காதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா?
>> Monday, April 14, 2008
காதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா? நிறைய கண் மருந்துகளில் அவற்றை காதுகளுக்கும் போடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே அது ஏன்?
சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் கண்நோய் நிபுணர் டாக்டர் ஜெய்சங்கர்.
‘‘பொதுவாகப் பார்த்தால் நம் உடல் உறுப்புகளில் மிகவும் சென்ஸிடிவானது கண்தான்.
அதனால் அதற்குத் தயாரிக்கும் மருந்துகளை நீங்கள் மற்ற உறுப்புகளில் பயன்படுத்தும்பொழுது பிரச்னைகள் இராது.
அதற்காக கண்களுக்குப் போடும் எல்லா மருந்துகளையும் காதுகளுக்குப் போடலாம் என்று அர்த்தமில்லை...
பெரும்பாலும், ‘கண் அல்லது காதுகளுக்குப் பயன்படுத்தலாம்’ என்ற குறிப்புடன் வரும் மருந்துகள் ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக் கொல்லிகளாகத்தான் இருக்கும்.
‘சிஃப்ரான்’, ‘ஒஃபிளாக்ஸ்’ போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் ‘காது அல்லது கண்’ என்ற குறிப்புகளுடன் வரும்.
இதற்கு மற்றொரு காரணம் கண்களும் சரி; காதுகளும் சரி... ஒரே விதமான பாக்டீரியாக்களினால் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதுதான்.
இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளலாமே தவிர,
மருத்துவரின் ஆலோசனையின்றி விஷப்பரீட்சையில் எல்லாம் இறங்கிவிடக்கூடாது.’’. Nandri to : INTERNET.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment