**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்ட‌வாளங்கள்.

>> Friday, April 26, 2013

விஷத்தை விதைக்கும் ஓரவஞ்ச ஊடகங்களும் போலீஸும்.

பத்திரிக்கைகளும் போலீஸாரும் பிண்ணும் கேடுகெட்ட விஷ சதிவலைகள்.

அப்பாவிகளை பயங்கரவாதிகளாக‌ உருவாக்கும் போலீஸும் ஊடகங்களும்.

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் போலீஸ் பயங்கரவாதம்:வெட்ட வெளிச்சமான ஓரவஞ்சனை!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு:கண்ணூரில் நடந்தது என்ன?படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.


கோழிக்கோடு: கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ‘ஆரோக்கியமான தேசம்!ஆரோக்கியமான சமூகம்!’ என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை ஆயுத பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என்று அவதூறாக சித்தரித்து அவர்கள் மீது UAPA(சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து கைதுச் செய்தது கேரள மாநில போலீஸ்.

பின்னர் இக்கைது படலத்தின் பின்னணியில் நேற்று மாநிலத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் அரசின் பாரபட்சமான போக்கும், போலீஸின் வஞ்சகமும் அரங்கேறியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகம் கோழிக்கோட்டில் யூனிட்டி ஹவுஸில் இயங்கி வருகிறது.

இங்கு நேற்று காலை 11.00 மணியளவில் ஆயுதங்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது என்று கூறி மாநகர போலீஸ் கமிஷனரின் தலைமையில் போலீஸார் சோதனையிட வந்தனர்.

ஒன்றரை மணிநேரம் தீவிரமாக சோதனையிட்ட பிறகும் எந்த சட்டவிரோத பொருட்களும் சிக்கவில்லை.

இறுதியாக சட்டவிரோதமாக எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு போலீஸ் திரும்பிச் சென்றது.

போலீஸ் ரெய்டு செய்தியை கேள்விப்பட்டு கைரளி போன்ற தொலைக்காட்சிசேனல்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் யூனிட்டி ஆஃபீஸ் நோக்கி படையெடுத்து வந்தபோதிலும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மாநிலத்தில் உள்ள இதர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களிலும் இதே காட்சிதான் அரங்கேறின. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் சம்பவத்தை போலீஸை மேற்கோள்காட்டி முக்கிய செய்தியாக மாற்றிய ஊடகங்கள் கூட அங்கு 2 வாள்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக கூறின.

ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ஏதோ ஆயுதக்குவியலை கைப்பற்றியதைப் போன்ற பிரம்மையை போலீஸ் உருவாக்கியது.

உண்மை நிலமை நிலவரம் இப்படியிருக்க‌……

பத்திரிக்கைகளும் போலீஸாரும் இதை கேடுகெட்ட விஷமத்தனமாக‌ இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக‌ சதி வலை பிண்ணி எவ்வாறு ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கி அப்பாவிகளை இல்லாத பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தி நாட்டில் இனக்கலவரங்களை உருவாக்க கங்கணம் கட்டி கொண்டு திரிகின்றன என்பது வெட்ட வெளிச்சம்.

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு பற்றி பத்திரிக்கைகளில் வந்தது என்ன?

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

இவைகளை படிக்கும்போது இது போன்ற ஊடக தாக்குதல்கள் தற்செயலாய் ஏற்பட்டது அல்ல இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக‌ சதி வலை பின்னப்படுவதை உணரலாம்.

எல்லா ஊடகங்களும் இப்படித்தான் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும் ஊடகங்களில் சில பிரிவுகள் இருக்கின்றது, அவை சங்கப்பரிவார சித்தாந்தத்தை நோக்கி சரிந்திருக்கும் ஊடகங்களாக இருக்கின்றன.

இத்தகைய மீடியாக்கள் முஸ்லிம்கள் மீதும், இந்திய முஸ்லிம்களின் வலிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடும் இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் அப்பாவி இளைஞர்கள் எவ்வாரெல்லாம் திவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டதையும், பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.

அதேவேளையில் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும், பாசிச சங்பரிவார்களின் மையங்களிலும் உயிர்சேதங்களையும், பெரும் சேதங்களையும் விளைவித்த சம்பவங்களை எல்லாம் ஏதோ சாதாரண பட்டாசு வெடித்த செய்தியாக சித்தரிப்பதே கேரள போலீஸின் வழக்கமாகும்.

2011-ஆம் ஆண்டு பெப்ருவரி 26-ஆம் தேதி நாதாபுரத்தில் உள்ள நரிக்கோட்டரியில் வெடிக்குண்டு தயாரிக்கும்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐந்து முஸ்லிம் லீக்கைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக எவர் மீது கறுப்புச் சட்டங்கள் பாய்ந்ததாகவோ, தேசிய புலனாய்வு ஏஜன்சி ஓடி வந்ததாகவோ எந்த செய்தியும் இல்லை.

2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மட்டன்னூரில் வெடிப்பொருட்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் காரன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான். ஆனால் இதனை ஒரு சாதாரண வழக்கு போலவே போலீசும், ஊடகங்களும் கையாண்டன.

2013 ஜனவரி 4-ஆம் தேதி தலச்சேரி மேலூரில் சி.பி.எம்(மார்க்சிஸ்ட்) கட்சியின் கீழ் இயங்கும் க்ளப் ஒன்றில் மிகவும் சக்தி வாய்ந்த நான்கு ஐஸ்க்ரீம் குண்டுவெடிகளை கைப்பற்றியபோதும் ஊடகங்கள் கற்பனை கதைகளை உலாவவிடவில்லை.

2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி மாஹியில் வெடிக்குண்டை தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவரின் கைவிரல் துண்டானது.

2011-ஆம் ஆண்டு தர்மடம் சிரக்குனியில் வெடிக்குண்டை தயாரிக்கும்போது குண்டுவெடித்து சி.பி.எம் உறுப்பினர் ஒருவரின் கை துண்டானது.

2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பெருந்தாறு என்ற இடத்தில் வெடிக்குண்டை தயாரிக்கும் போது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ்காரனின் இருகைகளும் காயமடைந்ததன் விளைவாக துண்டிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நாதாபுரம் கருவான்கண்டியில் சி.பி.எம் உறுப்பினர் ஒருவருக்கு வெடிக்குண்டை தயாரிக்கும்போது கடுமையான காயம் ஏற்பட்டது.

2008-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பானூர் வடக்கு பொய்லூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுத தயாரிப்பு மையத்தில் இருந்து மிகவும் சக்தி வாய்ந்த 125 ஆர்சனிக் சல்ஃபேட் வெடிக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

கேரளாவில் மிகப்பெரிய ஆயுதவேட்டையாக இது அமைந்தது. ஆனால், போலீஸ் சாதாரண வழக்கையே இச்சம்பவத்தில் பதிவுச் செய்தது.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாத்தை கடுமையாக வெறுத்து கொச்சைபடுத்திய‌வர் இஸ்லாத்தை தழுவினார்.!!!!

>> Thursday, April 25, 2013

"I hate Islam" என்று இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் I follow Islam" என்று இஸ்லாத்தை தழுவினார்.!!!

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன்.

விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது.

46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது.

பின்னே? "I hate Islam" என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது "I follow Islam" என்றால்? சிரித்தார்கள்.

"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!" என்கிறார் அல் ஜஸீராவிற்கு பேட்டியளித்த டோர்ன்.

மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். 'தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை.

"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர்.

ஆனால் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் மற்றவர்கள் சொல்வதை கண்மூடிக் கொண்டு நம்புபவன் நான் அல்ல. சிலர் பிறந்த மதத்துக்கு நான் துரோகம் செய்து விட்டதாக கூறுகின்றனர். பலர் நான் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானது என்கின்றனர். டிவிட்டரிலும் பலர் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.'

நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?"


அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.

இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.

"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு, "இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன்.

இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின"

"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.

"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன். இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்று

Okaz/Saudi Gazette க்கு -_http://saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130422162428 அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். - அபூ ஸாலிஹா

THANKS TO SOURCE: http://www.satyamargam.com/news/world-news/2087-anti-islamic-dutch-arnoud-van-doorn-converts-to-islam.html.

முன்பு முகமது நபியை தவறாக சித்தரித்து படமெடுக்க உதவிய அர்னாடு வேன் மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்று மதினாவில் முகமது நபியின் அடக்கத் தலத்துக்கு முன்னால் அமர்ந்து தான் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கோரினார். எல்லா புகழும் இறைவனுக்கே!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாத்தை எதிர்ப்பதையே தங்கள் வேலையாக வைத்திருக்கும் பலரும் உண்மையை விளங்கி ஒரு நாள் இது போல் இஸ்லாத்தின் முன் மண்டியிடுவார்கள். அது வரை தவறாக வழி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வழி தவறிய அந்த சகோதரர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் இஸ்லாத்தை தழுவினார்.!!!!

இஸ்லாத்தைக் கடுமையாக வெறுத்து "I hate Islam" என்ற இவரே இப்போது "I follow Islam" என்றால்?

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன்.

விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

மேலும் படிக்க... Read more...

மேலும் படிக்க... Read more...

பழிவாங்கப்பட்ட சஞ்சய்தத் தீவிரவாதியா? எது உண்மை? எது நீதி?

>> Wednesday, April 24, 2013

முஸ்லிம்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களின் குரல்வளை நெரிக்கபடுகின்றது என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் தேவை இல்லை.

இந்தி படவுலகில் முடிசூடா மன்னர்களாக சுனில்தத் மற்றும் அவரது மகன் சஞ்சய்தத் இருவரும் திகழ்ந்தார்கள்.

சுனில்தத் அரசியலில் இறங்கி ஓய்வு பெரும் நேரம் மகன் இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இவர் நடித்த கல்நாயக், ஜாஜல், சடக் போன்ற ஹிந்தி படங்கள் மிகபிரபல்யம் ஆனவை. இன்றைய நிலை: மும்பை நரிமன் பாயிண்ட்யில் உள்ள சிபிஐ அலுவுலகத்திற்கு ஏறி இறங்குவதுதான் இந்த பிரபல்யங்களின் இன்றைய அவலநிலை.

மும்பை கலவரம்: 1992 டிசம்பர் 6 தேசமே பெரும் கொந்தளிப்பில் இருந்த நேரம், உச்சநீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இந்தியாவின் வர்த்தக தலை நகரான மும்பையில் சிவசேனா மற்றும் ஹிந்துத்துவா அமைப்பு பெரும் கலவரத்தை நடத்தியது. இதில் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் எரித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

மனித நேயம்: 2 மாதங்கள் நடந்த தொடர் கலவரத்தை கண்டு மனித நேயம் கொண்ட பலர் கவலை கொண்டனர். அதில் சுனில்தத்தும் ஒருவர். இவர் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கலவரத்தை நிறுத்த பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டார்.

உண்ணாவிரதம்: பால்தாக்ரே தலைமையில் இயங்கும் சிவசேனா, மற்றும் ஹிந்துத்துவா அமைப்பினர் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தை நிறுத்த வலியுறுத்தி சுனில்தத் மும்பை விதான் சவுத் என்கிற இடத்தில் தைரியமாக உண்ணாவிரதம் இருந்தார்.

அரசுக்கு நெருக்கடி: MPயும் நடிகருமான சுனில்தத்தின் உண்ணாவிரதம் மத்திய, மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியது. தனது கட்சியின் உள்ள நடிகர் மற்றும் பிரபல்யமான MP ஒருவரே தங்களது ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதை நரசிம்மராவ் தலைமையில் நடந்த காங்கிரஸ் (ஹிந்துத்துவா) ஆட்சி விரும்பவில்லை.

ரகசிய கூட்டு: காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற கட்சிகள் பெயரளவில்தான் வேறு பட்ட கட்சிகளே தவிர செயல்பாடுகளில் ஒரே சிந்தனை படைத்த இரட்டையர்களே . பாபர் மசூதியை இடிக்க பிரதமர் நரசிம்மராவ் (காங்கிரஸ்) ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு பச்சை கொடி காட்டி இருந்தார். பாபர் மசூதியை இடித்து விட்டு அதில் ராமர் கோவில் கெட்ட வேண்டும் என்பதே நரசிம்மராவின் எண்ணமாக இருந்தது.

மாநில காங்கிரஸ்: மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சி சிவசேனாவின் மறு உருவமாகவே செயல்பட்டது என்றே சொல்லலாம். தொடர்ந்து 2 மாதங்கள் நடந்த கலவரத்தை தடுத்து நிறுத்த ஆளும் மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகள் உறுப்படியாக எதுவும் செய்திருக்கவில்லை. இதனை கண்டு மனம் வெறுத்து போனதாலேயே சுனில்தத் கலவரத்தை நிறுத்த நாடவடிக்கைகள் எடுக்க கோரி உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலவரம் நிறுத்தப்பட்டது: எம்பியும், நடிகருமான சுனில்தத்தின் உண்ணாவிரத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியது. தமிழக சினிமா துறையினர் போலல்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்கு மும்பை திரை துறையினர் ஆதரவு நல்கினர். சுனில்தத்தின் உண்ணாவிரதம் காரணமாக ஏற்ப்பட்ட நெருக்கடி காரணமாக கலவரம் நிறுத்தப்பட்டது.

சுனில்தத் வழங்கிய நிவாரணம்: மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவு பொருட்களை கொடுத்து உதவினார். இவரது இந்த உதவிகளை கண்டு ஹிந்துத்துவா சக்திகள் இவர் மீது தீரா பகை கொண்டது.

திசை திரும்பிய கலவரம்: இவரது உண்ணாவிரதத்தால் கலவரம் முடிவுக்கு வந்தது. ஆனால் கலவரத்தை நிறுத்த உதவி செய்ய உண்ணாவிரதம் இருத்தவர்களை நோக்கி கலவரம் திசை திரும்பியது. பொலிவுட் பிரபலங்கள் வசித்து வந்த ஜூகு பீச் பகுதியின் பாதுகாப்பு கேள்வி குறியானது.

கொலை மிரட்டல்: இந்நிலையில் சுனில்தத்தின் குடும்பத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. காங்கிரஸ் எம்பியான இவர் மாநில மற்றும் மத்திய அரசிடம் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டினார். இவரது உண்ணாவிரத நடவடிக்கையால் இவர் மேல் சிவசேனையும் அதன் ஆதரவு காவல் மற்றும் உளவு துறையினரும், மத்திய, மாநில அரசுகளும் விரோதம் கொண்டிருந்தன. அதனால் இவரது குடும்பத்தை பாதுகாக்க ஒரு போலீசை கூட அவர்கள் அனுப்பிவைக்க வில்லை.

வீடு முற்றுகை: இந்நிலையில் ஒருநாள் இரவு சிவசேனை மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சுனில்தத்தின் வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த தருணத்தில் ராணுவத்தில் வேலை செய்யும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது சக ராணுவ நண்பர்களோடு அவருக்கு பாதுகாப்பு கொடுத்தார். இல்லையேல் குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இஹ்சான் ஜப்ரியின் நிலைமையே இவருக்கு ஏற்ப்பட்டிருக்கும்.

சஞ்சய்தத் செய்த தவறு: சுனில்தத்தின் மகன் சஞ்சய்தத் தனது குடும்பத்தினருக்கு நிலவி வரும் பாதுகாப்பு அற்ற சூழலை கண்டு மனம் வருந்தினார். இந்நிலையில் சஞ்சய்தத்தின் நெருங்கிய நண்பர்களான மும்பை தயாரிப்பாளர்கள் இருவர் எ.கே 56 ரக இயந்திர துப்பாக்கியை இவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி கொடுத்து உதவுகின்றனர். வேறுவழியின்றி இதை பெற்று கொண்டதுதான் இவர் செய்த தவறு.

இது குற்றமா?: சஞ்சய்தத் ஒன்றும் ஆயுத வியாபாரி இல்லை. அந்த துப்பாக்கியை அவர் உபோயோகப்படுத்தவும் இல்லை. அவர் பெயரில் இதுவரை ஒரு கேஸ் கூட இருந்ததில்லை. அவரது வீட்டை ரைடு செய்த போலீஸ் அங்கிருந்து இந்த துப்பாக்கியை கைப்பற்றவும் இல்லை. ஆனால் இந்த துப்பாக்கி அவரிடம் இருந்தது என்கிற சாட்சியை வைத்து மட்டுமே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

சூழ்ச்சியான முறையில் கைது: இந்த பிரச்சனைகள் நடக்கும் பொழுது நடிகர் சஞ்சய்தத் மொரீசியஸ் தீவில் படபிடிப்பில் இருந்தார். இவருக்கு போன் செய்த மும்பை போலீஸ், நீங்கள் மும்பை வரை வந்து உங்கள் வசம் துப்பாக்கி இருந்தததை ஒத்துக்கொண்டால் போதும், உங்கள் மீதுபெட்டி கேஸ் போட்டு விட்டு விடுவோம் என்று பொய்யாக வாக்குறுதி கொடுத்து அழைத்து பின்னர் கைது செய்தனர்.

திட்டமிட்டு பொய் வழக்குகள்: சஞ்சய்தத் மீது அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்தார் என்கிற ஒரு குற்றத்திற்காக மட்டுமே வழக்கு தொடர முடியும். அது கூட அவர் தனது குடும்பத்தினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிர்பந்தத்தின் காரணமாக அதை செய்தார். ஆனால் மும்பை பால்தாக்ரே ஆதரவு உளவுத்துறையோ இவரை குண்டு வெடிப்பு மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு ஏற்படுத்தி தடாவில் கைது செய்தது.

பழிவாங்கப்பட்ட சஞ்சய்தத்: மும்பை நகரமே பால்தாக்ரேயின் அடாவடி இனவாத, மாதவாத ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கி தவித்தது. கலவரத்தை நிறுத்திய குடுப்பத்தை அலைகழிக்க பால்தாக்ரேயும், உளவுத்துறையும் செய்த சதியே இந்த பொய் வழக்குகள். இவரது தந்தை ஆளும் காங்கிரஸ் எம்பியாக இருந்த பொழுதிலும் மத்திய, மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் பழிவாங்கப்பட்டனர்.

ஜாமீன் மறுப்பு: இவரது வழக்கு நீதிபதி பட்டேல் இடம் ஜாமீனுக்கு வந்தது. பால்தாக்ரேவின் ஆதரவாளரான இவர் சஞ்சய்தத்தின் ஜாமீனை மறுத்தார். இதனால் இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் இவர் 14 மாதங்கள் ஜெயிலில் கழித்தார். MP மற்றும் பெயரும் புகழும் படைத்த நடிகர் சுனில்தத்தால் கூட தனது மகனை காப்பாற்ற முடியவில்லை.

பால்தாக்ரேயிடம் சரண்: மகனை வெளியே எடுக்க வழி தெரியாமல் சுனில்தத் பால்தாக்ரேயிடம் சரண் அடைகிறார். இதற்கு பலன் கிடைத்தது. இதுநாள் வரை சஞ்சய் தத்துக்கு ஜாமீன் மறுத்து வந்த நீதிபதி பட்டேல், காலை, மாலை காவல் நிலைய கையெழுத்து, மும்பையை விட்டு வெளியேற கூடாது என்கிற கண்டிசன் அடிப்படையில் இவருக்கு ஜாமீன் வழங்கினார்.

புதிய நீதிபதி: சஞ்சய்தத் வழக்கில் புதிய திருப்பமாக வந்தார் நிதியரசர் பிரோமோதத். இவர் சஞ்சய்தத்தின் வழக்கின் உண்மை நிலைககளை ஆராய்ந்து இவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான தடா மற்றும் வழக்குகளில் இருந்து இவரை விடுவித்து இவருக்கு முழுமையான் ஜாமீன் வழங்கினார். இப்பொழுது இவர் மீது ஆர்ம் ஆக்ட் படி தொடரப்பட்ட வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது.

சரியான தண்டனையா?: இந்நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இவருக்கு விதிக்கப்பட்ட 5 வருட கால தண்டனையில் இவர் இன்னும் 3 வருட காலங்களை மட்டும் அனுபவித்தால் போதும் என்று கூறி இருக்கிறது. தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்த மத்திய, மாநில அரசுகளின் நிர்பந்தத்தால் ஒரு குடிமகன் வெறிபிடித்த பெரும் கூட்டத்திடம் இருந்து தனது குடும்பத்தை பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்ததற்கு 5 வருடங்கள் சிறைதண்டனையா?

இறந்து போன நீதி: மும்பை கலவரத்திற்கு காரணம் பால்தாக்ரே மற்றும் சிவசேனா தான் என இந்த படுகொலைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இருந்தும் பால்தாக்ரேக்கு யார் தண்டனை கொடுத்தார்கள்?

பால்தாக்ரே சொன்னார் தன்னை கைது செய்தால் மும்பை நகரமே பற்றி எறியும் என்றார். கடைசியில் அவர் மரணித்ததும் அவரது உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி இந்தியா அறிவிக்கப்படாத இந்து தேசம் என்பதை நிரூபித்தார்கள்.

கவலையான செய்தி: சுனில்தத் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவ போய் பெற்ற துன்பங்கள்தான் இவை அனைத்தும். இதை புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் இவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் வருகின்றனர். முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சுனில்தத் உங்களுக்கு உதவியதாலேயே அவரது மகன் சஞ்சய்தத் சிறை தண்டனை பெற்றார். இதை புரிந்து கொள்ளாமல் அவருக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் மனிதாபிமானம் அற்ற செயல்.

*ஆயிரம் குற்றாவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது* (நீதி மொழி). ஆனால் சஞ்சய்தத் விசயத்தில் மும்பை கலவரத்தை நடத்திய பால்தாக்ரே மற்றும் ஹிந்துத்துவா குற்றாவளிகள் தப்பிக்க விடப்பட்டு நிரபராதியான சஞ்சய்தத் தண்டிக்கப்படுள்ளார்.


நட்புடன்: ஆசிரியர் புதியதேன்றல்.

நன்றி: தேஜஸ் மலையாள நாளிதழ்.

நன்றி:http://www.sinthikkavum.net/2013/04/blog-post_23.html

மேலும் படிக்க... Read more...

ஐ.நா.வின் இந்த அநாகரிக கொடுமையைக் கேட்டீர்களா?

>> Monday, April 15, 2013

ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி, விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால், நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.

கொடுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான்.

ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் (Commission On the Status of Women-CSW 57) 2013 மார்ச் 4-15இல் ஒரு தீர்மானம் வெளியிட்டுள்ளது. ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தல்’’ (Elimination and prevention of all forms of violence against women and girls) என்பது அந்தத் தீர்மானம், அல்லது சட்டத்தின் (Act) பெயராகும்.

பெயரைப் பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். பொதுவாகவே ஐ.நா.வின் தலைப்புகள் கவர்ச்சியானவையாகவும் சமூக ஆர்வலர்களை ஆசுவாசப்படுத்துபவையாகவுமே இருக்கும். அப்படித்தான் இதுவும்.

உலக நாடுகளில் பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஐ.நா. சாவுமணி அடிக்கப்போகிறது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.

போர்களில் எதிரிகளின் இராணுவ வீரர்கள் (ஆண்கள்) அந்த நாட்டின் பெண்கள்மீது நடத்தும் பாலியல் பலாத்காரங்கள், பெண்களைக் கடத்தும் சம்பவங்கள், விபசாரத்தில் ஈடுபடுத்தல், இயல்பான அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்தல் ஆகிய கொடுமைகளுக்கெதிரான தீர்மானம்தான் இது என்று எண்ணிவிடாதீர்கள்!

இன்று பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அந்நாட்டுப் பெண்களுக்கெதிராக அந்தியப் படைகள் இழைத்துவரும் வன்கொடுமைகள், மாலி, மியான்மர் போன்ற நாடுகளில் அப்பாவி முஸ்லிம் பெண்களுக்கெதிராக அந்நாடுகளின் தீவிரவாதிகளும் காவல்படையினரும் நடத்தும் அக்கிரமங்கள், வசதியான நாடுகளில் வீட்டு வேலைகள் பார்க்கும் ஏழைநாட்டுப் பெண்கள்மீது வீட்டு எசமானர்கள் செய்யும் கொடுமைகள் போன்ற எதையேனும் ஐ.நா. தீர்மானம் தடுக்கப்போகிறது என்று கனவிலும் நினைத்துவிடாதீர்கள்!

தீர்மானம் என்ன சொல்கிறது?

வேறு என்னதான் சொல்கிறது அச்சட்டம்? நீங்களே படியுங்கள் அந்தப் புனித (?) சட்டத்தை:

1. இளம்பெண்களுக்கு முழுப் பாலினச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்; ஒரு பெண் பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். திருமண வயதை உயர்த்த வேண்டும்.

2. பருவ வயதை நெருங்கும் சிறுமிகளுக்குக் கர்ப்பத் தடை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவதுடன் கருக்கலைப்புக்கு அனுமதியும் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் பாலின மற்றும் மகப்பேறு உரிமை (விரும்பினால் பிள்ளை பெறலாம்; இல்லையேல் கலைக்கலாம் எனும் உரிமை) வழங்கல் வேண்டும்.

3. ஆசை நாயகியையும் மனைவிக்குச் சமமாக நடத்த வேண்டும்; விபசாரத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு, சட்டப்படி பிறந்த பிள்ளைகளுக்கு வழங்கும் எல்லா உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும்.

4. விலைமாதுகளுக்கு எல்லாவிதமான உரிமைகள், பாதுகாப்பு, மரியாதை வழங்கப்பட வேண்டும். விபசார விடுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

5. ஒரு பெண், தன்னை தன் கணவன் கற்பழித்ததாகவும் தன் விருப்பமின்றி பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டுவதற்கு உரிமை உண்டு. அப்போது, அந்நியப் பெண்மீது பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன தண்டனையோ அதே தண்டனை கணவனுக்கும் வழங்கப்பட வேண்டும்.

6. ஆண்-பெண் இடையே பாகப்பிரிவினைச் சட்டத்தில் சமமான பங்கு அளிக்கப்பட வேண்டும்.

7. திருமணத்தைப் பொறுத்தவரை, பலதார மணம், ‘இத்தா’ மேற்கொள்ளல், ‘வலீ’யை ஏற்படுத்தல், ‘மஹ்ர்’ அளித்தல், ஆண் குடும்பத்தின் செலவுகளை ஏற்றல் ஆகிய நடைமுறைகளை அகற்ற வேண்டும்; ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணை மணமுடிக்க அனுமதிக்க வேண்டும்.

8. மணவிலக்கு அளிக்கும் அதிகாரத்தைக் கணவனிடமிருந்து பறித்து, நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். மணவிலக்கு ஆனபின் எல்லா சொத்துகளையும் இருவரிடையே பங்கிட வேண்டும்.

9. ஒரு பெண், கணவனின் அனுமதியின்றியே வெளியே செல்லலாம்; பயணம் போகலாம்; வேலைக்குச் செல்லலாம்; கர்ப்பத் தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம்.


இவைதான் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் ஐ.நா. சபையின் பெண்கள் ஆணையம் தீர்மானித்திருக்கும் சட்டங்கள்.

யாரைக் கேட்டு?

முதலில், இச்சட்டங்களையெல்லாம் அந்த ஆணையம் யாரைக் கேட்டு நிறைவேறியுள்ளது? அல்லது பரிந்துரை செய்துள்ளது? அமெரிக்காவும் ஐரோப்பாவும் விரும்பும், அல்லது சுதந்திரம் என்றும் நாகரிகம் என்றும் கருதும் ஒன்றை உலகப் பெண்கள்மீது திணிக்க ஐ.நா. சபைக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

மேலை நாடுகளின் கைப்பொம்மையாகச் செயல்படும் ஐ.நா.வும் அதன் துணை அமைப்புகளும் நினைத்ததை எல்லாம் சட்டமாக்குவதற்கு இறைவனே அனுமதி வழங்கிவிட்டானா? அல்லது வான்மறை ஏதேனும் இந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறதா?

அவர்கள்தான், சமயக் கட்டுப்பாட்டிற்கோ சமூகப் பண்பாடுகளுக்கோ மனித நாகரிகத்திற்கோ கீழ்ப்படியாமல் காட்டுமிராண்டித்தனமான மிருக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், புனித வான்மறையை, பரிசுத்தமான மார்க்கத்தைப் பின்பற்றும் உலக முஸ்லிம்கள் மீது ஐ.நா.வின் பேரால் அநாகரிகத்தைத் திணிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஐ.நா. சபை இயங்குவது அமெரிக்காவில்; ஐ.நா.வின் பட்ஜெட்டில் 60 விழுக்காடு நிதியை வழங்குவது அமெரிக்கா; வீட்டோ அதிகாரம் படைத்த ஐந்து நாடுகளில் மூன்று மேலைநாடுகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மேற்கத்திய நாடுகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்தான் நாட்டாண்மைத் தனம் செய்கின்றன என்றால், கலாசாரம், பண்பாடு, சமயக் கட்டுப்பாடு, பெண் ஒழுக்கம் ஆகிய தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது மிகப்பெரும் ஆபத்தாகும். இவர்களின் அராஜகத்தை அடக்காவிட்டால் உலகம் பேரழிவையே சந்திக்கும்.

குடும்ப அமைப்பைச் சீரழிக்கவா?

இரண்டாவதாக, உலக அளவில் குடும்ப அமைப்புகளும் உறவுமுறைகளும் சீரழிவதற்கே ஐ.நா.வின் பெண்கள் அமைப்பு கூறும் தீர்மானங்கள் உதவும். குடும்ப அமைப்பு சிதைந்தால், உறவு முறைகள் அழிந்தால் மனித இனம், முன் எப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் என்பதை ஏன் மறந்துவிட்டார்கள்?

திருமணம் என்பது, புனிதமானதொரு வாழ்க்கை ஒப்பந்தம். அங்கே இரு உள்ளங்கள் மட்டும் இணைவதில்லை; இரு குடும்பங்களே இணைகின்றன. ஒருவரின் இன்ப துன்பங்களில் மற்றவரும் பங்கெடுத்துக்கொண்டு, சுமைகளை -அவரவர் இயற்கைக்கேற்றவாறு- பகிர்ந்துகொண்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல தலைமுறைகளைப் பெற்றுக்கொடுக்கும் அற்புதமான வலைபின்னலே இல்லற வாழ்க்கை.

திருமணம் என்று ஒன்று இருப்பதால்தான் உலகில் மனித வாழ்க்கை எனும் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது; மனித இனப் பெருக்கம் தடங்கலின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது; மனித உள்ளங்களில் அன்பு, பாசம், மனிதநேயம் ஆகிய மலர்கள் பூத்துக்கொண்டிருக்கின்றன; அழுகையும் சிரிப்பும் மனித முகங்களில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன.

கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, தொழில், நிர்வாகம், ஆட்சி… என எந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் அவற்றுக்குப் பின்னால் குடும்ப வாழ்க்கை ஏதேனும் ஒருமுறையில் உந்துதல் சக்தியாக இருக்கும்.

திருமண வாழ்க்கையின் அடிவேர்களையே பிடுங்கி எறியும் வகையில், அதன் தளிர்களில் வெந்நீரை ஊற்றும் விதத்தில் ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி, விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால், நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.

இஸ்லாத்தின் மீது தாக்குதல்

மூன்றாவதாக, உலக முஸ்லிம்களையும் அவர்களின் வளமான பண்பாடுகளையும் இஸ்லாம் மார்க்கத்தின் தனித்தன்மைகளையும் அழித்தொழிப்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இதுவரை கைகோத்திருந்தது போய், இப்போது ஐ.நா.வே அந்த வேலையைக் கையிலெடுத்திருக்கிறதே அது ஏன்? ஐ.நா. சபையின் இலக்கும் இலட்சியமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, அதன் பாரம்பரிய மாண்புகளை வெட்டி வீழ்த்துவதுதானா?

ஐ.நா. சபை மகளிர் ஆணையத் தீர்மானங்கள் அனைத்தும், குறிப்பாகக் கடைசி நான்கு (6,7,8.9) ஷரத்துகளும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் குறிவைத்தே சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

முஸ்லிம் சமூகத்தின் கூட்டுவாழ்க்கை முறை, மக்கட் தொகை அதிகரிப்பு, என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ‘இஸ்லாம்’ என்று வந்துவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கியமாகிவிடுவது, மேலை நாட்டினரிடையே இஸ்லாம் வேகமாகப் பரவிவருவது முதலான அம்சங்கள் மேற்கத்திய உலகை அச்சுறுத்திவருகின்றன.

இதனால் முஸ்லிம்களின் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என மேற்குலகம் நம்புகிறது. சட்டப் புறம்பான பாலியல் உறவுகள் மேலை நாடுகளில் பரவலானதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துபோனதைப் போன்றே, முஸ்லிம் உலகிலும் குறைப்பதற்கு அவர்கள் செய்யும் சதியே இது.

1995லிருந்து ஐ.நா. சபை அமைப்புகளையும் மாநாடுகளையும் வழிநடத்துவதில் சியோனிஸ்ட் லாபி திட்டமிட்டு வேலை செய்துவருகிறது. ஐ.நா. மாநாடுகளின் திட்டங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றை வரையறுப்பதில் சியோனிஸ்டுகளின் கரம் வலுவாக உள்ளது.

ஆனால், வரலாற்று உண்மை ஒன்றை இந்தத் தீய சக்திகள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. உலக முஸ்லிம்கள் தம் உயிருக்கோ உடைமைக்கோ பங்கம் நேர்ந்தால்கூட பாராமுகமாக இருந்துவிடுவார்கள். ஆனால், எப்போதெல்லாம் இஸ்லாத்தின் மீதும் அதன் நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தின் மீதும் தாக்குதல் வருகிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் கொதித்தெழுந்துவிடுவார்கள்; உயிரைக் கொடுத்தும் தங்கள் மார்க்கத்தைப் பாதுகாத்துவிடுவார்கள்; அதில் பின்வாங்கமாட்டார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண் ஆணையம் வெளியிட்டுள்ள இத்தீர்மானங்களை எகிப்து, ஈரான், கத்தர், நைஜீரியா, சூடான், ஹோன்டுராஸ், வாடிகன் போன்ற நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன; இந்த அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு இத்தீர்மானங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளது. சமூகக் கட்டமைப்பைத் தகர்க்கக்கூடிய தீர்மானங்கள் என அறிவித்துள்ளது.

பெண்கள் செய்யும் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் இத்தீர்மானங்கள் சட்ட அனுமதி கொடுப்பதை ஏற்க முடியாது என இக்வான்கள் அறிவித்துள்ளனர். - கான்பாகவி

நன்றி : அல்முஜ்தமா.

SOURCE: http://lankamuslim.org

மேலும் படிக்க... Read more...

வஹாபிஸம் அடிப்படைவாதமாகுமா? யாருங்க இந்த வஹ்ஹாபி?

>> Saturday, April 13, 2013

இஸ்லாமியர்கள்; வஹ்ஹாபியர்கள்! என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நிலவி வந்த கொடிய யுத்தம் ஓய்க்கப்பட்ட நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத சக்திகள், காவிக் கர சேவகர்கள் வடிவில் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் மோசடிக்காரர்கள்! சிங்களவர்களின் வருமானங்களை சூரையாடி அதை தீவிரவாத இயக்கங்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். அரேபியர்களிடமிருந்து பெருந்திரளான பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பெரிய பெரிய பள்ளிவாசல்களை எழுப்பிக்கொண்டு அடிப்படைவாதத்தை இலங்கை மண்ணில் விதைத்து வருகின்றனர். இவர்கள் அடிப்படைவாதிகள்; கடும்போக்கு இஸ்லாமியர்கள்; வஹ்ஹாபியர்கள்! என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.

இப்படி கடுமையாக, காரசாரமாக நம்மை அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்க அதை ஊடகங்களும் பரப்பித்திரிய பாமரர்களும் இதைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். அடிப்படைவாதம் என்றால் பயந்து போகும் அளவுக்கு பாரதூரமான கொள்கையா? இப்படி பரப்பித்திரிவோரிடம் யாராவது அடிப்படைவாதம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பியிருப்பார்களா? என்றால் அது வினாக்குறியாகவே நின்றுவிடும்.

அடிப்படை வாதம் என்றால் என்ன?

அடிப்படைவாதிகள் என்று நம்மை விமர்சனம் செய்கிறார்களே இந்த விமர்சனம் சரியா? அடிப்படைவாதம் இந்த உலகை விட்டு அகற்ற வேண்டிய அளவுக்கு ஆபத்தான வாதமா? அடிப்படைவாதிகள் என்றால் யார்? அவர்களின் கொள்கை என்ன? அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாம் அறிந்து கொண்டால் இது போன்ற விமர்சனங்களின் நிலையை நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்தவொரு கொள்கையைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவர் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை அடிப்படையிலிருந்து கடைபிடித்து ஒழுகுவதுடன் அதில் எந்தவித வளைவு நெளிவும் இன்றி வாழ்வது அடிப்படைவாதம். அவ்வாறு வாழ்பவர் அடிப்படைவாதி!

இது மதங்களுக்கு மட்டும் உரித்தான சொல் அல்ல! மதத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்கள் அனைத்துக்கும் பொதுவானது.

ஒருவர் நாத்திகவாதத்தில் உறுதியாக இருந்து அதை அவர் ஏனையோருக்கு நாத்திகமே சரி என்று பிரச்சாரம் செய்தால் அவர் நாத்திக அடிப்படைவாதி. பாசிசவாதத்தில் உறுதியாயிருந்தால் அவர் பாசிச அடிப்படைவாதி. நாசிசத்தில் உறுதியாக இருந்தால் அவர் நாசிச அடிப்படை வாதி கம்யூனிசத்தில் உறுதியாயிருந்தால் அவர் கம்யூனிஸ அடிப்படைவாதி. புத்தமதத்தில் உறுதியாக இருந்தால் புத்த அடிப்படைவாதி!

இஸ்லாத்தைப் பொருத்தவரை திருக்குர்ஆனும் நபிவழியும் மாத்திரமே மார்க்க மூல ஆதாரங்கள். அதை விடுத்து வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்போரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று உலகம் விளிக்கின்றது.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் மலிந்து கிடந்த தர்கா வழிபாடு, தாயத்து, தட்டு, கத்தம், பாத்திஹா போன்ற மூடநம்பிக்கைகள், கொடிய இணைவைப்பு காரியங்களை வளைகுடா நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டி, இஸ்லாமிய அடிப்படைகளை முஸ்லிம் மக்களிடம் தலைத்தோங்கச் செய்து ஒரு நல்ல ஆட்சியை கொண்டுவர முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் எனும் இஸ்லாமிய அறிஞர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இவரது கருத்துக்களுக்கு மாற்றமான கருத்தை கொண்ட வழிகெட்ட கூட்டத்தினர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்துக்களை ஏற்றோரை வஹ்ஹாபிகள் என்று அழைக்கத்துவங்கினர்.

இதுபோன்ற பல தவறான விடயங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் முஸ்லிம்களிடமும் மலிந்து காணப்படுகின்றன. இதை எதிர்த்து இலங்கையில் பிரச்சாரம் செய்வோரையும் வஹ்ஹாபிகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

நாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்கவில்லை! அவர் சொன்னதில் குர்ஆன் சுன்னாவுக்கு உட்பட்ட சரியான விடயங்களை மட்டும்தான் சொல்கிறோம். அவர் சொன்னதாலோ அல்லது அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டதாலோ தர்காக்களை ஒழிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்யவில்லை! மாறாக அவர் சொன்ன விடயங்கள் குர்ஆனிலும் நபிவழியிலும் உள்ளன என்பதால் அதை பிரச்சாரம் செய்கிறோம். ஒரு வேளை இது போன்ற கொடிய இணைவப்புகளை அவர் ஆதரித்திருந்தால் அவரையும் சேர்த்தே நாம் விமர்சித்திருப்போம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வஹ்ஹாபிசத்தை இஸ்லாமிய அடிப்படைவாதமாக சித்தரிக்க துவங்கியிருக்கிறார்கள். அடிப்படை வாதம் என்பதை மேலுள்ள இலக்கணத்தின் படி சொன்னால் நாம் அடிப்படைவாதிகள் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம். இந்த இலக்கணத்தின் படி முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்கள் கூட அவர்களின் மதத்தில் அடிப்படைவாதிகள்தான்!


ஆனால் இதற்கு மாற்றமாக தீவிரவாதம் போன்று சித்தரிப்பார்களானால் அது அவர்களது அடிமட்ட அறியாமையையே காட்டுகிறது. வரலாற்றிலேயே முதன் முதலாக அடிப்படைவாதம் என்று சொல்லப்படும் Fundamentalism எனும் சொல் 1900ஆவது ஆண்டுகளில் அமெரிக்க புரோட்டஸ்ட்டன்டுகளுக்கு பாவிக்கப்பட்டது. அதன்பிறகுதான் இந்த சொல் இந்த உலகம் முழுவதும் பரவியது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்லும் வஹ்ஹாபிசமோ 18ம் நூற்றாண்டில் பரவியது. அடிப்படைவாதம் என்ற சொல் வழக்கிற்கு வருவதற்கு முன்பிருந்தே வஹ்ஹாபிசம் உலகில் இருந்து வருகிறது. காலத்தால் முந்திய ஒன்றுக்கு காலத்தால் பிந்திய அர்த்தம் கற்பிப்பது எவ்வளவு பெரிய அறிவிலித்தனம் என்பதைக் கூடவா இந்த அதி மேதாவிகளுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை?

இது இவர்கள் எந்தளவுக்கு கடைந்தெடுத்த அறிவிலிகள் என்பதையே காட்டுகிறது.

இன்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்று கூவித்திரியும் சில புத்த பிட்சுகள் அக்மார்க் உண்மையான கருத்துப்படி அடிப்படைவாதிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது! புத்தரின் போதனைகளை ஏற்று நடப்பதாக சொல்லிக்கொண்டு புத்தர் சொன்ன அதி உன்னத போதனைகளை பேணி போதிப்போராக தம்மை அடையாளங் காட்டிக்கொள்வோர் தாங்கள் புத்தர் சொன்ன விடயங்களை உறுதியாக நம்பவில்லையா? அதை பிரச்சாரம் செய்யவில்லையா?

இந்த உலகில் அன்பு ஒன்றே நித்தியமானது! அனைத்து அங்கிகளுக்கும் காரூண்யம் காட்ட வேண்டும் என்று ஜீவ காரூண்யம் பேசுவோர் அந்த கொள்கையில் உறுதியற்றுதான் இருக்கிறர்களா?

இந்த உலகில் உருவான, உருவாகியுள்ள அனைத்து இன்னல்களுக்கும் காரணம் மனிதனின் ஆசைதான். அந்த ஆசையை துறந்துவிட்டாலே உலகம் நல்ல நிலைக்கு வந்துவிடும் என்றும் அந்த ஆசையை துறக்க எட்டு விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற புத்தரின் போதனைக்கேற்ப இந்த புத்த பிட்சுகள் செயற்படவில்லையா? அப்படியானால் இவர்களும் அடிப்படைவாதிகள்தானே…! அப்படியானால் இந்த புத்த பிட்சுகளும் ஆபத்தானவர்களா? இலங்கையை சின்னாபின்னமாக்கும் தீய கொள்கையைக் கொண்டவார்களா?

இந்த அடிப்படை வாதம் தவறா?

இஸ்லாமிய அடிப்படை கருத்துக்களை முஸ்லிம்கள் பின்பற்றி நடப்பது குற்றமா? இதனால் யாராவது நஷ்டமடைந்து விடப்போகிறார்களா? இதனால் தீவிரவாதம் வளர்ந்து நாடு சின்னாபின்னமாகிவிடுமா? ஒரு தவறுமற்ற ஒரு விடயத்தை எதற்காக தூக்கிப்பிடிக்க வேண்டும்? எதற்காக இன முரண்பாடுகளை தோற்றுவித்து அதில் குளிர்காய வேண்டும்?

ஒரு காலஸ்ட்ரோல் நோயுள்ளவரிடம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு உண்ணக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் 2 கிலோமீட்டர் வாக்கிங் செல்ல வேண்டும்; உடலை வருத்தி வேலை செய்யுங்கள்; குறைவாக சாப்பிடுங்கள் என்று ஒரு வைத்தியர் ஆலோசனை சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

தனது உடல் நலத்தில் ஆரோக்கியமுள்ள அந்த நபர் இதை கடும் முயற்சி செய்து சரியாக பின்பற்றி நடந்து கொண்டு இருக்கும்போது அவரது நடவடிக்கையை பார்த்துவிட்டு இன்னுமொருவர் இவர் சரியான அடிப்படைவாதி! இவருக்கு சொல்லப்பட்டதை அப்படியே பின்பற்றுகிறார். இவர் (வைத்தியரது கருத்துக்களை ஏற்று அதில் உறுதியாய் இருப்பதால்) ஒரு வைத்தியவாதி! என்று விமர்சனம் செய்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்த வாதம்.

இவ்வாறு விமர்சிப்பவர் அந் நபரின் செயற்பாட்டில் குறை காண, இவர் காலையில் எழுந்து ஓடுவதால் மக்கள் இவர் ஓடுவதை பார்த்து சுனாமி வருகிறதோ என்றஞ்சி அவர்களும் இவருக்கு பின்னால் ஓடுகிறார் என்று அளந்துவிட்டால் அது சரியாகுமா? (இவ்வாறு சொல்பவர்களை பைத்தியவாதி என்றுதான் நாம் சொல்ல வேண்டிவரும்.) இதை அறிவுள்ள எந்த மனிதாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை மாற்று மத சகோதரர்கள் சற்று நடுநிலையுடன் சிந்தித்துப் பார்த்தால் இந்த குற்றச்சாட்டிலுள்ள அபத்தமும் அறியாமையும் பளிச்சென்று தெரியும்

அப்படி இந்த அடிப்படைவாத முஸ்லிம்கள் இலங்கையில் என்ன தவறுகளை செய்கிறார்கள் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் விளக்கம் தாங்கமுடியவில்லை! அந்தளவுக்கு அபத்தமிகுந்ததாய் இருக்கிறது.

இந்த அடிப்படைவாத முஸ்லிம்கள் சவூதியில் இருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பெரிய அளவில் பள்ளிவாசல்களை கட்டிக்கொண்டு அடிப்படைவாதத்தைபோதித்து வருகிறார்கள் என்பதே அந்தக் குற்றச்சாட்டு! இதைக் கேட்கும்போது அவர்களை பார்த்து சிரிப்பதா? அல்லது அழுவதா என்று புரியவில்லை!

இது எவ்வாறு உள்ளது என்றால் மேலே சொன்ன அந்த காலஸ்ட்ரோல் நோயாளியின் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். குறித்த அந்நோயாளி தன்னைப்போலுள்ள ஏனைய காலஸ்ட்ரோல் நோயுள்ளோரைப்பார்த்து எனக்கு ஒரு வைத்தியர் இன்ன இன்ன ஆலோசனைகளை சொன்னார். அதை கடைபிடித்தால் எனது உடல் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னர் இருந்த குருதியமுக்கம் குறைந்து சீரான நிலைக்கு வந்துள்ளது. உடல் எடை குறைந்துள்ளது. நல்ல நிலையை உணர்கிறேன். அதை நீங்களும் கடைப்படித்துப்பாருங்கள். உங்களுக்கும் நல்ல பலனை நிச்சயம் தரும் என்று ஆலோசனை கூறுகிறார். இதை யாராவது தவறு என்பார்களா? அல்லது இதை பாராட்டுவார்களா?

இதுபோலத்தான் இந்த அடிப்படை வாதமும் அமைந்துள்ளது. மனித குலத்துக்கு ஒரு சிறந்த வழியை இஸ்லாம் கற்றுத் தருகிறது என்று நாம் அதை பின்பற்றுகிறோம். அதை எம்மளவில் மட்டும் வைத்துக் கொள்ளாமல் இந்த நல்ல வழியை ஏனைய முஸ்லிம்களையும் பின்பற்றச் சொல்லி போதனை செய்கிறோம். மாற்று மதத்தினருக்கும் எடுத்துச் சொல்கிறோம். அவர்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட நல்ல விடயங்களின் பால் கவரப்பட்டு ஏற்று அவர்களும் முஸ்லிம்களாக வாழ முன்வருகிறனர். இது குற்றமாகுமா? இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

நாம் என்ன ஆயுத முனையில் மக்களை மிரட்டியா இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றச் சொல்கிறோம்?

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சவூதியிலிருந்து பணம் பெறுகிறதா?

இதுபோன்ற அபத்தங்களை அறிவுக்கு பொருந்தாத வெற்றுக் கூச்சல்களை போடும் சிங்கள-பௌத்த பேரினவாத அமைப்புகளில் ஒன்றான பொது பல சேனா, சில அமைப்புகளை சுட்டிக்காட்டி இவர்கள்தான் பிரச்சினைக்குரிய அமைப்புகள்! இவர்கள் சவூதியிலிருந்து பணம் பெற்று பள்ளிவாசல்களை கட்டுகின்றனர் என்று ஒரு பட்டியல்போடுகின்றனர். அதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றனர். இவர்களது ஆய்வுத்திறன் எந்தளவுக்கு உள்ளது என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த போலி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முன் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்று நாட்டில் அடிப்படை வாதத்தை (?) தூண்டுகிறார்கள் என்று தூற்றித்திரியும் பொது பல சேனா என்ன செய்ய வேண்டும்?

தங்களது அனைத்து நடவடிக்கைகளுக்கும் பௌத்த சிங்கள மக்களிடமிருந்து நிதியுதவி பெற வேண்டும். அதுதான் நியாயம். ஆனால் என்ன செய்வது? அண்மையில் காலி நகரில் பொது பல சேனாவுக்கு சொந்தமான ஒரு பௌத்த கேந்திர மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜேர்மன் நிதி உதவி வழங்கியது.

ஜேர்மன் தற்போது இலங்கையில் புதிதாக சேர்க்கப்பட்ட மாகாணமா? அல்லது அந்த நாடு முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மக்கள் வாழும் பௌத்த நாடா? இவர்களுக்கு எப்படி ஜேர்மன் நிதி உதவி செய்யும்?

முஸ்லிம்கள் முஸ்லிம்களிடமிருந்ததான் நிதி பெறுகின்றனர். ஆனால் இவர்கள் கிறிஸ்தவர்களிடமிருந்து நிதி உதவி பெறுகின்றனர். வெளிநாட்டிலிருந்து நிதியைப்பெற்று பௌத்த கேந்திர நிலையம் அமைத்து தங்களது வாதத்தை பரப்பும் பொது (ஜேர்மன்) பல சேனா அப்பாவிகளாம்! வெளிநாட்டு முஸ்லிம்களிலிருந்து நிதியைப்பெற்று இஸ்லாமிய கேந்திர நிலையம் (பள்ளிவாசல்) அமைத்து தங்களது மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாம்; தீவிரவாதிகளாம்.! C மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல்தான் இவர்களது வாதம் உள்ளது. இதில் எள்ளின் முனையளவு நியாயமிருக்கிறதா என்பதை சற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து முஸ்லிம்கள் பணம் பெறுவதால் இலங்கையின் இறைமை பாதிப்படைந்துவிட்டதா? அல்லது அதன் மூலம் முஸ்லிம்கள் பில்லியனராக மாறிவிட்டனரா? அவ்வாறு இருந்தால் இந்தக் குற்றச்சாட்டை சொல்லாம். மாறாக தங்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகிறது. வறிய மக்களுக்கு வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அனாதைகளை பராமரிக்க பயன்படுகிறது! இதில் என்ன தேசத்துரோகம் உண்டு?


புத்த விகாரைகளை இடித்துவிட்டா பள்ளிவாசல்கள் கட்டினார்கள்?

இவ்வாறு சில இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதிகளை பெற்று பள்ளிவாசல்களை நிர்மாணிக்கின்றனர் என்பது உண்மை! மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எந்தவொரு நிதி நிருவனங்களிடமிருந்தோ அல்லது அரசாங்கமிடமிருந்தோ எந்தவொரு நிதி உதவியும் பெறுவது இல்லை! அதை தனது அமைப்பு விதியாகவே வைத்துக்கொண்டு செயற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இவ்வாறு பணம் பெறும் அமைப்புகளை விமர்சித்தும் வருகிது. காரணம் இதன் மூலம் அழைப்புப்பணி பின்தள்ளப்படுவதும் பல ஊழல் நடைபெறுவதும்தான். ஆனால் இந்த பொது பல சேனா அமைப்போ அதை ஓர் தேசத்துரோகம் போன்றும் இனவாதம் போன்றும் சுட்டிக்காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கோணல் புத்தியும் குறுக்குப் பார்வையும்

இவர்களது இந்த இனத்துவேசத்தை மூடி மறைக்க தாங்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரானவர்கள் அல்ல! மரபு முஸ்லிம்களை நாம் எதிர்க்கவில்லை! மாறாக சில அடிப்படைவாத (?) இஸ்லாமிய அமைப்புகளின் நடவடிக்கைகளைத்தான் நாம் எதிர்கிறோம் என்று கதைவிட்டுக்கொண்டு தப்பிக்க பார்க்கின்றனர்.

இவர்களது கூற்றில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்லும் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு எதிராகவே இவர்கள் நடக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?

இவர்கள் பிரதான பிரச்சினையாக தற்போது நாட்டில் ஏற்படுத்தியது ஹலால் பிரச்சினைதான். இந்த ஹலால் விடயத்தில் இவர்களால் குற்றம் சாட்டப்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வஹ்ஹாபிய அமைப்பா? அடிப்படைவாதிகள் மட்டும்தான் இந்த ஹலால் விடயத்தில் ஈடுபடுகின்றனரா?

தற்போது தயார் நிலையிலுள்ள அடுத்த பிரச்சினை முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப். இந்த ஹிஜாப் இலங்கையில் அடிப்படைவாதிகள் ஆரம்பித்துவைத்ததா?

முஸ்லிம்கள் செய்யும் கத்னாவையும் தடை செய்ய வேண்டுமாம். கத்னா முஸ்லிம் அடிப்படைவாதிகள் மட்டும்தான் செய்கின்றனரா? மரபு முஸ்லிம்கள் கத்னா செய்வதில்லையா?

இதன் மூலம் இவர்கள் எதிர்ப்பது இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்தான்.

அதுமட்டுமல்ல அண்மையில் ஒரு பேரினவாத அமைப்பு மஹரகம நோலிமிட் ஆடையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதே அந்த நோலிமிட் என்ன இஸ்லாமிய அடிப்படைவாதியின் வியாபார நிறுவனமா?

இதுபோல் இவர்களது மிலேச்சத்தனமான போக்கிரித்தனங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக இருந்தும் கூட, நாம் அடிப்படைவாத வஹ்ஹாபியர்களைத்தான் எதிர்க்கிறோம் என்பது கடைந்தெடுத்த கயமைத்தனம் இல்லையா? இலங்கை மக்களை் அனைவரையும் கூமுட்டையாக்கும் இந்த அறிவுக்கொளுந்துகள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே தாங்கள் மட்டும்தான் அறிவாளிகள் என்றா?

இதுவெல்லாம் இவர்கள் கோணல் புத்தியினால் பார்க்கும் குறுக்குப் பார்வையில்லையா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நிலைமை இவ்வாறு இருக்க இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று பதில் சொல்லப் புகுந்த நமது முஸ்லிம் அரசியல் பெருந்தகை ஒருவர் இஸ்லாத்தில் அடிப்படைவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை! இஸ்லாம் நடுநிலையை சொல்கிறது என்று கூறியுள்ளார். எந்த ஒரு விடயத்தையும் அலசி ஆராயந்து ஆய்வு செய்து சொல்லும் தன்மை அறவே அற்ற இவர் தனது கூர்மையான (?) அறிவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்லாத்தில் நடுநிலையை போதிக்கிறது என்று சொல்பவர் நடுநிலை என்றால் என்ன என்றாவது சொல்லியிருப்பாரா? அவ்வாறு விளக்காவிட்டால் நடைமுறையில் நடுநிலை என்று எதை மக்கள் கருதுவார்களோ அதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது என்று கருதுவர்.

இவர்கள் நடுநிலை என்றால் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்?

தான் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு மார்க்கத்துக்கு முரணான விருந்துகளில் அரசியல் என்ற போர்வையில் கலந்து கொண்டு அன்னிய நாட்டு பெண்களோடு கலக்கல் குத்தாட்டம் போடுவதா? (இவ்வாறு கலக்கல் குத்தாட்டம் போட்டவர்தான் மேற்படி நடுநிலை விளக்கம் கொடுத்துள்ளார்) அல்லது ஏதாவது ஒரு விடயத்துக்கு தீர்வு காண ஒன்று கூடும் போது குறித்த குறித்த விடயம் சரியா? தவறா? என்று கேட்கும் போது இந்த இரண்டில் எதைச் சொன்னாலும் நமக்கு இடைஞ்சல் வரும் என்று நடுநடுங்கி நான் நடுநிலை வகிக்கிறேன் என்று சொல்லி நழுவுவுதை இஸ்லாம் நடுநிலை என்கிறதா?

இஸ்லாம் சொல்லக் கூடிய நடுநிலையை விளக்குவது இக் கட்டுரையின் மையக் கரு அல்ல நடுநிலை என்பதை சுருக்கமாக சொல்வதானால் எந்த ஒரு விடயத்தியிலும் உண்மையின் பக்கம் சார்ந்திருப்பது நடுநிலை! எந்தவொரு விடயத்திலும் வரம்பு மீறாதிருப்பது நடுநிலை! இந்த நடுநிலையைத்தான் இன்றைய அறிவுலகம் அடிப்படைவாதம் என்று விளிக்கிறது! அதை்தான் பொது பல சேனா போன்ற பொறாமை பிடித்த அமைப்புகள் தவறாக சித்தரித்து காட்டுகிறது என்பது மேற்படியாருக்குப் புரியாததால்தான் இப்படி கதை விட முடிகிறது. இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான இனப்பிரச்சினை வலுப்பெற்று வருவதற்கு இது போன்ற முதுகெலும்பற்ற முஸ்லிம் அரசியல் பெருந்தகைகளும் ஒரு காரணம் என்பது மிக்க வருத்தத்துக்குரியது.

இந்த குற்றச்சாட்டிற்கு என்ன காரணம்?

காலஸ்ட்ரோல் நோயிலிருந்து விடுபட கொழுப்புணவு வகையை விட்டு ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு காலஸ்ட்ரோல் நோயிலிருந்து விடுபட்டவர் சொல்லும்போது அதை கேட்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் தனது பிழைப்பில் கை வைத்துவிட்டானே என்று சீறிப்பாய்வர். அவனை சீண்டிப் பார்ப்பர். வெளியுலக்க்கு பசப்பு வார்த்தைகளை காட்டுவர்.

அதுபோலத்தான் இஸ்லாத்தின் அற்புதக் கொள்கைகளால் கவரப்பட்டு பல பௌத்த மக்கள் சில பௌத்த துறவிகள் உட்பட இஸ்லாத்தில் நுழைகின்றனர். இஸ்லாத்தில் மதத்தின் பெயரால் எந்த சுரண்டலையும் செய்ய முடியாது! இம்மார்க்கத்தில் புரோகிதத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதும் இதன் சமத்துவமும் சரியான வழிமுறையும்தான் காரணம்.

இதைப் பொறுக்க முடியாத, இதன் மூலம் தங்களது பிழைப்பில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் ஏற்பட்ட கொதிப்பும் கொந்தளிப்பும்தான் முஸ்லிம்களுக்கெதிராக இதுபோன்ற துவேசப் பிரச்சாரத்தை மேற்கொள்ள காரணம். அதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் ,வஹ்ஹாபிசம் போன்ற கதையாடல்கள் கவசமாக உள்ளது.

முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்று சொல்வது வரவேற்கத்தக்கதா?

பொதுவாக எந்தவொரு நல்ல வார்த்தையாக இருந்தாலும் அதை பாராட்டும் நோக்கில் சொல்வதில் தவறு இல்லை. அதையே கிண்டல் பாணியிலோ அல்லது கேவலப்படுத்தம் பாணியிலோ பயன்படுத்துவதை தன்மானமுள்ள எந்தவொரு மனிதனும் சகித்துக் கொள்ள மாட்டான்.

உதாரணமாக ஒரு மாணவன் நன்கு படிக்கிறான் என்றால் அவனை நன்றாகப் படிப்பவன் என்று பாராட்டுவதில் தவறு இல்லை! மாறாக அவன் மீது உள்ள காழ்ப்புணர்வினால் இவன் நன்றாக படிக்கிறான் என்று வேறு பாணியில் சொல்வதை அவனால் சகிக்க முடியாது.

அதுபோலத்தான் இந்த அடிப்படை வாதி என்ற பட்டமும் அமைந்து இருக்கிறது.

அடிப்படைவாதிகள் என்பதன் கருத்து சரியாக இருந்தாலும் வரலாற்றில் அது ஒரு வேறு ஒரு முத்திரை குத்துவதற்குத்தான் பாவிக்கப்படுகிறது. இதனால் இந்த வாசகத்தை யாரும் ஏற்றுக்கொண்டதில்லை!

தற்போது இலங்கையில் பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் கூட தற்போது பௌத்த கடும்போக்கு வாதத்தை (அவர்கள் வாதப்படி அடிப்படைவாதத்தை) போதிக்கிறார்கள். இதனால் நமது பங்குக்கு அவர்களை பௌத்த அடிப்படை வாதிகள் என்று விமர்சித்தால் அவர்களால் சகிக்க முடியாது.

இதுபோன்றுதான் நமது நிலையுமுள்ளது.

அடிப்படைவாதிகள் என்று சொல்வது நம்மை பாரட்டுவதற்கல்ல! நம்மை தேசத்துரோகிகள் போன்றும் இனத்துவேசிகள் போன்றும் சித்தரிப்பதற்காகவே இவ்வாறு நம்மை விமர்சிக்கின்றனர் இதை ஒருக்காலும் அனுமதிக்க இயலாது.

இந்த வகையில் நம்மை அடிப்படைவாதிகள் என்று விமர்சனம் செய்தால் அது ஒரு கடைந்தெடுத்த அடிமுட்டாள்த்தனமான அறியாமை வாதம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வஹாபிய தீவிரவாதம், வஹாபிய அடிப்படைவாதம் என்று கூச்சலிடுவோர் பற்றியும், வஹாபிசம் பற்றியும் மேலதிகமாக அறிந்து கொள்ள இங்கு க்லிக் செய்யவும். - இப்னு அப்துல்லாஹ்

SOURCE: http://rasminmisc.com/fundamentalism-and-islam/

மேலும் படிக்க... Read more...

அமைச்சர்களின் ஒரு மதிய சாப்பாடு பில் ரூ87,020..! அம்மாடியோவ்!

>> Thursday, April 11, 2013

வறட்சியை பார்க்க போன தமிழக அமைச்சர்களின் ஒருநேர மதிய சாப்பாடு பில் ரூ87,020..!

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியைப் பார்க்க சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவின் மதிய உணவு செலவு மட்டும் ரூ87ஆயிரத்து 20.. இதை உள்ளாட்சி அமைப்புகள் பகிர்ந்து கொண்டு டிடி அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்.

போதுமான பருவமழை இல்லை.. இதனால் தமிழக மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வறட்சி நிவாரணக் குழு பார்வையிட்டு வருகிறது

இக்குழுவினர் கடந்த 16-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதியில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு ராமநாதபுரத்துக்கு சென்றனர்.

சிவகங்கையில் இளையான்குடியில் மட்டும் வறட்சியை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினரின் மத்திய உணவு பில் தொகை ரூ87 ஆயிரத்து 20 என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தொகையை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை தலா ரூ2,417, நகராட்சிகள் தலா ரூ9,670 தொகையை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை என்ற பெயருக்கு டிடி எடுத்து உடனே அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வறட்சியைப் பார்க்க போன அமைச்சர்களின் ஒருநேர சாப்பாடு பில் சுமார் 1 லட்சமா? என்னத்த சொல்றது!!

THANKS TO SOURCE: http://tamil.oneindia.in/news/2013/04/10/tamilnadu-drought-committee-ministers-cost-1-lakh-173208.html

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் கதறக்கதற வெட்டிச் சாய்க்கும் பௌத்த காவிகள்.

>> Wednesday, April 10, 2013

அன்பே அடிப்படையான‌ பௌத்த தேசம் என அடையாளப்படுத்தப்பட்ட மியன்மார் நரமாமிச வேட்டையாடும் அரக்கத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் திகழ்கிறது.

Evil Buddhist Terrorists continue Killing Muslims!


மியன்மார் முஸ்லிம்களின் முழுமையான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை காவி உடை தரித்த பௌத்தர்களால் இராணுவ – அரசியல் பின்புலத்துடன் முஸ்லீம்களை கதறக்கதற வெட்டிச் சாய்த்தும், உயிருடன் சுட்டெரித்தும், கற்பழித்தும் கொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் உயிர்களின் எண்ணிக்கை இற்றை வரை 50 ஆயிரத்தை அண்மித்துவிட்டது..

மியான்மாரின் முஸ்லிம்கள் பௌத்த அடிப்படைவாதத்தின் பிடியில் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளுக்கு உட்பட்டு சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகி உயிரை கையில் பிடித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

Massacre of Muslims in Burma _and the World is silent


மியான்மாரின் முஸ்லிம்கள் பௌத்த அடிப்படைவாதத்தின் பிடியில் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளுக்கு உட்பட்டு சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகி உயிரை கையில் பிடித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

மியன்மாரில் கடந்த சில நாட்களாக பெரும்பான்மை பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் அப்பாவி முஸ்லிம்கள் மீது தொடுத்த கொலைவெறி தாக்குதல்களை அம்பலப்படுத்தும் புகைப்படங்களே இவை.

சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள இப்புகைப்படங்கள் அல்லாஹ்வின் இல்லம் தீமூட்டப்பட்டு பற்றியெறிவதையும், முஸ்லிம்கள் உயிருடன் தீமூட்டப்பட்டு அவர்களின் உடல்கள் தீயில் கருகி காணப்படுவதையும் நமக்கு எடுத்துச்சொல்கிறது.

படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டி தாக்குதலை கண்டிப்போம். முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தர்களின் இந்த இனவெறி குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்தவோம்.

THANKS TO: Jaffna Muslim

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP