**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? கொடுமைப்படுத்துகிறதா? ஹிஜாப் (பர்தா)

>> Thursday, September 20, 2012

நீ ரதியாய் இருப்பதனால் நாலடியில் உடை உடுத்தி நடு வீதியிலே நடப்பதிலே இல்லையடி பெண்ணுரிமை !

அறியாமையின் காரணமாகவோ வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரியிறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகிவிட்டது.
தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை?

அவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறை நிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.

மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையும் கருத்துக் குருடர்களின் நியாயமற்ற போக்கும் முஸ்லிம் பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

பொருத்தமான சில கட்டுப்பாடுகளுடன் முஸ்லிம் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை! அதற்காக அவர்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது அபத்தம்.

இஸ்லாத்தில் சில சட்டங்கள் ஆண் பெண் இருபாலாரையும் கட்டுப்படுத்துகிறது.

இன்னும் சில சட்டங்கள் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.

வேறுசில சட்டங்களோ பெண்களின் உரிமைகளை உறுதிசெய்து ஆண்களை கட்டுப்படுத்துகிறது.

இஸ்லாத்திற்கும் மாற்றுமதக் கொள்கைகளுக்கு இடையிலுள்ள அடிப்படை வேறுபாடுகள் இவைதான்.

இந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூத, கிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது.

பெண்: •

ஆன்மா இல்லாதவள், • பிறப்பால் இழிவானவள், • ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள், • விவாகரத்து உரிமையற்றவள், • மறுமணத்திற்கு தகுதியற்றவள், • வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள், • வேதம் படிக்க அருகதையற்றவள், • மாதத்தீட்டால், பிரசவத்தீட்டால் அசிங்கமானவள், • ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள்.
----------------
போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு,

இஸ்லாமியச் சட்டபுத்தகமான திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

இஸ்லாத்தினைக் குறை கூற முற்படுமுன் தங்களது வழிபாட்டிற்குரிய மதங்கள் என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விடுவர்.

பிறப்பதில் உள்ள உரிமை! பெண்குழந்தை என்றால் சிசுவிலேயே அழித்துவிடுவதையோ அல்லது பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதையோ இஸ்லாம் மிக வன்மையாக எதிர்க்கிறது.

பெண்குழந்தை பிறந்தால் உண்மையான முஸ்லிம் அதனை ரஹ்மத் (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று சந்தோஷப்படுவர்.

பெண்ணுக்கு வயது வந்தவுடன் பொருத்தமான மணமகனைத் தேடித் திருமணம் செய்யும்போது பெண்களுக்குரிய மஹரைக் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள் என்பது இறைக்கட்டளையாகும் (காண்க அல்குர்ஆன் 4:4)

பெண்ணுரிமை பேசுபவர்களும் இஸ்லாமிய ஆர்வலர்களும் இஸ்லாத்தின் முழு பரிமாணத்தையும் விளங்காத முஸ்லிம்களும் உண்மையான பெண்ணுரிமை இஸ்லாத்தில் ஏற்கனவே தெளிவாக்கப் பட்டிருப்பதை உணர்ந்து தெளிந்திட வேண்டும்.

வல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக! - ஆக்கம்: சகோதரி. ஜஸீலா

இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனமுள்ளது என்று முனகுவோர் ஏனோ கிறித்துவப் பெண்பாதிரிகளைக் கண்டு கொள்வதில்லை.

இஸ்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கும் அதே கண்ணியமிக்க உடையினைப் பிற மதப் பெண்கள் அணிந்திருந்தாலும் அவர்களது பார்வை இஸ்லாமிய உடைகளின் மீது மட்டும் திரும்புவது, இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

தடித்த கருப்புத் துணியால் உடலைப்போர்த்தச் சொல்லி பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறது இஸ்லாம் என்பவர்கள்,

சினிமா நடிகையரும் பிரபலமான பெண்களும் மோசடி, விபச்சாரம் போன்ற குற்றச்சாடுகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் வரும்போது பர்தா அணிந்து முழுதும் மூடிக்கொண்டு வருவதை வேண்டுமென்றே விமர்சிப்பதில்லை.

சினிமா போஸ்டர்களில் நடிகைகளின் படங்கள் ஆபாசமாகக் காட்டப்பட்டிருந்தால் தார்பூசி அளிப்பதில் மட்டுமா பெண்மையின் கண்ணியம் காக்கப்படுகிறது?

இதுபோல், ஒருசமூகம் கண்ணியத்திற்காக பின்பற்றும் உடையைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டிக்க முன்வர வேண்டும் இப்படியாக, வெவ்வேறு காரணங்களுக்காக பர்தா அணியும் பெண்கள் அதில் கண்ணியமும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பாதுகாப்பும் கிடைப்பதாக உணரும்போது, பர்தாவை எதிர்ப்பவர்களுக்கு எதிர்மறையாகத் தெரிவது ஏன்?

ஐரோப்பிய நாடுகளில் பர்தாவுக்கு எதிரான கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதனைச் சொல்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்!

இவர்கள் பர்தாவின் முன்னோடி கிறிஸ்தவமதம் என்பதை அறியாமல் விமர்சிக்கிறார்கள்.

இயேசுவின் அன்னை மரியம் )அலை..அவர்களை சித்திரமாகக் காட்டும் போதும் (முஸ்லிம்கள் அவ்வாறு காட்டுவதில்லை) நாம் நன்கறிந்த அன்னை தெரஸா போன்ற கிறிஸ்தவ நானிகள் (NUN) பர்தா அணிந்திருப்பதையும் கண்டிருக்கிறோம்.

கடந்த 1960 ஆம் ஆண்டு வரையில் தேவாலயங்களிலுள்ள பெண்கள் தலையை முக்காடிட்டு மூட வேண்டுமென்பது கட்டாயமாக இருந்தது.

பெண்களை பர்தா அணியச் சொல்லும் இஸ்லாம் அதில் அவர்களுக்கு கண்ணியம் இருக்கிறது என்கிறது.

அந்நிய ஆடவர் முன்பு மட்டுமே பர்தா அணிந்து மறைக்கச் சொல்கிறது.

பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது குர்ஆனில் மட்டும் சொல்லப் படவில்லை;

பைபிளிலும் சொல்லப் பட்டிருக்கிறது.

I கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது,

தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. I

கொரிந்தியர் 11:6

ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப் படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.

I கொரிந்தியர் 11:7

புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

 I கொரிந்தியர் 11:10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

 I கொரிந்தியர் 11:13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாத்தில் பெண்கள் முக்காடிட்டு பர்தா அணிய வேண்டுமென்பது எல்லா சூழலிலும் கட்டாயமில்லை!

இஸ்லாம் சொல்லும் பர்தா பெண்கள் கண்ணியப்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவேயன்றி, பைபில் சொல்வதுபோல் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதற்காக அல்ல என்பதை அறிந்து கொண்டால், இஸ்லாமியப் பெண்களின் பர்தா, அடக்கு முறைச் சின்னமல்ல என்பது தெளிவாகும்.

புர்க்கா.. குறைந்துவிட்ட ஆடையால் கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு; மறைக்க வேண்டியவையை மறந்துவிட்டப் பரிதாபம்!

அரைகுறை ஆடையில் எல்லாமே விலகும்; முன்னேறிவிட்டோமென்று முரசுக் கொட்டும் உலகம்! போர்திக்கொண்டுப் போகும் எம் சகோதிரியைக் கண்டு பொறுக்கவில்லையோ பொருக்கி உனக்கு!

ஒழுங்கான ஆடையில் உலா வரும் ஒரேச் சமுதாயம்; படையுடன் வந்து தடைப்போட்டாலும் நடைப்போடமாட்டோம் வீதியிலே; மரணம் வந்தாலும் மானம் காப்போம் தரணியிலே!

வரமாட்டோம் ஒருநாளும் அரைகுறைக்கு

– காலமெல்லாம் கட்டுப்படுவோம் இறைமறைக்கு!! -யாசர் அரஃபாத்

நாங்கள் அணிந்தால் மட்டும்...?

உடையவர் காணும் உடல் உறுப்பை; அந்நியர் காண்பது சரியா; அரித்தெடுக்கும் பார்வைக்காகத் திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம் விரல் தொடத் தூண்டாதா; உணர்ச்சிக்கு உரம் இட்டப் பின்னேப் படித்தாண்டத் தோன்றாதா! பார்வை மட்டும்தானே; அழகைப் பார்க்கட்டும்; என விழிகளுக்கு விருந்து வைப்பது முறையா; பசிக்கும் பார்வைக்கு அணைப்போடச் சொல்லித் திரைப்போடச் சொல்வது சிறையா! மரத்துப்போன மனதினால் மரித்துப்போன வெட்கம்; கறுத்துப் போன உள்ளத்தை மீட்டெடுப்பதில் என்ன தயக்கம்! மற்றவர் அணிந்தால் வாய் மணக்க உரைக்கும் ஒழுக்கமுறை என்று; நாங்கள் அணிந்தால் மட்டும் வாய் குரைக்கும் அடக்கு முறையென்று! கவிதை: யாசர் அரஃபாத்


பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா?


சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?


1 இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! -சகுந்தலா நரசிம்ஹன்


2. புர்கா போட்டுண்டா என்ன? - செல்வி விதூஷ்


3. ; போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு சிந்தி . எது பெண்ணுரிமை?


6. பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம் 


7; இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?


8.ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா

ஆண் பெண் சமத்துவம்
பலதார மணம்
தலாக்
ஜீவனாம்சம்
ஹிஜாப் (பர்தா)
பாகப் பிரிவினை
சாட்சிகள்
அடிமைப் பெண்கள்

ஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது.

சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாளேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.

மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு
இந்நூல் 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ' \ பதில் தருகிறது.
Download this book in pdf. http://www.onlinepj.com/PDF/download.php?file=Islam-Pengal-Urimai.pdf

..

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP