குள்ள குதிரைகள்?...குட்டிக் குதிரைகளை பார்த்திருப்பீர்கள். அதென்ன குள்ள குதிரைகள்?...
>> Sunday, January 14, 2007
குட்டிக் குதிரைகளை பார்த்திருப்பீர்கள். அதென்ன குள்ள குதிரைகள்?...
குதிரைகள் சராசரியாக 6 அடி உயரம் (தோள்பட்டையளவு) வரை வளரும். நல்ல கலப்பினக் குதிரைகள் 7 முதல் 7 1/2 அடி உயரம் இருப்பதுண்டு. ஆனால் இந்தக் குள்ளக் குதிரைகளோ இரண்டு அடி உயரமே இருக்கின்றன.
மேற்கத்திய நாடுகள் பலவற்றில் இந்தக் குள்ளக் குதிரைகளை இன விருத்தி செய்கின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 60 ஆண்டுகளாக குள்ளக் குதிரைகள் இனவிருத்தி செய்யப்படுகிறது.
முதன் முதலில் ஆராய்ச்சிக்காகத்தான் இந்த குள்ளக் குதிரைகளை உருவாக்கினார்கள்;. ஆனால் காலப்போக்கில் இந்தக் குதிரைகளை வைத்து பந்தயங்களை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்;.
அண்மைக் காலமாக குள்ளக் குதிரைகளை பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பயிற்சி யளித்து அவற்றை விற்பனை செய்கிறார்கள்.
சரி, இந்த குள்ளக்குதிரைகள் எப்படி உதவு கின்றன?
பார்வையற்றவர்களை கடை வீதிக்கு அழைத்துச் செல்லும். கடைகளில் வாங்கிய சிறு அளவிலான பொருட்களை சுமந்து செல்லும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது பார்வையற்றவர் காலிங் பெல்லை அழுத்துவதற்கும் இந்தக் குள்ளக் குதிரைகள் கால்களால் கதவுகளைத் தட்டிவிடும். இது போன்ற மொத்தம் 23 கட்டளைகளை திறம்பட ஏற்றுச் செய்யும்.
2000-ல் ஜெனிவா (SWITZERLAND )விலிருந்து பாரிஸ் வழியாக ட்ரெயினில் லண்டனுக்கு பயணித்த பொழுது வழியில் ஆங்காங்கே இந்த குள்ள குதிரைகளை மந்தை மந்தையாக கண்டு நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ந்து வியந்தோம். --வாஞ்ஜூர்
----------------------------------
முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது குர்ஆன் திரிப்புத் திரைப்படம் மூலமாக.
-------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
அண்ணா!
வருடா வருடம் இங்கு நடைபெறும் உலக விவசாயக் கண்காட்சியிலும்; குதிரைகளுக்கான சிறப்புக் கண்காட்சியிலும் இவை பார்வைக்கு இருக்கும். இவை கண்பார்வையற்றோருக்கு உதவுவது எனக்குப் புதிய செய்தி.
Post a Comment