**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கண்ணீரில் முஸ்லீம் சமூகம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்?

>> Sunday, February 12, 2012


முஸ்லீகளின் வாழ்வு உரிமை போராட்டம். அடித்தாலும் அழக்கூடாத சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்கள்.

இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்
முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. VIDEO

அப்பட்டமான உண்மைகள்.video

'PIRAPPURIMAI'
ஆளூர் ஷாநவாஸ் இயக்கிய 'பிறப்புரிமை'

கண்ணீரில் முஸ்லீம் சமூகம்:
“விடியுமா? தெரியல வேதனை தீரல‌”

இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக‌ ஏங்கி காத்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

நாட்டிற்காக‌ சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற‌ மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த‌

இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம் .

நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத‌
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில்
இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.
தயவு செய்து இந்த‌"கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாத்தில் ஜாதி, வர்ணாஸிரமம் இல்லையே !! ஏன்?

>> Thursday, February 9, 2012

“ஜாதியை உருவாக்கியது அல்லாஹ்” என்று விஷவித்தை விதைக்கும் “அறியாஜீவிகளே” !

கேட்பதற்கு இனிமையான, நடைமுறைப்படுத்த முடியாத வறட்டு தத்துவம் என்று இதை நினைத்து விடக் கூடாது.

ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.

இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள். அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை.

எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.

வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்களும் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்துங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்தச் சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?
அவர்களை இப்படி உருவாக்கியது எது?

எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?

லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.


இஸ்லாத்தில் சாதி (ஜாதி) உண்டா? இஸ்லாத்தில் சாதி (ஜாதி) இல்லை.!!

இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லை - வங்கி அதிகாரி மோகன கிருஷ்ணன் சென்னை வாக்குமூலம்.

இஸ்லாத்தில் சாதி இல்லை என மோகன கிருஷ்ணன்


இஸ்லாத்திலும் ஜாதி முறை இருப்பது சரியா? இஸ்லாத்தில் ஜாதி உண்டா?


"மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்." 49:13
 என்ற‌ திருகுரான் வ‌ச‌ன‌த்தை


தவறாக திரித்து “ஜாதியை உருவாக்கியது அல்லாஹ்” என்று விஷவித்தை விதைக்கும் “அறியாஜீவிகளே” !
விடியோவை செவிமடுத்து விளக்கம் பெறுங்கள்.


தனித்து விளங்கும் இஸ்லாம். நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்.

சொடுக்கி >>>> இஸ்லாம் வெறுக்கப்பட வேண்டுமா? எதை மறுக்க? எதை ம‌றைக்க? - சிந்திக்க. - அறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் பார்வையில் இஸ்லாம். . <<<< படியுங்கள்
**********************

தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய‌ விஞ்ஞான கண்டுபிடிப்புகள். !!!

>> Thursday, February 2, 2012

இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குரானில் 1400 வருடங்களுக்கு முன்பே அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது.
குர்ஆனின் அற்புதங்கள்

இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப விருத்தியால் கண்டறியப்பட்ட எத்தனையோ விஞ்ஞான உண்மைகளை அல் குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே அழுத்தமாக சொல்லியிருப்பது அந்த அற்புதங்களில் ஒன்று எனலாம்.


Miracles of the Quran அல் குர்'ஆனின் அற்புதங்கள்.
QURANIN-ARPUTHAM-Miracles-of-the-Quran-Part 1.avi


QURANIN-ARPUTHAM Miracles Of Quran. Part 2.


QURANIN-ARPUTHAM-Miracles-of-the-Quran-Part 3.


QURANIN-ARPUTHAM Miracles Of Quran. Part 4.


QURANIN-ARPUTHAM-Miracles-of-the-Quran-Part 5.


QURANIN-ARPUTHAM-Miracles-of-the-Quran-Part 6.


QURANIN ARPUTHAM Miracles-of-the-Quran Part 7


QURANIN ARPUTHAM Miracles-of-the-Quran Part 8

*************


Miracle of The Qur'an- Mathematical discovery! must see

*************


குரான் எப்படி பாதுகாக்கப்பட்டது?


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP