**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஸ்லீம்கள் மீது யோகாவை திணிக்க வேண்டாம். முஸ்லீம்களுக்கு யோகா தேவையில்லை

>> Sunday, June 21, 2015

முஸ்லீம்களுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா.

அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையாவது அழைக்கிறோமா? நமக்குத் தேவையும் இல்லை.


மேலும் படிக்க... Read more...
.
.
.

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்கள் மீது யோகாவை திணிக்க வேண்டாம்.

>> Saturday, June 20, 2015

முஸ்லீகளுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும்யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையாவது அழைக்கிறோமா? நமக்குத் தேவையும் இல்லை.


யோகா தினம் என்று ஒன்று ஜூன் 21 தேதி உருவாக்கப்படுவது ஏன்?
கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐ உருவாக்கிய Dr.Keshav Baliram Hedgewar (1 April 1889 – 21 June 1940) என்பவனின் மறைவு நாளான 21 ஜூன் தினத்தை இந்தியா முழுவதும் சிறக்க செய்யும் வகையில் 21 ஜூன் தினத்தை யோகா தினமாக கொண்டாட அமல் படுத்தி இருப்பதுடன் யோகாவை இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்து மத கோட்பாட்டை உள்ளடக்கிய யோகாசனங்களை கட்டாயப்படுத்தி அமல் செய்ய உத்தரவு தீட்டியுள்ளது. இப்பொழுது புரிகிறதா? எப்படி திட்டம்?

தமிழ் சினிமா படத்தில் புது மாப்பிள்ளையினைப் பார்த்து 'மாப்பிள்ளை டே,புது மாப்பிள்ளை டே' என்று பாடும் பாடலை கேட்டிருக்கின்றோம். அதே போன்று தான் இந்துத்துவத்தை திணிக்க முயலும் காவி கும்பல் " யோகா ஒரு உடற்பயிற்ச்சிதான், அது முதுமையையும் விரட்டி அடிக்கிறது" என்ற முழக்கத்துடன் கூவிக் கூவி மைனாரிட்டி சமூகத்தினரிடம் திணிக்க பார்க்கின்றார்கள்.

உடலை வருத்தி ஆண், பெண் அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து அதற்கென்று உடலை ஒட்டிய யோகா டிரஸ் அணிந்து பொது இடங்களில் செயல் முறையாக்கப் பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் யோகா குருக்கள் மீது பல்வேறு பெண்கள் கற்பழிப்பு புகார்கள் கொடுத்து அது விசாரணையில் இருப்பதும் பத்திரிக்கை வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

எப்படி 'வல்லாரை லேகியம்' விற்கும் வைத்தியர் தன் வார்த்தை ஜாலங்களால் லேகியத்தினை விற்கின்றாரோ அதே போன்றுதான் யோகா பயின்றால் புற்று நோய், மனபிதற்றல், காச நோய், இருதய நோய்களும் குணமாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் பற்றி ஆய்வு நடத்தியவர்கள் புற்று நோய் சுகமாவதிற்கும், யோகப் பயிற்சிக்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் போடுகின்ற முடிச்சு போன்ற பேச்சே அது என்றும் கூறுகிறார்கள்.

யோகா பற்றி ஆய்வு நடத்தியவர்கள் அதன் பாதக செயல்களை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்கள்:

யோகா முறையினை அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும், போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.

அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும்.

யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.

யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய முஸ்லீம்கள் கட்டாய கடமையான ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.

யோகா Vs தொழுகை : அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் !

முஸ்லிம்கள் கட்டாய கடமையாக 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுதான் சிறந்த 'யோகா' முறை.

யோகா ஆசிரியரின் வியப்பு : பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் 'வஜ்ராசனம்' சொல்லிக் கொடுக்கும் போது 'முஸ்லிம் பசங்களால மட்டும் இதை எப்படி அசால்ட்டா செய்யமுடிகிறது என்று, முஸ்லிம் மாணவர்களிடம் கேட்டபோது :

அது எங்களுக்கு தொழுகையில் 'அத்தஹிய்யாத்' இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார், என்றபோது அந்த யோகா மாஸ்டர் வியந்து போனார்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது 'என கூறுகிறார்.

“இதை ஒருவர் தொடர்ந்து மன ஓர்மையுடன் கடைப்பிடித்து வந்தால் அவருக்குத் தனியே 'யோகா' பயிற்சியே தேவையில்லை” என்றார்.


தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.

யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது என 'பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி' அவர்கள் கூறியுள்ளார்.

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை -அமெரிக்க ஆய்வு !..

ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் Alzheimer's disease எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர்.

அல்ஜிமர்ஸ் Alzheimer's disease எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.

டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg “நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் “ கிடைப்பதாக கூறுகிறார்.

’தொழுகை’...அல்லாஹ் அருளிய அழகிய யோகா’

தன்னிலை மறக்கும் தியானமும்... தெம்பூட்டும் மூச்சுப் பயிற்சியும்... திடன் வளர்க்கும் ஆசனங்களும்... தன்னுள்ளடக்கியது தானே... தாங்களின் யோகா!!!

அவைகள் மூன்றையும்... அளவில் சமமாய் கலந்து... அழகாய் சமைத்து... அதற்கென நேரமிட்டு... அற்புத தொழுகையாக... அருளினானே அல்லாஹ்... அதற்கு இணையுண்டோ???

இறைவனோடு பேசுவதாய்... இறைவன் பார்க்கிறதாய்... இதயமதில் நினைத்து, இஸ்லாமியன் தொழும்போது... இனிய தியானம் கிடைக்கிறது.

இறைமறையின் வசனங்களை... இறைத்தூதர் கற்றுத் தந்த படி... முழுமையான தஜ்வீதுடன்... இனிமையாய் ஓதும் போது... மூச்சுப் பயிற்சிக் கிடைக்கிறது.

நின்று... குனிந்து... நின்று... மண்டியிட்டு...இருந்து...மண்டியிட்டு எழும்பி நிற்கும் போது... ரகாஅத் ஒன்று ஆகிறது, நாளொன்றுக்கு ஐந்து நேரம், பதினேழு தடவைச் செய்ய, நல்ல உடற்பயிற்ச்சியும் தான் கிடைக்கிறது.

பின்னர், உமக்கும் எமக்குமான வித்தியாசமே... இந்த தொழுகை தான்.

உமது யோகாவோ... உலகம் துறந்த சித்தர்களுக்கானது. எமது தொழுகையோ... உலகைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கானது.

உமது சிந்தனை... உமது இரட்சிப்பை மட்டும் பேசும். எமது சிந்தனையோ... எல்லோருடையதுமான இரட்சிப்பை பேசும்.

எனவே தான், தொழுகையின் போது கூட... தொட்டு நின்று ஒன்றாய் தொழுகிறோம், ஒற்றுமையையும் சமத்துவத்தையும்... ஓங்கி வளரச் செய்கிறோம்.

யோசித்துப் பார், உம்... யோகாவினால் இது சாத்தியமா?

ஓ....முஸ்லிமே! ஐவேளைத் தொழுகைக்காக... ’உளூ’ச் செய்யும் போது... உந்தப்படும் ’அக்கு பாயின்ட்கள்’* எத்தனையோ... உனக்குத் தெரியுமா?

நீ மட்டும் தொழுகிறவனாக இருந்து... அண்ணலாரின் அரைவயிறு... அளவான உணவுக் கொள்கையை... அப்படியே கைகொண்டால்... துன்பம் என்பது... துனியாவில் உனக்கு இல்லையே!!!

இன்னொரு யோகா.... இங்கே உனக்கு தேவையில்லையே!!!

* சீனா நாட்டின் ”அக்கு பிரஷ்ஷர்’ வைத்தியத்தில் வரும் ’அக்கு பாயின்ட்கள்’ எனப்படும் நரம்பு முடிச்சுகள்.- -Maluk Mohammed

THANKS TO: Maruppu

அருட்கொடையாம் தொழுகை
.


முஸ்லீம்களின் கட்டாய அன்றாட ஐந்து வேளை தொழுகையே இறை தியானத்துடன் கூடிய தலை சிறந்த யோகப்பியாசம்

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா?

உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை. இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன், நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய ஸுஜூது செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

தொழுவதால் மது வெறுத்தல், பொய் சொல்லுதல், பித்தலாட்டம் செய்யாதிருத்தல், நேர்மை காப்பது போன்ற உளச் சுத்தம் ஏற்படும்.

தொழும் இடத்தில் கண்களுக்கும் கட்டுப்பாடு இருப்பதினால் நப்பாசைகளுக்கும், வழியில்லை

தொழுகை அதிக அளவினான மன அமைதியும், மனதினை ஓர் நிலைப் படுத்தவும் செய்கின்றது.

Kabir Helminski என்பவர், A Sufi Way to Mindfulness and the Essential Self ' என்ற புத்தகத்தில், இஸ்லாமிய ஐவேளை தொழுகை (நிற்பது,குனிவது, தரையில் தலை வணங்குவது மற்றும் காலை மடித்து உட்காருவது ஆகிய உடல் அசைவுகள் மூலம் முக்கிய எலும்பு இணைப்புகள், ஸ்பைனல் கார்ட் எலும்பு உள்பட வலுப்பெறும், வயிற்றில் குடல் அழுத்தம் பெரும், நுரை ஈரல், கல்லீரல் இயங்கவும், மூச்சு சீராகவும், சிறு மூளை மூலம் இதய ஓட்டம் நல்ல முறையில் இயங்க வழி வகுக்கின்றது என்கிறார்.


உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.


நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.
தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே..

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும்,

சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.

ஓ மானுடனே! சிந்திப்பாயா ?

அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள்.
கீழே உள்ள சுட்டியை சொடுக்கி காணத்தவறாதீர்கள்.

***இங்கே***

Thanks to:Maruppu Mohamed ali .K S A ஜமாலுதீன். Maluk Mohammed தக்கலை கவுஸ் முஹம்மத். Sengis Khan. Farhad@facebook.

***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<

மேலும் படிக்க... Read more...

கோவிலாக்கப்பட்ட மசூதி. - சு.அறிவுக்கரசு. PART 5.

>> Monday, June 15, 2015

இதுதான் நியாயமா???? இதுதான் நீதியா???

எங்கள் வியாபாரங்களை தகர்த்தால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை... எங்களின் வீடுகள் சூறையாடப்பட்டால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை....

எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும் மானபங்கப்படுத்தப்பட்டால், வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எறிந்தால் தோட்டாக்கள் சீறிப்பாய்வதில்லை....எங்களின் மக்களையோ, வீடுகளையோ, சகோதரிகளையோ, குழந்தைகளையோ, இறை ஆலயங்களையோ காப்பாற்றத் துடிக்கையில் தோட்டாக்கள் விரைந்து எம்மேலேயே பாய்கின்றன...கோவிலாக்கப்பட்ட மசூதி. - சு.அறிவுக்கரசு. PART 5.

தொடர்ந்து நாயரின் துரோகம்

நாயரின் மோசடிச் செயல்கள் அத்துடன் முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல, இந்துக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது, அற்புதத்தைக் காண! அதுபோலவே முசுலிம்களும் பெருமளவில் கூடிவிட்டனர், மசூதியை மீட்டிட! மசூதியின் உள்ளே அபிராம்தாஸ் பயந்து விட்டான். முசுலிம்கள் உள்ளே நுழைந்து தன்னை நார், நாராகக் கிழித்துப் போட்டு விடுவார்கள் எனப் பயந்தான். நடுங்கினான். அவனைக் கவனித்துக்கொண்டே இருந்த கலெக்டர் நாயர் அவனை மிரட்டினான், ஏ, கிழப்பயலே! உட்கார்ந்துகிட. எழுந்தாயோ, நான் உன்னைச் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினான்.

மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பகவான் சகாய், காவல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.என்.லஹிரி ஆகியோர் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருந்தனர். கலெக்டர் கண்டுகொள்ளவே இல்லை. பாபர் மசூதியிலிருந்து ராமன் பொம்மையையும் மற்றவற்றையும் உடனே அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நாயர் அசரவில்லை. அலட்சியப்படுத்தினான்.

நாயரின் மனைவியும்கூட

நாயரின் மனைவி சகுந்தலா செய்த காரியம் இன்னும் விஷமத்தனமானது. பாபர் மசூதியின் உள் நடையில் வாசற்படிக்கு எதிரே ஒரு கூட்டம் பஜனை பாடிக் கொண்டே உட்கார்ந்து கிடந்தது. இந்தக் கூட்டத்தைக் கூட்டி பஜனை பாடவைத்தது கலெக்டரின் சகதர்மினி. இந்தக் கும்பல் அந்த இடத்திலேயே அமர்ந்து அழிச்சாட்டியம் செய்வது என்பது அம்மையாரின் திட்டம். அப்படிச் செய்தால்தான் ராமன் பொம்மையை எந்த நேரத்திலும் அப்புறப்படுத்த முடியாது என்கிற தந்திர முயற்சி. புருஷனுக்கு ஏற்ற பெண்டாட்டிதான்.

பொம்மையை டிசம்பர் 23 அன்றேகூட அகற்றியிருக்கலாம்தான். காவலர்களுடன் மோதல் ஏற்பட்டிருக்கும். இரவு நேரத்தில் கூட அகற்றியிருக்கலாம். ஆனால் அது நிருவாகத்திற்கு அவப்பெயரைத் தரும். சர்வாதிகாரத்தனமாக நடந்து கொண்டதாகக் குறை கூறப்படும். ஆகவே பொம்மையை அகற்றுவது சரியான தீர்வாகாது என நானும் காவல் கண்காணிப்பாளரும் கருதுகிறோம். இத்தனையையும் மீறி பொம்மையை அகற்றியே தீரவேண்டும் என்று அரசு முடிவு எடுக்குமானால், எனக்குப் பிடித்தமில்லாத இச்செயலைச் செய்ய என்னால் இயலாது என்பதால், அதனைச் செய்யக்கூடிய வேறு ஓர் அதிகாரியை எனக்குப் பதிலாக நியமித்து பணியை ஒப்படைக்கலாம் என்று நாயர் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

சட்டம் என்ன கூறுகிறது

சட்டரீதியாக, ஒரு சொத்து தொடர்பாக இருபிரிவினர் இடையே தகராறு இருந்தால் கிரிமினல் நடைமுறைச் சட்டம் (சிஸி.றி.சி.) பிரிவு 145இன்படி சொத்தில் யாரும் பிரவேசிக்காதபடி தடைசெய்து ஆணையிடலாம் அல்லது ரிசீவர் ஒருவரை நியமித்து அவரது பொறுப்பிலும் பாதுகாப்பிலும் சொத்தினை ஒப்படைக்கலாம். இதனை கலெக்டரின் உதவி அதிகாரிகளே செய்யலாம். ஆனால் நாயர் செய்தது மிகவும் கேவலமான செயல். நாயரும் டட்டும் அயோத்தியா நகர் மன்றத் தலைவர் வீட்டுக்கு இரவில் சென்று பாபர் மசூதிக்கு ரீசீவர் பொறுப்பை ஏற்குமாறு மன்றாடினர். காயஸ்தா ஜாதிக்காரரான அவர் நகரத்தில் செல்வாக்குப் பெற்றவர். பாபு பிரியடட்டா ராம் எனப் பெயர். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின்னர் ஒத்துக் கொண்டார். இவரும் இந்து மதவாதிகளின் பக்கமாகச் செயல்பட்டார் என்பதை அவருடைய செயல்கள் நிரூபித்துவிட்டன. அப்படிப்பட்டவரைத் தானே, நாயர் தேர்ந்தெடுப்பார்

இதனிடையே ஃபைசாபாத் பெருநகர ஆணையாளர் ஷியாம் சுந்தர்லால்தார் ஓர் ஆணை பிறப்பித்து, ராமன் பொம்மை உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என வற்புறுத்தினார். நாயரா இதற்கு மசிவார்? பொம்மையை அகற்றினால் இந்து மக்களின் கோபம் அளவு கடந்து வெளிப்படும், மாவட்டம் முழுவதும் பெரிய கொந்தளிப்பு ஏற்படும். அத்தகைய நிலை உருவாவதை ஆளுகின்ற காங்கிரசுக் கட்சிக்காரர்களேகூட, விரும்பவில்லை. இப்படியொரு நடவடிக்கை அரசால் எடுக்கப்படும் எனச் செய்தி பரவி, ஆங்காங்கே முசுலிம்கள் இந்துக்களால் தாக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதற்கான திட்டங்கள் இந்துக்களால் தீட்டப்பட்டுள்ளன. அத்தனையையும் மீறி, பொம்மையை அப்புறப்படுத்த வேண்டுமானால், மதமுறைப்படி அதனைச் செய்யக்கூடிய அர்ச்சகரையோ, சாதாரண இந்து ஒருவரையோ, மாவட்டம் முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதைச் செய்ய ஒருவரும் முன்வரமாட்டார்கள். இதைச் செய்யக்கூடிய யாரையாவது எங்களுக்குக் கொடுத்து உதவுமாறு ஆணையாளரையே கேட்டேன். அவரால் இயலவில்லை. ஆகவே இதற்கொரு சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.

என் யோசனை என்னவென்றால், பூசாரி ஒருவரை நியமித்து ராமன் பொம்மைக்குப் பூசை செய்ய அனுமதித்து, சொத்து யாருக்கு என்பது பற்றி தீர்ப்புக் கூறுமாறு உரிமையியல் நீதிமன்றத்தைக் கோரலாம். தீர்ப்பு வரும்வரை மசூதியை முசுலிம்களுக்கு ஒப்படைக்கக் கூடாது என்பது அவரது யோசனை.

துராக்கிரமமாக மசூதியின் உள்ளே நுழைந்து இந்துமத பொம்மையை வைத்தது சட்ட விரோதமான குற்றம் என்பதை ஒத்துக் கொள்ளும் நாயர், சட்ட விரோதக் கும்பலுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் யோசனையைத் தெரிவிக்கிறார். மதமோதல்கள் ஏற்படும் என்கிற பூச்சாண்டியைக் காட்டி மிரட்டுகிறார்.

சட்டப்படி துரோகம்

கி.பு.கோ. 145இன்படி ஒரு வாரம் கழித்து உத்தரவினை உள்ளூர் மாஜிஸ்திரேட் பிறப்பித்து விட்டார். 29.12.1949இல் போட்ட உத்தரவின்படி, மசூதியின் காப்பாளர் ஆக நகர் மன்றத் தலைவர் பியெடட்டராம் நியமிக்கப்பட்டார். அவர் 5.1.1950இல் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார்.

கலெக்டர் நாயர் வெற்றிபெற்றுவிட்டார். மசூதி, கோவிலாக்கப்பட்டது. கடவுள் சிலை இல்லாத மசூதியில் இந்துக்கடவுள் பொம்மை வைக்கப்பட்டது. பூசை புனஸ்காரங்கள் செய்யப்பட்டன. இந்துமகா சபாக்காரர்களின் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

துரோகத்திற்குப் பரிசு

கலெக்டர் நாயரும் குருடட் சிங்கும் அரசுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். 1952இல் நாயரின் மனைவி சகுந்தலா இந்துமகாசபா சார்பில் கோண்டா தொகுதியில் தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1967இல் நாயர் ஜனசங் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நின்று வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஒரு பக்கம் துரோகத்திற்குத் தண்டனையாகப் பதவி நீக்கம். மறுபக்கம் வெகுமதியாக எம்.பி. பதவி, கணவனுக்கும் மனைவிக்கும்!

அரசியல்வாதிகளின் துரோகம்

நிருவாகத் துறையில் இப்படி என்றால், அரசியல் துறையில் பிரதமர் நேருவுக்கு அயோத்தியாவில் நடந்தவை ஆத்திரத்தை உண்டு பண்ணின. முதலமைச்சராக இருந்த பார்ப்பனர் கோவிந்த வல்லப பந்த்துக்கு 26.12.1949இல் காரமாகத் தந்தி அனுப்பினார். அதைப் படித்ததும் பொம்மையைத் தூக்கு என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருந்த நாயர் செய்த துரோக நடவடிக்கையால் எதுவும் நடக்கவில்லை. 4.1.1950இல்தான் பந்த் பதில் அனுப்பினார். இந்துக்களைச் சமாதானம் செய்ய, பிரபலமான காங்கிரசாரை அனுப்பும்படி நேருவையே கேட்டுக் கொண்டார். போலீஸ் அமைச்சர் லால்பகதூர் நேருவைச் சந்தித்து நேரில் விளக்கம் தருவார் என்றும் எழுதினார். இப்படிச் சாக்குப்போக்குக் கூறிக்கொண்டிருக்கும் முதலமைச்சர் பற்றி கவர்னர் ஜெனரல் ராசகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதிக் குறைப்பட்டுக் கொண்டார்.

ஒரு மாதம் ஓடியது. ஒன்றும் நடக்கவில்லை. 5.2.1950இல் மீண்டும் எழுதினார். தாமே அயோத்தியாவுக்கு நேரில் வந்து ஆய்வு செய்யப்போவதாக எழுதினார். நேருவை வரவேண்டாம் என்று பந்த் எழுதிவிட்டார். நாயரும், குருடட் சிங்கும் வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்றும், பதிலாக நியமிக்கப்பட இருப்பவர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் எழுதினார். உண்மையில் அந்தரசுத்தியுடன் இக்கடிதத்தை பந்த் எழுதவில்லை. நேருவால் தம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் நம்பினார். காரணம், அவர் வல்லபாய் படேலின் கையாள். படேல் காங்கிரசிலிருந்த இந்துமத வெறியர்களின் தலைவர். இந்துமகா சபாக்காரர்களின் தோஸ்த் (நண்பர்). ஆகவே, பந்த்துக்கு மிதப்பு.

நேருவின் நேர்மை

என்றாலும் நேரு 17-.4.1950இல் மீளவும் கடிதம் எழுதினார். தாம் உ.பி. மாநிலத்திற்கு வந்துபோய் நீண்ட நாள்களாகின்றன. மாநிலத்தில் காங்கிரசின் தூண்களாக இருப்போர் மனதில் மத, ஜாதிவெறி மண்டிக் கிடக்கிறது. இதனால் செயல்படாத நோய் தாக்கிடும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அயோத்தியாவில் நடந்தது முழுக்க, கெட்ட காரியங்களே! இந்த நோய் இந்தியா முழுவதும் பரவுகிறது. நம்முடைய சொந்த மாநிலத்திலும் பரவுவது பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். எல்லாப் பணிகளையும் ஒதுக்கிவிட்டு இதனையே முதன்மையாகக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி நான் இறங்கும் வேளையில், முழு வீச்சில் என் சக்தி முழுவதையும் பிரயோகப்படுத்துவேன் என்றும் தீர்க்கமாக எழுதினார். வங்காளத்தின் முதலமைச்சராக இருந்த டாக்டர் பிதான் சந்திர ராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அயோத்தியாவில் பழங்கால மசூதி ஒன்றினை பண்டாக்களும் சனாதனிகளும் வழிநடத்தி வந்த கும்பல் ஒன்று கைப்பற்றிக் கொண்டது. உ.பி. அரசு அந்தப் பிரச்சினையைக் கையாலாகாத தன்மையில் பலவீனமாகக் கையாண்டது என்பதைக் குறிப்பிட வருந்துகிறேன் என்று எழுதித் தன் ஆற்றாமையைப் பகிர்ந்து கொண்டார்.

காங்கிரசில் இருந்த ஒரே ஒரு மதச் சார்பற்றவர். தனியாள். என் செய்ய?


மகிழ்ச்சியில் இந்துமகா சபா 24, 25.12.1949இல் கல்கத்தாவில் இந்து மகாசபா மாநாடு. ஒரே கோலாகலம். காரணம், ராமனின் அற்புதம். அதைக் காணவந்து தங்கிவிட்ட ஆயிரக்கணக்கான இந்துக்களின் உற்சாகம். காந்தியாரைக் கொலை செய்த காரணத்தால் மூலையில் முடங்கிக் கிடந்ததுகள், முக்காடு நீக்கி முழக்கமிட்டதுகள். புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பி.காரே என்பவர் பேசும்போது காங்கிரசார் முசுலிம்களை ஆதரித்துக் கொண்டே மதச்சார்பின்மை பேசுவதாகக் குறிப்பிட்டார். முசுலிம்கள் இந்துக்களுக்கு நேர் எதிரானவர்களாம். இந்துக்களின் உச்சிக்குடுமி (கோட்டி) வானத்தை நோக்கி இருக்கிறதாம். முசுலிம்களின் தாடி நரகத்தை (படல்) நோக்கி இருக்கிறதாம். இந்துக்கள் கிழக்கு நோக்கி வணங்குகிறார்களாம். முசுலிம்கள் மேற்கு நோக்கித் தொழுகிறார்களாம். இந்துக்கள் இடமிருந்து வலமாக எழுதுகிறார்களாம். முசுலிம்கள் வலமிருந்து இடமாக எழுதுகிறார்களாம். பிணங்களை இந்துக்கள் எரிக்கிறார்களாம். முசுலிம்கள் பிணங்களைப் புதைக்கிறார்களாம். எவ்வளவு அற்பத்தனமான சிறுபிள்ளைத்தனமான வாதம் பாருங்கள்!

காரே பேசுகிறார் கேளுங்கள்: ஆகவே, இந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும். முசுலிம்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக்கப்பட வேண்டும். அவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. இம்மாதிரி அரசமைப்பு திருத்தப்படாவிட்டால், இந்தியா ஒருபோதும் உருப்படாது என்றார்.

சொத்தில் பாத்யதையாம்

இந்துமகா சபாவினர் அயோத்தியாவில் கூட்டம் போட்டுப் பேசினர். அதன் விளைவாக கோபால்சிங் விஷாரத் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். மசூதியில் உள்ள ராமன் கோவிலில் கும்பிட அனுமதிக்குமாறு கேட்டு வழக்கு. அதில் பிரதிவாதிகளாக 5 முசுலிம்களும் மூன்று அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டனர். பிரதிவாதிகளுக்கு நோட்டீசு அனுப்பி பதில் கோரிட உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினமே தடையாணையையும் பிறப்பித்துவிட்டார். அந்த ஆணைதான் இன்றளவும் இந்தியாவைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல் ஆரியகுல நாயகனான ராமனின் பொம்மையை பாபர் மசூதியிலிருந்து அகற்றிட அரசு முயல்கிறது. காவல் துறையையும் ராணுவத்தினரையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்கள் ராமன் பொம்மையை அகற்றும் முயற்சியை எதிர்த்துப் போராட வேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிய இந்து மகாசபா, அயோத்தியாவில் ஓர் அலுவலகம் திறந்தது. --சு.அறிவுக்கரசு

SOURCE: Unmaionline 2013 செப்டம்பர் 01-15

மீண்டும் வாருங்கள்.- (தொடரும்)

***பாபர் மசூதி இடிப்பு காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!- சு.அறிவுக்கரசு. PART 4.***

***நீங்களா பாபர் மசூதியை இடிக்க சொன்னீர்கள்? . சு.அறிவுக்கரசு. PART 3.***

***பாபர் மசூதிக்குள் இருட்டில் திருட்டு ராமன் - PART 2. - சு.அறிவுக்கரசு.***

***பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - சு.அறிவுக்கரசு. ***


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<.

மேலும் படிக்க... Read more...

பாபர் மசூதி இடிப்பு காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!- சு.அறிவுக்கரசு. PART 4.

>> Friday, June 12, 2015

சொல்லாத சோகம். யாருக்கு தெரியும். 450 ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் வரலாற்று சின்னமாக வீற்றிருந்த அவர்கள் தொழுகை நடத்தக் கூடிய ஒரு மசூதி இடிக்கப்படும் போது அவர்கள் எத்தகையதொரு துயரத்தையும், மனவேதனையையும் அடைந்திருப்பார்கள் என்பதும் நமக்கு புரிய வேண்டும். - தோழர் பரிமளா.

சொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .

இருட்டில் திருட்டு ராமன் - பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி?- சு.அறிவுக்கரசு. PART 4.

நாயர் கதை

திருவாங்கூர், கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் மட்டுமல்லாது(-?) நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக ஆதிக்க ஜாதியாக விளங்கியது நாயர் ஜாதி. நிலமும் பணமும் இருந்ததால், படிப்பதற்கு ஆர்வம் காட்டாதவர்களாக நம்பூதிரிகள் இருந்தனர். நாயர்களோ, படிப்பில் நாட்டம் காட்டினர். நிறையப் பேர் படித்துப் பதவிக்கு வந்தனர். பெண்களும் படித்தனர். என்றாலும் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்குப் பயந்து அடிமை வாழ்வு வாழ்ந்தனர். நாயர் திருமணம் செய்துகொண்டால், அவன் மனைவியுடன் முதல் இரவைக் கழிக்க நம்பூதிரிகள் விருப்பப்படுவர்.

நாயர் விட்டுக் கொடுப்பர். உன் மனைவி அழகாக இருப்பாளாமே, என் வீட்டுக்கு அனுப்பி வை என்று நம்பூதிரி கேட்பானாம். நாயர் அனுப்பி வைப்பானாம். இதைவிடக் கேவலம், நான் இந்த நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று பெருமையுடன் கூறிக் கொண்ட நிலைமையும் இருந்ததாம்!
கோழிக்கோடு மன்னர் ஜாமரின் குடும்பப் பெண்களுக்கே முதல் கணவனாக நம்பூதிரிகள் இருந்தனர் என்பது வரலாறு.

இந்த அசிங்கத்தைப் போக்கிக் கொள்ளும் மருந்தாகவோ என்னவோ, நம்பூதிரிகள் நாயர்களுக்கு ஒரு ஜாதிப் பெருமையைத் தந்தனர். ஈழவர்கள் நம்பூதிரிக்கு 38 அடி தூரத்தில்தான் நிற்கவேண்டும் என்று விதி. நாயருக்கு 18 அடி தூரத்தில்தான் நிற்க வேண்டும் என்று விதித்து நாயர்களுக்கும் பெருமை தந்தனர். அதுபோலவே புலையர் 24 அடி தூரத்திற்கு அப்பால்தான் நிற்கவேண்டும் என்றும் விதித்தனர். இதனால் நாயர்கள் பார்ப்பனர்களுக்கு விசுவாசம் காட்டினர்.

அற்புதம் நடக்கப் போகுது

அப்பேர்ப்பட்ட கே.கே..நாயர் கலெக்டராக இருந்த நேரத்தில் ராமன் கல்யாண உற்சவம் தொடங்கி நடந்தது. உற்சவ முடிவில் மாபெரும் அற்புதம் ஒன்று நடக்கப் போவதாக ராமாயண மகாசபாவினரும் இந்துமகா சபாவினரும் செய்தியைப் பரப்பி விட்டிருந்தனர். ஏமாந்த சோணகிரி இந்துக்கள் ஆயிரக்கணக்கில் அயோத்தியாவில் கூடினர். பக்கத்து ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்து போயினர். குழந்தை ராமன் பாபர் மசூதிக்குள் தன் ஜென்ம இடத்தில் குந்தப் போவதாக எதிர்பார்த்தனர். 4.12.1949இல் கல்யாண உற்சவம் முடிந்தது. ஒரு அற்புதமும் நடக்கவில்லை. குழந்தை ராமன் தோன்றவில்லை. பாபர் மசூதிக்குள் நுழையவில்லை.

தாம் ஜனித்த இடத்தில் உட்காரவும் இல்லை. இந்துக்கள் ஏமாந்தனர்! ஏமாற்றப்பட்டனர் எத்தர்களால்! நாயர், டட் எதிர்பார்ப்பு ஊசி குத்தப்பட்ட பலூனாக உடைந்து போனது. ராம உற்சவத்தில் துளசிதாசன் எழுதிய ராம சரித மானஸ் ஒன்பது நாளுக்குப் பாராயணம் செய்யப்படும். அற்புதம் நிகழப்போகும் ஆண்டு என்பதால் பாராயணம் நான்கு நாள்கள் நீட்டிக்கப்பட்டு 13 நாள்கள் நடைபெற்றது. ராமன் வரவில்லை. நாமம் சாற்றப்பட்டது. பணம் பிடுங்குவதற்காக எதையோ புளுகியிருக்கின்றனர் என்ற உண்மையை இந்துக்கள் பகிரங்கமாகப் பேசினர். பைராகிகள் அவமானத்தால் தலைகுனிந்து பதுங்கினர். என்றாலும் கூடிவிட்ட மக்களுக்குச் சோறு பொங்கிப் போட்டனர். செலவுக்குப் பணமும் கொடுத்தனர். கஞ்சா புகைக்கவோ?

சதியில் கலெக்டர்

திரைமறைவில் இந்து மகா சபா, ராமாயண மகா சபா ஆள்கள் கலெக்டர் நாயரைச் சந்தித்துப் பேசினர். சீதாராம் தாஸ், ராம்பதரத் தாஸ், சியா கிஷோரி சரன், ராம்சுபாக் தாஸ், அபிராம் தாஸ் என்போர் பல்வேறு கோவில்களின் மகந்த்கள். இவர்களும் வேறு சிலரும் நாயருடன் பேசித் திட்டம் தீட்டினர். திருட்டுத்தனமாக குழந்தை ராமன் பொம்மையை பாபர் மசூதிக்குள் வைத்திட எப்பேர்ப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைச் செய்தாலும் தாம் கண்டுகொள்ளாமல் எல்லா உதவிகளையும் செய்து தருவதாக நாயர் உறுதி அளித்தார். பிறகு என்ன? சட்டம் தன் கண்களை மூடிக்கொள்ளும், கைகளை நீட்டாது, தங்களைத் தண்டிக்காது என்கிற உத்திரவாதம் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் வாயிலிருந்தே வந்துவிட்ட பிறகும் தயக்கம் ஏன்? என்கிற நிலைக்கு இரு சபாக்காரர்களும் வந்துவிட்டனர். திருட்டுத்தனமாகப் பொம்மையை வைக்கத் துணிந்து விட்டனர். ஆளைத் தீர்மானிக்கக் கூட்டம் போட்டனர், ரகசியமாக!

இதுதான் திட்டம்

1895இல் கட்டப்பட்ட மிகச் சிறியதான ஜம்பவந்த் கோவிலில் கூடினர். இந்தக் கோவிலின் மகந்து பல்ராம் தாஸ் தலைமையில் கூடிய கூட்டத்தில், கலெக்டர் நாயர் கலந்துகொண்டார். அபிராம் தாஸ், பரமஹம்ஸ், பிருந்தாவன் தாஸ் என்ற மூவரும் 22.12.1949 இரவு பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ராமன் பொம்மையை அங்கே வைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். விடியற்காலை 4 மணி வரை அவர்கள் சப்தமில்லாமல் கிடக்க வேண்டும், பின்னர் விளக்கேற்றி, மந்த்ரம் கூறி, காண்டாமணியை உரக்க அடித்து ஓசை எழுப்பவேண்டும் என்பது திட்டம்.

மறுநாள் இந்துக்களை ஏராளமாகத் திரட்டிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு கோபால் சந்த் விசாரத் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்டம் ஏராளமாகக் கூடிவிட்டால், அவர்கள் செய்த சட்டத்திற்குப் புறம்பான செயலைத் தடுக்க நிருவாகம் எதுவும் செய்ய இயலாது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுமே!

திட்டம் போட்ட மாதிரியே நடத்தி விட்டார்கள். எதுவுமே தெரியாத மாதிரி மாவட்ட மாஜிஸ்திரேட் நாயர் பசப்பி விட்டார். அதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால், 1949 டிசம்பர் முதல் 1992 டிசம்பர் 6 வரை பாபர் மசூதியில் வழிபாடு ஏதும் நடைபெறாமல் மசூதியாக இயங்காத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு அது இடிக்கப்பட்டு விட்டது. இடித்த குற்றவாளிகள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, ரிதம்பாதா முதலியோர் மீதான வழக்கு இன்னும் முடிவாகாமல் கிடக்கிறது.

காங்கிரசே காரணம்

சிறீ ராமஜன்ம பூமி கர ரத்த ரஞ்சித் இதிகாசம் (ராமன் பிறந்த இடம் பற்றிய ரத்தம் தோய்ந்த வரலாறு) எனும் நூல் ராம்கோபால் பாண்டே என்பவரால் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. அதில் 23.12.1949 இந்தியாவுக்கு மகோன்னதமான நாள். 400 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாளில்தான், ராமனின் பிறந்த இடம் மீட்கப்பட்டது. முதல் நாளிரவில் நடந்த சம்பவங்களைப் பார்த்தால் ராமனே இந்த மீட்பு நடவடிக்கைகளைச் செய்து தன் பிறந்த இடத்தைப் பெற்றான் என்றே கூறலாம் என்று எழுதுகிறார். இத்தகைய நடவடிக்கையை ராமன் எடுத்ததற்கு யார் மூல காரணம்? வல்லபாய் பட்டேல், கோவிந்த் வல்லப பந்த் போன்ற காங்கிரசுக்காரர்களே! இவர்களின் மறைமுக ஆதரவு தந்த துணிச்சலால் இந்துமகாசபா, அகில இந்திய ராமாயண சபா ஆள்கள் ராமன் பொம்மையை வைக்க முடிந்தது. நாயர், டட் போன்ற கருங்காலி அதிகாரிகளின் அயோக்கியத்தனமான நிருவாகம் பெருமளவில் உதவியது.

இருட்டில்... திருட்டுத்தனமாக

1934ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகைக்குப் பசு மாட்டை வெட்டித் தின்றார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டது. அயோத்தியாவுக்குப் பக்கத்து ஊரான ஷாஜஹான்பூரில் இது நடந்ததாக வதந்தி. இந்துக்கள் இதற்காக அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதியைத் தாக்கினார்கள். அதன் விளைவாக மசூதியின் மேல் உள்ள கவிகைமாடத்தில் பெரும் ஓட்டையே ஏற்பட்டது. அப்போது மசூதியின் காப்பாளராக இருந்தவர் முகம்மது இசுமாயில். குழந்தை ராமன் பொம்மையைத் தூக்கிக் கொண்டு பாபர் மசூதிக்குள் நுழைந்த பண்டாரங்களின் நடவடிக்கைகளை 1949இல் பார்த்துக் கொண்டிருந்தவரும் அதே முகம்மது இசுமாயில்தான். குள்ளமானவர். கைலியும் நீண்ட ஜிப்பாவும் அணிந்திருந்தார். நேராக அபிராம் தாஸ் என்பவரை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். அவனிடமிருந்த ராமன் பொம்மையைப் பறிக்க முயன்றார். அபிராம்தாசும் அவனுடன் வந்தவர்களும் திமிறிக்கொண்டு இசுமாயிலைத் தாக்கினர். பல திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டவர் தன்னால் மட்டுமே சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். ஓடினார் _ மசூதியிலிருந்து வெளியே ஓடிவந்தார். நகர வீதிகளில் ஓடினார். எங்கு ஓடுகிறோம் என்பதே தெரியாமல் தலைதெறிக்க ஓடினார். உயிர் பிழைக்க ஓடினார். இரண்டு மணி நேரம் ஓடி பகர்கஞ்ச் கோசியானா எனும் இடத்தில் வந்து சேர்ந்தார். விடியற்காலை 2 மணிக்கு அப்பகுதி முசுலிம்களின் வீட்டுக் கதவைத் தட்டினார்.

கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த கோசியானா முசுலிம்கள் அவரை ஆதரித்தனர். அங்கேயே தங்க வைத்தனர். அங்குள்ள மசூதியில் அய்ந்து வேளை அல்லாவைத் தொழுது வந்தார், 1980இல் இறக்கும்வரை. பாபர் மசூதிப் பக்கம் அவர் திரும்பவேயில்லை.

காவலரா? ஏவலரா?

பாபர் மசூதியைக் காவல் காத்திட போலீஸ்காரர்கள் 24 மணிநேரமும் நியமிக்கப்பட்டனர். அன்றைய தினம் காவல் பணியில் இரவு 12 மணிக்கு வந்தவர் அபுல் பர்கத் எனும் முசுலிம். ஆனாலும் இந்துக்களுக்கு உதவிடும் நோக்கில் எதையும் கண்டுகொள்ளக் கூடாது என்ற நாயரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட முசுலிம் காவலர். மேலதிகாரியின் அதிகாரம் மத உணர்வுகளைப் புறந்தள்ளி விட்டது. வயிற்றுக்கு உணவிடும் சம்பளம் அதிகாரி தயவில்தானே வருகிறது! அல்லாவா தினம் தினம் படியளக்கிறார்? எனவே அபுல் பர்கத்தைக் குற்றங்காண முடியாது.

இரவு 12 மணிக்கு டூட்டி மாற்றிக் கொண்டு காவல் பணிக்கு அபுல் பர்கத் வருவதற்கு முன்பே அபிராம்தாஸ் கும்பல் உள்ளே நுழைந்துவிட்டது அல்லவா? திட்டப்படி 4 மணிக்கு விளக்கேற்றி, ஆரத்தி காட்டத் தொடங்கினர். இதைக்கண்டுவிட்ட அடில்பர்கத் பயந்தே போனான். மெயின் கேட்டைக் கவனித்தான். அதைப் பூட்டியிருந்த பூட்டு உடைக்கப்பட்டு ஏராளமான இந்துக்கள் திபுதிபுவென்று மசூதிக்குள் நுழைந்தனர். பர்கத் செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றான்.

கோயபல்ஸ் பாணியில்

கோபால்சந்த் விசாரத் அதே நேரத்தில் ஓர் அச்சகத்தில் இருந்துகொண்டு சுவரொட்டி அச்சடித்துக் கொண்டிருந்தான். திட்டமிட்டபடி எல்லாம் நடந்துவிட்டதல்லவா? அந்த அற்புதத்தை அறிவிக்கச் சுவரொட்டி அடித்துக் கொண்டிருந்தான். பாபர் மசூதியை மீட்டுவிட்டோம் என்று இந்துக்களுக்கு அறிவிக்கும் வாசகம் கொண்ட சுவரொட்டி அது.

விடியற்காலை 5 மணிக்குக்கூட மசூதியில் அபிராம்தாஸ் தன்கையில் குழந்தை ராமன் பொம்மையை வைத்துக் கொண்டே இருந்தான். அவனுடன் இந்துசேகர் ஜா, யுகல் கிஷோர் ஜா, மற்றும் 4 பண்டாரங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் இருந்துகொண்டு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தது கலெக்டர் நாயர்.

நாயர் செய்த நயவஞ்சகம்

மகராஜ்! இங்கிருந்து நகரவே நகராதீர்கள். குழந்தை ராமனைத் (பொம்மையைத்தான்) தனியே விடாதீர்கள். ராமன் மிகவும் பசியாக இருக்கிறான் என்று கோஷம் எழுப்புங்கள் என்று நாயர் அபிராம்தாசிடம் கூறினார். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய கலெக்டர், சட்டவிரோதமாக மசூதிக்குள் நுழைந்தவர்களிடம் அளவளாவி அறிவுரை கூறுகிறார். எப்பேர்ப்பட்ட கடமை தவறல்? எப்பேர்பட்ட ஒழுங்கீனம்? இதை அய்.சி.எஸ். அதிகாரி ஆங்கிலேயர் ஆட்சி அகன்றவுடன் செய்தான் என்றால்... இந்தக் கேவலத்தைச் செய்தவன் தென்நாட்டவன். மலையாளி. மதம் பிடித்துவிட்டால் மனிதனுக்கு மூளை சிந்திக்கும் திறனே அழிந்துவிடுமோ?

வேலியே மேய்ந்தது

நீதிக்கும் நியாயத்திற்கும் புறம்பாக மட்டுமல்லாமல் நீதிமன்ற உத்தரவுக்கும் எதிர்ப்பாகச் சட்டவிரோதச் செயல் நடந்துள்ளது. அதைக் கண்டித்துச் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திட நியமிக்கப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் குற்றவாளிகளின் பக்கம் சார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே நுழைந்தவர்களைச் சிறைப்படுத்தி, அவர்கள் வைத்த பொம்மையை அப்புறப்படுத்தி, அவர்கள் எழுதிவைத்த வாசகங்களை அழித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்திட வேண்டிய மாஜிஸ்திரேட் நாயர், வேலியே பயிரை மேய்ந்த கதையை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். இந்திய நிருவாகத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிக்க முடியாத கறை. சுதந்தர இந்தியாவில் காங்கிரசு ஆட்சியில் நடந்த களங்கம். மதவாத அமைப்புடன் கைகோர்த்துச் செயல்பட்ட காங்கிரசு அமைச்சர்களும் ஒழுக்கம் கெட்ட உயர் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய ஆரியக் கூத்து!

அதனால்தான், காலை 9 மணிக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மாநில அரசுக்குச் செய்தி ஒன்றரை மணி நேரம் சென்ற பிறகு காலை 10.30க்குப் பிறகுதான் அனுப்பப்பட்டது. மாவட்ட காங்கிரசுத் தலைவர் அட்சய் பிரம்மச்சாரியிடம் நாயர் கூறினாராம். காலை 6 மணிக்கு சம்பவம் பற்றி பாய்லால் எனக்குக் கூறினார். நான் போய்ப் பார்த்தேன் என்று சொன்னாராம். காவல் துறையினருக்குத் தெரியாமல் பாய்லாலுக்குத் தெரியவந்தது எப்படி? யார் இந்த பாய்லால்? அப்படி ஒரு நபரே கிடையாது. நாயரின் கற்பனைக் கதாபாத்திரம் பாய்லால் என்பதை அட்சய் பிரம்மச்சாரி அம்பலப்படுத்திவிட்டார். இப்படி ஒரு கலெக்டரா? அதிகார வர்க்கத்திற்கே அவமானச் சின்னம் கேகேகே நாயர்! - சு.அறிவுக்கரசு.


மீண்டும் வாருங்கள்.(தொடரும்)

SOURCE: Unmaionline 2013 ஆகஸ்ட் 16-31 - 2013 இருட்டில் திருட்டு ராமன் - 4.

***நீங்களா பாபர் மசூதியை இடிக்க சொன்னீர்கள்? . சு.அறிவுக்கரசு. PART 3.***

***பாபர் மசூதிக்குள் இருட்டில் திருட்டு ராமன் - PART 2. - சு.அறிவுக்கரசு.***

***பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - சு.அறிவுக்கரசு. ***


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்

>>>> *** இங்கே*** <<<<


மேலும் படிக்க... Read more...

நீங்களா பாபர் மசூதியை இடிக்க சொன்னீர்கள்? . சு.அறிவுக்கரசு. PART 3.

நீங்களா கொலை செய்ய சொன்னீர்கள்? நீங்களா முஸ்லீம் பெண்களை மானபங்க‌ப்படுத்த சொன்னீர்கள்? பாபர் மசூதியில் இருட்டில் திருட்டு ராமன். சு.அறிவுக்கரசு. PART 3.


இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? இந்து மக்கள் விருப்பம் என்றான். உன்னை கேட்டானா?
பௌத்தத்தையும் சமணத்துவத்தையும் தனக்கு பிடிக்காத அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிழத்த கும்பல்தான் பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது. இந்த காலித்தனத்தை கொலை பாதகத்தை பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம் என்று சொல்லி விடுகிறது.

டிசம்பர் 6 1992 பாபர்மசூதி இடிக்கப்பட்டு உலக அரங்கில் இந்தியா அவமானத்தால் தலை குனிந்த தினம்.

1992 ஆம் ஆண்டு திசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட நிகழ்வு இந்திய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கை என்பது நடைமுறையில் இல்லை என்பதை உலகில் அம்பலமாக்கிய ஒன்றாகும்.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர்.

மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது.

இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள்.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர்.

அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது.

இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர்.

இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன.

பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது.

ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை;

இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது.

எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது.

அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும். -ஆதவன்

பாபர் மசூதியில் இருட்டில் திருட்டு ராமன்.- சு.அறிவுக்கரசு. PART 3.

அன்றே அரசு நிருவாகத்தில் நுழைந்த இந்துத்துவா!-

நாயர் அய்.சி.எஸ். அதிகாரி. இந்திய விடுதலைக்கு முன்பே இந்துமத வெறித் தன்மையுடன் அரசுப் பணியில் இருந்தவர். கலெக்டர் பதவியில் இருந்து கொண்டே தன் மத வெறியுடன் கடமை ஆற்றிய கயவர்.

கோண்டா மாவட்டத்திலிருந்து பைசாபாத் கலெக்டராக 1.6.1949இல் மாறுதல் செய்யப்பட்ட இவர், மசூதியைக் கைப்பற்றிட இந்து மகா சபாக்காரர்களுக்குப் பெருமளவில் நேரடியாகவே உதவிகளைச் செய்தவர். அதன் காரணமாக அரசு இவரை நீண்டகால விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்டது. விடுப்பு முடிந்ததும் ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்லுமாறு அரசு ஆணையிட்டது.

அரசுப் பணியைத் தன் மதவெறியால் இழந்தாலும் பைசாபாத் கலெக்டராக ஒன்பதரை மாத காலம் பணி செய்தபோது ஏராளமான நன்செய், புன்செய் நிலங்களைச் சம்பாதித்துவிட்டார். அதைப் பற்றிய விவரம் பின்னால் தரப்படும்.

தென்கோடிக் கேரளத்தில் ஆலப்புழையில் பிறந்து வடகோடிக்கு அயோத்யாவில் (பைசாபாத் மாவட்டத்தில் அடங்கியதுதான்) மதவெறியுடன் பணிபுரிந்தவர் மலையாளி கே.கே.கே.நாயர்.

காந்தியாரைக் கொலை செய்யவேண்டும் என்று தில்லியில் கன்னாட் பிளேசில் கூட்டம் ஒன்றில் பேசியது மகந்து திக்விஜய் நாத். காந்தியார் கொலையில் சாவர்க்கரைப் போலவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். என்றாலும், ஜஸ்டிஸ் ஜீவன் லால் கபூர் தலைமையிலான விசாரணைக் கமிஷனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்.

1934இல் நடந்த ஒரு கலவரத்தின்போதுகூட பாபர் மசூதி தாக்கப்பட்டுச் சேதமடைந்துள்ளது, ஷாஜஹான்பூர் எனும் பக்கத்துக் கிராமத்தில் பசு மாட்டை வெட்டிச் சாப்பிட்டனர் எனக்கூறி இசுலாமியர் மீது தாக்குதல். அதைச் சாக்காக வைத்து பாபர் மசூதி சேதப்படுத்தப்பட்டது. அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசு மசூதியைச் சீர்செய்து தந்தது. அவ்வப்போது இம்மாதிரித் தாக்குதல்களுக்கு மசூதி ஆளானது உண்டு. ஆனாலும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை ஆங்கிலேயர்ஆட்சியில்.

சுதந்திர இந்தியாவில்...

ஆனால் 1949இல் நிலைமை வேறு. இந்தியா, இந்துக்களிடம் இருந்தது. சோமநாதபுரத்தில் இந்துக் கோவிலை இந்திய அரசு புதிதாகக் கட்டித் தந்தது. ஜுனாகத் சிற்றரசில் இருந்தது இந்தக் கோவில். ஜுனாகத் அரசர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். ஆனால் சுதந்திர இந்திய அரசு, ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது. இதனை ஏற்பாடு செய்ய ஜுனாகத்திற்கு வருகை தந்த வல்லபாய் படேல் இந்துக் கோவிலைப் புதிதாகக் கட்டித்தர 12.11.1947இல் இந்திய அரசு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்தார். அரசுப் பணத்தை இதற்காகச் செலவிடவும் முன்வந்தார். ஆனால், காந்தியார் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டு, நன்கொடைகள் வசூலிக்கப்பட்டுக் கட்டப்பட்டது.

கோவில் கட்டும் பணியைக் கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. கே.எம்.முன்ஷி எனும் குஜராத்திப் பார்ப்பனர் அதன் தலைவர். இவர் 1941ஆம் ஆண்டில் காங்கிரசிலிருந்து ராஜிநாமா செய்து இந்து மகா சபாவில் சேர்ந்தவர். என்றாலும், 1946இல் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பி வந்த இந்துமத வெறியர். இந்திய அரசமைப்புச் சட்டம் எழுத அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த ஆறுபேரில் ஒருவர். நான்கு பார்ப்பனர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இவர் ஒருவர். மீதி மூன்று பேர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, என்.கோபால்சாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்கள்.

சதிக் கும்பலில் பார்ப்பனர்

பாபர் மசூதியை இடிப்பதற்கும் ராமன் கோவில் கட்டுவதற்கும் தீட்டப்பட்ட திட்டத்திற்குத் தோன்றாத் துணையாக இருந்து பலவகையிலும் உதவிகளைச் செய்தவர் உத்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்த பார்ப்பனர் கோவிந்த் வல்லப பந்த் என்பவர். அம்மாநிலத்தில் அவருக்கு எதிரியாக விளங்கியவர் மிகப் பிரபலமான சமதர்மவாதியான ஆசார்ய நரேந்திர தேவ் என்பவர்.

இவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் பின்பற்றியவர். சீரிய பகுத்தறிவாளர். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். என்றாலும் இந்திய விடுதலைக்குப் பிறகு மாறிய அரசியல் சூழ்நிலையில் பதவியில் நீடிப்பது தார்மீக ரீதியில் சரியல்ல எனக் கூறிப் பதவியை விட்டு விலகி, மீண்டும் தேர்தலை எதிர்கொண்டார். காங்கிரசுக் கட்சி இப்போது போலவே, அப்போதும் பல்வேறு கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்றது. நரேந்திர தேவ் தலைமையிலான கோஷ்டி சோஷலிசக் கொள்கை கொண்டது. ரஃபி அகமது கித்வாய் கோஷ்டி மதச்சார்பின்மையை வலியுறுத்தியது. முதலமைச்சராகிவிட்ட கோவிந்த் வல்லப பந்த் கோஷ்டி பிற்போக்குக் கொள்கைகளையும் மதவெறிச் சக்திகளின் ஆதரவையும் கொண்டது.

காங்கிரஸ் கோஷ்டிச் சண்டை

பந்த் கோஷ்டி கித்வாய் கோஷ்டியை ஓரங்கட்டிவிட்டு, நரேந்திர தேவ் கோஷ்டியை எதிரியாகப் பார்த்தது. இடைத்தேர்தலை எதிர்கொண்ட நரேந்திர தேவுக்கு எதிர்ப்பாக வேலைசெய்து தோற்கடித்தது. நரேந்திர தேவுக்கு எதிராக பந்த் நிறுத்திய ஆள் பாபா ராகவ் தாஸ் எனும் இந்து சாமியார். சமதர்மிக்கு எதிராக சாமியார். நரேந்திர தேவுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதையே தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திரும்பத்திரும்பப் பேசி மதவெறி கொண்ட மக்களைத் திருப்பி வெற்றி கண்டார். ராமனை மதிக்காத மனம் கொண்டவர் நரேந்திர தேவ் என்பதைப் பற்றிப் பேசினார். இந்துக்கள் வைத்துக் கொள்ளும் குடுமியை வைத்துக் கொள்ளாமல் கிராப் வெட்டிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டினார். சமக்கிருதம் கலந்த இந்தி மொழிக்குப் பதிலாக உருது கலந்ததும் மக்களால் பேசப்படுவதுமான இந்துஸ்தானி மொழியை விரும்புவதைக்கூட ஒரு குற்றச்சாற்றாகப் பிரச்சாரம் செய்தனர்.

காங்கிரசு வேட்பாளர் பாபா ராகவ் தாஸ், வாக்காளர்களுக்குத் துளசிப் பிரசாதம் கொடுத்து மத உணர்ச்சியைத் தூண்டினார். பாபாவும் முதலமைச்சர் பந்த்தும் பார்ப்பனர்கள் என்பதை எல்லா வகையிலும் வெளிப்படுத்தினர். ஜாதியும் மதமும் வென்றன. நேர்மையும் தூய கொள்கையும் தோற்கடிக்கப்பட்டன.

இந்து மதத்தவரின் வேட்டைக்காடாக அயோத்தியா மாற்றப்பட்டது. பாபர் மசூதியை அழிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி இருந்தவரை வெற்றிபெற முடியாதவர்கள் விடுதலை பெற்ற இந்தியாவில் வாலாட்டம் காட்டி வெற்றிப் பாதையில் நடக்கத் தொடங்கினர். காங்கிரசுக் கட்சியும் ஆட்சியும் நிகழ்த்திய சாதனை இது!

ராமாயண மகா சபா

ராமஜென்ம பூமி என்ற பிரச்சாரம் வலுவாக்கப்பட்டது. இதற்கெனத் தனியான அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அகில இந்திய ராமாயண மகாசபா எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்துமகா சபாக்காரர்களே பொறுப்பாளர்கள் ஆயினர். ஒன்பது நாள் உற்சவமாக ராமாயணப் பிரசங்கம் நடத்தப்பட்டது. அனுமன் பிறந்த நாள் எனக் கூறப்பட்ட கார்த்திகை மாதத் தேய்பிறை 14ஆம் நாளில் தொடங்கியது. கடைசி நாளான 28.10.1949இல் பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. பாபா ராகவ் தாஸ், மகந்து திக்விஜய நாத் மற்றும் சாமியார் கர்பாத்ரி ஆகியவர்கள் பேசினர். ராமனின் கல்யாணம் நடந்த நாள் எனப்படும் நவம்பர் 24இல் ராமச்சந்திரபுதாராவில் வைக்கப்பட்டு இருந்த குழந்தை ராமனின் பொம்மையை பாபர் மசூதிக்குள் வைத்துவிட வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டது. ராமன் பிறந்த இடம் பாபர் மசூதிக்குள்தான் இருக்கிறது என்பதுதான் அவர்களின் பிரச்சாரம்! இதனை ஆரம்பித்து வைத்துப் பேசியவர் பாபா ராகவ் தாஸ். காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் ஆன பார்ப்பனர்.

5.3.1950இல் பிரதமர் நேரு, உத்திரப் பிரதேச உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு எழுதி பாபர்மசூதி விசயத்தில் காங்கிரசுக்காரர்களாகிய ராகவ்தாஸ் மற்றும் விஷாம்பர் தயாள் திரிபாதி (இருவரும் பார்ப்பனரே). இதில் ஈடுபாடு காட்டுவதையும் கவலையோடு சுட்டிக் காட்டினார். இது காங்கிரசுக் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார். பலன் என்ன? எதுவுமே இல்லை!

அடித்தளம் அமைத்தனர்

அயோத்யா நகரில் ராமன் பிறந்த இடம் இதுவே என்று சத்தியம் செய்து பணவசூல் செய்யும் இடங்கள் நிறையவே உள்ளன. என்றாலும், மாற்று மதத்தினரின் மசூதியை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற கெட்ட உள்நோக்கத்துடன் பாபரிமசூதிக்கு 100 அடி தூரத்தில் மேடை ஒன்றை அமைத்தனர். ஆறு அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மேடை 21 அடி நீளமும் 17 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டது. மசூதிக்கு வடக்குப் பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் கூட்டம் நிற்பதற்கு வாய்ப்பாக உள்ள இடத்தில் மேடையை அமைத்தனர்.

இதேமாதிரி பாபர் மசூதிக்குப் பக்கத்தில் உயரமான, நிரந்தர மேடை அமைப்பது 1949இல் மட்டும் புதிதாக நடந்தது அல்ல. 1858இல் சிப்பாய்க்கலகம் முடிந்த பிறகு கட்டப்பட்டது. இதனை அப்போதே முசுலிம்கள் எதிர்த்தனர். ஒட்டகம் மூக்கை மட்டும் உள்ளே நுழைத்துக் கொள்ள அனுமதிகேட்ட கதை போல, இந்துக்கள் மேடை கட்டினர். எதிர்த்து இசுலாமியர்கள் வழக்குப் போட்டனர். மவுலவி முகமது அஸ்கர் என்பவர் 30.11.1858இல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் மனு கொடுத்தார். இவர் பாபரி மசூதியின் பொறுப்பாளரும் காப்பாளருமாக இருந்தவர். 1860, 1879, 1883, 1884 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து முறையீடுகள் தரப்பட்டன.

1885ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ரகுபர்தாஸ் எனும் இந்து ஒருவர் பைசாபாத் சப்ஜட்ஜ் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடுத்தார். சப்ஜட்ஜ் பெயர் பண்டிட் ஹரிகிஷன். இவர் வழக்கைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டார். 1885 டிசம்பர் 24இல் தீர்ப்பு வழங்கினார். ஆறுமாதம் கழித்து, தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டது. அதுவும் 1886 நவம்பர் 1ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டரீதியாகத் தோற்றுப் போனவர்கள் சட்டரீதியாக அல்லாத வழிகளில் இடத்தைக் கைப்பற்ற முயன்றனர். இது எப்படி நியாயம்?

அதிகாரிகளின் துரோகம்

நீதிமன்றங்களின் தீர்ப்புப்படி, அந்த இடத்தில் எந்த மாறுதலோ, கட்டடம் கட்டுவதோ தடை செய்யப்பட்டது. 1886இல் இருந்த நிலை நீடிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனைக் கண்காணிக்க இரண்டு மாவட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஒருவர் மாவட்ட மாஜிஸ்திரேட் எனப்படும் கலெக்டர். மற்றவர் பைசாபாத் நகர மாஜிஸ்திரேட். மாவட்ட மாஜிஸ்திரேட் பதவியில் 1.6.1949இல் வந்தவர் கே.கே.கே.நாயர். நகர மாஜிஸ்திரேட் ஆக இருந்த குரு டட் சிங் என்பவர் நாயரின் கீழ் பணிபுரிபவர். மேலும் நாயரின் இந்து மத வெறிச் செயல்களுக்கு ஆதரவு தந்தவர். காங்கிரசுக் கட்சியில் உள்ள மதச்சார்பற்ற தலைவர்களால் இந்து மதத்திற்குக் கேடு விளைவதாகக் கருதிய பிற்போக்காளர். 60 ஆண்டுக்காலமாகக் கட்டிக் காக்கப்பட்ட நீதிமன்றக் கட்டளைகள் காற்றில் பறக்க விடப்பட்ட கேவலம் நடந்ததற்கு இந்த இரண்டு அரசு அதிகாரிகளுமே காரணம்.

முறைகெட்டுப் பணியாற்றிய இந்த இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். என்றாலும், அவர்கள் செய்த தீங்கு இந்திய நாட்டையே இன்றளவும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

கோவில் ஒன்றைக் கட்ட அனுமதி கோரி இந்துக்களால் தரப்பட்ட விண்ணப்பத்தின் மீது அறிக்கை தருமாறு மாவட்ட மாஜிஸ்திரேட் நாயர் கேட்டார். 10.10.1949இல் குருடட் சிங் அறிக்கை தருகிறார்:

பகவான் ராமச்சந்திரஜி பிறந்த இடத்தில் அழகான, பெரிய கோவில் கட்டப்பட வேண்டியது அவசியமே என அறிக்கை தந்தார். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த சத்திரியர் குருடட் சிங். இந்த இருவருடன், நெருக்கமாகப் பழகத் தொடங்கியவர் கோபால் சிங் விசாரத் எனும் இந்துமகா சபாவின் மாவட்டத் தலைவர்.

ராமனுக்குக் கல்யாணமாம்


ராமன் கல்யாண உற்சவ நாள் நெருங்கியது. அயோத்தியா நகரமே பதற்றம் அடையத் தொடங்கியது. முசுலிம்கள் வீட்டை விட்டு வெளியேவரப் பயந்தனர். தங்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யவும் பயந்து கடைகளை மூடிவிட்டனர். ராமன் கல்யாண நாளன்று, பாபர் மசூதி இந்துக்கள் வசமாகிவிடும் எனப் பரவலாக நம்பப்பட்டது. ராமன் கல்யாண உற்சவம் 24.11.1949இல்தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்னதாக நவம்பர் 5இல் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு சரயு நதியில் புனித நீராடுதல் தொடங்கியது. மூன்று முசுலிம்கள் பாபர் மசூதிக்குப் போனபோது இந்து பைராகிகள் அவர்களைத் தடுத்தனர். மீறி உள்ளே போக முயன்றவர்களை அடித்துத் துரத்தினர். இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். இந்து பைராகிகளிடம் சிக்கிக் கொண்ட அவரின் கை,கால்களை உடைத்து அடித்து நொறுக்கிவிட்டனர். அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் பெயர் சிறீராம் மருத்துவமனை என்பதுதான் வேடிக்கை!

பிணக்குழிகள் தோண்டப்பட்டன

பாபர் மசூதியில் கப்ர்ஸ்தான் இருந்தது. இறந்தவர்களைப் புதைக்கும் இடம். அங்கே பைராகிகள் மண்ணைத் தோண்ட ஆரம்பித்தனர். அதுபற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் நாயரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் கொடுக்கப்பட்ட நாள் 9.11.1949. நகர மாஜிஸ்திரேட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாயர் தாக்கீது பிறப்பித்தார். நகர மாஜிஸ்திரேட் குருடட் சிங் சாவகாசமாக 12.11.1949இல்தான் இடத்துக்குப் போனார். அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகளைப் பைராகிகள் தோண்டிவிட்டனர். கனட்டி மசூதி எனப்படும் சிறிய மசூதியையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டனர். யாக குண்டங்கள் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு விட்டன. சனாப் கித்வா சாகிப் என்பவரின் சமாதி இடிக்கப்பட்டு விட்டது. ஷா ஹட்டா சமாதியும் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் இந்துப் பண்டாரம் தன் படுக்கைக்கான விதானமாக, சமாதியின் மேல்பகுதியை அமைத்துக் கொண்டான்.

கலெக்டரின் நடத்தை

என்றாலும் குரு டட், நாயர் என்ற இரு அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் இந்துக்களுக்கு ஆதரவு காட்டி நடந்து கொண்டனர். மாவட்ட காங்கிரசுத் தலைவராக இருந்த அட்சய பிரம்மச்சாரி என்பவர் இதுபற்றி எழுதினார். மாவட்ட மாஜிஸ்திரேட் நாயரை நேரில் சந்தித்துப் பேசி விவாதித்தார். விளைவு என்ன தெரியுமா? அன்றிரவு அவரது வீட்டுக்குள் மூன்று பேர் நுழைந்து அவரை நையப் புடைத்தனர். நாயரிடம் அவர் கூறிய வாசகங்களை அப்படியே திருப்பிக் கூறிச் சொல்லிச் சொல்லி அடித்தனர் என்பதுதான் கொடுமை! இவரும் அவரும் பேசிக் கொண்டதை மூன்று நபர்கள் ஒப்பித்தது எப்படி? நாயர் அப்படியே கூறி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.- சு.அறிவுக்கரசு

SOURCE:Unmaionline 2013 ஆகஸ்ட் 01-15


பாபர் மசூதி இடிப்பு காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!- சு.அறிவுக்கரசு. PART 4.


***பாபர் மசூதிக்குள் இருட்டில் திருட்டு ராமன் - PART 2. - சு.அறிவுக்கரசு.***

***பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - - சு.அறிவுக்கரசு. ***

மீண்டும் வாருங்கள்.(தொடரும்)

***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

பாபர் மசூதிக்குள் இருட்டில் திருட்டு ராமன் - PART 2.

>> Thursday, June 11, 2015

ராமர் கோவில் என்ற பொய். ராமன் யோக்யதை. பிறப்பு அசிங்கம். ராமன் மட்டும் எப்படி அவதாரம்? இவரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???

நீ இந்து என்றால் சொல். சம்மதமா?

ராமனின் பிறப்பும் ராம ஜென்ம பூமி(?) சிக்கலின் தொடக்கமும்- சு.அறிவுக்கரசு.

சொந்த ஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஓர் இடத்திற்குச் சென்று கிடைத்த வேலையைச் செய்தான். இவன் ஜாதி என்ன என்று யாருக்கும் தெரியாது அல்லவா!

வேலை செய்து சம்பாதித்ததில் மீதம் செய்து தன் வீட்டுக்குக் கொடுத்து வந்தான். அந்த நிலையில் ஒரு நாள் தன் தங்கைக்குத் திருமணம் ஏற்பாடு ஆவதாய் கேள்விப்பட்டான். ஆறுவயது படாஹிக்கும் கிழவன் ஒருவனுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டதாகச் செய்தி. சேதி தெரிந்ததும் தன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போய் திருமணத்தை நிறுத்திவிட முயற்சி செய்தான். ஆனால், மாப்பிள்ளையிடம் ஏற்கெனவே இருநூறு ரூபாய் வாங்கிவிட்ட அபிராம்தாசின் தந்தை திருமணத்தை நிறுத்த முடியாது எனக் கூறிவிட்டார்.

வாதம் செய்து பார்த்தான். அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் 6 வயது மணப்பெண் விளையாடிக் கொண்டிருந்தாள். கோபம் கொண்ட அபிராம்தாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.

மூன்றாம் நாள் திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்குப் போன படாஹி சில மாதங்களுக்குள் திரும்பி வந்தாள் விதவையாக. மோவா அரும்பு எனும் நிலையில் இருந்த சிறுமி, கைம்பெண்ணாக, தந்தை வீட்டுக்கே வந்துவிட்டாள். மறுமணம் ஏதும் செய்து கொள்ளாமல் வாழ்ந்து 2005இல் இறந்தாள்.

சோற்றுக்கு லாட்டரி

அபிராம்தாஸ் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்னா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். தன் தந்தையுடன் உதவியாக இருந்தபோது தெரிந்து வைத்துக் கொண்ட சில சமக்கிருத வார்த்தைகளை முணுமுணுத்து கோயில் பூசாரியாக முயன்றான். உணவும் தங்கும் இடமும் கிடைத்தது. தட்சணை எதுவும் இவனுக்குக் கிடைக்கவில்லை. அர்ச்சகப் பார்ப்பனரே முழுவதையும் எடுத்துக் கொண்டார். அபிராம்தாஸ் ஒரு நாள் பட்னா நகரைவிட்டுப் புறப்பட்டு அயோத்யாவுக்கு வந்து சேர்ந்தான். இது நடந்தது 1934ஆம் ஆண்டு. அவனுக்கு வயது 30. சரயு நதியில் குளித்துவிட்டுக் கரை ஏறிய அவனை ஒரு சாது பார்த்தார். ஆறு அடிக்கு மேல் உயரம். வாட்டசாட்டமான முரட்டு உடம்பு. சாது அவனை அழைத்தார். தன் பெயர் சரயுதாஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்று உண்ண உணவும் உறங்க இடமும் கொடுத்தார். அபிராம்தாஸ் பைராகியாக விருப்பம் தெரிவித்தான். உச்சிக்குடுமியைத் தவிர, மீதியை மொட்டை அடிக்கச் செய்தார். பண்டாரமாக்கிவிட்டார். அவனுடைய தந்தை சூட்டிய பெயராகிய அபிநந்தன் மிஸ்ரா என்பதை நீக்கினார். அபிராம்தாஸ் என்று மாற்றினார். சரயுதாஸ் யாதவ ஜாதி என்பதால் பார்ப்பன அபிராம்தாசுக்கு தீட்சை தரக்கூடாதாம். ஆகவே ஜமுனாதாஸ் எனும் பார்ப்பனரைக் கொண்டு தீட்சை தந்தார்.

என்றாலும் குடும்பத்தையோ, பந்தபாசங்களையோ துறக்க விருப்பம் இல்லாது வாழ்ந்தான். தன் தம்பிகள், ஒன்றுவிட்ட தம்பிகள் முதலியோரைத் தன்னுடன் வைத்துக் கொண்டார். பார்ப்பனர்கள் விருப்பம்போல் விதிமுறைகள் மாறிக் கொள்ளுமோ?

அனுமன் கார்ஹி கோயிலுக்குச் சொந்தமான நிலபுலங்களைக் கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டினான். ரியல் எஸ்டேட் தொழில் அந்தக் காலத்திலும் அதிக வருமானம் தரக்கூடியதாக இருந்துள்ளது போலும்! தனக்கென வருமானம் சேர்ப்பதைக் குறியாகக் கொண்டான். முசுலிம்கள் மீது வெறுப்பு விசத்தைக் கக்கிக் கருத்துகளைக் கூறத் தொடங்கினான். அகில இந்திய இந்துமகா சபாவின் உறுப்பினர் ஆனான். இந்துமத வெறிபிடித்த ஆட்களுடன் சேர்ந்து பழகத் தொடங்கினான்.

பாபர் மசூதியில் ராமன் பொம்மையை வைத்தான். இதன் பின்னணியில் பதுங்கியிருந்த பெரும் சதிச் செயல்பற்றி அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வழியில்லை. அவனோ, எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, முரடன். இப்படிப்பட்டவர்கள்தான் இந்துமகா சபாவுக்குத் தேவை. இவர்களைக் கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டு தலைவர்கள் ஆகிவிடுவார்கள். ராமன் பொம்மையை வைத்த இரண்டு நாள்களுக்குள் மகந்த் திக் விஜயநாத் அய்க்கிய மாகாண இந்துமகா சபா அமைப்பின் தலைவராகிவிட்டார். காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்த ஆள்.

காசேதான் கடவுள்

பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை ஏன் வைக்கவேண்டும்? பாபர் மசூதிக் கட்டடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது முதல் நோக்கம். அதன் வாயிலாக நிர்வானி அகாராவின் கட்டுப்பாட்டுக்குள் அயோத்தியா கொண்டுவரப்பட வேண்டும். நிர்மோகி அகாராவின் கட்டுப்பாட்டுக்குள் அனுமன் கார்கி கோயிலும் அதன் வருமானம் முழுமையும் உள்ளது. அத்துடன் ராமசபுதாரா எனும் இடம் இந்த அகாராவிடம் உள்ளது. ராமசபுதாரா என்பது அன்றுவரை ராமனின் பிறந்த இடம், ராமஜென்மபூமி என்று கூறப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. இங்கு கிடைக்கும் வருமானம் முழுவதுமே நிர்மோகி அகாராவையே அடைந்துவந்தது.

ராமசபுதாராவுக்கு 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமன் பொம்மையை வைத்துவிட்டால் அதுவே ராமஜன்ம பூமியாகிவிடும். ராமசபுதாராவின் முக்கியத்துவம் குறைக்கப்படும், வருமானம் எல்லாம் நிர்வானி அகாராவுக்கு வந்துசேரும். இத்தனைக்கும் காரணமான அபிராம்தாசின் செல்வாக்கு உயரும். நிர்மோகி அகாராவின் செல்வாக்கை இழக்க வைக்கும். ஜன்மபூமி உத்தாரக் என்ற நிலையில் அபிராம்தாஸ் அயோத்தியாவின் தட்டிக்கேட்க ஆளில்லாத் தலைவராகி விடுவான். ஏனென்றால் இவன்தான் ஜென்மபூமியை விடுவித்தவன் (உதாரக்) ஆகிவிடுவான். இதுதான் திட்டம்.

ராமன் யோக்யதை

ராமன் கடவுள் அவதாரம் என்கிறார்கள். விஷ்ணு எனும் கடவுளின் அவதாரமாம். அவதாரம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு மனிதனாகப் பிறந்து, நாய்படாதபாடு என்று சொல்வார்களே, அப்பேர்ப்பட்ட துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? நான்கு காரணங்கள். நான்கும் சாபங்கள். கடவுளுக்கே சாபமா? கடவுளுக்கே சாபம் கொடுக்கும் சக்தி படைத்தவர்களாக முனிவர்கள் இருந்திருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பழங்காலத்தில் இருந்த கடவுள்களும் முனிவர்களும் தற்காலத்தில் இல்லாமல் போனது எப்படி? இதை யாரும் ஆராயவில்லை, இதுவரை!

1. பிருகு எனும் முனிவரின் மனைவியை விஷ்ணு கொலை செய்துவிட்டதாம். மனைவியை இழந்து வாடிய முனிவன், விஷ்ணுவும் மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து கஷ்டப்படும்படிச் சாபம் கொடுத்து விட்டானாம். வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம் 51ஆம் சருக்கப் பாடல் இதனைக் கூறுகிறது. இதனை உறுதிப்படுத்துகிற வகையில் மகா கந்த புராணம், உபதேச காண்டம் 64ஆம் அத்தியாயத்திலும் பாடல் ஒன்று உள்ளது.

2. ஜலந்திரனின் மனைவி பிருந்தாவைப் புணரவேண்டும் என்பது விஷ்ணுவின் ஆசையாம். திடீரென இறந்துவிட்ட ஜலந்திரனின் உடலுக்குள் புகுந்துகொண்ட விஷ்ணு, பிருந்தாவுடன் உடல் உறவு கொண்டிருந்தான். சில நாள்களில் விஷ்ணுவின் காமச்சேட்டைகளைத் தெரிந்துகொண்ட பிருந்தா, விஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்தாள். பிருந்தா தற்கொலை செய்து கொண்டாள். காமவெறி அடங்காத விஷ்ணு, சாம்பலில் படுத்துப் புணர்ந்து கொண்டதன் விளைவாக துளசிச் செடி முளைத்துவிட்டதாம். அதன் இலைகளை மாலையாக அணிந்து மயக்கம் தீர்ந்தது எனப் போகிறது சாபம் இட்ட கதை. மகா கந்த புராணம், தக்க காண்டம், 23ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது.

3. பகலில் தன் மனைவியை விஷ்ணு புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட சிவகணத் தலைவர் அற்புதாக்சன் என்பவன் யாரடா, பகலில் இக்காரியத்தைச் செய்வது? என்று கேட்டான். தன் செயலை நிறுத்தாமல் விஷ்ணு, கேட்பவன் யாரடா? என்று கேட்டதாம். சிவனின் கணங்களின் தலைவனான நந்தியிடம் இச்செய்தியை அற்புதாக்சன் தெரிவித்தானாம். உடனே நந்தி சாபம் இட்டதாம். இந்தச் செய்தி சிவரகசியம், மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம், 43ஆம் சருக்கத்தில் உள்ளது.

4. இந்தப் பகல் நேரப் புணர்ச்சி சிவரகசியம், 3ஆம் அம்சம், இரண்டாம் காண்டம், 4ஆம் சருக்கத்தில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. விஷ்ணு புணர்ந்து கொண்டிருந்தபோது, எக்குத் தப்பாகப் பிருகு முனிவன் விஷ்ணுவைக் காணவந்தான். கடவுளின் கலவிக்குக் காவல் பணியில் இருந்த விஷ்ணுவின் வாகனம் கருடன் முனிவனைத் தடுத்ததாம். முனிவன் கருடனைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு உள்ளே நுழைந்தானாம். கவனித்த கடவுள், முனிவனைக் கையைக் காட்டி நிற்கும்படி சைகை காட்டியதாம். விளங்காத முனிவன் அந்தி வேளைதன்னில் ஏந்திழையைப் புணர்வரோ? என்று கோபமாகக் கேட்டுச் சாபம் தந்துவிட்டானாம்.

பிறப்பு அசிங்கம்

கடவுளின் காமவிகாரத்தால், செய்யப்பட்ட வினைகளின் எதிர்வினைகளாகச் சாபங்கள் கொடுக்கப்பட்டதாக நான்கு கதைகளும் காட்டிக் கொண்டிருக்கின்றன. சாபங்களின் விளைவாகக் கடவுள் மனிதனாகப் பிறந்திருக்கிறது. இது கடவுளின் யோக்யதைக்கு இழுக்கு அல்லவா? இப்படிப்பட்ட இழி பிறப்பான ராமன் பிறந்த இடத்திற்கு என்ன மகோன்னதம்? என்ன மரியாதை?
கேடுகெட்ட இப்பிறப்பாவது, முறையாக நடந்துள்ளதா? அசுவமேதயாகம் செய்திருக்கிறான் ராமனின் தந்தை(?)யான தசரதன். பூபஸ்தம்பம் எனப்படும் யாகத் தூண்கள் 21 நடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, அவற்றில் பசுக்கள், பாம்புகள், பறவைகள் கட்டப்பட்டன. 300 பசுக்களும் ஒரு குதிரையும் கட்டப்பட்டிருந்தன.

தசரதனின் மூன்று பட்டத்து ராணிகளான கவுசல்யா, கைகேயி, சுமத்திரை ஆகியோரை அத்வர்யு, ஹோதா முதலிய முனிவர்களுக்கு தட்சணையாகத் தசரதன் கொடுத்துவிட்டான். கணவனால் தட்சணையாகத் தரப்பட்ட மூன்று ராணிகளோடும் முனிவர்கள் சல்லாபித்துத் திரிந்தனர். அத்தனையும் முடிந்த பிறகு பணத்தைப் பெற்றுக் கொண்டு, ராணிகளை மீண்டும் தசரதனிடம் ஒப்படைத்து விட்டனர். குத்தகை முடிந்து விட்டதோ?

யாகக் குதிரையை கவுசல்யா வெட்டிக் கொன்று, செத்த குதிரையைக் கட்டிப் பிடித்தபடி ஓர் இரவு முழுவதும் படுத்துக் கிடந்தாள். அத்வர்யு, ஹோதா முதலிய முனிவர்களின் புணர்ச்சியால் ராணிகள் மூவரும் அன்றே கர்ப்பமாகி விட்டனர் என்று வால்மீகி ராமாயணம் (14ஆம் சருக்கம்) கூறுகிறது. புத்திரகாமேட்டி யாகம் என்பதையும் தசரதன் செய்தான் என்று வால்மீகி அடுத்த சருக்கத்தில் எழுதியுள்ளான். கம்பன் அசுவமேத யாகம் பற்றிப் பாடாமல் புத்திர காமேட்டி யாகம் பற்றி மட்டுமே பாடியுள்ளான்.

பாயசக் கர்ப்பமா?

இந்த யாகத்தில் தீயினின்றும் ஒரு பூதம் தோன்றியதாம். பாயசம் தந்ததாம். அந்தப் பாயசத்தை மூன்று மனைவிகளுக்கும் தந்து குடிக்கச் செய்தானாம் தசரதன். செம்பில் பாதி அளவு கவுசல்யா, மீதியில் பாதி அளவு கைகேயி, மீதியை சுமத்திரை ஆகியோர் குடிக்குமாறு தந்தானாம். மூவரும் கர்ப்பம் தரித்தனராம்.

இரண்டு விதமாக ராமனின் இழிபிறப்பு நடந்திருக்கிறது. இரண்டாவது முறையில் குறிக்கப்படும் பாயசம் குடித்து கருத்தரித்த முறை நம்பக் கூடியதா? பாயசத்திற்கு மனிதக் கருவை உற்பத்தி செய்யும் தன்மை உண்டா? வாயில் ஊற்றிக் குடிக்கும் பாயசம் உணவுக்குழாய் வழியே இரைப்பைக்குப் போய்ச்சேரும். செரித்தபின் சிறுகுடல், பெருங்குடல் வழியே சென்று மலக்குடல் வழியே வெளியேறும் என்பதுதானே உடல் அமைப்பு?

பாயசம் எப்படிக் கருப்பைக்குப் போகும்? குழந்தை உருவாகும்? ராமன் சகோதரர்கள் பிறப்பே, மோசடி முறையாக அல்லவா இருக்கிறது?

ராமன் மட்டும் எப்படி அவதாரம்?

ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகிய நால்வருமே சாபத்தால் விஷ்ணுவுக்குப் பிறந்த பிள்ளைகள். அப்படியானால் நால்வருமே விஷ்ணுவின் அவதாரங்கள் தானே? ராமனை மட்டும் ஏன் அவதாரம் என்கிறார்கள்? மற்ற மூன்று பேரும் ஏன் முக்கியமற்ற சப்பாணிகள் என்று ஆக்கி விட்டனர்?

இந்த ராமனை விளம்பரப்படுத்திக் கடவுளாக்கியவர்களே, விஜய நகர அரச வம்சத்தினர்தாம். பாமினி சுல்தான்களால் தாக்கப்பட்டு அதனால் உருவானதுதான் இந்தப் பேரரசு. இசுலாமிய எதிர்ப்பு உணர்வால் உருவாக்கப்பட்ட இந்துமத அரசமைப்பு விஜய நகர அரசு. இவர்களால்தான் தென்இந்தியாவில் ராம அவதாரம் பெரிதுபடுத்தப்பட்டது. ஏனெனில் அரசுக்கு நெருக்கமானது ராம அவதாரம். அரசப் பிறப்பு, அரச வளர்ப்பு, அரசக் கல்வி, கையில் வில் அம்பு ஆயுதம் எனும் கோதண்டராமன் அரசர்க்கு மிகவும் பிடித்ததாக ஆகிவிட்டது.

வாள், வேல், கதாயுதம் போன்ற தொடக்ககால ஆயுதங்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் இருந்துதான் போராட வேண்டும். ஆனால் வில், அம்பு கொண்டு தூரத்தில் இருந்தே போராட முடியும். அத்தகைய ஆயுதம் ராமன் கையில் இருந்ததால் அரசருக்குப் பிடித்துப் போயிற்று. மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டு அம்பெய்து வாலியை ராமன் கொன்றான் எனும்போது நேருக்கு நேர் நின்று போராடக்கூடத் தேவையில்லாத ஆயுதத்தை ராமன் கையில் கொடுத்ததால், எப்படியும் அதிகாரத்தைப் பறிக்க வேண்டும் எனும், முறையற்ற அதிகார வெறிபிடித்த மன்னர்க்கு மிகவும் பிடித்தவனாக ராமன் தெரிந்தான்.

அதிகார வெறியின் அடையாளம் ராமன். ஆகவே அந்தப் பொம்மையை இசுலாமியரின் வழிபாட்டுத் தலத்தில் வைத்தால், இடம் இசுலாமியரிடமிருந்து இந்துக்கள் கைக்கு மாறுவது இலகுவாகிவிடும் என்பது இந்து மகா சபையினரின் கணக்கு.

இந்து மகா சபா

பொம்மையை வைத்த மறுநாள் 24.12.1949இல் கொல்கத்தாவில் நடந்த இந்துமகாசபா மாநாட்டில் பேசிய விநாயக தாமோதர் சாவர்க்கார், அகண்ட பாரதம் தன் கண்களுக்குத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.

காந்தியாரைக் கொன்றுவிட்டு இரண்டு ஆண்டுக்காலம் பதுங்கிக் கிடந்த ஓநாய்கள் ஓங்காரக் குரல் எழுப்பத் திராணியைத் தந்த செயல் _ பாபர் மசூதியில் ராமன் குழந்தை பொம்மையை வைத்ததுதான்! அந்தளவு முக்கியம் பெற்ற சதிச் செயலுக்குக் காரணமானவர்கள் மூன்று பேர்.
மகாராஜா படேஸ்வரி பிரசாத் சிங் எனும் பல்ராம்பூர் சிற்றரசர், மகந்து திக்விஜயநாத், கே.கே.நாயர் எனும் கோண்டா மாவட்ட கலெக்டர் எனும் மூவர்தான் சதிக்கும்பல்.

சதிக்கும்பல்

பல்ராம்பூர் சிற்றரசர் படேஸ்வரி பிரசாத் சிங் என்பவர் 1-.1.1914 இல் பிறந்தவர். பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் ஹான்சன் என்பவரால் அரச குடும்பத்தவர்க்குரிய முறையில் வளர்க்கப்பட்டவர். அஜ்மீரில் உள்ள மேயோ பிரின்ஸ் கல்லூரியில் படித்தவர். குதிரைச் சவாரி, டென்னிஸ் ஆட்டம் ஆகியவற்றில் திறமை வாய்ந்தவர்.

1946 கோண்டா மாவட்ட கலெக்டராக வந்த மலையாளியான கே.கே.கே. நாயர் என்பவருடன் டென்னிஸ் ஆட்டக்காரர் என்ற முறையில் பழக்கமானவர் சிற்றரசர். கோண்டாவிலிருந்து 1947 ஜூலை மாதத்தில் நாயர் மாற்றப்பட்டாலும்கூட இருவரின் நட்பு தொடர்ந்தது.

மூவரில் மூத்தவரான மகந்து திக்விஜய்நாத், சிற்றரசர் ஏற்பாடு செய்த யாகம் ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். இந்து மதத்தையும் தர்மத்தையும் காப்பாற்றுவதற்காக தர்ம சங்கம் என்பதை ஆதிசங்கரனின் தத்துவ வழியில் 1940இல் தொடங்கி நடத்திவந்த கற்பாத்ரி எனும் சாமியாரும் யாகத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார்.

யாகம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு இவர்கள் செய்தவற்றைப் பற்றி, அவர்கள் நடத்திய இந்து சபா வர்த்தர் எனும் ஏட்டில் இந்துமகா சபையினரே பின்வருமாறு எழுதியுள்ளனர். யாகத்தின் கடைசி நாளன்று சாவர்க்காரின் கட்டளைப்படி அந்நியரின் பிடியில் இருக்கும் இந்துமதச் சிறப்பிடங்களைக் கைப்பற்றுவது பற்றித் திட்டம் போட்டனர். பாபரி மசூதியைக் கைப்பற்றுவதுபற்றி கற்பாத்ரி சாமியாருடனும் கே.கே.நாயருடனும் விவாதித்தனர். தீர்க்கமாக யோசித்து முடிவான திட்டத்துடன் சந்திப்பதாகக் கூறி, நாயர் கோண்டாவுக்குத் திரும்பினார்.

மறுநாள் நாயர் அவர்களைச் சந்தித்தார். கற்பாத்ரியும் திக்விஜய் நடத்தும் தங்களது திட்டங்களை விவரித்தனர். அயோத்தியில் பாபர் மசூதி, காசியில் விசுவநாத் கோயில், மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடம் ஆகிய மூன்றையும் கைப்பற்ற வேண்டும் என்பதைக் கூறினர். இந்தப் பணிகளை முடிக்கத் தாம் எதையும் இழக்கத் தயாராக இருப்பதாக நாயர் அவர்களிடம் கூறினார்.- சு.அறிவுக்கரசு.

- (தொடரும்)

SOURCE: Unmaionline 2013 ஜூலை 16-31 2013

ராமர் கோவில் என்ற பொய்யும், பார்ப்பன இயக்கங்களின் அரசியல் லாபமும் ...

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர் .பாபரை எதிர்த்தவர். பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார்.

பாபர் மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர்.

அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர்மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது.

இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார்.

இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசியிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக்பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754-ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்...

பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனிவர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர்களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர்கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக ஏன் அறிந்திருக்கவில்லை?

இவர்கள் யாரும் பாப்ரி மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் ராமர் கோவில் என்ற ஒன்றை இடித்துத்தான் கட்டபப்ட்டது என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை..

வெள்ளையர்கள் நாட்டை விட்டுப் போனாலும் கூட நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பார்பன கூட்டம் மீண்டும் தங்களது பிரித்தாளும் சூழ்சியை அரங்கேற்ற ஆரம்பிக்கப்பட்டது தான் பாப்ரி மஸ்ஜித் நிலம் பார்பன இயக்கங்களின் பிராமண கடவுள் ராமர் பிறந்த இடம் என்ற பொய்யான வதந்திகள்.

காரணம் இதன் மூலம் மக்கள் இதை பற்றி மட்டும் சிந்திக்கும் போது இவர்கள் ஏகபோகமாக ஆட்சி மற்றும் அதிகாரங்களை அனுபவிக்கலாமல்லவா.அது தானே நம் நாட்டில் நடந்து வருகிறது

பின்னர் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இதை வைத்தே கலவரங்களை நாடு முழுவதும் பார்பான் இயக்கங்கள் அரங்கேற்றி ஆயிரக்கணகான அப்பாவி மக்களை கொன்று ஆட்சியையும் பிடித்தார்கள்.. மீடியாக்களும் தங்களின் பங்குக்கு ராமர் பற்றிய பாமர மக்களுக்கு பக்தியை ஏற்ற நாடகங்கள் உள்ளிட்டவை பரப்படுகிறது .இதன் மூலம் பார்பன இயக்கங்களின் சதி நிறைவேறுகிறது

இந்த கூடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவும் உண்டு என்பதே மறுக்க முடியாத உண்மை..காங்கிரஸ் மட்டும் நினைத்திருந்தால் நாட்டின் திட்டமிட்ட பார்பன இயக்கங்களின் கலவரத்தையும் தடுத்து இருக்கலாம்..பாப்ரி மஸ்ஜித் தையும் காப்பாற்றி இருக்கலாம்..

இன்னும் ஒரு உண்மையை கூற வேண்டுமானால் வரலாற்றை பார்ப்போமேயானால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் தான் பார்பன இயக்கங்கள் கூறியபடி வழிபாட்டு உரிமை என அனைத்தும் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டது எனபதே உண்மை.
எது எப்படியோ இவர்களின் சுய நல அரசியலுக்காக கொல்லப்பட்டது என்னவோ அப்பாவி மக்கள் தான்.. இடிக்கப்பட்டதும் நூற்றாண்டு கால பழமை கொண்ட பள்ளிவாசல்..

இவரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???

11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலியில் பாபர் பின்வருமாறு கூறுகிறார்:

“அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லாஹ் உன்னிடம் ஓப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமையாக அமைத்துக் கொள்:

நீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.

நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி நிலைபெறும்”


*** பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - - சு.அறிவுக்கரசு.***

***
பாபர் மசூதியில் இருட்டில் திருட்டு ராமன். சு.அறிவுக்கரசு. PART 3.
***

***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<

மேலும் படிக்க... Read more...

பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - - சு.அறிவுக்கரசு.

>> Tuesday, June 9, 2015

இருட்டில் திருட்டு ராமன் - - சு.அறிவுக்கரசு
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமஜென்ம பூமி என்று சொல்லிக்கொண்டு பாபர் மசூதிக்குள் ராமன் பொம்மையை வைத்தவர்களின் சூழ்ச்சிகளை உரித்துக்காட்டும் இது.


1949 டிசம்பர் 23, காலை 9 மணி. உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியா நகரம் காவல் நிலைய அதிகாரி பண்டிட் ராம்தேவ் துபே என்பவர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கிறார். எஃப் அய் ஆர் என்று எல்லோரும் சொல்லும் அறிக்கை அபிராம்தாஸ், ராம்சகல் தாஸ், சுதர்சன் தாஸ் மற்றும் 50 முதல் 60 பேர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. இந்தியன் பினல் கோட் பிரிவுகள் 147, 448, 295 ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் புரிந்ததாக அவர்கள் மீது புகார். கலவரம் செய்து, அடுத்தவர் இடத்தில் அத்துமீறி நுழைந்து, வழிபாட்டு இடத்தின் புனிதத்தை மாசுபடுத்திய குற்றங்கள் புரிந்ததாகப் புகார்.

நான் காவல் நிலையத்திற்கு இன்று காலை 7 மணிக்கு வந்தபோது நிலையக் காவலர் எண் 7 உள்ள மாதா பிரசாத் மூலம் கீழ்க்கண்ட விவரங்கள் தெரிய வந்தன. சுமார் 50_60 நபர்கள் பாபர் மசூதியின் காம்பவுண்டு கதவைப் பூட்டியிருந்த பூட்டை உடைத்து, மதில் சுவரின் மேல் ஏறி உள்ளே குதித்துப் படிக்கட்டுகளின் வழியே உள்புறம் சென்று சிறீபகவானின் பொம்மையை வைத்து சீதை, ராமன் முதலிய சித்திரங்களை உள்புறச் சுவரிலும் வெளிச் சுவரிலும் வரைந்து விட்டதாகவும் காவலர் எண் 70 ஹன்ஸ்ராஜ் அந்த நபர்களைத் தடுத்ததாகவும் அவர்கள் அதனை லட்சியம் செய்யவில்லை என்பதாகவும், பின்னர் அங்கே காவலில் இருந்த சிறப்புக் காவல்படையினரை (பி.ஏ.சி) அழைத்ததாகவும், அவர்கள் வந்து சேர்வதற்குள் அந்த நபர்கள் மசூதியின் உள்ளே சென்றுவிட்டதாகவும் தெரிய வந்தது. காவல்துறை மூத்த அதிகாரிகள் வந்து நடவடிக்கைகளை எடுத்தனர். அதன்பின்னர் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்குமளவில் பெருங்கூட்டம் மசூதிக்கு முன்னர் திரண்டு பஜனைகளைப் பாடிக் கொண்டும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டும் கூடிவிட்டனர்.

அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. என்றாலும் குற்றவாளிகளான அபிராம்தாஸ், சகல்தாஸ், சுதர்சன்தாஸ் மற்றும் 50 _ 60 நபர்கள் மசூதிக்குள் பலவந்தமாகப் புகுந்து ஒரு பொம்மையை வைத்து, அதன் புனிதத் தன்மையைக் கெடுத்துவிட்டனர். அங்கே இருந்த அதிகாரிகளும் மற்றவர்களும் அதைப் பார்த்தனர். வழக்கு சம்பந்தமாக சரிபார்த்து, விசாரித்து உண்மையெனக் கண்டறியப்பட்டது என்பன எஃப் அய் ஆரின் வாசகங்கள்.

அற்புதம் நடந்ததா?

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமஜென்ம பூமி என்று சொல்லிக்கொண்டு, குழந்தை ராமன் பொம்மையை வைத்துக் கொண்டு, இடத்திற்குப் பாத்யதை கோரும் வழக்கையும் தாக்கல் செய்து, மொத்தப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு சொந்தம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பையும் வாங்கி இருப்பவர்களின் யோக்யதையைத் தோல் உரித்துக்காட்டும் முதல் தகவல் அறிக்கை இது.

அற்புதம் நடக்கப் போகிறது என்று தண்டோரா போடாத குறையாக விளம்பரம் செய்து, துண்டு நோட்டீசு அச்சடித்துப் பரப்பி, உள்ளூர் இந்தி ஏடுகளில் கட்டுரைகள் எழுதி, குதிரை வண்டிகளில் ஒலிபெருக்கி வைத்து விளம்பரம் செய்து, சுற்றுப்பகுதி இந்துக்களை ஏராளமாக வருவித்து ஏமாற்றம் அடைந்த இந்துமகா சபையினர் நான்கு நாள்கள் கழித்து திருட்டுத்தனமாக மசூதியின் உள்ளே புகுந்து அயோக்கியத்தனமாக ராமன் குழந்தை பொம்மையை (ராம் லல்லா) வைத்துக் கிரிமினல் குற்றம் செய்ததைத் தோலுரித்துக் காட்டும் எஃப்அய்ஆர் வாசகங்கள் அம்பலப்படுத்திவிட்டன.
நடந்ததுதான் என்ன?

1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு 11 மணி. அயோத்யா நகரில் அனைவரும் உறக்கத்தில் இருந்த நேரம். அதிலும் சலசலத்து ஓடும் சரயு நதிக்கரையில் படுத்துத் தூங்கும் சன்னியாசிகள், பைராகிகள், பக்தர்கள் முதலிய அனைவரும் முன்னதாகத் தூங்கி முன்னதாக எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால் ஆழ்ந்த நித்திரையில் இருந்திருந்த வேளை.

நதிக்கரையில் இருந்த ராம்காட் (ராமன் கூட்டம்) கோயிலின் முன்பாக அபிராம்தாஸ் மட்டும் நின்று கொண்டிருந்தான். அந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அனுமான் கார்கி எனும் கோட்டை போன்ற கோயிலின் உள்ளே சமக்கிருத பாடசாலை, சாதுக்கள் தங்கும் அறைகள், அடிமாடுகளின் கொட்டகை போன்றவை உள்ளன. அங்கேதான் அபிராம்தாஸ் இரவில் படுத்துக் கொள்வான். அவனுடன் அவனுடைய மூன்று தம்பிகள், இரண்டு ஒன்றுவிட்ட தம்பிகள் தங்கியிருந்தனர். உணவு சமைத்து அவர்கள் அபிராம்தாசின் அறைக்கு எடுத்துக் கொண்டு வந்து தருவார்கள். அபிராம்தாசுக்கு ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் என்று ஒரு கூட்டாளி உண்டு. இவர்கள் இருவருமே இந்துமகா சபைக்காரர்கள். அபிராம்தாஸ் தீவிர உறுப்பினர். ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் அயோத்தி நகர இந்துமகாசபா தலைவன். சமக்கிருதம் படித்தவன். அபிராம்தாஸ் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறி.


இவர்கள் இருவரும் சேர்ந்து, பாபர் மசூதியின் உள்ளே சென்று ராமன் பொம்மையை வைப்பதாகத் திட்டம். அபிராம்தாஸ் இருப்பிடத்திற்கு பரமஹம்ஸ் இரவு 9 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பது திட்டம். குழந்தைராமன் பொம்மையை பிருந்தாவன்தாஸ் என்பவன் எடுத்துக் கொண்டு வந்ததும் மூவருமாகச் சதித்திட்டத்தை நிறைவேற்றுவதாகவும் திட்டம்.

அற்புதம் நடத்தப்பட்டது

இரவு 12 மணிக்கு முன்னதாக மசூதிக்குள் புகுந்துவிட வேண்டும். ஏன் என்றால் காவல் துறையினரின் பாரா மாறும் நேரம் 12 மணி. புதிதாகப் பாரா செய்பவர்கள் இயல்பாகவே சுறுசுறுப்பாக இருப்பதால் நுழைபவர்களைப் பார்த்துப் பிடித்துவிட முடியுமே!

ஆனால் மூவரில் ஒருவனான ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் திட்டப்படி வரவில்லை! டிசம்பர் 22ஆம் நாள் மாலை வரை இருந்தவன், இரவு காணவில்லை. பின்னரும் மூன்று நாள்கள் வரை அயோத்தியில் இல்லை. எங்கோ பதுங்கிவிட்டான்.

ஆனால், ராமன் குழந்தை பொம்மையைத் தான் வைத்ததாக அவன் பேட்டி கொடுத்து, அது நியுயார்க் டைம்ஸ் ஏட்டில் 22-_12_1991இல் வெளிவந்தது. அதே நாளில் 42 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிக்குச் சொந்தம் கொண்டாடினான். 2003இல்தான் இறந்தான். திகம்பரி அகாரா எனும் பண்டாரங்களின் அமைப்புக்குத் தலைவனாக இருந்தான்.

பரமஹம்ஸ் வருவான் என்று அபிராம்தாஸ் இரவு 10 மணிவரை காத்திருந்தான். அவன் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தான். அங்கும் அவன் இல்லை. அபிராம்தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. தன் தம்பிகளுக்குக் கட்டளைகள் பிறப்பித்தான். எப்படியும் எடுத்த காரியத்தை முடித்துவிடுவது என்ற உறுதி அவன் மனதில் ஏற்பட்டுவிட்டது. அவன்?

யார் இவர்கள்?

அபிராம்தாஸ் ஒரு நாகா பைராகி. அயோத்தி, அனுமன் கார்கி போன்ற பகுதிகளில் நன்கு பரிச்சயமான முரட்டு ராமநந்தி பிரிவைச் சேர்ந்தவன். இப்பிரிவு நிர்வாணி அகாரா எனும் அமைப்பின் ஓர் அங்கம். 1934இல் அயோத்திக்கு வந்தவன் சரயுதாஸ் எனும் பைராகியின் கண்களில் பட்டுவிட்டான். இவனைத் தமது அமைப்பில் சேரும்படி அழைத்தான். உணவு, உடை, தங்குமிடம் எல்லாம் கிடைக்கும்படிச் செய்தான். எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பார்ப்பனனுக்குத் தேவை இந்த மூன்றும்தானே? உழைப்போ, வேலையோ செய்யத் தேவையில்லாமல் கிடைக்கிறதே! கசக்குமா? சேர்ந்துவிட்டான், ஜமுனாதாஸ் எனும் மற்றொரு பைராகிதான் இவனுக்குத் தீட்சை கொடுத்தான். பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தான்.

தலைவனாக இருக்கும் சரயு தாஸ் ஏன் அபிராம் தாசுக்குத் தீட்சை அளிக்கவில்லை? அபிராம்தாஸ் பார்ப்பனன். உயர்ஜாதி. சரயுதாஸ் யாதவ ஜாதி. தாழ்ந்த ஜாதி. ஆகவே பார்ப்பன ஜமுனாதாஸ் பார்ப்பன அபிராம்தாசுக்குத் தீட்சை செய்வித்தான். பைராகிகள் எல்லாம் துறந்தவர்கள். ஜாதியை மட்டும் துறக்காதவர்கள். இதுதான் இந்துமதம். இதை வளர்ப்பது இந்துமகா சபா. இவர்கள் அதன் உறுப்பினர்கள்.

இந்து வெறியர்கள் பலவிதம்

நாகாக்களில் சன்னியாசி என்ற பிரிவும் பைராகி என்ற பிரிவும் தனித்தனி! சிவனைக் கும்பிட்டு, ஆதி சங்கரனின் அத்வைத சித்தாந்தத்தை ஏற்று, தஷ்ணமி சம்பிரதாயம் எனப்படும் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு சன்னியாசி என்று பெயர்.

விஷ்ணுவைக் கும்பிட்டு, ராமானந்தா என்பவரின் சித்தாந்தத்தை ஏற்றுப் பின்பற்றி வருபவர்களுக்குப் பைராகி என்று பெயர்.

ராமானந்தப் பிரிவைச் சேர்ந்த அகாராக்கள் மூன்று உள்ளன. நிர்வாணி அகாரா என்பதும், நிர்மோகி அகாரா, திகம்பரி அகாரா என்பவையும் மூன்றுக்குமான பெயர்கள். மூன்று அகாராக்களும் அயோத்தியில் உண்டு.

அயோத்தியில் பலநூறு ஆண்டுகளாக நிலைபெற்று விளங்குவது தஷ்ணமி சன்னியாசிகளே! இவர்களை ஒழிப்பதுதான் ராமானந்த பைராகிகளின் முதல் வேலை!

மூவாசையையும் மும்மலத்தையும் துறந்தவர்களின் யோக்யதாம்சம் இது!

எல்லாமே காசுக்காக

தஷ்ணமிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனுமன் குன்று ஜுனா அகாரா எனும் பிரிவினரால் நிருவகிக்கப்பட்டு வந்தது. நிர்வாணி அகாரா பிரிவினர் தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். இது 18ஆம் நூற்றாண்டில் நடந்தது. ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் இருந்த பைராகிகள் கிழக்கே நகர்ந்து வந்து உத்திரப் பிரதேசத்தில் நிலைபெற்றுவிட்டனர். பாபா அபய்ராம்தாஸ் எனும் நிர்வாணி அகாராவின் குரு அதே காலகட்டத்தில்தான் அயோத்தியாவுக்கு வந்தார். பின்னர் இந்த ஊர் ராமனின் பிறந்த பூமி எனும் நிலைபெற்றது. சிவனை வழிபட்ட தஷ்ணமிகள் துரத்தப்பட்டு வைணவ பைராகிகளின் ஆதிக்கத்தில் அயோத்தியா வந்தது. அனுமன் குன்றுப் பகுதியில் ஒரு மரத்தடியில் இருந்த அனுமன் சிலையை சைவ நாகாக்களும் இசுலாமிய பக்கிர்களும் வழிபட்டு வந்தனர். பைராகிகளின் கைப்பற்றில் வந்த பின்னர் இந்த இரண்டு பிரிவு மக்களும் அனுமனைக் கும்பிட அனுமதிக்கப்படவில்லை. அவர்களைத் துரத்துமாறு அபய்ராம்தாசின் கனவில் அனுமன் வந்து கூறியதாகக் கதைகட்டிப் பரப்பித் தங்கள் ஆக்ரமிப்பை நியாயப்படுத்திக் கொண்டனர்.

கதைகள் எப்படியோ! வரலாறு வேறுவிதமாக உள்ளது. முகலாயர்களுக்குப் பிறகு இப்பகுதியை (ஆவாத் பகுதி) ஆண்ட நவாப்கள் அனுமன் கோயில் கட்டப்பட்டு, பின்னர் கோட்டை (அனுமன் கார்கி) எழுப்பப்பட்டது என்கிறது வரலாறு. 1739 முதல் 1754 வரை ஆண்ட நவாப் சப்தர்ஜங் ஏழு பிகா நிலம் கோயில் கட்ட அளித்தார். ஒரு பிகா என்பது சுமாராக 62 சென்ட்க்குச் சமம். அதில் கட்டப்பட்டதுதான் அனுமன் கோயில். ஆனால் இசுலாமிய மன்னர்களைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது இந்துமத வெறிக்கும்பல்!

முசுலிமின் உதவியால்...

நவாப் சப்தர்ஜங்கின் பேரன் அசப் உத்தவுலா என்பவர் காலத்தில்தான் நிதி வசூலிக்கப்பட்டுக் கோட்டைப் பகுதி கட்டப்பட்டது. நிர்வானி அகாராவின் தலைமைப் பீடமாக அயோத்தி வளர்ச்சி அடைந்தது. இது நடந்தது 1793இல்! தலைமை குருவாக வந்த பலராம்தாஸ் என்பவர் நாகாக்களை நான்கு பட்டிகளாகப் (பகுதிகள்) பிரித்தார். ஹர்த்வாரி, பசந்தியா, உஜ்ஜயினியா, மற்றும் சகாரியா என்று பிரித்தார். ஒவ்வொரு பட்டிக்கும் குருவை நியமித்தார். நிலங்களையும் பட்டிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். பட்டிகளுக்குள் பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்பதற்காக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. இது நடந்த ஆண்டு 1925.

ராமன் பொம்மையைக் கொண்டு வந்து மசூதிக்குள் வைத்த முதல் குற்றவாளியான அபிராம்தாஸ் 1904இல் பிறந்தவன். மைதிலி பார்ப்பனப் பிரிவைச் சார்ந்தவன். அவன் தந்தை ஜெயதேவ் மிஸ்ரா என்பவர் புரோகிதத் தொழில் செய்தவர். ஏழு பிள்ளைகள். அனைவருக்கும் உணவு கொடுக்க மிகவும் சிரமப்பட்டவர். அபிராம்தாஸ் மூத்தவன். அவனுக்கு 20 வயது குறைந்த கடைக்குட்டித் தங்கை படாஹி. மிகவும் செல்லம். அபிராம்தாஸ் ஓராண்டு மட்டுமே பள்ளிக்குப் போனான். பிறகு தன் அப்பாவுக்கு உதவியாக பூப்பறித்தல், ஏனம் கழுவுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டான். அக்கிராமத்தில் வேறு வேலை வாய்ப்புகள் கிடையாது. விவசாய வேலை மட்டுமே உண்டு. இவன் பார்ப்பனன் ஆதலால் விவசாய வேலை செய்யக்கூடாது. மனு சாத்திரத்திற்கு விரோதம். ஆகவே ஒருநாள் இரவில் வீட்டைவிட்டு ஓடிப்போனான்.

- (தொடரும்)

SOURCE:unmaionline 2013 ஜூலை 01-15

***********************

***பாபர் மசூதிக்குள் இருட்டில் திருட்டு ராமன் - சு.அறிவுக்கரசு. PART 2. ***

***
பாபர் மசூதியில் இருட்டில் திருட்டு ராமன். சு.அறிவுக்கரசு. PART 3.
***


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP