளிச்ச மாவுல ஊத்துற ஊத்தப்பம் பதினெட்டு ரூபா. ஒரு இட்லி ஆறு ரூபா. அஞ்சு ரூபாய்க்கு பொறாத கூல்டிரிங்ஸ் பதினைந்து ரூபா. இதெல்லாம் எந்த நாட்டுலங்க? அநியாயத்தை யாருமே தட்டிக் கேட்கிறதில்லை. மீறி கேட்டா, ‘ஒருமையில பேசி அந்தப் பகுதியில இருக்கிற ஆளுங்கட்சி மினிஸ்டரைப் போய் பாரு’ங்கன்னு சொல்றானுக.

மாமண்டூர், விக்ரவாண்டி, தொழுதூர், கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி, வையம்பட்டின்னு திருச்சியை சுத்தியே எத்தனையோ மோட்டல் கொள்ளைகள் பகிரங்கமா நடந்துட்டு இருக்கு’ இன்னைக்கு இந்த ‘ஹைடெக் தொழில் கொள்ளை’ தமிழகமெங்கும் மக்களை மிதிச்சு கோரமாக தடம் பதிச்சிருக்கு’’ என்றார் முகம் சிவக்க.

இதுபற்றி திருச்சி டெக்கான் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில செயலாளர் பாரதராஜாவிடம் விளக்கம் கேட்டோம்.

‘‘மோட்டல் கொள்ளையை விட மோசமாக மக்களுக்கு தீங்கிழைக்கிற விஷயம் இன்னைக்கு வேறெதுவும் இல்லீங்க. எந்தவொரு மோட்டல்லயும் விலைப் பட்டியலே வச்சிருக்கமாட்டாங்க. கிராமத்துல திருவிழாவுல போட்டிருக்கும் கடை மாதிரி வாய்க்கு வந்த விலையைச் சொல்லுவாங்க.

லட்சக்கணக்கான மக்களின் (பேருந்து) வழிப்பறியைத் தடுப்பதாக நினைத்துக்கொண்டு மோட்டல்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தவே கூடாது என அரசாங்கமே அரசாணை இடுவதைத் தவிர வேறு வழியில்லை ’’ என்கிறார் பாரதராஜா நெத்தியில் அடிச்ச மாதிரி. கவனிக்குமா நம் அரசு?.
_ இரா.கார்த்திகேயன் KUMUDAM.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?''

>> Sunday, April 27, 2008

ஒரு பணக்காரன், வந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம்.

''என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?'' என்று புலம்பினான்.

''அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?'' என்று கேட்டார்.

''ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.''

''அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?''

''கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்.''

''சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?''

பணக்காரன் யோசித்தான்.

''அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்.''

''ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?''

''என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் நான்தான்!''

''உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான் பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?''

இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் பதிலில்லை.

மேலும் படிக்க... Read more...

‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது? ஏன் இப்படி பெயர் ? நாவல் பழம் சாப்பிட்டால் ‘மெட்ராஸ் ஐ’ வருமா ?

>> Saturday, April 26, 2008

‘‘1930_ல் கிழக்கிந்திய கம்பெனிக்காக சென்னைக்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் பலருக்கு திடீரென்று இந்தக் கண்நோய் தாக்கியது.

குளிர் பிரதேசங்களில் இந்த நோயைப் பரப்பும் வைரஸ் குறைவு. உஷ்ணப் பிரதேசத்தில்தான் அதிகம். அதனால் மளமளவென இந்த கண்நோய் பரவியதை முதன்முதலாக பார்த்த பிரிட்டிஷ்காரர்கள் மலைத்து விட்டனர். இது என்ன புதுவிதமான நோயாக இருக்கிறதே என்று வியந்து அவர்கள் வைத்த பெயர்தான் ‘மெட்ராஸ் ஐ’.

‘அடினோ’ என்கிற வைரஸ்கள் இந்த நோய்க்குக் காரணம். ஏழு நாள் முறையா சிகிச்சை எடுத்தா தப்பிக்கலாம். இல்லைன்னா ஒருவாரம் அவஸ்தைதான்.

பொதுவாகவே கண்களை நாம் சீண்டினா அதோட ரியாக்ஷன் ரெட்! அதுக்காக சிவப்பாயிட்டாலே மெட்ராஸ் ஐ தானோன்னு நினைச்சிடக் கூடாது. வேற சில பாக்டீரியாக்கள் இன்ஃபெக்ட் ஆகும் போதும் கண்கள் சிவப்பாக மாறும்.

சிவப்புடன் உறுத்தல், வலி, பூளை தள்ளுதல், கண்ணீர் வற்றி கண்கள் உலர்தல் இதெல்லாம் ‘மெட்ராஸ் ஐ’யின் ஸிம்டம். என்னதான் நீங்களும் உங்கள் கண்களும் சுத்தமாக இருந்தாலும் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் இது பரவும்.

காற்று, தண்ணீர் என பல விதமா பரவும். சிலருக்கு மூக்கு, தொண்டைப் பகுதிவரை கூட இந்த இன்ஃபெக்-ஷன் பரவும். எதுவானாலும் எல்லாம் ஏழு நாட்களுக்குத்தான்.

டாக்டரைப் பார்த்து அவர் தந்த மருந்தை மட்டும்தான் போடவேண்டும். வைரஸ் இன்ஃபக்ஷனா, பாக்டீரியா இன்ஃபக்ஷனா என்று தெரியாமல் மெடிக்கல் ஷாப் மருந்துகளைப் போடக்கூடாது. சிலருக்கு நான்கு நாட்களில் குணமானாலும்கூட ஏழுநாள் மருந்து போடுவது நல்லது.

பின்விளைவுகள் இந்த நோயில் எதுவும் இருக்காது. வெகு சிலருக்கு விழி வெண் திரையில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

மற்றபடி, ‘நாவல்பழம் தின்பதால் கண்நோய் வரும்’’ என்பது எல்லாம் கட்டுக்கதை. மழைக் காலத்தில் ‘மெட்ராஸ்_ஐ’ பரவுவதற்கு வாய்ப்பான நேரம். அந்த நேரத்தில் நாவல் பழத்துக்கும் சீசனாக இருக்கலாம்.. அதனால் முடிச்சு விழுந்திருக்கும்!

கண்கள் கோவைப் பழம்போல் சிவக்கக் காரணம்... கான்ஜு னீட்வல் என்ற கண்களின் இரத்தக் குழாய்களில் அடினோ வைரஸ் இன்ஃபக்ஷனால் ஏற்படும் அதிகப் படியான இரத்த ஓட்டம்தான் உங்கள் நீலக் கண்களை நெற்றிக் கண்ணாக மாற்றிவிடுகிறது!

படிக்க:>> மெட்ராஸ்_ஐ வந்தால்
http://vanjoor-vanjoor.blogspot.com/2007/01/blog-post_13.htm.
------------------------------------------
படிக்க:>> மருத்துவம்
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

கால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்!

>> Thursday, April 24, 2008

லண்டன், ஜன.3- கால் மேல் கால் போட்டுக் கொண்டு இருந்தால் சுகமே தனி என்றும், சதா சர்வநேரமும் கால்களை ஆட்டிக்கொண்டே இருந்தால் அதற்கான சுகமே தனி என்றும் நம்மில் பலர் சொல்வதுண்டு.

அதனை மையமாக வைத்து லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகர மான தகவல்கள் வெளியாகியுள்ளன.அவ்வாறு தொடர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டே இருந்தால், இதய அடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதற்காக சுமார் 3400 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரின் சராசரி வயது 68. இந்த ஆய்வில் இருபாலரும் கலந்து கொண்டனர்.

தூக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டே இருந்தால், ஆரோக்கியமான தூக்கம் கெடுவதுடன், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருமடங்கு அதிகம் என்கின்றனர்.

சாதாரணமாக கால்களை ஆட்டினால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களும், அதனையே தொடர்ச்சியாக மேற் கொண்டுள்ளவர்களுக்கு நாளாவட்டத்தில் இதய பாதிப்பு போன்ற நோய்களும் வரும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

இதில் புகை பிடிப்பது, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உடன் இருப்பின், அதற்கான சாத்தியக்கூறுகள் இரட்டிப்பாக உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
-----------------------------------------
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

இஸ்லாம்

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

சகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழந்தைகளின் நீண்டகால சளி, காய்ச்சல் தொல்லைகளுக்குக் காரணம்.

>> Wednesday, April 23, 2008

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் காய்ச்சல் வருவது எல்லாம் எதனால்?

சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறார் பிரபல குழந்தை நல மருத்துவர் விஸ்வநாத்.

‘‘இதற்கு முக்கியமான நான்கு காரணங்கள் அலர்ஜி, சுற்றுச்சூழல் பாதிப்பு, இன்ஃபெக்ஷன், நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பது.

நம் வீட்டில் உள்ள டஸ்ட் குழந்தைகளுக்கு முதல் எதிரி. அதேபோல் கல்யாணவீடு, பொருட்காட்சி, தியேட்டர் என்று குழந்தைகளை நெரிசல்மிக்க இடங்களுக்குத் தூக்கிச் செல்வது அலர்ஜிக்கு ஒரு காரணம். இது எல்லாவற்றிற்கும் மேலாக டெடிபியர் போன்ற புசுபுசு பொம்மைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குழந்தைகள் தூங்கும் பழக்கம் ஆரோக்கியமானதல்ல.

அதேபோல் கொசுவத்தி, ஊதுபத்தி புகை முதல் நாம் உபயோகிக்கும் செண்ட், ஸ்ப்ரே எல்லாம் குழந்தைகளின் சுவாசத்தைப் பாதிக்கும் சமாச்சாரங்கள்.

இன்ஃபெக்ஷனைப் பொறுத்தவரை முதல் ஆபத்து ஃபீடிங் பாட்டில்கள்தான்.

நன்றாகச் சுத்தப்படுத்த முடியாத பால் பாட்டில்கள் குழந்தைகளின் நிரந்தரத் தொல்லைகளுக்குக் காரணமாகின்றன.

குழந்தைகள் வளர வளர ஆரோக்கியம் பெருகுவதற்கு பதில் நோய்கள் பெருக முக்கியக் காரணம், பிறந்த முதல் நான்கு நாட்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்காதது தான்.

குறைப் பிரசவத்தாலும் சிசேரியனாலும் அவதிப்படும் தாய்மார்கள் சீம்பால் எனப்படும் முதல் நான்கு நாட்கள் சுரக்கும் தாய்ப்பாலை குழந்தைகளுக்குத் தர முடியாத பொழுது, நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைகளுக்குக் குறைவாகிவிடுகிறது.

இன்ஃபெக்ஷனுக்கு இன்னொரு காரணம், அஃபெக்ஷன்... குழந்தைகளை சகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழந்தைகளின் நீண்டகால சளி, காய்ச்சல் தொல்லைகளுக்குக் காரணம்.

இந்த அடிப்படைக் காரணங்களில் நாம் போதுமான கவனம் செலுத்தினால் குழந்தைகளின் சளி, காய்ச்சல் தொல்லைகளை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.

ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் இரத்தத்தில் உள்ள காமா குளோபுவின் என்ற அணுக்களின் குறைபாடு இதற்குக் காரணமாக இருக்கும்.!’’

மேலும் படிக்க... Read more...

உடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில் போனாலும், சில சமயம் டி.வி. பார்த்தால் கூட இதற்கு என்ன காரணம்? இது நோயா?

>> Monday, April 21, 2008

எப்பொழுது சினிமா பார்க்கச் சென்றாலும் சரி; பஸ்சில் போனாலும், சிலசமயம் டி.வி. பார்த்தால்கூட உடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? இது நோயா?

பதிலைத் தருகிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன்.

‘‘முதல் காரணம் ‘இன்ஆக்டிவிட்டி’. அதாவது உடலுக்கு வேலையில்லாமல் சும்மா இருப்பது. அப்படி இருந்தாலே சிலருக்கு உடனடியாகத் தூக்கம் வந்துவிடும்.

இரண்டாவது காரணம், இன்ட்ரஸ்ட் இல்லாமல் இருப்பது. நீங்கள் செய்கின்ற வேலையில் ஆர்வம் இல்லா விட்டால் கூட தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகளுக்கு படிக்கும்போது வருவதுபோல்.

இதையெல்லாம் நாம் நோய் என்று சொல்லமுடியாது. நோய் எதுன்னா வண்டியை நாம் ஓட்டும்போது கட்டுப்படுத்த முடியாமல் வரும் தூக்கம்; நம் தினசரி வேலைகளைச் செய்ய முடியாமல் வரும் கட்டுப்படுத்த முடியாத தூக்கம் இவைதான்.

பொதுவாகச் சிலரிடம் கேட்டால், ‘வாக்கிங் போறதுக்கு நேரமே இல்லை’ன்னு சொல்வாங்க. ஆனால் காலையில ஒரு மணி நேரம் ‘இந்து’ பேப்பர் படிப்பாங்க. இதுல என்ன தெரியும்னா உண்மையான காரணம் அவங்களுக்கு ஆர்வமில்லாததுதான். ஆனா அவங்க நினைக்கிறது நேரமில்லைன்னு.

இந்தத் தூக்கத்தையும் அது எப்படி வருது எப்பொழுது வரும்?னு கொஞ்சம் கூர்மையா கவனித்தால் இது நோயா அல்லது இயல்பான்னு தெரிஞ்சுடும். நோயின் சாயல் தெரிஞ்சா மருத்துவரை அணுகுவது நல்லது.’’
-----------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

நெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்? சரிசெய்ய ?

>> Sunday, April 20, 2008

அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டு ஏப்பமும் கூடவே வந்து இம்சை செய்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் சதீஷ் (குடல் இரைப்பை மற்றும் லேபராஸ்கோபி நிபுணர்)

‘‘நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முதல் காரணமே நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்தான்.

லைஃப் ஸ்டைல் என்ற பெயரில் இயற்கையான உணவு முறைகளை ஓரம்கட்டிவிட்டு, ஃபாஸ்ட்புட் எனப்படும் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளையும், எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளை இஷ்டத்திற்கு சாப்பிட ஆரம்பித்ததுதான்.

தொடர் மது, குடிப்பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கும், அதிகமான மன உளைச்சலில் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் பிரச்னை வந்து எரிச்சலை மூட்டுகிறது. எப்படி என்கிறீர்களா?

பொதுவாக உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடம் வயிற்றின் மேல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு வால்வு இருக்கும். இந்த வால்வானது நாம் உணவை உட்கொள்ளும்போது திறக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் திரும்ப மூடிக் கொள்ளும்.

ஆனால், அப்படி சாப்பிட்டு முடித்தபிறகு வால்வு மூடா விட்டால்தான் பிரச்னை. மேல் சொன்ன பிரச்னைகள்தான் வால்வு மூடாததற்குக் காரணம். இதனால் இரைப்பையில் இருக்கும் உணவும், அமிலமும் உணவுக்குழாயை நோக்கி மேலே வந்துவிடும்.

இதுதான் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி ‘உவ்வ்வக்’ என்று புளித்த ஏப்பத்தை வரவழைத்து எதிரில் இருப்பவர்களை கொஞ்சம் முகம் சுளிக்கவும் செய்து விடுகிறது.

அதுமட்டும்தானா... வயிற்றின் மேல் பகுதியில் தாங்க முடியாத வலியை உண்டாக்கி, வாயிலிருந்து வாந்தியையும் வரவழைத்துவிடும்.

இப்படிப்பட்ட நெஞ்செரிச்சல் வராமல் இருக்க முதலில் மேற்சொன்ன விஷயங்களைத் தவிர்க்கவேண்டும். அதோடு, மருத்துவரின் ஆலோசனையோடு மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். அதையும் மீறி சிலருக்கு குணமாகாமல் போனால், எண்டோஸ்கோபி மற்றும்

(MANOMETRY) மேனோமேட்ரி பரிசோதனைகள் செய்து லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால், இச்சிகிச்சை தேவைப்படுவது குறைவுதான்.’’

மேலும் படிக்க... Read more...

காலில் கண்ணாடி குத்திவிட்டதா? பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு ? பிளாட்டினம் ஏன் அத்தன விலை? ETC....

>> Saturday, April 19, 2008

தங்கம், வைரத்தைவிட பிளாட்டினம் எந்த வகையில் உசத்தி? பிளாட்டின நகையை கடைக்குப் போய் விலையை விசாரித்தபோது மயக்கமே வந்துவிட்டது ஏன் அத்தன விலை?

பிளாட்டினத்தைத் தயாரிக்க நிறைய செலவாகும் என்பதே காரணம். அது தங்கத்தைவிட 35 மடங்கு அரிதானது. உற்பத்தி செய்யும் செலவும் அதனால் அதிகம். மிக மிகத் துல்லியமான. 18 காரட் தங்கம் 95 விழுக்காடுதான் துல்லியம்.

பிளாட்டினம் நகைகள் 99.95 சதவீதம் துல்லியம். பிளாட்டினத்துக்கு மருத்துவ உபயோகங்கள் பல உண்டு. இதயத்தில் பதியவைக்கும் பேஸ்மேக்கர்களில் பிளாட்டினம் பயன்படுகிறது. சில கான்ஸர் செல்கள் இரட்டிப்பாவதை பிளாட்டினம் தடுக்கிறது. அதனால், கான்ஸர் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. அதன் ஸ்திரத் தன்மையும், கலக்காத தன்மையும் பல விதங்களில் பயன்படுகின்றன.


பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு

கப்பல், விமானம், பஸ் பயணங்களில், சிலருக்கு வாந்தி வருவது ஏன்? பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு உள்ளதா?

நம்முடைய ஸ்திர நிலையை மூளை உணர்வதற்கு நான்கு சிக்னல்கள் தேவை.

1. காதுகளின் உள்பகுதியில் உள்ள திரவம், முப்பரிமான சமநிலையை அறிவிக்கிறது.

2. கண்கள், சுற்றுப்புறத்துக்கும் நமக்கும் உள்ள அசைவு வேறுபாடுகளை உணர்த்துகின்றன.

3. காலிலும் உட்காரும் இடத்திலும் உள்ள அழுத்தம் மூலம் புவிஈர்ப்பு விசை நம் உடலை எப்படி பாதிக்கிறது, எது மேல், எது கீழ் என்பதை உணர்கிறோம்.

4. தசைகளுடன் இணைந்த நரம்புகள், செய்திகள் உடலின் எந்தப் பகுதிக்கு நகர்கிறது என்பதை அறிவிக்கிறது.

இந்த நான்கு செய்திகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், குமட்டல் வரும். குறிப்பாக, பிரயாணத்தின்போது புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் கண்கள் நகர்வதை கவனிப்பதில்லை. காதுகள் நகர்தலை உணரும்போது, விளைவு சுழட்டல் குமட்டல்! அதிகமாக இருந்தால் ஆவோமின் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம், டாக்டரை கேட்டுவிட்டு.

--------------------------------------------------------------------------
படிக்க:>> பேயடிக்கிறதா? சாக்லெட்டில் மனித ரோமம் ? கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா?++
கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா? பேயடிக்கிறதா? கண்களின் சக்தி வழிகாட்டும் செடி... பாக்டீரியாபுதிதாக வீடு கட்டும் பொழுது சுவற்றுக்கும் தளத்திற்கும் தண்ணீர் ஊற்றுகிறார்களே அது ஏன்? எவ்வளவு நாள் ஊற்ற வேண்டும்?கலோரின்னா என்ன? சராசரியா ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தன கலோரி தேவைப்படும்?
குழந்தைகளுக்கு சாக்லெட் தரலாமா? அதில் மனித ரோமம் கலக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே, உண்மையா?
ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிச்சா ஸேஃப்? சோப்புல கூட ஆண்களுக்கு, பெண்களுக்குன்னு தனித் தனி சோப்பு இருப்பதாக சொல்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இருட்டில் (வெளிச்சம் இல்லாமல்) டி.வி. பார்ப்பது நல்லதா?

ரெப்ரிஜிரேட்டரில் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுகள் எத்தனை மணி நேரம் வைத்திருந்தால் ருசி கெடாமல் இருக்கும்?காலில் கண்ணாடி குத்திவிட்டதா?
நல்ல ஆரோக்கியத்திற்குப் பச்சரிசி நல்லதா? அல்லது புழுங்கலரிசி நல்லதா?
-------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அதிசயம்!!!. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா? உள்ளம் இரண்டு! உருவம் ஒன்று.காலம் காட்டும்!

18 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஓர் இணையருக்குக் குழந்தை பிறந்தது. இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு தலைகள் என்று பிறந்தது.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் உள்ளே முது கெம்புகள் இரண்டு, தண்டுவடம் இரண்டு, குடல் இரண்டு, இதயம் இரண்டு, நுரையீரல் இரண்டு, சிறுநீரகம் மூன்று (நான்குக்குப் பதில்) என்று உள்ளன.

குழந்தைக்குப் பெயர்களும் இரண்டு தான். அபிகெய்ல், பிரிட்னி என்று.

உடம்பின் இடப்பகுதி பிரிட்னிக்கும் வலப்பகுதி அபிகெய்லுக்கும் உரியது. அபிகெய்ல் வலக்கையையும் வலக் காலையும் மட்டுமே இயக்க முடியும்.
அதுபோலவே பிரிட்னி இடது காலையும் கையையும் மட்டும் இயக்க முடியும். அடுத்த பாகத்தின் மீது இவர்களுக்கு பாத்தியம் கிடையாது; இயக்கமும் முடியாது.

நடக்கும்போது இருவரும் சீராக இணைந்து செயல் பட்டால்தான் நடக்க முடியும். அப்படிப்பட்ட நிலை இருந்தாலும்கூட இவர்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள். கூடைப் பந்து ஆடுகிறார்கள்.
வாலிபால் விளையாடுகிறார்கள். இருவருமே கார் ஒட்டும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஓட்டுநர் உரிமமும் கூட இரண்டுதான்.

பிரிட்னி இடது கையால் எழுதுகிறார். அபிகெய்ல் வலது கையால் எழுதுகிறார். தனித்தனித் தட்டில்தான் சாப்பிடுகிறார்கள். வெளியே அனுப்பும்போது முத்தம் கொடுத்து அனுப்புவதும் உள்ளே வரும்போது அணைத்து மகிழ்வதும் அந்நாட்டுப் பழக்கம். அதன்படி இவர்களின் அம்மா அளிப்பது இரண்டு முத்தங்கள். ஆனால் அணைப்பது ஒன்றுதான்.

பள்ளிப் படிப்பை முடித்து விட்டனர். கல்லூரிக்குச் செல்ல வேண்டும். ஆமாம், பள்ளிப் படிப்புக்குச் சான்றிதழ் இரண்டு தந்திருப்பார்களே! விண்ணப்பம் இரண்டு கொடுத்துக் கல்லூரியில் சேர வேண்டுமே! வேடிக்கைதான்.

இப்படி எல்லாமே இரண்டிரண்டாக இருந்தாலும், பெண் உறுப்பும் கருப்பையும் ஒன்றுதான்! திருமணம் செய்து கொள்ளும் போது மணமகன் ஒன்றா, இரண்டா?காலம் காட்டும்!

மேலும் படிக்க... Read more...

காது குடையலாமா? ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான்

>> Friday, April 18, 2008

எப்போது பார்த்தாலும் காதுக்குள் ஏதோ ‘குறுகுறு’வென்று இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சூழலில் எதையாவது எடுத்துக் குடையலாமா? குத்திக் கொள்ளலாமா? என்கிற அளவுக்கு அரிப்பும், வலியும் தாங்க முடியவில்லை.

நானும் தினம் ‘பட்ஸ்’ எல்லாம் போட்டு க்ளீன் பண்ணிப் பார்த்து விட்டேன். ஆனாலும், என் காதுப் பிரச்னை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் என்ன செய்வது டாக்டர்? ஏன் அப்படி ஆகிறது?

டாக்டர் ரவி ராமலிங்கம் (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)

‘‘நீங்கள் உங்கள் பிரச்னைக்குக் காரணம். இதுவரை காதுக்குள் விட்டுக் குடைந்த ‘பட்ஸ்’தான் உங்களின் எதிரி. என்ன ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா?

உங்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான். உங்களுக்கு ஏற்பட்டிருப்பது ‘ஒடிடிஸ்எக்ஸ்டெர்னா’ எனப்படும் காது சம்பந்தப்பட்ட நோய்.

இது வருவதற்குக் காரணமே காதுக்குள் விரல், சாவி, குச்சியை விட்டு நோண்டுவது, ஊக்கை விட்டு குடாய்வது, இறகை உள்ளே விட்டுக் குடைந்து சுகம் காண்பது. அது மட்டுமில்லாமல் காதை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ‘பட்ஸ்’ஸை உள்ளே விட்டுக் குடைவது ஆகியக் காரணங்களால்தான் இந்நோய் ஏற்படுகிறது.

அதுவும் உலக அளவில் இந்தியாதான் இந்நோயில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறதாம்.

செவிப்பாதையின் மெல்லிய தோலில் வலி, வீக்கம், சிராய்ப்பு என்று சிறிய புண்களோடு ஆரம்பிக்கும் இந்நோய் முற்றும்போது காது கேட்கும் திறனையே நிறுத்தி விடும். அதோடு, நீச்சல் அடிக்கும்போது தண்ணீர் காதுக்குள் புகுந்திட இன்பெக்ஷன் ஏற்படக்கூடும். இதற்கு ‘ஸ்விம்மர்ஸ் இயர்’ என்று பெயர்.

காதைப் பொறுத்தவரையில் எந்த கிரிமியும் உள்ளே புகாது. அதற்கு பாதுகாக்கத்தான் (கீணீஜ்) வாக்ஸ் எனப்படும் மெழுகு போன்ற திரவம் இருக்கும். காதுக்குள் நுழையும் ஒலிக் காற்று என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு செவிப்பாதையில் பாதுகாவலனாக விளங்குகிறது.

காதினுள் புகும் நீர், தூசு போன்றவைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு வெளியேற்றும் தன்மை கொண்டது. அதைப் பலர் ‘அழுக்கு’ என்று நினைத்து ‘பட்ஸை’க் கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர்.

இதனால் காதுப் பிரச்னைகள் இன்னும் அதிகரிக்கிறது. எனவே காதுக்குள் எதையும் விட்டுக் குடையாமல் இருந்தாலே பிரச்னை வராது.

பிரச்னையின் ஆரம்பக்கட்டத்திலேயே சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் எனக்குணப்படுத்திவிடலாம். ஆனால், அப்படியே விட்டு விட்டால் செவிப்பறையில் ஓட்டை விழுந்து காது கேட்காமல் போய் விடும். சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு பெரும்பாலும் இப்பிரச்னை வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. SOURCE: internet

இதையும் சொடுக்கி படியுங்கள்.

காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.


மேலும் படிக்க... Read more...

• டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா? • பூனைக் கண் உள்ளவர்களால் இரவில் பார்க்க முடியுமா?

''டெப்லான் கோட்டிங் கொடுத்த நான்-ஸ்டிக் வாணலி, தோசைக்கல்லைப் பயன்படுத்துவதால் உடலுக்குக் கெடுதல் என்கிறார்களே, இது சரியா?''

''சரியான முறையில் டெப்லான் கோட்டிங் பூசிய வாணலியும், தோசைக்கல்லயும் பயன்படுத்துவதால் நம் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. டெப்லான் கோட்டிங் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் அசலும் உண்டு; போலியும் உண்டு.

அசலை மட்டும் கவனமாகப் பார்த்து வாங்குங்கள். டெப்லான் கோட்டிங் பாத்திரத்தில் உள்ள டெப்லான் கோட்டிங் போய்விட்டால் அந்தப் பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் உடலுக்குக் கேடு ஏற்படும்.''
---------------------
• பூனைக் கண் உள்ளவர்களால் இரவில் பார்க்க முடியுமா?

'பூனக் கண்' என்பது வட்டார வழக்குச் சொல். பொதுவாக, கண்ணில் இருக்கும் கருவிழி கறுப்பாகத்தான் இருக்கும். கருவிழி கொஞ்சம் வெள்ளையாகவோ, சாம்பல் நிறத்திலோ இருந்தால் அதுதான் பூனைக் கண்.

மேற்கத்திய நாட்டுக்காரர்களுக்கு இந்தப் பூனைக் கண் சகஜம். மற்றபடி பார்வை தெரிவதில் எந்தப் பிரச்னயும் இருக்காது. இருட்டிலும் பார்வை தெரியும். ஆனால் உடல் முழுவம் வெள்ளை நிறத்தில் இருப்பவர்களுக்கு (அப்பினிசம்) கண்களும் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், அவர்களுக்கு கண் பார்வை தெரியாது. SOURCE : INTERNET
------------------
படிக்க:>> மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும், தரையில் உள்ள பொருள்கள் நன்றாகத் தெரியும் என்கிறார்களே, அப்படியா

>> Thursday, April 17, 2008

பருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும், தரையில் உள்ள பொருள்கள் நன்றாகத் தெரியும் அளவு கண் கூர்மயானது என்கிறார்களே, அப்படியா?

பருந்தின் பார்வை சிறந்த மனிதப் பார்வையை விட நான்கு மடங்கு நுட்பமானது. இதனால் அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டுகொண்டு டைவ் அடிக்க முடியும்.

அந்த உயரத்தில் அதன் கண்காணிப்பின் பரப்பளவு ஆறரை சதுர கிலோமீட்டர்! பருந்துக்குஇரண்டு கண்ணிமைகள். ஒன்று தூங்கும்போது மூடிக்கொள்ள,

மற்றது அடிக்கடி கண்கொட்ட முன்பின்னாக இயங்கும் கண்ணாடித்தன்மை கொண்ட வைப்பர் போல. பருந்துக்கு கலரும் தெரியும். SOURCE INTERNET.
------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

குள்ள குதிரைகள்?...குட்டிக் குதிரைகளை பார்த்திருப்பீர்கள். அதென்ன குள்ள குதிரைகள்?...

படிக்க : கீழே அழுத்துங்கள்

குள்ள குதிரைகள்?...குட்டிக் குதிரைகளை பார்த்திருப்பீர்கள். அதென்ன குள்ள குதிரைகள்?...

http://vanjoor-vanjoor.blogspot.com/2007/01/blog-post_14.html
-----------------------------------
மற்ற பதிவுகளுக்கு:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

முஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள், எழுதிய கடிதம் மற்றும் அரிய புகைப்படங்கள்.

>> Wednesday, April 16, 2008

முஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள், எழுதிய கடிதம் மற்றும் அரிய புகைப்படங்கள்.

பதிவு படிக்க கீழே அழுத்துங்கள்
http://vanjoor-vanjoor.blogspot.com/2007/01/s.html
----------------------------------------
படிக்க:>>
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

இஸ்லாம்
------------------------------------
மற்ற பதிவுகளுக்கு:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழி.

>> Tuesday, April 15, 2008

7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை.

ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால், உங்கள் எடையில் சராசரியாக ஐந்து கிலோ எடை குறையும்.

ஆனால் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போல ஏதேனும் நீண்டநாள் பிரச்னை இருக்கிறவர்களுக்கு இது பயன்படுத்தத் தகுந்தது அல்ல.

நல்ல ஆரோக்கியமான நிலையில் வெறும் உடல் எடை மட்டுமே பிரச்னையாக இருக்கிறவர்கள் ஒருமுறை உங்கள் மருத்துவரைச் சந்தித்து விவாதித்துவிட்டு, இந்த உணவு அட்டவணையை ஏழு நாட்களுக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

முதல் நாள் : வெறும் பழங்கள். (வாழைப்பழம் தவிர). பழரசம் எதுவும் சாப்பிடவேண்டாம்.

இரண்டாம் நாள் : வெறும் காய்கறிகள். பழங்கள் இல்லை. இந்த இரண்டாவது நாளை ஒரு பெரிய வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் தொடங்கலாம்.

மூன்றாம் நாள் : அனைத்து பழங்கள் + அனைத்து காய்கறிகள் (வாழைப்பழம், உருளைக்கிழங்கு இரண்டைத் தவிர)

நான்காம் நாள் : எட்டு வாழைப்பழங்கள் + மூன்று கிளாஸ் பால் அந்த நாள் முழுக்க (சர்க்கரை சேர்க்காதது).

ஐந்தாம் நாள் : எட்டு உருளைக்கிழங்குகள் கொஞ்சம் சிக்கன் அல்லது மீன் அல்லது மூன்று முட்டை அல்லது பன்னீர். (காய்கறிகள் இல்லை)

ஆறாம் நாள் : அனைத்துக் காய்கறிகள் மற்றும் அனைத்துப் பழங்கள். (தக்காளி, உருளைக்கிழங்கு தவிர)

ஏழாம் நாள் : அனைத்துக் காய்கறிகள், பழங்கள் வாழைப்பழம் உட்பட சிக்கன், மீன் இல்லை. சிறிய கப்பில் ப்ரௌன் அரிசிச் சாதம்.

இந்த அட்டவணையைப் பயன் படுத்தும் முன் உங்கள் டாக்டரிடம் ஒருமுறை உங்கள் உடல்நிலை பற்றி விவாதித்துக் கொள்ளுங்கள்.

ஒருவாரம் சிரமப்பட்டு எடை குறைத்து விட்டு அடுத்த வாரம் சோமாலியாவில் சிக்கித் தவித்துத் தப்பித்ததைப் போல உங்கள் வீட்டு சமயலறையைச் சூறையாடாதீர்கள்.

எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. அது உங்கள் ஆரோக்கியத்திற்கானது என்பதால் தொடர்ந்து பழகுங்கள்..
_ செந்தில் வஸந்த் NANDRI TO : KUMUDAM.COM
-----------------------
படிக்க:
மருத்துவம்
அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி! இந்தியாவில் எப்பொழுது ஓடத் தொடங்கியது. தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் ?

தொடர் வண்டித் தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் தெரியுமா?
வேகமாகச் செல்லும் தொடர் வண்டிகளின் அதிர்வைச் சமாளிக்கும் விதத்தில் ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. ரயில் வண்டிகளுக்கு மெத்தை போன்று அமைந்துள்ளது.

மாறாக, கெட்டியான தளத்தில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டால், வண்டிகளின் வேகத்தால், அதிர்வுகளினால், விரிசல் ஏற்பட்டு தளம் உடைந்து போவதோடு அருகில் இருக்கும் கட்டடங்களும் சேதமடையும் அபாயம் உண்டு. ஜல்லி அதிர்வைத் தாங்குவதோடு, மழை நீரையும் வடித்துவிடுகிறது. கெட்டித்தளமாக இருந்தால் நீர் தேங்கி நிற்கும்.
நம் நாட்டில் தொடர் வண்டிப் பாதை அமைக்கப்பட்டு தொடர் வண்டி (அந்தக் காலத்தில் புகைவண்டி) ஓடத் தொடங்கியது. 1853-ஆம் ஆண்டில்தான்.

புனே முதல் மும்பையின் தானே வரைதான் முதன் முதலில் வண்டி ஓடத் தொடங்கியது.

அதன்பின் தொடர்வண்டி ஓடியது தமிழ் நாட்டில்தான். வேலூர் மாவட்டம் வாலாஜா முதல் ராயபுரம் வரை ஓடியது.

சென்னையின் வடபகுதியில் இருக்கும் ராயபுரம்தான். 100 மைல் தூரம் உள்ள இந்த ரயில் பாதையில் ஓடிக் கொண்டிருந்த தொடர் வண்டி ராயபுரம் நிலையத்தில் நின்று திரும்பியது.

1900-களில் ராயபுரம் பெரிய தொடர் வண்டி நிலையம் (படம்)அப்போதெல்லாம் சென்ட்ரலும் கிடையாது. எழும்பூரும் இல்லை. ராயபுரம் நிலையம் 1907-இல் பெரிய நிலையமாக வளர்ந்த பிறகு கட்டப்பட்டது. சென்ட்ரல் நிலையம். பெயருக்கு ஏற்றாற்போல நகரின் மய்யத்தில் அமைந்தது இருக்கும் நிலையம்.

அதன் பிறகு 1908-இல் கடைசியாகக் கட்டப்பட்டதுதான் எழும்பூர் ரயில் நிலையம். இது இருக்குமிடம் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்தது. வெடி மருந்துப் பொருள்கள் இங்கு சேமித்து வைக்கப் பட்டிருந்தன. அதன் பெயர் எழும்பூர் ரெடோ.

மழைநீர் துல்லியமாக வடிந்து குழாய்கள் வழியே வழிந்து ஒரு குளத்தில் சேமிக்கப்படும் வகையில் அந்தக் காலத்தில் வடிவமைத்துக் கட்டப்பட்ட நிலையம். அதிலுள்ள படிக்கட்டு மேம்பாலத்தின் வயது 100 ஆண்டுகள்.

அகலப் பாதைத் தொடர்வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியா ஒன்று. மற்றைய நாடுகளில் இருப்புப் பாதையின் அகலம் 4 அடி எட்டரை அங்குலம் ஆகும்.

நம் நாட்டின் பெருத்த மக்கள் தொகையை மனதில் கொண்டு பிரிட்டிஷ்காரர்கள் வடிவமைத்த பாதை ஆறு அடி அகலம் கொண்ட அகல இருப்புப்பாதை. 150 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டுள்ளனர் ஆங்கிலேயர்கள்.

ஆறு அடி என்பது மிகவும் அகலமாக இருக்கும் என்ற கருத்து எழுந்து, அதன் பின்னர் அது அய்ந்தரை அடியாக்கப்பட்டது.அதிக நீளம் உள்ள இருப்புப் பாதைகள் இந்தியாவில் உள்ளன. லட்சக்கணக்கான பணியாளர்களும் கோடிக்கணக்கில் பயணிகளும் பயணம் செய்கின்றனர்.

லாலுபிரசாத் எனும் பிற்படுத்தப்பட்டவர் அமைச்சராகப் பணிபுரியும் இத்துறை 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் அதிசயத்தைக் கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறது.

ஹார்வர்டு போன்ற பல்கலைக் கழகங்கள் இந்தச் சாதனையைக் கண்டு மூக்கில் கை வைத்துப் பார்க்கின்றனர். அந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் லாலுவிடம் வந்து பாடம் கேட்கின்றனர்.இங்குள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் அவரது ஜாதியைக் கூறிக் கிண்டல் எழுதுகின்றன. இது இங்கே பார்ப்பனப் பத்திரிகா தர்மம்! SOURCE: INTERNET.

----------------------------------------------

மேலும் படிக்க... Read more...

காதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா?

>> Monday, April 14, 2008

காதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா? நிறைய கண் மருந்துகளில் அவற்றை காதுகளுக்கும் போடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே அது ஏன்?

சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் கண்நோய் நிபுணர் டாக்டர் ஜெய்சங்கர்.

‘‘பொதுவாகப் பார்த்தால் நம் உடல் உறுப்புகளில் மிகவும் சென்ஸிடிவானது கண்தான்.

அதனால் அதற்குத் தயாரிக்கும் மருந்துகளை நீங்கள் மற்ற உறுப்புகளில் பயன்படுத்தும்பொழுது பிரச்னைகள் இராது.

அதற்காக கண்களுக்குப் போடும் எல்லா மருந்துகளையும் காதுகளுக்குப் போடலாம் என்று அர்த்தமில்லை...

பெரும்பாலும், ‘கண் அல்லது காதுகளுக்குப் பயன்படுத்தலாம்’ என்ற குறிப்புடன் வரும் மருந்துகள் ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக் கொல்லிகளாகத்தான் இருக்கும்.

‘சிஃப்ரான்’, ‘ஒஃபிளாக்ஸ்’ போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் ‘காது அல்லது கண்’ என்ற குறிப்புகளுடன் வரும்.

இதற்கு மற்றொரு காரணம் கண்களும் சரி; காதுகளும் சரி... ஒரே விதமான பாக்டீரியாக்களினால் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதுதான்.

இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளலாமே தவிர,
மருத்துவரின் ஆலோசனையின்றி விஷப்பரீட்சையில் எல்லாம் இறங்கிவிடக்கூடாது.’’. Nandri to : INTERNET.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அண்மையில் மறைந்த " சுஜாதா " அவர்களின்--மனித மூளை. உலகிலேயே மிக மிக ஆச்சரியம்

>> Saturday, April 12, 2008

மனித மூளை ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.

குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,

நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,
ஊசிக்காதில் நூலைச் செருகுவது,
கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,
உப்பு _ புளிப்பு _ தித்திப்பு எல்லாம் உணர்வது,

‘தலைவர் அவர்களே! தாய்மார்களே!’ என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது _ கெட்டது _ குற்றம் _ பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,

‘பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?’

போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி _ தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் _ மூளை!

ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.

40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.

உடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்?

ஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் ‘இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்’ என்றார். ‘மூளை _ சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி.’ என்றார்.

இன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.

அண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது _ பார்க்கும்போது _ படிக்கும்போது _ நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் _ மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.

‘இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.

இந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.

சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்). அளவு? அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி.).

ஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் _ ஆண்களோடு ஒப்பிடும்போது).

ஆனால், சைஸ§க்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்!). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு _ ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது!

தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைஸ§க்கும் பாடி சைஸ§க்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.

ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.

மூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு ‘ஸாரி’ என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும்! அதுபோல் முள்ளம் பன்றி ‘நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல!’ என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்! ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.

எனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல்! நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்!

நம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!

கொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...

மிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.

ஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) & 2000 கிராம்.

சராசரி மனிதன் & 1349 கிராம்.

அனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்)& 1017 கிராம்.

மைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் & 300 கிராம்.

பாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி ‘டாப்’பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி!

மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.

முன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு _ கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.

பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.

முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.

இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை _ ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.

இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!

சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..!

முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.

இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்!

இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு... நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.

தாமஸ் ஆல்வா எடிஸன், ‘‘உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது’’ என்றார்.

எடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.

நியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடுவதைப் படத்தில் பார்க்கலாம்.

புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.

வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.

ரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967_ல் செய்த பரிசோதனைகள், ‘நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன... இந்த ‘கார்ப்பஸ் கலாஸ்ஸிம்’ இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது’ என்று நிரூபித்தன.

மூளையின் அனாட்டமியில்தான் ஆரம்பித்தோம். அதை முடித்துவிடலாம். மூளையின் பகுதிகளுக்குக் சகட்டுமேனிக்கு லத்தீன் பாஷையிலிருந்து பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.
மருத்துவ சாஸ்திரத்தில் லத்தீன் நம் சம்ஸ்கிருதம் போல. புதிய வார்த்தைகள் அமைக்க சுதந்திரமாக லத்தீனிலிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். உதாரணம், கார்ப்பஸ் என்றால் உடல். கலாஸ்ஸம் என்றால் ‘கெட்டியான’ என்று பொருள். கார்ட்டெக்ஸ் என்றால் பட்டை.

முன் மூளையில் உள்ளுக்குள்ளே பேஸஸ் காங்லியா (அடிவார முடிச்சு) என்று இரு நரம்பு முடிச்சுகள் இருக்கின்றன. இவை நம் கை கால் அசைவு, நடப்பது, ஓடுவது இதையெல்லாம் கட்டுப்படுத்த ஸெரிபெல்லம் பகுதிக்கு ட்ரங்க்கால் அனுப்புகின்றன. நடுவே லென் டிஃபார்ம் என்ற லென்ஸ் வடிவப் பகுதியும், அதிலிருந்து காடேட் (வால்) போன்ற நீட்டலும் அதன் இறுதியில் அமிக்டாலா (வாதாம் பருப்பு) போன்ற முடிவும்.

இந்த மாதிரி அநேக ஃபான்ஸி பெயர்களை மூளை முழுவதும் பரவியுள்ள மற்ற பாகங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். நடுத்தண்டைச் சுற்றி விஷ்போன், லிம்பிக் சிஸ்டம் என்பது ஒரு மினி மூளை. ஒன்றுக்குள் ஒன்று வளைந்த பகுதிகள் கொண்ட இந்தப் பகுதியில்தான் உணர்ச்சிகள், ஞாபகசக்தி, கோபம் இதெல்லாம் கவனித்துக்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதி ஆதி மனித நாட்களிலிருந்து நமக்கு இருப்பதால் பாலியோ கார்ட்டெக்ஸ் (பழைய பட்டை) என்று இதன் மேற்பகுதிக்குப் பெயர்.

மூளையின் நடுத்தண்டுக்கு அருகே இரண்டு பாதியையும் பிரித்துப் பார்த்தால் உள்ளுக்குள் தலாமஸ், ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி ஆகியவை இருக்கின்றன. தலாமஸ் என்றால் ஆழமான அறை. இங்கேதான் புலன்களிலிருந்து வரும் செய்திகள் (‘அட, இது நம்ம ஆளு!’) சேகரிக்கப்பட்டு மேலே அனுப்பப்படுகின்றன. இங்கே கண்ணுக்கு, தொடுகைக்கு, காதுக்கு என்று தனி டிபா£ட்மெண்டுகள் உள்ளன. வரும் செய்திகள் இங்கே அலசப்பட்டு கார்ட்டெக்ஸின் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

தலாமஸ§க்கும் மூளைத்தண்டுக்கும் இடையே ஹைப்போதலாமஸ் ஒளிந்து கொண்டிருக்கிறது. விரல் நுனி அளவுக்குச் சுமார் பதினான்கு கிராம் எடையுள்ள இந்தப் பகுதி மூளையிலேயே ரொம்பத் துடியான பகுதி. இதில் உள்ளே நான்கு சமாசாரங்கள் உள்ளன. இந்த நான்கு பகுதிகளும் ஒத்துழைத்து நம் உடல் உஷ்ணம், தாகம், பசி, ரத்த அழுத்தம், செக்ஸ், ஆக்கிரமனம், பயம், தூக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

போதாக்குறைக்கு அருகேயுள்ள பிட்யூட்டரி சுரப்பியையும் கவனித்துக் கொள்கிறது. பிட்யூட்டரி என்றால் சளி என்று அர்த்தம். ஆரம்பத்தில் மூக்குச் சளி இங்கே இருந்துதான் ஒழுகுகிறது என்று தப்பாக நினைத்ததால் இந்தப் பெயர். அப்புறம் அதை மாற்றவில்லை.

ஆனால், இந்தப் பட்டாணி சைஸ் சுரப்பி ரொம்ப முக்கியமானது. இதற்குள்ளும் இரண்டு சுரப்பிகள் உள்ளன. முன்னால் இருப்பதற்கு நம் வளர்ச்சி, ஆண் _பெண் பிரத்தியேகங்கள், சாப்பாட்டைச் சக்தியாக மாற்றுவது இந்த டிபார்ட்மெண்ட்டுகள். இது சரியாக சுரக்கவில்லையென்றால் குள்ளர்களும், அதிகம் சுரந்தால் ராட்சதர்களும் உண்டாகிறார்கள்.

பின் பிட்யூட்டரி, மூத்திரம் பெய்வது, முலைப்பால் போன்ற இலாக்காக்களைக் கட்டுப்படுத்துகிறது. எங்கிருந்து எங்கே பாருங்கள்! மூளைத்தண்டின் பின்பக்கத்தில் புடைத்தது போல இருப்பது பீனியல் சுரப்பி. ‘எதற்கு இருக்கிறது?’ என்று வியப்பு.

ஒரு சமயம் இதை ‘மூன்றாவது கண்’ என்று சிலர் கருதினார்கள். கண்களுக்கும் இதற்கும் நரம்பு கனெக்ஷன் இருக்கிறது. வெளிச்சம் வந்தால் சிலிர்த்துக் கொள்கிறது. இது நம் தூக்கத்தையும் செக்ஸ் சுரப்பிகளையும் கட்டுப்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.

‘ஸ்பைனல் கார்டு’க்கு மேலே மூன்று இன்ச் நீட்டிக் கொண்டிருக்கும் மூளைத்தண்டுதான் மூளையின் வேர். இதுதான் உடலின் மற்ற நரம்புகளிலிருந்து வரும் செய்திகளின் ராஜபாட்டை. வாழ்வின் ஆதாரச் செயல்பாடுகள், நினைவு இவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

ஊர்வன, பறப்பன எல்லா ஜந்துக்களுக்கும் இந்தத் தண்டு உள்ளது. மெடுலா, பான்ஸ், நடுமூளை என்று மூன்று பகுதிகளாக உள்ளது. இந்தத் தண்டு மெடுலா, ஒப்ளாங்கட்டா (நீண்ட உள்தண்டு) ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச். இங்கே முடிச்சு முடிச்சாக இருக்கும் நரம்புச் செல்களிலிருந்து மேலிடங்களுக்குத் தனித்தனியாகச் செய்தி இணைப்புகள் உண்டு.

சுவாசப்பை மூச்சு, இதயம் அடித்துக் கொள்வது இவற்றுக்கெல்லாம் தசைகளைக் கட்டுப்படுத்தும் ஆர்டர் இங்கிருந்துதான் போகிறது. மேலும், ஏனோ இங்கு ஒரு இடது வலது குழப்பமும் ஏற்படுகிறது. உடலின் இடது பக்கத்திலிருந்து வரும் சுமார் ஒன்பது லட்சம் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் மூளையின் வலது பக்கத்துக்கும், வலப்பக்க உணர்ச்சிகள் எல்லாம் மூளையின் இடப்பக்கத்துக்கும் தடம் மாறுகின்றன.

‘பான்ஸ்’ என்றால் பாலம். மெடுலாவையும் நடுமூளையையும் இணைக்கிறது. நீட்டவாக்கில் ஏகப்பட்ட நரம்புகளும் பண்டல் பண்டலாக நரம்புச் சரடுகளாக இங்கிருந்து முளைத்து ஸெரிபெல்லாம் என்னும் பகுதிக்குப் போகிறது.

நடுமூளை ரொம்ப சின்னது. சுமார் ஒரு இன்ச். தன்னிச்சையாகச் சில செயல்களைக் கட்டுப்படுத்துவது இங்கேதான். கண்களின் பாப்பாவின் சைஸை வெளிச்சத்துக்கேற்ப கட்டுப்படுத்துவது இங்கிருந்துதான். எல்லாவற்றுக்கும் உள்ளே மூளைத்தண்டினுள் மெடுலாவிலிருந்து நடுமூளை வரை ‘ரெட்டிக்குலர் ஃபார்மேஷன்’ என்று சின்னதாக ஒரு இணைப்பு உள்ளது. இதுதான் நாம் தூங்கும்போது விழித்திருக்கும் காவல்காரன் அல்லது காரி.

என்னதான் விஸ்தாரமாக விவரித்தாலும் ஒரு நடை மெடிக்கல் காலேஜுக்குப் போய், அங்கே அனாட்டமி மியூஸியம் வைத்திருப்பார்கள்... பார்த்துவிட்டு வந்தவிட்டால் பளிங்கு மாதிரி புரியும். என்ன, ஒன்றிரண்டு நாட்களுக்குச் சாப்பாடு வேண்டியிருக்காது. அதனால் பரவாயில்லை.

நன்றி: விசா பதிப்பகம்

மேலும் படிக்க... Read more...

சரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்!

>> Friday, April 11, 2008

லண்டன், மார்ச் 27- பெண்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால் இருதய நோய் தாக்கும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் எரிச்சல்படும் மனநிலையில் இருந்தால் அதற்கு காரணம் அவர்கள் சரியாக தூங்காததுதான் காரணமாக இருக்கும். ஆண்களை விட பெண்களுக்கு தான் தூக்கம் அதிகம் தேவைப்படுகிறது.
அவர்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால், அவர்களுக்கு இருதய நோய், மனநோய் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.
இந்த தகவலை டியூக் பல்கலைக் கழகத்தில் உள்ள உளவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர் சவாரெஸ் தெரிவித்தார். அவர்தான் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். SOURCE: INTERNET.
படிக்க:>> மருத்துவம்
---------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

சிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைகள்.

>> Thursday, April 10, 2008

சிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைகள்.

சூஃபிகளைப் ( முல்லா நஸ்ருதீன்.) பொறுத்தவரை திருக்குர் ஆனின் இறை வசனங்கள் நேரடியான, எளிமையான, ஒரு பொருள் அர்த்தத்தை தருபவன அல்ல.

அவரவர் பக்குவத்தைப் பொறுத்து நாம் பல மட்டங்களில் வியாக்கியானப் படுத்திக் கொள்ள இயலுமான செறிவான அர்த்த தளங்களை கொண்டது இறை வசனங்கள் என்பர் சூஃபிக்கள்.

ஒருவர் நகைச்சுவையை தானே உருவாக்கி சிரித்துக் கொண்டிருக்க முடியாது. சிரிப்பை பகிர்ந்து கொள்ள, பற்ற வைக்க கூட ஒருவர் தேவை

‘கனவுகளுக்கும், நகைச்சுவைகளுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. கனவுகள் நமது ஆழ் மனதை தெரிவிக்கும். அது போல, பகுத்தறிவின் பிடி தளர்ந்த நிலையில் வார்த்தை களினால் நெய்யப்படும் நகைச்சுவைகளிலும் நம் ஆழ்மனம் எட்டிப் பார்க்கும்.

************************************

முல்லாவின் உடைவாள் *

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும்.முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு.

முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா ? என்று கேட்டார்.

“கள்வன் என்னை என்ன செய்வான் ? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ? “ என்றார் முல்லா.“கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும் ? “ என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்.“நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது ? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே ? “ எனக் கவலையுடன் கூறினார் முல்லா.

“கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் “ என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார்.

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.

“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.“அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் “ என்ற கள்வர்கள் மிரட்டினர்.

“கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா ? “ என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா.“ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார் முல்லா.

“என்ன யோசனை ? “ என்று கள்வர்கள் கேட்டனர்.“என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா ? “ என்றார் முல்லா.கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர்.

பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று “பிராயணம் எவ்வாறு இருந்தது” என விசாரித்தார்.“எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது” என்றார் முல்லா.

“வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா ? “ என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.“அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள்.நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச் சமாளித்து விட்டேன் “ என்றார் முல்லா.

“உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.“உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா ? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உடைவாள் என்னிடம் ஏது ? “ அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா. “கள்வனிடம் கொடுத்து விட்டீரா ?

அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
-----------------------------------------------
முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை
காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார்.

‘‘உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.
----------------------------------------------
ஒரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது.

விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ என்றார். முல்லா, ராஜாவிடம் ‘‘மிக ருசியாக இருந்தது’’ என்றார்.

ராஜா, ‘‘மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்’’ என்றார்.முல்லா கூடுதலாகவே, ‘‘நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ராஜா முல்லாவிடம், ‘‘ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.

‘‘உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸுக்கு அடிமை இல்லை’’ என்று முல்லா பதிலளித்தார்.
-----------------------------------------------------
முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.

முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.
--------

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது.

ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

‘‘முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் பாதசாரி ஒருவர்.‘‘மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்’’ என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ‘‘அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?’’ என்றார்.முல்லா கோபப்பட்டு, ‘‘எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?’’ என்றார்.
------------------------------------------------------
முல்லா சந்திப்பு

முல்லாவின் பால்யகால நண்பர் ஒருவர் திருமணத்திற்குச் செல்ல இருந்தார். அவரிடம் மேலே போர்த்திக் கொள்ள நல்ல சால்வை இல்லை.
முல்லாவிடம் வந்து முல்லா நான் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டும். போர்த்திக் கொள்ள நல்ல சால்வை என்னிடம் இல்லை. உனக்குப் பலபேர் பொன் னாடைகள் போர்த்தியிருப்பார்கள். அவற்றில் எனக்கு ஒன்று கோடு. திருமணத்திற்குப் போய் விட்டு வந்து திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றார் முல்லாவின் பால்ய நண்பர்.

முல்லாவும் பெட்டியை திறந்து நல்லதொரு சால்வையை எடுத்துத் தம் இளமைக் கால நண்பருக்குக் கொடுத்தார். அவரும் அதை அணிந்து கொண்டு திருமண வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பினார். அப்பொழுது முல்லா, நானும் அந்த வழியாகத்தான் செல்கிறேன். இருவரும் சேர்ந்தே செல்வோம் என்றhர்.

இருவரும் வீதியில் போய்க் கொண்டிருந்த பொழுது முல்லாவின் நண்பர்களில் ஒருவர் அப் பொழுது எதிர்ப்பட்டார். அவரிடம் முல்லா இவர் என்னுடைய இளமைக்கால நண்பர். இவர் அணிந்திருக்கும் சால்வை என்னுடையது தான் என்றார்.

இது முல்லாவின் நண்பருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. முல்லாவிடம் என்னை அறிமுகப்படுத்தியது ச‌ரி. சால்வை என்னுடையது அல்ல உங்களுடையது என்று ஏன் சொன்னீர்கள் அது என்னை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. இனிமேல் அதுபோல் சொல்லாதீர்கள் என்றார்.

முல்லாவும் தவறுக்கு வருந்துவதாக சொல்லி நண்பரிடம் மன்னிப்புக் கேட்டார். சற்று தூரம் சென்றதும் முல்லாவின் மற்றொரு நண்பர் எதிர்ப்பட்டார். அவாpடம் முல்லா இவர் என்னுடைய இளமைக் கால நண்பர். இவர் போர்த்திக் கொண்டிருக்கும் சால்வை என்னுடையது அல்ல என்றார்.

முல்லாவின் இந்த வார்த்தைகளும் அந்த நண்பருக்கு கோபத்தை வரவழைத்தது.

முல்லா இனி என்னை அறிமுகப்படுத்துவதுடன் நின்று கொள்ளுங்கள். சால்வையைப் பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள் என்றார் முல்லாவின் இளமைக் கால நண்பர்.

அப்படியே ஆகட்டும் என்றhர் முல்லா.
சற்று தூரம் சென்றதும் எதிரே மற்றெhரு நண்பர் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வந்ததும்- முல்லா அவாரிடம் இவர் என்னுடைய நண்பர்.. என்று ஆரம்பிக்கும்போதே முல்லாவின் இளமைக் கால நண்பர் சால்வையை கழட்டி எறிந்து விட்டு ஒரே ஓட்டமாக ஒடினார்.
-----------------------------------------

தரையில் படரும் மெல்லிய கொடியில் பெரிய பூசணிக்காய் காய்க்கிறது. அதைவிட பெரிய ஆலமரத்தில் போய், ஏன் சிறிய பழங்கள் காய்க்கின்றன என முல்லா யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மொட்டைத் தலையில் அந்த சிறிய பழம் உயரத்திலிருந்து விழுந்தும்,

அவர் தலை தப்பிப் பிழைக்க அவர் ஞானம் பெற்று இயற்கையின் ஒழுங்கை படைத்த இறைவனை தொழுத கதை எல்லோர் நினைவிலும் இருக்கும்.
-----------------------------------------------------
பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பைக் கொடுத்து விட்டு முல்லா வேகமாக ஓடுவார். ஏன் ஓடுகிறார்? என்று கேட்பவர்களுக்கு தனது இனிமை யான குரல் எவ்வளவு தூரம் போய்ச் சேருகிறது என்பதைக் கண்டறிவதற்காக ஓடுகிறேன் என்று பதில் சொல்லுவார் முல்லா.
---------------------------------------------
மீன்.

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார்.

முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் .

முல்லா ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார்.

முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.

முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா.

“நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.
---------------------------------
அதிர்ஷ்டமான மனிதன் முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர். முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா.

துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா. காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார். ‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.

CLICK TRHE FOLLOWING TO READ MORE .
முல்லா நசுருதீன் கதைகள்

http://tamizh2000.blogspot.com/2008/04/blog-post_7781.html

THANKS TO : tamil200.
---------------------------------
படிக்க:>>

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!

அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.

மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .
-----------------------------------------
முதலில் இந்த >> http://vanjoor-vanjoor.blogspot.com/
இணைப்பை தங்களின் Favorites / Book mark ல் குறித்துக் கொள்ளுங்கள் .
நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். வல்ல இறையவனின் அருளால் நவரசமான பதிவுகள் வளர்ந்து.... கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்..

படித்துவிட்டு சிரமம் பாராது கருத்துகளை தெரிவியுங்கள்.
----------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

‘கைகுலுக்குவது’ அபாயம். கைகுலுக்காதீர்கள் என்பதுதான் இந்த மருத்துவச் செய்தி..

Shaking hand is Healthy? என்ற ஒரு கேள்வி. சமீபத்து மருத்துவ ஆய்வாளர்கள்.

என்ன காரணம்?

நோய்த் தொற்று என்கிற இன்ஃபெக்ஷன் சங்கிலிக்கு தடைபடுத்த முடியாத தொடர்கள் அதிகம். அதில் தற்சமயக் கவனிப்பின்படி ‘கைகுலுக்குவது’ முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

கைகுலுக்குவதன் மூலம் பாக்டீரியாக்கள் ஒரு உள்ளங்கையிலிருந்து அடுத்தவற்றுக்கு வெகுசுலபமாகப் பரவுகிறது என்கிறார்கள். இந்தப் பங்கெடுப்பில் பல்வேறு ஜாதி பாக்டீரியாக்கள் முதல் பாரசைட்டுகள் வரை பயணம் செய்கின்றன.

இந்த கைகளின் பயணத்தில் முக்கிய இடம்பிடிப்பது என சிலவற்றின் பெயரை அவர்கள் வெளி யிட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் ‘சால்மொனெல்லா’ என்பது இருக்கிறது.

இதுதான் நம் உணவை விஷமாக்குவது. ஃபுட் பாய்சனுக்கு முக்கியக் காரணம் இந்த சால்மொனெல்லா. கெட்ட உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுகிற சராசரி ஆண்டு மருத்துவச் செலவு எவ்வளவு தெரியுமா?

கிட்டத்தட்ட பதிமூனாயிரம் கோடி! அங்கங்கே நடக்கிற கைகுலுக்கலின் இழப்பில் இதுவும் ஒன்று. இதுதவிர இன்புளூயென்ஸா என்கிற வைரஸ் தொற்று, நம் நுரையீரலில் சாதாரண சளி முதல் மூச்சுத்திணறல் வரை இது ஏற்படுத்தக் கூடியது.

கூடவே சார்ஸ் என்கிற பயங்கரம்.

காம்பைலோபேக்டர் என்கிற மற்றொரு கிருமி.

நோர்வோ வைரஸ் என்கிற அடுத்த ஒன்று

என கிட்டத்தட்ட எழுபது வகையான நம் மைக்ரோ எதிரிகள் சின்ன கைகுலுக்கலில் தாவி நம்மைப் படுக்க வைத்துவிடுகிற அபாயம் உண்டு என விஞ்ஞானிகள் பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

அதனாலேயே உலகத்திற்கு இவர்கள் பரிந்துரைப்பது நம் வணக்கத்தை. கைகுலுக்கித்தான் ஆகவேண்டும் என்றால், எவ்வளவு தரமாக உங்கள் கைகளை நீங்கள் கழுவுகிறீர்கள் என்பது முக்கியம்.

நமக்கு நாமே கொடுத்துக்கொள்கிற தொற்றைக்கூட அடிக்கடி கைகழுவுவதன்மூலம் தடுத்துக் கொள்ளமுடியும்.

கைகுலுக்காதீர்கள் என்பதுதான் இந்த மருத்துவச் செய்தி.

ஆணோ, பெண்ணோ நோ ஹேண்ட் ஷேக்! பாக்டீரியாக்களிடம் தப்பிக்க பாக்கெட்டில் பத்திரப்படுத்துங்கள்.. NANDRI TO : INTERNET.
------------------------------------------------------
முதலில் இந்த >> http://vanjoor-vanjoor.blogspot.com/
இணைப்பை தங்களின் Favorites / Book mark ல் குறித்துக் கொள்ளுங்கள் .

நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். வல்ல இறையவனின் அருளால் நவரசமான பதிவுகள் வளர்ந்து.... கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்..

படித்துவிட்டு சிரமம் பாராது கருத்துகளை தெரிவியுங்கள்.
----------------------------------
படிக்க:>> மருத்துவம்
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
---------------------------------------------------

சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்! ரோமன் கத்தோலிக்க சமயத்தின் வாடிகன் கூறுகிறது.

மேலும் படிக்க... Read more...

அதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் ! ! அளவுக்கு மிஞ்சினால் ?

>> Wednesday, April 9, 2008

பொதுவாக மருத்துவம், உடல்நலம் காப்பதற்குரிய சிறந்த வழிமுறைகள் பற்றிய பல கருத்துகள் - முன்பு கூறப்பட்டவை - தற்போது சரியானதல்ல என்ற ஆராய்ச்சிக் கருத்துகளால் மறுக்கப்படுகின்றன.

அறிவியல் என்பது அவ்வப்போது ஆய்வுக்குட்படுவதோடு, வளரும் வாய்ப்பு வசதிகள் மருத்துவக் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அணுகுமுறைகளுக்கு ஏற்ப, பழையன கழிதலும், புதியன புகுதலுமாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர், ஒன்றரை லிட்டர் தண்ணீர் (வெறும் வயிற்றில்) குடிப்பது ஒரு சிறந்த நீர் மருத்துவமாகும். (Water Therapy) என்று கருதப்பட்டு, ஜப்பானில் பலரும் இதனைச் செய்கின்றனர் என்று கூறப்பட்டு, நம்மில் பலரும் இதனை நாளும் கடைபிடிப்பவர்களாக உள்ளோம்.

ஆனால், அண்மையில் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெஃப்ராலஜி (American Society of Nephrology) யின் ஆராய்ச்சி ஏட்டில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை இதனை அடியோடு மறுப்பதோடு,

இதனால் பயன் விளையாதது மட்டுமல்ல, தீய விளைவும் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறது.

இரண்டு சிறுநீரகங்கள் (Kidney)க்கு அதிகமான வேலை பளுவைத் தந்து கெடுதியை ஏற்படுத்துகிறது.

பழுதடையும் வேகமான வாய்ப்பை அது உருவாக்கும் அபாயம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஸ்டான்லி கோல்ட் பார்ஃப் (Stanley Gold Farb). இவர் ஒரு சிறுநீரகத் துறை நிபுணர். இவரும் இவரது சக பேராசிரியர் டாக்டர் டான் நிகோயானு (Dan Negoianu) இருவரும், உட்கொள்ளும் திரவப் பொருள்களால் சிறுநீரகத்திற்கு ஏற்படும் விளைவுகள்பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியுள்ளனர்.

அதில் நான்கு வகையான, தவறான மூட நம்பிக்கைகள் - நீர் அதிகம் அருந்துவதுபற்றிய கருத்துகளை வெறும் புரட்டுகள் என்று தெளிவாக்கியுள்ளனர்.

1. முதலாவதாக, சிலர் பசியைப் போக்கிக் கொள்ள நீர் அருந்துவது சரியான வழி என்று கருதி, பசி நேரத்தில் தண்ணீரை ஏராளம் குடிக்கின்றனர்.

அதனால் பசியைத் தடுக்கிறது என்று கருத்துக்கு தெளிவான சாட்சியம் - ஆதாரம் ஏதும் இல்லை என்கின்றனர் இப்பேராசிரியர்கள்.

பசியை அடக்கும் ஆர்மோன்களை, அப்படி குடிக்கும் தண்ணீர் உருவாக்க உதவுவதில்லை. இரப்பை குடல் வழியாக அது சென்றவுடன், நீர் வேகமாக ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. எனவே, பசி வந்தால் தண்ணீர் குடித்தால் அது பசியைக் களையும் என்பது சரியல்ல.

2. இரண்டாவது மூட நம்பிக்கை, அதிக நீர் அருந்துவதால், உடலில் உருவாகும் விஷச் சத்துக்கள் (Toxins) கழிவுகளாக உடலிலிருந்து விரைந்து வெளியேற வாய்ப்பு ஏற்படுகிறது என்ற நம்பிக்கை,

சிறுநீரகம் எப்படி வேலை செய்கிறது என்பதை அறியாததன் விளைவுதான் இப்படிப்பட்ட நம்பிக்கை என்கிறார் டாக்டர் கோல்ட் பார்ஃப்.

நாம் நிறைய தண்ணீர் குடித்தால், அது சிறுநீராக வெளியேற்றிடும் வகையில் சிறுநீரகம் இயக்குகிறதே தவிர, கூடுதலான உடலில் உள்ள விஷச் சத்துக்களை (டாக்சின்களை) வெளியேற்றும் வேலையை அது செய்வதில்லை.

3. மூன்றாவது மூட நம்பிக்கை, தண்ணீர் குடித்தால் அது தலைவலியைப் போக்கும் என்பதாகும் என்று கூறுகின்றனர் அப்பேராசிரியர்கள்!

தலைவலி நிற்பதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் தலைவலி நிற்காது!

(உயரமானவர்கள் குனியாமல் சென்று நமது வாசல் நிலைகள் தலையில் முட்டிக் கொண்டால், சற்று உட்கார்ந்து போங்கள் என்று கூறுவதோடு, ஒரு குவளை நீர் குடித்துவிட்டுச் செல்லும்படி சொல்வதும், செய்வதும் எப்படி ஒரு பழக்கவழக்க மூட நம்பிக்கையோ அதுபோன்றதுதான் இதுவும்).

4. நான்காவதாக, தோல் - சருமத்திற்கு இப்படி அதிக தண்ணீர் குடிப்பது நல்லது என்ற மூடக் கருத்தும் ஒரு புரட்டுதான் என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அதற்கும், தோலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
என்றாலும், 8 குவளை தண்ணீர் 24 மணிநேரத்தில் அருந்துவது அவசியம்தான்!
எதையும் அளவோடு செய்தல் வாழ்க்கைக்கு முக்கியம்.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே? NANDRI: VIDUTHALAI.COM
----------------------------------------------
முதலில் இந்த >> http://vanjoor-vanjoor.blogspot.com/
இணைப்பை தங்களின் Favorites / Book mark ல் குறித்துக் கொள்ளுங்கள் .
நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். வல்ல இறையவனின் அருளால் நவரசமான பதிவுகள் வளர்ந்து.... கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்..

படித்துவிட்டு சிரமம் பாராது கருத்துகளை தெரிவியுங்கள்.
----------------------------------
படிக்க:>> மருத்துவம்

சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்! ரோமன் கத்தோலிக்க சமயத்தின் வாடிகன் கூறுகிறது.

----------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
-------------------------------------------------------------

மேலும் படிக்க... Read more...

உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்! ரோமன் கத்தோலிக்க சமயத்தின் வாடிகன் கூறுகிறது.

>> Tuesday, April 8, 2008

உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்!
வாடிகன் கூறுகிறது
-சர்ஜுன்

உலகில் முஸ்லிம்களின் மக்கள் தொகை தங்கள் சமயத்தினரைவிட எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதாக
ரோமன் கத்தோலிக்க சமயத்தின் முன்னணி அறிஞர் விக்டோரியா ஃபார்மண்டி தெரிவித்திருக்கிறார்.

வரலாற்றிலேயே முதன்முறையாக முஸ்லிம்கள் நம்மை கடந்து சென்றிருக்கிறார்கள்.

உலகின் முதல் பெரிய சமயமாக இஸ்லாம் விளங்குகிறது என்றும்,

வாடிகனிலிருந்து வெளிவரும் எல் ஒஸர்வட்டர் ரொமா என்ற செய்தி ஏடு கத்தோலிக்கர்களின் தலைமைப் பீடமான வாடிகன் வருடாந்திர நூலை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

உலகில் கத்தோலிக்கர்கள் 17.4 சதவீதமாகவும். முஸ்லிம்கள் 19.2 சதவீதமாகவும் உள்ளனர். அனைத்து கிறிஸ்தவர்களின் மொத்த சதவீதம் 33 சதவீதமாக உள்ளது.

இருப்பினும் இதுவரை உலகில் அதிகம்பேர் பின்பற்றும் சமயமாக கத்தோலிக்க திருச்சபை விளங்கியது. இனி நாம் அவ்வாறு கூறிக்கொள்ள முடியாது என விக்டோரியா ஃபார்மென்ட்ரி கூறுகிறார்.

இவரது அறிக்கைக்கு ஐநாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவோ, முஸ்லிம் நாடுகளோ தங்கள் கருத்துகளை உடனடியாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tmmkonline.org/tml/others/108562.htm
*************************************
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.
***********************************************************************

மேலும் படிக்க... Read more...

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் ( ‘காலை’யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு ) போவதற்கு என்ன காரணம்?

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் ( ‘காலை’யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு )
போவதற்கு என்ன காரணம்?

டாக்டர் எம்.சண்முகவேலு (நீரிழிவு நோய் நிபுணர்)

பொதுவாகவே சர்க்கரை வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாகவும் இருந்தால் நுண்ணிய, மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக்குழாயில் பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதனால் நரம்புகள், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்பு பகுதிகளே.

தொடு உணர்வு, அழுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர்ச்சியானது எது? என அனைத்துவிதமான உணர்வுகளையும் நமக்கு உணரச் செய்யும் நரம்பு பகுதிகள் பாதிக்கப்படுவதால், சர்க்கரை வியாதிக்காரர்கள் உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் அனைத்துவிதமான உணர்வு பாதிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது.

எனவேதான் டயாபடீஸ்காரர்களின் காலில் சிறிய கல்லோ, முள்ளோ குத்தி காயங்கள் ஏற்பட்டால் கூட வலியும் பாதிப்பும் உணர முடியாமல் போய் விடுகிறது.

மேலும் இரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கால் பாதங்களுக்குப் போதுமான இரத்தம் செல்லாமல் தடைபட்டு நிற்கும்.

இதனால்தான் சிறிய காயம் ஏற்பட்ட டயாபடீஸ்காரருக்கு அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் கிருமி தயக்கமின்றி உள்ளே நுழைந்து ‘உடனடி தாக்குதலுக்கு ஆளாகின்றார்.

அதோடு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து கொண்டே இருப்பதால் சிறிய காயம் ஏற்பட்டாலும்கூட கிருமிகளின் பாதிப்பு அதிகமாகி காயத்தையும் சீக்கிரம் ஆறவிடாமல் செய்து விடுகிறது.

இந்தப் பாதிப்பு ஆரம்பத்தில் டயாபடீஸ்காரர்களுக்கு உணரமுடியாமல் இருந்தாலும் ‘காலை’யே கட் பண்ணி எடுக்கக்கூடிய அளவுக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

எனவே, டயாபடீஸ்காரர்கள் அவரவர்களுக்கு மருத்துவர் வழங்கிய ஆலோசனையின்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் பிரச்னை இல்லை.

எனவேதான் டயாபடீஸ்காரர்கள் சிறிய புண்ணோ காயங்களோ ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். NANDRI TO: KUMUDAM
---------------------------------------------------
முதலில் இந்த http://vanjoor-vanjoor.blogspot.com/

இணைப்பை தங்களின் Favorites / Book mark ல் குறித்துக் கொள்ளுங்கள்

.நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

வல்ல இறையவனின் அருளால் நவரசமான பதிவுகள் வளர்ந்து.... கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்..
-------------------------------------------------------
படிக்க:>> மருத்துவம் மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஒற்றைத் தலைவலியா? இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். ?

ஒற்றைத் தலைவலி என்பது இப்போது பலரையும் தாக்குகின்ற நோயாக உள்ளது.

இது நீர்க்கோர்வை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

அதாவது நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகி குடலுறிஞ்சிகளால் சத்துகள் உறிஞ்சப்பட்டு பித்த நீர் பித்தப் பையில் போகும். திப்பி மலக் குடலுக்குப் போகும்.

கழிவு நீர்கள் வியர்வையாக சிறுநீராகப் பிரியும். அப்படி பிரியும் கழிவு நீர்கள் சில சமயம் தசை நார்களுடன் சேர்ந்து கீழே போகாமல் மேலே போய்விடும்.

இது தலையில் மூளைக்குள், மண்டை ஓட்டுக்கும் நடுவிலுள்ள பகுதியில் தங்கி கீழே இறங்க முடியாமல் அப்படியே தங்கிவிடும்.

இந்த கழிவு நீர்கள் தான் தசை நார்களை தாக்க ஆரம்பிக்கும். அதனால் அத்துடன் பக்கத்திலுள்ள நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும். இதுவே வலியாக மாறிவிடும்.

தலைவலி பல வகைப்படும்
1. ஒற்றைத் தலைவலி
2. இரட்டைத் தலைவலி
3. மண்டையிடி
4. மண்டைக் குத்தல்
5. தலைபாரம்
.

இவ்வாறு பல வகையாக பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று ஒத்துப் போகின்ற வகையில்தான் இவை இருக்கின்றன.

ஆகவே, தலைவலி வராமல் நமது உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்க...

அதிக குளிர்ச்சி தருகின்ற உணவு வகைகளை அல்லது பழச்சாறு வகைகளை குறைத்து அல்லது அறவே நீக்கிவிட வேண்டும்.

அதைப் போல அதிக சூடு உண்டு பண்ணுகின்ற உணவு வகைகளை அல்லது குளிர்பானங்களை (அய் ஸ் வாட்டர்) போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

மேலும் குளிர்ச்சியைத் தருகின்ற உணவு வகைகளை குறைத்துச் சாப்பிடவேண்டும்.

குறிப்பாக முள்ளங்கி, முட்டைக் கோசு, பீட்ருட் இவற்றை அளவுடன் சாப்பிடவேண்டும்.

இப்படி உணவு முறைகளில் கட்டுப்படாத ஒற்றைத் தலைவலியை எளிய சித்த மருத்துவ முறைப்படி எளிதாக குணப்படுத்திவிடலாம்.

பல வகையான மருத்துவ முறை இருந்தும் நமக்குத் தெரிந்த சில முறைகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன். தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர குணம் ஏற்படும்.

மெல்லிய ஊசி எடுத்து அதன் முனையில் ஒரு மிளகைக் குத்தி நெய்யில் நனைத்து அப்படியே நெருப்பில் காட்டினால் புகை வரும்.

இந்தப் புகையை மூக்கின் நுனியில் வைத்து இழுக்கும்போது தும்மல் வரும்.
இத்துடன் உடம்பில் வியர்வை வரும். தொடர்ந்து சில நிமிடங்கள் செய்ய தலைவலி நோய் குறைந்துவிடும்.

ஓர் எலுமிச்சம் பழத்தின் தோலை மட்டும் எடுத்து நன்றாக மைபோல அரைத்து வலியுள்ள பக்கத்தில் ஒரு ரூபாய் அகலத்திற்கு கனமாக வட்டமாக ஒரு பற்றுப் போட்டுவிட்டால், கால் மணிநேரத்தில் ஒற்றைத் தலைவலி போய்விடும்.

வெற்றிலை, நல்வேளை இலை, அருகம்புல் இம்மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சேர்த்து கசக்கிப் பிழிந்தால் வருகின்ற சாறை எந்தப் பக்கம் வலியுள்ளதோ அதற்கு எதிர்பக்கம் காதில் சில துளிகள் விடவும்.

இவ்வாறு மூன்று நாள்கள் தொடர்ந்து செய்து வர குணமாகும்.

அரிவாள் மூக்குப் பச்சிலையை தேவையான அளவு எடுத்து அத்துடன் சுக்கைச் சேர்த்து அரைத்து நெற்றியில் கனமான பற்று போட்டு பின்னர் சாம்பிராணி புகை காட்ட குணமாகும்.

நல்ல நயம் சாம்பிராணியுடன் பூண்டுத் தோலை சமமாகக் கலந்து கரி நெருப்பில் போட்டால் இலேசாக புகை வரும். அதை முகர்ந்து வர குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லியை 300 மில்லி கொதிக்கின்ற வெந்நீரில் இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊறியிருக்கும் கொத்தமல்லியை நன்கு அரைத்து ஊறிய நீரில் கரைத்து வடிகட்டவும்.

சக்கையை மறுபடியும் அரைத்து அதே நீரில் கரைத்து வடிகட்டவும் இதுபோல மூன்று முறை செய்து வடிகட்டிய நீரில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும், மூன்று நாள் சாப்பிட குணமாகும்.

ஜாதி மல்லி இலையை எடுத்து அத்துடன் கொஞ்சம் சுக்குச் சேர்த்து அரைத்து பொட்டில் தடவி தணல் சூடு காண்பித்தால் குணமாகும்.
-- சீ.மா.கு.பெ.ந. விஜயராஜன் SOURCE: INTERNET.
--------------------------------
படிக்க:>> மருத்துவம்
----------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> மருத்துவம்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP