**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

>> Wednesday, January 30, 2013

முஸ்லிம் விரோத  உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

 'விஸ்வரூபம்' பார்த்த இலங்கை முஸ்லிம் அமைப்பினர் விளக்கம்..!

விஸ்வரூபம் குறித்து, படம் பார்ப்பதற்கு முன் என்ன மனநிலை காணப்பட்டதோ, அந்த மனநிலை படம் பார்வையிட்டதன் பின்பு, முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர,

கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் பதிவு செய்வதாக "இலங்கை முஸ்லிம் அமைப்பினர்" தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மனதில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது.


அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

1. இத்திரைப்படத்தின் பெயர் பார்வைக்கு வரும் போது தமிழ் மரபுக்கு மாற்றமாக அரபு எழுத்தணி மரபை பிரதிபலிக்கும் விதமாய் இடமிருந்து வலமாக எழுதப்படுவதை அவதானிக்க முடிகிறது.

2. இவ்வாரம்பமே இத்திரைப்படம் இஸ்லாத்தைக் கருப்பொருளாகக் கொண்டே ஓடப்போகிறது என்பதனை சொல்லாமல் சொல்கிறது.

ஜிஹாத் என்ற அரபுச் சொல் வெறுமனே போராட்டத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிரயோகம் கிடையாது.

உலகத்தில் தாண்டவமாடும் அநீதிகள், அக்கிரமங்கள், தீமைகள் என்பவற்றை வேரடி மண்ணோடு களை பிடுங்கி, நன்மைகளை வாழவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அத்துனை முயற்சிகளும் ‘ஜிஹாத்’ என்ற சொல்லுக்குள் அடக்கும்.

திருக்குர்ஆனும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளும் இதனையே எமக்கு உணர்த்துகின்றன.

இதற்குள் அநீதிக்கெதிராய் ஆட்சியில் இருக்கும் ஓர் அரசு தொடுக்கும் ஆயுதச் சண்டையும் உள்ளடங்கும்.

ஆனால், அர்த்தப் புஷ்டிமிகுந்த ஜிஹாத் என்ற சொல்லை கொச்சைப்படுத்தும் விதமாயும்,

ஆட்சி அதிகாரமற்ற சிறு குழுக்கல் செய்யும் கிளர்ச்சி நடவடிக்கைகளை ஜிஹாத் என்ற சொல்கொண்டு அடையாளப்படுத்துவதன் மூலம் இஸ்லாம் தான் இத்தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டுகிறது என்ற போலித் தோற்றத்தை விதைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, ‘நாம் அல்லாஹ்வுக்காகப் போராடுபவர்கள்’, ‘

நம்மைப் போன்ற முஜாஹிதீன்கள் கண்ணீர் சிந்தக் கூடாது.

இரத்தம் தான் சிந்த வேண்டும்.’ என்ற வாசக அமைப்புகளும்,

தாக்குதல் நடாத்தும் செய்தி கிடைத்தவுடன்

‘இன்னஹ_ வக்துன் லித்தஹாபி இலல் ஜன்னஹ் - இதோ சுவர்க்கம் செல்வதற்கான நேரம் கணிந்து விட்டது’ என்பன போன்ற அரபுப் பிரயோகங்களும்

ஜிஹாத் குறித்த தப்பான புரிதலை விதைக்கும் விதமாய் அமைந்துள்ளமை கண்டிக்கத்தக்க அம்சமாகும்.

3. முஸ்லிம்கள் தங்கள் சிறார்களை வளர்க்கும் போது கூட பிஞ்சு உள்ளங்களில் தீவிரவாத உணர்வை ஊட்டியே வளர்க்கின்றனர் என்ற கருத்து அழுத்தமாய் சொல்லப்படுகிறது.

ஆங்கிலத்தையும் மருத்துவத்தையும் கற்பதை தடை செய்து விட்டு, ஆயுதக்கலையை கற்பதற்கு குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற காட்சி முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்ராயத்தை அதிகரிக்கவே உதவும்.

அதுமட்டு மன்றி கண்களை கட்டி ஆயுதங்கள் குறித்து விசாரித்தாலும் தொடுகை மூலமே இது இன்ன ஆயுதம் தான் என்று சொல்லும் அளவுக்கு சிறார்கள் முஸ்லிம்களால் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்ற காட்சியும்,

விளையாட்டின் போது கூட விரல்களால் சுட்டு விளையாடுவதே வழமை எனும் காட்சிகள் மூலமும் கமல்ஹாஸன் சொல்ல வரும் செய்தி தான் என்ன?

4. முஸ்லிம்கள் தங்கள் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு முன்னால் மாத்திரம் தலை சாய்த்து ‘நாங்கள் உனக்கு மட்டுமே அடிமை. எம்மைப் போன்ற எந்தப்படைப்புக்கு முன்பும் தலை சாய்த்து சுயமரியாதை இழக்க மாட்டோம்’ என்ற உணர்வை உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்தும் இடமே பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடும் சந்தர்ப்பம்.

மன அமைதியையும், சாந்தத்தையும் பயிற்சியாய் தரும் தொழுகை இத்திரைப்படத்தில் இழிவு செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தீவிர வாத தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்பாகவும் தொழுதுவிட்டுத் தான் அத்தாக்குதல்கள் நடாத்தப்படுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழுகை என்ற முஸ்லிம்களின் கடமை தீவிரவாத தாக்குதல்களை ஊக்குவிக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது. அது மட்டுமன்றி, பள்ளிவாசல்கள் எனும் அபய பூமிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்துபவர்களை பயிற்றுவிக்கும் பங்கர்களாக தொழிற்படுவது போன்றும் காட்சியமைப்பு நகர்த்தப்படுகிறது.

இது போன்று சுமார் 6 இடங்களில் இது போன்ற தொழுகை காட்சிக்கும்; தீவிரவாத தாக்குதல்களுக்கும் முடிச்சுப் போடப்படுவதை காணலாம்.

5. முஸ்லிம்களின் ஆடை கலாச்சாரமாய் இன்று அறிமுகமாகியிருக்கும் வெள்ளை நிற நீண்ட அங்கி(ஜூப்பா), தொப்பி, தாடி மற்றும் மீஸான் பலகை, திருக்குர்ஆன் பிரதிகள் போன்றன காட்சிப்படுத்தப்படுவதோடு,

இவ்வாறான தோற்றத்தில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தும் விதைக்கப்படுகிறது.

இதனால் சாதாரண முஸ்லிமை காணும் போதும் இவனும் தீவிரவாதியாய் இருப்பானோ என்ற எண்ணம் பிறருக்கு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

6. இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒழுக்கவாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஆடை முறையே ஹிஜாப் என அழைக்கப்படும். ஒழுக்கத்தை வளர்க்க உதவும் ஹிஜாபை மலினப்படுத்தும் விதமாய் தீவிரவாதிகள் பெண்களின் ஹிஜாப் ஆடையில் முகம் மறைத்துச் சென்று தற்கொலை தாக்குதல் நடத்தும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹிஜாப் என்பது தீவிரவாதத்திற்கு துணை போகும் ஆடை என்ற கருத்து திணிக்கப்படுகிறது.

7. இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் கர்ண கொடூரமானவை என்பது போல் சித்தரிக்கும் காட்சிகளும் உள்ளன.

குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஒற்றனாய் திகழ்ந்த ஒருவன் பிடிப்பட்டவுடன் அவனை தூக்கில் போடும் காட்சியை குறிப்பிட முடியும்.

இதில் அவன் தூக்கில் தொங்கும் போது பின்னணியில் அதான் (பாங்கு சத்தம்) ஒலிப்பது போன்றும், ‘இது இவர்களின் கரங்கள் செய்த வினையே’ என்ற அர்த்தத்தை தரும் குர்ஆன் வசனமும் ஒலிபரப்பப்படுகிறது.

அத்தோடு, இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாய் அல்லாஹ_ அக்பர் என்ற முழக்கத்தை அனைவரும் சொல்வது போன்றும் படம் ஓட்டப்படுகிறது. மேலும், கைதிகளை பிடித்து வந்து கதறக்கதற கழுத்தை வெட்டும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்து கொண்டு, குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டு, லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்தை தாங்கிய பெனருக்கு முன்னிருந்த வண்ணம் இது நடைபெறுகிறது.

இது இஸ்லாத்தை இழிவு படுத்தும் பாதகச் செயலாகும்.

மேலும், தப்பு செய்தவர்களை மல்லாக்காக படுக்க வைத்து பின் புஷ்டியில் சவுக்கடி கொடுக்கும் காட்சியும் வருகிறது. இவை இஸ்லாமிய ஷரீஆ சட்டம் குறித்த குறைமதியாளன் கமல்ஹாசன் பொது மக்களுக்கு இஸ்லாத்தை இழிவு படுத்துவதற்காக காண்பிக்கும் காட்சிகளாகும்.

8. முஸ்லிம் நாடுகளும், அரபு பேசும் தேசங்களும் பயங்கரவாதத்தை உலகெங்கும் விதைக்கும் நாடுகள் என்ற கருத்து பரவலாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக பாகிஸ்தான் போலிஸ் உஸாமாவை சந்தித்து தீவிரவாதத்திற்கு துணை போவது போன்றும், அல்ஜீரியா, நைஜீரியா, யெமன், காஷ்மீர், ஆப்கான் போன்ற தேசங்கள் முற்று முழுதாக பயங்கரவாதத்தை வளர்ப்பதற்காக பல நாடுகளுக்கு பண உதவி செய்வது போன்றும் காட்சிகள் வருகின்றன.

இதன் மூலம் முஸ்லிம்கள் சிறுபான்மையாய் வாழும் நாடுகளுக்கு இது போன்ற ஜிஹாதிய பண உதவிகள் வழங்கப்படுகின்றன என்ற தப்பான பதிவு பரப்பப்படுகிறது.

9. முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார்.

அது குறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் 'தமிழ் ஜிகாதி என்றால் விலையாக 5 லட்சம் அல்ல, 10 லட்சமே கொடுக்கலாம்” என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

10. அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விட்டு வைக்கவில்லை.

அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.

11. பொதுவாக முஸ்லிம்கள் யாரை சந்தித்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையை அனைத்துத் தீவிரவாதிகளும் ஸலாமலைக்கும் என்று பயன்படுத்தும் காட்சி படத்தின் அனைத்துப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது.

12. அதே போல் ஒருவர் தொலை பேசியில் பேசினால் ஹலோ என்று சொல்வார். முஸ்லிம்களாக இருந்தால் ஹலொ அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வார்கள்.

ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்தில் தொலை பேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் பேசி முடித்த பின்னரும் அல்லாஹ{ அக்பர் என்று கூறி முடிக்கின்றார்கள்.

13. முஸ்லிம்கள் என்றால் பெண்களை ஏமாற்றுபவர்களாகவும் சொந்த மனைவியை தீவிரவாதத்தை நிகழ்த்துவதற்காக கூட்டிக் கொடுப்பவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.

14. எந்தவொரு காரியத்தை செய்யும் போதும் சத்தியம் செய்வதற்காக வல்லாஹி – அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று அரபியில் சத்தியம் செய்யும் காட்சி.

15. திரைப்படத்தின் வில்லனாக வருபவன் பெயர் முல்லா உமர் - இவன் இரண்டு வருடங்கள் தமிழகத்தின் கோவை மற்றும் மதுரைகளில் தங்கியதாகவும் தமிழ் ஜிஹாதி தான் தனக்குத் தேவையென்றும் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

16. ஆப்கானிஸ்தான், ஈராக், போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள், சிறவர்கள் அனைவரையும் கொலை செய்த அமெரிக்க இரானுவத்தை பற்றி முல்லா உமர் என்ற தீவிரவாதிகளின் தலைவர் - அமெரிக்க இரானுவம் பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்யமாட்டார்கள் அதனால் பயப்படத் தேவையில்லை. என்று குறிப்பிட்டு அமெரிக்க இரானுவம் மனித நேயமுள்ள இரானுவம் என்ற காட்சி இடம் பெறுகின்றது.

17. தான் கொல்லப்படப் போகின்றேன் என்று அறிந்த ஹீரோ கமல் அதற்கு முன் தொழுவதற்கு அனுமதி கேட்டு தொழும் போது ரப்பனா ஆதினா பீ துன்யா – என்று முஸ்லிம்கள் சொல்லும் துஆவை ஓதும் காட்சி இடம் பெறுகின்றது.

18. அனைத்துக் காட்சிகளிலும் பின்னனி சப்பமாக அல்லாஹ{ அக்பர் என்ற வார்த்தைதான் இடம் பெறுகின்றது.

19. கொலை தொடர்பான காட்சிகள் அனைத்திலும் திருமறைக் குர்ஆனின் வசனங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது.

20. முஸ்லிம்களின் கடைகளில் ஆயுதம் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுவதாக காட்சி அமைந்திருக்கின்றது. காய் கரி கடையில் கூட ஆயுதத்தைத் தான் முஸ்லிம்கள் விற்கின்றார்கள் என்பதே காட்சியின் அமைப்பு.

21. முஸ்லிம்கள் தங்களது தீவிரவாத செயல்களுக்கான வருவாயை ஓபியம் என்ற போதைப் பொருளை விற்றுத் தான் பெற்றுக் கொள்கின்றார்கள்.

முஸ்லிம்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள். இதன் மூலம் தான் இவர்களுக்கு பொருளாதாரம் கிடைக்கின்றது என்று காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

22. இந்தப்படத்தின் மையக்கருவை சொல்லப்போனால்,முஸ்லிம்களும் முஸ்லிம் தேசங்களும் தீவிரவாதத்தின் ஏஜன்டுகள். இவர்கள் பயிற்சி எடுப்பது கூட புஷ் மற்றும் ஏரியல் ஷெரோனின் உருவத்திற்கு குறி வைத்துச் சுட்டுத்தான்.

இதன் மூலம் தீவிரவாதத்தை உலகிலிருந்து துடைப்பதற்காக முழு மூச்சாய் உழைக்கும் நாடுகளே அமெரிக்காவும் இஸ்ரேலும்.

இந்தச் சமாதானத் தூதுவர்களை அழிப்பதற்கு முயலும் தீவிரவாதக் கும்பல்களே முஸ்லிம் தேசத்து மைந்தர்கள்.

இதற்கு இஸ்லாமும் குர்ஆனும் துணை போகின்றன.

இந்தத் தீவிரவாதம் இன்றுபல நாடுகளில் ஊடுறுவி வருகின்றது. அதனை அழிப்பதற்காய் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இது தான் இந்தப்படம் சொல்ல விழையும் செய்தி.

23. இதில் வரலாற்றை திரிவு படுத்தியுள்ளதோடு, அமெரிக்க ஆக்ரமிப்பை எதிர்த்து போராடும் நாடுகளை பயங்கரவாதிகளாய் சித்தரித்திருப்பதோடு, அமெரிக்கா புரிந்த அத்தனை அட்டூழியங்களும் கவனமாய் மறைக்கப்பட்டு அகிம்சை வாதிகளாய் மெருகூட்டப்பட்டுள்ளதானது வரலாற்றுத் துரோகமாகும். இதனை இப்படம் கச்சிதமாய் செய்து முடித்துள்ளது.

எனவே, கூட்டுக்கழித்துப்பார்த்தால் அமெரிக்காவின் பணத்திற்கு அடிமைப்பட்டு கமல்ஹாஸன் நடித்துள்ள நாறிப்போன அமெரிக்காவின் வக்கிரக சிந்தனையின் வெளிப்பாடெ ‘விஸ்வரூபம்’.

வாழ்நாள் தடை செய்க!

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் புண்புடுத்தும் விதமாக மட்டுமன்றி, தப்பாகவும் சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள விஸ்பரூபம் திரைப்படம் இலங்கையில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

பல்லின சமுதாயத்தவர்கள் கூடி வாழும் இலங்கை போன்ற நாட்டில், அதுவும் இன முறண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் எறியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று இத்திரைப்படமும் அமைந்துவிடக்கூடாது.

இதையும் தாண்டி இத்திரைப்படம் வெளியிடப்படுமாயின் இந்நாட்டின் சமூக சகவாழ்வு மற்றும் மத நல்லிணக்கம் சீர்குலைவதோடு, உணர்ச்சிவயப்பட்ட செயற்பாடுகள் மூலம் இந்நாட்டின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

இந்நிலையை கருத்திற் கொள்ளாது இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் எதிரொலிக்கும் விளைவுகளுக்கு இந்நாட்டு அரசே பதில் சொல்ல வேண்டி வரும் என்பதையும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். –JAFNAMUSLIM

ARTICLE SOURCE: http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_2919.html

மேலும் படிக்க... Read more...

விஸ்வரூபம் - சென்சார் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசு பரபரப்புப் புகார்

>> Tuesday, January 29, 2013

இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார். 

இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். 

இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். 

ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார். 

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.  

அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், 

விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. 

அதில் முறைகேடு நடந்துள்ளது. 

இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது.

 அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும். விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. 

அதிலும் முறைகேடு நடந்துள்ளது.

 எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது. 

  நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், 

குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். 

எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.  

பின்னர் கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். 

இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். 

மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை.

 எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும்.

 இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர்.

 எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். 

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 பெருமளவில் போலீஸ் குவிப்பு இதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டு நிற்கின்றனர். 

Posted by: Sudha Published: Tuesday, January 29, 2013, 14:11 [IST] 

ARTICLE SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2013/01/tn-govt-blasts-censor-board-certifying-viswarooopam-168807.html

மேலும் படிக்க... Read more...

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா? ராமதாஸ் தர்மபுரி கலவரத்தை படம் எடுத்தால் ஏற்பாரா?


பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. 
 
அவ்வாறு பீஜே பேசியது சரியா? - அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்
 
அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன்? 
 
இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள். 
 
நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். 
 
எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.
 
விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம்.
 
அல்லது முஸ்லிம் தலைவர்களே! இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும்.
 
ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும்? 
 
விஸ்வரூபம் படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம். 
 
அந்தப் படத்தை எதிர்ப்பதன் மூலம் உங்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி விடாதீர்கள் என்று அவர் கூறுகிறார். 
 
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையும் இங்கே சொல்கிறார்.
 
இதுவரை நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி அப்பனைக் காட்டிக் கொடுத்த மகன் போல் இப்படத்தை எதிர்த்து நீங்கள் தீவிரவாதிகள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்பது தான் இதன் கருத்து.

இப்படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்னாரே இந்தக் கொடூரமான சொல் என்ன விளைவை ஏற்படுத்தும்?

இந்து மக்கள் மத்தியிலும் மற்ற மக்கள் மத்தியிலும் இது எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும்?

எல்லா முஸ்லிம்களும் தீவிரவதிகள் தானா?

இவ்வளவு நாட்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா? என்று மற்றவர்கள் எண்ணினால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்?

இது குறித்து எழுத்தாளர் யாரும் வாய் திறந்து பாரதிராஜவை இதுவரைக் கண்டிக்கவில்லை.

நான் பதிலடி கொடுத்ததற்காக எனக்கு எதிராக பேனா பிடிக்கும் நண்பர்கள் இது எவ்வளவு கொடூரமான விஷக் கருத்து என்று ஏன் பாரதிராஜவைக் கண்டிக்கவில்லை?

பொதுவாக இஸ்லாத்திலும் இன்ன பிற சட்டங்களிலும் கிராமப்பஞ்சாயத்துகளிலும் ஆரம்பித்து வைத்தவனுக்கு எதிராக மற்றவன் பேசுவதைக் குற்றமாக தீர்ப்பளிக்க மாட்டார்கள்.

இதுதான் உலக நியதி.

ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும் மரபு.

பாரதிராஜா சுமத்திய குற்றச்சாட்டில் நானும் அடக்கம்.

என் சமுதாயத்தில் உள்ளவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று பல வருடங்களாக நான் பிரச்சாரம் செய்து தீவிர எண்ணம் கொண்ட சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எனக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு பாடுபட்டு வருகிறேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனவும் ஆதாரங்களுடன் விளக்கி வருகிறேன்.

ஒரு திரைப்படத்தை நான் எதிர்ப்பது என்னையும் தீவிரவாதி பட்டியலில் சேர்த்து விடும் என்றால் அதனால் நானும் பாதிக்கப்படுகிறேன்.

நமது மார்க்கத்துக்காகவும் உரிமைக்காகவும் பேசினால் நமக்கும் தீவிரவாதி பட்டம் கிடைக்குமோ என்ற அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கிறேன்.

பாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது. பொருளற்றது என்பதை அவருக்கும் அவரது கருத்தில் உடன்படுவோருக்கும் நான் விளக்குவதற்காக அதே லாஜிக்கில் பதில் சொன்னேன்.

தீவிரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லப்படும் படத்தை எதிர்த்தால் அவன் தீவிரவாதி தான் என்ற லாஜிக் பிரகாரம் விபச்சாரம் செய்யும் நடிகைகள் பற்றி எழுதியதற்காக தினமலர் அலுவலகத்தை தாக்கினீர்களே?

அந்தப் பத்திரிகையைக் கொளுத்தினீர்களே?

அதன் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய வைத்தீர்களே?

விபச்சாரம் செய்த நடிகையைப் பற்றி எழுதும் போது அதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெண்களும் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

இந்தக் கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்று உணர்த்துவதற்குத்தான்.

அவரது குடும்ப்ப் பெண்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளலாமா என்ற வாசகம் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்த்தில் தான் கையாளப்படும்.

இந்த லாஜிக்கை பாரதிராஜா பல சமயங்களில் மீறி இருந்தால் அவற்றில் ஒன்றை நான் உதாரணமாக நான் சொல்லி இருப்பேன்.

அவர் விபச்சாரம் செய்த நடிகைகள் பற்றிய செய்தியின் போது லாஜிக்கை மீறியுள்ளது தான் என் நினைவுக்கு வருகிறது.

எனவே தான் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் பொதுவாக இது போல் ஆரம்பித்து வைப்பது தான் குற்றமாகும்.

தூண்டப்பட்டு கூடுதல் குறைவாகச் சொல்வது மனிதனின் இயல்பாக உள்ளது.

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர மற்றவன் தீய சொல்லைப் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் - திருக்குர்ஆன் 4:148

அவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம். - திருக்குர்ஆன் 2:194

இஸ்லாம் மட்டும் இதைக் கூறவில்லை.

மானமுள்ள எந்த மனிதனின் இயல்பும் இதுதான்.

ஒரு படத்தை எதிர்ப்பதால் - குர்ஆனைக் கேவலப்படுத்துகிறது என்பதற்காக எதிர்ப்பதால் - முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றால் இந்த விமர்சனம் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமயானவை.

இவனுக எல்லோருமே தீவிரவாதிகள் தான்.

நம்மை நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உருவனால் அது எங்கள் உயிருக்கும் உடமைக்கும் மானத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுவோம்?

தொடர்ந்து இதே வேலையாக அலைகிறார்கள்.

சரியான முறையில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதை அனுமதியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலையில் தான் அந்த உதாரணம் காட்டப்பட்டது.

அதுவும் எழுதி வைத்து நான் வாசிக்கவில்லை.

மேடைப்பேச்சில் வந்து விழுந்த சொற்கள். ஆனால் பாரதிராஜா எழுதிவைத்துக் கொண்டு அந்த வாசகங்களை வாசிக்கிறாரே?

நின்று நிதானமாக அவர் இதைச் சொன்னார்?

வாய் தவறி அவர் இப்படி சொல்லவில்லை.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பாரதிராஜாவின் குடும்பத்தின் மீது குற்றம் சாட்டவில்லை.

உங்கள் வாதப்பட்டி இப்படி அர்த்தம் வந்து விடும் என்றுதான் சொன்னேன்.

நானோ என் சமுதாயமோ பாதிக்கப்படாத நிலையில் அந்த உதாரணம் காட்டி இருந்தால் அது மிகப் பெரும் தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாதிக்கப்பட்ட போது பதிலடி கொடுப்பதை இதற்குச் சமமாக ஆக்க முடியாது.

பாரதிராஜா முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்ற கருத்தில் நான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால்

நான் எடுத்துக் காட்டிய உதாரணத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்.

அன்புடன் பீஜைனுல் ஆபிதீன்

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தருவேன் இன்ஷா அல்லாஹ்.

ARTICLE SOURCE: http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/barathirajavai_kochaipaduthalama/

***************************

விஸ்வரூபம் திரைப்பட விவகாரம்:
மருத்துவர் ராமதாசுக்கு தமுமுக கண்டனம் 
 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை: 
 
விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது. 
 
சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அதனுடன் பாமகவின் கொடி, தலைவர்களின் பின்ணணி படங்கள் வன்னியர் சங்கத்தின் தீ சட்டி சின்னம் ஆகியவற்றின் காட்சி பிண்ணனிகளுடன் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதனை மரு. ராமதாஸ் அவர்கள் அனுமதிப்பாரா? 
 
இதேபோன்றுதான் இஸ்லாத்தின் அடையாளங்களுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை எடுத்ததினால்தான் முஸ்லிம்கள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன், நடிகர் அஜீத் இவர்களும்கூட கமல்ஹாசனின் விஷகருத்துகள் நிறைந்த விஷரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள படமான விஸ்வரூபத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.
முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து DAM999 என்ற படம் தமிழகத்திலே தடைசெய்யப்பட்டது. 
 
தமிழக அரசின் இந்த தடை மிகவும் நியாமானது ஏனெனில் தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி தமிழக மக்களின் உள்ளங்களை ரணப்படுத்தும் வகையில் அந்த படம் எடுக்கப்பட்டது 
 
தமிழக அரசு DAM999 படத்தை தடை செய்தது நியாமானது தான் என்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடாது என்று ஒருசில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. 
 
இதேஅளவுகோளை பயன்படுத்திதான் மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழக அரசு திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடுவதற்கு தடைவிதித்தது.
DAM999 மீதான தடையை வரவேற்ற இயக்குநர் பாரதிராஜா போன்றோர் DAM999 ஒர் அளவுகோலும் விஸ்வரூபத்திற்கு ஒரு அளவுகோலும் கையாள்வது நியாயம்தானா? 
 
தமிழ் திரைப்படங்களில் ஒரு சாரார் தொடர்ச்சியாக முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்து வருகிறார்கள் 
 
அதன் உச்சகட்டமாக அமைந்துள்ளதுதான் விஸ்வரூபம் திரைப்படம்
அதேநேரத்தில் முஸ்லிம்களின் எதார்த்த நிலையை சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ள நீர்பறவையின் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
பாரதிராஜா போன்று கருத்து வெளியிட்ட திரைப்பட உலகினர் முஸ்லிம்களின் உள்ளங்களின் ஏற்பட்டுள்ள ரணங்களை உணர்ந்து கமல்ஹாசன் போன்றோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். 
 
பாரதிராஜா அவர்கள் கமல்ஹாசன் நல்ல தமிழ் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் நமது தமிழ்நாடு முல்லா உமருக்கு புகழிடம் அளித்துள்ளதாக குறிப்பிடுவதுதான் நல்ல தமிழ் கலைஞருக்கு பாரதிராஜா வழங்கும் இலக்கணமா? 
 
இப்போது விஸ்வரூபம் திரைப்படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதலேயே கவனம் செலுத்தும் கமல் ஒரு நல்ல கலைஞன் அல்ல மாறாக அவர்தான் ஒரு கலாச்சார பயங்கரவாதி என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
அன்புடன் (ஜே.எஸ். ரிபாயி)
 
ARTICLE SOURCE: http://www.tmmk.in/index.php?option=com_content&amp view=article&amp id=2991:2013-01-26-14-02-38&amp catid=42:press-reless&amp Itemid=160

மேலும் படிக்க... Read more...

அமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல்.. இப்போது ஆட்சேபணை இந்துக்களிடமிருந்து...!

>> Monday, January 28, 2013

அமீர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ஆதிபகவன் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. 
 
இந்தப் படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வெளியிடும் முன் படத்தைத் திரையிட்டுக் காட்டக் கோரியுள்ளனர். 
 
உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் 
‘ஜெயம்' ரவி நடித்த ‘ஆதிபகவன்' படத்துக்கு 
எதிராக புகார் மனு அளித்தனர். 
 
அதில், "இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்' என்ற படத்தை எடுத்தார். 
 
அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். 
 
தற்போது ‘ஆதிபகவன்' என்ற படத்தை எடுக்கிறார். 
 
‘ஆதிபகவன்' என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும். 
 
‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். 
 
எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். 
 
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற 
இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் 
திரையிட்டு காட்ட வேண்டும். 
 
‘ஆதிபகவன்‘ தலைப்பையும் நீக்க வேண்டும்," என்று கோரியுள்ளார். 
 
SOURCE:http://tamil.oneindia.in/movies/news/2013/01/ameer-s-aadhi-bhagavan-trouble-now-168751.html

*************
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் 
 
விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன், விஷகருத்துகள் முறைதனா? 
 
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார். 
 
இங்கே சொடுக்கவும் //////// விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?//////////////////
 
 

மேலும் படிக்க... Read more...

விஸ்வரூபம் கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் மற்றும் .....

விஷரூபத்திற்கு 
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் 
விஷகருத்துகள் முறைதனா? 
 
விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா? 
உங்களுக்கு மட்டும் தான் கருத்து சுதந்திரமா? 
 
கமலஹாஸன், பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் 
இவர்களுக்கு மட்டும் தானா க‌ருத்து சுதந்திரம் ? 
 

விடியோ உரையின் சில பகுதிகள்.

Vishwaroopam - Muslims in Response To Bharathiraja (Koothadi)

Vishwaroopam - Muslims in Response To Dr.Ramadas (PMK)
Vishwaroopam - Muslims in Response To Kalaignar (DMK)
Vishwaroopam - Are Muslims Against Freedom Of Expression?
Vishwaroopam - Muslims in Response To T.Pandiyan (CPI)
மற்ற பகுதிகள் விரைவில்.. மீண்டும் வாருங்கள்.
*****************
SOURCE 1. 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 
 சென்னை மண்னடியில் 
 மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் 
விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? 
 
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் 
அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் 
விஸ்வரூபம் - அடுத்தது என்ன? 
என்ற தலைப்பில் 
 
மேலுள்ள விடியோக்கள் அடங்கலாக 
 மற்றுமுள்ள‌ முழுமையான உரைகள் 
2 பாகங்களாக‌
 
இங்கு சொடுக்கி ////////// விஸ்வரூபம் - அடுத்தது என்ன? என்ற தலைப்பில் ////////// காணலாம்
*******************



SOURCE: 2. 
 
இங்கு சொடுக்கி //////////////  விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை…. முழுமையான‌ உரை கேளுங்கள்  ;  ////////////////

 
 விடியோ லோட் ஆக சற்று நேரம் எடுக்கலாம். 
பொறுத்துக்கொள்ளுங்கள். 
 
விடியோவை முழுமையாக பார்த்தால்  
 
முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை விளங்கிக்கொள்வீர்கள்.

மேலும் படிக்க... Read more...

ரஜினி : விஸ்வரூபத்தை சரி செய்து வெளியிட வேண்டுகோள்

>> Friday, January 25, 2013


விஸ்வரூபம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க கலை போர்வையில் விஷத்தை விதைக்கும் ஊடக தீவிரவாதம் என்பதை ரஜினியும் உணர்கிறார்.

கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து வெளியிட உறுதுணையாக இருக்குமாறு இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்ளும்
ரஜினியின் அறிக்கை
.
பட‌த்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கலாம்.
THANKS TO SOURCE ;http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/rajini-deeply-hurts-after-hear-the-ban-on-viswaroopam-168570.html
**********
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விசுவரூபத்தை எதிர்ப்பது, "கலாச்சார தீவிரவாதம்" என்றும்
"தேசப்பற்று மிக்க முஸ்லிம்கள் விசுவரூபத்தை எதிர்க்கமாட்டார்கள்" எனவும், 
அறிக்கை விட்ட கமலஹாசனுக்கு
"பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா" கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
 
எது கலாச்சார தீவிரவாதம்?

25 ஜனவரி, 2013

கமல்: அறியாமையின் வடிவமா? எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலா?

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தற்காலிக தடை விதித்ததை தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை கமலின் உண்மை முகத்தை (சுயரூபத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு ஆதரவான திரைப்படம் என்றும் இத்திரைப்படம் வெளிவந்தால் முஸ்லிம்கள் பிரியாணி கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

ஆனால் திரைப்படத்தின் உண்மை நிலையோ வேறு.

திரைப்படம் முழுவதுமே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆனை தீவிரவாத நூலாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டை தீவிரவாத வழிப்பாடாகவும் சித்தரித்தே வெளிவந்துள்ளது.

முஸ்லிம்களின் உயர்ந்த கலாசாரத்தையே தீவிரவாத கலாச்சாரமாக சித்தரிக்கும் கமல் அவரின் சுயரூபத்தை எதிர்க்கும் போது அதை கலாச்சார தீவிரவாதம் என்கிறார்.

இது கமலின் இரட்டை முகத்தையே காட்டுகிறது.

மேலும் விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்று அறிக்கைவிடுகிறார்.

கமல் தேசபக்தியின் அளவுகோல் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

தன்னுடைய படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களின் தேசபக்தியை குறை சொல்ல வேண்டும் என்றால் கமல் தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும்.

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், போன்ற திரைப்படங்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்ததன் தொடர்ச்சியாக விஸ்வரூபத்தை வெளியிட்டுள்ள கமலுக்கு முஸ்லிம்களின் தேசப்பற்றை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தங்களுடைய பொய் முகத்தை மறைப்பதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் பயன்படுத்தும் வார்த்தைதான் தேசப்பற்று.

இதையே இன்று கமல் உதிர்த்திருப்பதன் மூலம் கமலின் சுயரூபம் விஸ்வரூபமாக வெளிவந்துள்ளது.

இது போன்ற விஷமக்கருத்துக்களை வெளியிடுவதை கமல் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது போன்ற விஷமக்கருத்துக்கள் அறியாமையில் வெளியிடும் கருத்துக்களைப் போல் தெரியவில்லை.

மாறாக எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலாகத்தான் உள்ளது. கமலின் வார்த்தைகளும் முஸ்லிம்களின் போராட்டத்தை தீர்மானிக்கும்.
*********************
இதையும் படியுங்கள். விஷரூபம். கலை போர்வையில் ஊடக தீவிரவாதம்.




மேலும் படிக்க... Read more...

விஸ்வரூபம். கலை போர்வையில் ஊடக தீவிரவாதம்.


சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க கலை ரூபத்தில் வரும் தீவிரவாதம்.
விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்படவேண்டும்? 
விஸ்வரூபமா? விஷரூபமா? 
திரைப்படமா? தீவிரவாதமா? 
விஷத்தை விதைக்கும் விஸ்வரூபம்.
அனைவரும் தெரிய வேண்டிய செய்திகள்.
Viswaroopam Movie Core Story Revealed & Why Muslims Are Against The Movie -PP

Viswaroopam Banned in Tamil part -1

Director Seeman on Viswaroopam Ban
விஸ்வரூபம் படத்திற்கான தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ் திரைப்படங்களின் எதிர்காலம் Ban on films: A bane on Tamil Films part -2
****************
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து 
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு அளித்த பேட்டி
 
இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், 
 
தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. 
 
முன்னதாக இந்தப் படத்தை கமலஹாசன் வீட்டில் பார்த்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான, 
 
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா 
படத்தின் பல காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருக்கிறது 
என்று தமிழோசையிடம் தெரிவித்தார். 
 
 சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் தமிழகத்தின் கோவையில் 
ஒரு ஆண்டு இருந்ததகாவும், 
 
12 வயதேயான முஸ்லிம் சிறுவன் ஆயுதங்கள் குறித்த அறிவு கொண்டுள்ளதாக காட்டப்பட்டதாகவும், 
 
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரார்த்தனை செய்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும்
 
ஜவாஹிருல்லா தெரிவித்தார். 
 
கலைஞர்களுக்கு ஒரு கலைப் படைப்பை உருவாக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு 
என்று வாதிடும் ஜவாஹிருல்லா 
 
சமூகப் பொறுப்பின்றி இப்படம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

************************

 
கமலஹாசனின் ஹேராம் திரைப்படம்: 
 
இந்த படத்தில் முஸ்லிம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதால் தான் இந்து தீவிரவாதியாக மாற நேர்ந்ததாக ஒரு கருத்தை சொல்வார்.
 
இது உண்மைக்கு எதிரான திரிபுவாதம். 
 
இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. 
அதேநேரம் முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். பேன்ற ஹிந்துத்துவா இயக்கங்களால் கூட்டமாக கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
 
கமலஹாசனின் உன்னைப்போல் ஒருவன்: கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. 
 
குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், 
 
அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டு வைத்ததாக சொல்லியிருப்பார். 
 
இந்த மிகபெரிய வரலாற்று புரட்டை கமலஹாசன் அறியாமல் செய்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.  
 
கமலஹாசனின் விஸ்வரூபம்: இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசன் தன் மனைவியை வெளி நாட்டினருக்கு கூட்டி கொடுப்பார்.
 
 அல்குரானை தீவிரவாதத்தை போதிக்கும் நுலாகவும், 
 
தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், 
 
கோவை, மதுரை போன்ற நகரங்கள் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடம் போல சித்தரித்துள்ளார். 
 
இதுவரை முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தவர் 
 
இப்பொழுது அவர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவர்கள் ஆகவும், 
 
அவர்கள் புனிதமாக மதிக்கும் வேத நூல் குரானை அசிங்கப்படுத்தியும், 
 
இனி முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்வதை மாற்று மதத்தினர் தவறாக பார்க்கும் அளவுக்கு படத்தை எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
 
 அர்ஜூன், விஜயகாந்த் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு உண்டாக்கியிருக்கிறார். 
 
இப்படி படம் எடுத்தது மட்டும் இல்லாமல் இதற்க்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று வேறு கூறியிருக்கிறார். 
 
இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னணியில் இருந்த ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டதும், 
 
ஹிந்துத்துவாவினர் காடுகளில் பயிற்சி எடுத்த தீவிரவாத முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடிவருவதும் கமலுக்கு தெரியாதா? 
 
இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ,பாரதிய ஜனதா கட்சி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ள இந்நிலையில் கமலஹாசனின் இந்த முஸ்லிம் விரோத திரைப்படம் அவற்றை மறைக்க அல்லது நியாப்படுத்த உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. - *மலர் விழி* @ http://www.sinthikkavum.net/

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP