**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

>> Friday, March 30, 2007

மற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடு. மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பி ஒரு சிங்கம் காட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத் துரத்திக்கொண்டே வந்தனர் மிருகக்காட்சி சாலை காவலாளிகள்.

காட்டுக்குள் வந்த சிங்கம், அங்கே இன்னொரு சிங்கத்துடன் நட்பாகியது. அந்தச் சிங்கத்தைத் துரத்தி வந்த காவலாளிகளிடம் மாட்டிவிட நினத்தது.

''ஜூ எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா?'' என்று ஆரம்பித்து, மிருகக்காட்சி சாலை பற்றிப் பல கதைகளை எடுத்துவிட்டது.

''ரொம்பப் பிரமாதமா இருக்கும். வேளாவேளக்குக் கறி கொண்டு வந்து போட்டுருவாங்க. நாம அலைஞ்சு திரிஞ்சு வேட்டையாட வேண்டியதில்ல. சும்மா படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தா போதும். சுகமான வாழ்க்கை. ரொம்பப் பாதுகாப்பான இடம்.''

இதையெல்லாம் கேட்டதும் காட்டுச் சிங்கத்துக்கு ஆசை. ''அங்கே எப்படிப் போவது?'' என்று கேட்டது.

''இதோ இப்போ கூண்டுடன் ஆட்கள் வருவார்கள். அவர்களிடம் போனால், கூட்டிப் போய் விடுவார்கள்'' என்றது 'ஜூ' சிங்கம்.

அது சொன்னது போலவே வண்டி வந்தது. காவலாளிகள் வந்தார்கள். காட்டுச்சிங்கம் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அவர்களுடன் சென்றது.

மிருகக்காட்சி சாலைக்குள் வந்து ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டப் பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று அதற்குப் புரிந்தது. அழுதது. புரண்டது. கத்தியது. ஆனால்... ஏமாந்தது ஏமாந்ததுதான்.

நீதி: மற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

SOURCE: INTERNET

மேலும் படிக்க... Read more...

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை...

>> Thursday, March 29, 2007

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை.......

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.
SOURCE; INTERNET.
---------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR
VANJOOR

மேலும் படிக்க... Read more...

இரண்டு மூன்று வயதில் குழந்தைகள் குதித்து விளயாடுவதில் ஆர்வமாக இருப்பது ஏன்?

இரண்டு மூன்று வயதில் குழந்தைகள் குதித்து விளயாடுவதில் ஆர்வமாக இருப்பது ஏன்?

இரண்டு மூன்று வயதில் குழந்தைகள் குதித்து விளயாடுவதில் ஆர்வமாக இருப்பது ஏன்? இந்த ஆர்வத்தினால் பல சமயம் ஆபத்தைத் தரும் விபத்துக்துகளும் கூட ஏற்படுகிறது. குழந்தைகளின் இந்தக் குணத்தை நாம் எப்படி கட்டுப்படுத்துவது?

குழந்தைங்க ஏதோ தப்பு செய்யற மாதிரியும், அதைத் தடுப்பது எப்படி'ங்கிற மாதிரியும் கேட்டிருக்கீங்க... இதுதான் மிகப் பெரிய தப்பு! குழந்தைங்க எப்பவுமே தப்பே செய்யறதில்லை என்பதை பெற்றோர்கள் முதல்ல புரிஞ்சுக்கணும்.

கண்டதை எடுத்து வாயில வச்சுக்கற, ஓடுற, விழற, குதிக்கிற எல்லாமே குழந்தைகளோட இயல்பு. தன்னுடய ஐம்புலன்கள குழந்தைங்க டெஸ்ட் பண்ணிப் பார்க்க நினக்கும். இதைத்தான் குழந்தகளோட சென்சரி டெவலப்மெண்ட் ஸ்டேஜ்னு சொல்வாங்க. இது ஆரம்பக் கட்டம்.

இதுக்கு அடுத்த ஸ்டேஜ், டெரிபிள் டூஸ் (terrible two’s). அதாவது இரண்டு வயசுல இருந்து; நாலு வயசு வரைக்கும். ஓரளவுக்கு நடந்து, ஓடிப் பழகிய குழந்தைகள், விழுந்தா என்ன செய்யும்? குதித்தா என்ன செய்யும்?னு தெரிஞ்சக்க ஆர்வமாக இருப்பாங்க.

எதையும் யோசிக்காம படிக்கட்டு, கட்டில், ஜன்னல் எல்லாத்துலயும் ஏறிக் குதித்துப் பார்ப்பாங்க. இதையெல்லாம் குழந்தைகள் செஞ்சாதான் மெண்டலாகவும், பிஸிகலாகவும் அவங்க ஹெல்த்தியா வளர முடியும். ஆபத்தானதுன்னு நாம தடுத்தா, அது அவங்க வளர்ச்சியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ரொம்பப் பாதிக்கும்.

குழந்தகைளை ஆசையோடுதான் நாம பெத்துக்கறோம்னா எதையும் அவங்க இஷ்டப்படி செய்யவிட்டு, அதனால எந்தப் பாதிப்பும் அவங்களுக்கு வராத அளவுக்கு நாம்தான் பாதுகாப்பா இருக்கணும். இதற்காகக் கொஞ்சம் மெனக்கெட்டுத்தான் ஆகணும

சுக்குத் தின்னு முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ள அரும'ன்னு சும்மாவா சொன்னாங்க. ஆனா, இது சிசேரியன் யுகம். நோகாம பெத்துக்கணும்; வசதிப்படி வளர்த்துக்கணும்னு ஆகிப்போச்சு. பாவம் குட்டீஸ். ---SOURCE: INTERNET.
-------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

மேலும் படிக்க... Read more...

மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது

>> Wednesday, March 28, 2007

மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது

பள்ளியிலிருந்து திரும்பிய மகனின் முகம் வாடியிருந்தது.
என்னப்பா ஆச்சு, ஸ்கூல்ல?கரிசனத்டன் கேட்டார் அப்பா.

இன்னிக்கு ஸ்கூல்ல புட்பால் மேட்ச். என்னால ஒரு கோல்கூட அடிக்க முடியலை என்றான் மகன்.

ஏன், உன்னால சரியா விளையாட முடியலயா?---இல்லப்பா. நான் நல்லாதான் விளையாடுனேன். ஒவ்வொரு தடவையும் நான் கோலைப் பாத்து பந்தடிச்சுட்டுப் போகும் போது, எதிர் டீம்காரன் குறுக்கே வந்து பந்தைத் தட்டிட்டுப் போயிடறான்.

எதிராளி வர்றதுக்குள்ள நீ உங்க ஆள் யாருக்காவது பந்ததை; தட்டி விட்டுட வேண்டியதானே?------தட்டி விடலாம்தான். ஆனா, அப்படினா அவன் பந்தை எடுத்துட்டுப் போய் கோல் அடிச்சுருவான்ல.-----தந்தைக்கு என்ன பிரச்னை என்பது புரிந்தது.

இங்கே பார், கால்பந்து, அணியாய் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. அணியில் மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது. மற்றவர்கள் கோல் அடிக்க நீ உதவினால், நீ கோல் அடிக்க அவர்கள் உதவுவார்கள் என்றார்.

மேலும் படிக்க... Read more...

கணினிமுன் வேலை செய்பவர்களா?

கணினிமுன் வேலை செய்பவர்களா?
கால் ரத்த நாளங்கள் குறித்து கவனம் தேவை.--ரத்த நாள நிபுணர் அறிவுரை


சென்னை, மார்ச் 25- கணினி முன் அதிக நேரம் வேலை செய்பவர்களும், அடிக்கடி நீண்ட நேரம் பயணம் செய்ப வர்களும், கால் ரத்த நாளங்கள் குறித்து கவனமாக இருப்பது அவசியம் என்று சென்னை, ரத்த நாள மருத்துவர்கள் சங்க செயலர் டாக்டர் எம். ராஜ் குமார் தெரிவித்தார்.

ரத்த நாள அடைப்புப் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம், சிகிச்சை குறித்து டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது:-----ரத்த நாள அடைப்புப் பிரச்சினை நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. நாள்பட்ட ரத்த நாள அடைப்புப் பிரச்சினை 2. கவனிக்காமல் விடுவதால் திடீரென ஏற்படும் தீவிர ரத்த நாள அடைப்புப் பிரச்சினை என இரு வகையாகக் கொள்ளலாம்.

கணினி முன் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் கால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட ஆரம்பிக்கும்.

இவ்வாறு கணினி வேலை பார்ப்போருக்கு ஏற்படும் ரத்த நாள அடைப்புப் பிரச்சினைக்கு `இத்ராம் போசிஸ்’ எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை: இவ்வாறு பிரச்சினை ஆரம்பித்துவிட்ட நிலையில் ஒரு வாரத்துக்கு படுக்கையில் படுத்து கால்களுக்கு முழு ஓய்வு தருவதே சிகிச்சையாகும்.

பிரச்சினை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள வேண்டுமானால், இரண்டு மணி நேரம் கணினி முன் உட்கார்ந்து வேலை பார்த்தால் 10 அல்லது 15 நிமிடம் நடந்து விட்டு மீண்டும் வேலை செய்யத் தொடங்க வேண்டும்.

காலில் ரத்த நாள அடைப்பு பிரச்சினை ஏற்படும் நிலையில் அலட்சியமாக இருந்தால், அது தீவிர நோயாக மாறி இதயம் அல்லது நுரையீரல் வரை மேலே சென்று உயிரையே பறிக்கக் கூடும். இதே போன்று நீண்ட தூரம் பயணம் செய்பவர்களும் அவ்வப்போது எழுந்து நடந்தால்தான் காலில் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த நாள அடைப்புப் பிரச்சினை ஏற்படாது.

விமானத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் (10 மணி நேரத்துக்கு மேல்) பயணம் செய்வோர், பயணத் துக்கு முன்பாக `லோ மாலிக் யூலர் வெயிட் ஹெபரின்’ என்ற ஊசி மருந்தைப் போட்டுக் கொண்டு செல்வது நல்லது. இந்த ஊசி மருந்தைப் போட் டுக் கொள்ளும் நிலையில் கால் ரதத் நாள அடைப்பைத் தவிர்க்கலாம் என்றார் அவர். ---SOURCE:INTERNET

மேலும் படிக்க... Read more...

பிஸினஸ் பிளான்.

>> Tuesday, March 27, 2007

பிஸினஸ் பிளான்
எப்படி... எப்படிப்பா... என்று கத்திக்கொண்டே வந்தார் மஞ்சுளா ஜவுளிக்கடை முதலாளி சாத்தப்பன்.

புதியதாகத் திறந்த வசந்தா ஜவுளி ஸ்டோரின் விற்பனையும் கூட்டமும்... சாத்தப்பனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.

'இன்னும் ரெண்டே நாள்.. எனக்குக் காரணம் தெரியணும்... போங்க எல்லோரும்...' விரட்டியடித்தார் சாத்தப்பன்.

வசந்தா ஜவுளிக்கடையின் நிர்வாக அறையில்...

'சார்... நம்ம பிளான் எப்படி வேலை செய்யுது பார்த்தீங்களா? மற்ற கடைகளை விட ஒவ்வொரு சேலைக்கும் ஐம்பது ரூபாய் குறைத்துக் கொடுத்தோம்.

அந்த ஐம்பது ரூபாயை மற்ற ரெடிமேடு அயிட்டங்களில் சேர்த்து வைத்தோம்... பெண்கள் எப்பவுமே தங்களுடய செலக்ஷன்களையும் குறைந்த விலையில் எடுத்திருக்கிறேன் பார் என்று தன் திறமைகளையும் மற்ற பெண்கள்கிட்டே பேசுவாங்க...

அந்த வகையிலே நம்ம கடைக்கு கூட்டம் வருவதற்குப் பெண்களே ஒரு காரணம்..' முதலாளியிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார் மேலாளர் நாராயணன்.
SOURCE: KUMUDAM. NANDRI TO : KUMUDAM

மேலும் படிக்க... Read more...

இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?

>> Monday, March 26, 2007

இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றதுஅணிய கட்டாயப்படுத்துவது ஏன்? முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.

விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல் அதைப் போக்கும் காரணிகளையும் விளக்குகிறது. அது போலவே பர்தா(ஹிஜாப்) விஷயத்திலும் இஸ்லாம் கட்டாயப்படுத்தவில்லை.

மேலும் படிக்க... Read more...

நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.

அறிவைத் தாண்டி....உழையுங்கள். அறிவைத்தாண்டி ஆனந்தமாய் இருப்பீர்கள்!!

பெற்றோர்: என் மகன் எல்லா மாணவர்களும் படிக்குமளவுக்கு படிக்க விரும்பவில்லை. மிகவும் துரிதமாக இவன் கல்வி கற்பதற்கு, ஏதாவது குறுக்கு வழி உண்டா? இருந்தால் சொல்லுங்கள்.

முதல்வர்: உமது மகனை ஓர் 'அடிமுட்டாள்' ஆக்க வேண்டுமென்றால், ஒரு மாதத்தில் அதை செய்விட முடியும்.

ஆனால் அவனை ஒரு சிறந்த கல்விமானாக, அறிவாளியாக ஆக்க வேண்டுமானால், அதற்குச் சற்று அதிக காலம்தான் ஆகும்.

இந்த சுவாரஸ்யமான உரையாடல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கார்பீல்டு, கல்லூரி முதல்வராக இருந்தபோது, ஒரு செல்வந்தர் பெற்றோரோடு நடத்திய உரையாடல்.

நிமிட நேர சுதந்திரத்திற்காக, ஐம்புலன்களை அழிக்கிறான் மனிதன்.

நான்கு இட்லி போதுமென தோன்றிய பின், இன்னும் இரண்டை உள்ளே அனுப்புகிறான்.

கண் எரிய, எரிய ஒருநாள் கூத்துக்காக, விடிய விடிய கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது... தனக்கு பிடிக்கும் என்பதற்காக அது தவறே ஆனாலும், திரும்பத் திரும்ப செய்த பார்ப்பது... இவை அனைததுமே குறுக்கு வழியில் தேடப்படும் ஆனந்தங்கள்.

நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.

நிஜ ஆனந்தத்தைப் பெற, நியாயமான உழைப்பே தீர்வாக இருக்க முடியும்.

வாழ்வு ஒரு அமிர்தகுளம். உங்களின் சிறிய ஆசைகள், குளத்தின் விளிம்பில் மட்டுமே உட்கார வைக்கும்.

ஆசைகளக் கடந்து, வாழ்வில் குதித்தால், அல்லல்பட மாட்டீர்கள். அழிந்து போகமாட்டீர்கள்.

மாறாக, ஆனந்தப்படுவீர்கள். அருமையானவராக ஆகிவிடுவீர்கள்.

''வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை. கடுமையான உழைப்புதான் வாழ்க்கையை உயர்த்தும்.

அறிவாளியால் மட்டுமே ''தன் அறிவு உபயோகமற்றது'' என்று அறிவிக்க முடியும்.

எல்லா அறிவும், அறிவத் தாண்டிய அனுபவத்திற்கு, உங்களை அழைத்துச் செல்லும் படகுகள் மட்டுமே.

துன்பக் கடலில் தத்தளிக்கும் மனிதனுக்குக் கிடைக்கும் சிறு படகாகிய அறிவிலேயே சிக்கிக்கொள்ள கூடாது. படகில் சிக்கிக்கொண்டால், பாதிக் கடலிலேயே, உயிரைப் பிரிய வேண்டியிருக்கும்.

அறிவைத் தாண்டி உழையுங்கள். அறிவைத்தாண்டி ஆனந்தமாய் இருப்பீர்கள்!!
SOURCE: INTERNET

மேலும் படிக்க... Read more...

சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும்தான்

பேய்களை அடக்குவது எப்படி?

சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும்தான்

முதலில் இரண்டு ஜோக்குகள். சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும்தான்.
ஒருவர்: பேய்களை அடக்குவது எப்படி?ன்னு ஒரு சீரியல் எழுதிட்டிருந்தானே உங்க பையன், கல்யாணத்திற்குப் பிறகு என்ன சீரியல் எழுதறான்?

மற்றவர்: பேய்களுடன் வாழ்வது எப்படின்னு தான்!

ஒருவர்: பேய்க் கதை எழுதும் முன் யாரை நினச்சிட்டு எழுதத்தொடங்குவீங்க?
மற்றவர்: என் மனைவியைத்தான்.

மிருகங்கள் கூட பல மனிதர்களைப் பார்த்துப் பயப்படுகின்றன. ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், 'நான் நல்லவன்' என நம்பும் மனிதனுக்குள் கூட பல மிருகங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நேரத்தில் மனிதர்கள் மிருகங்களாக மாறினால், மிருகங்கள் கூட பயப்படத்தான் செய்யும்.
SOURCE: INTERNET

மேலும் படிக்க... Read more...

ஒரு ஊரில் ஒரு ஏமாற்றுக்காரன்

ஒரு ஊரில் ஒரு ஏமாற்றுக்காரன் இருந்தான். ஊரில் உள்ளவர்களை ஏமாற்றிப் பிழைப்பதே அவனுடய தொழிலாக இருந்தது. மற்றவர்களை ஏமாற்றுவதே பெரிய புத்திசாலித்தனமாக நினத்திருந்தான்.

ஒருமுறை தான் வைத்திருந்த கிணற்றை ஒருவனுக்கு விற்றுவிட்டான். ஆனால் வாங்கியவன் தண்ணீர் எடுக்க வந்தபோது தண்ணீர் தர மறுத்துவிட்டான்.

''இதோ பார், நான் கிணற்றைதான் உனக்கு விற்றேனே தவிர, கிணற்றிலுள்ள நீரை அல்ல. அதனால் தண்ணீர் எடுக்கக்கூடாது'' என்று சொல்லிவிட்டான்.

வாங்கியவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஏமாற்றுக்காரன எப்படி சமாளிப்பதென்று புரியவில்லை.

அந்த சமயம் ஊருக்கு ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் கிணற்று நீர்ப் பிரச்னை சொல்லப்பட்டது. அவர் கொஞ்சம் யோசித்தார்.

''கிணற்றை மட்டும்தானே இவர் வாங்கியிருக்கிறார். அப்படியானால் நீ கிணற்றிலுள்ள நீரையெல்லாம் எடுத்துவிட்டு அவருக்கு கிணற்றைக் கொடு. இல்லையென்றால் அவருடய கிணற்றில் உன் தண்ணீர் இருப்பதால் அதற்கு வாடகை கொடு'' என்று தீர்ப்புச் சொன்னார்.
SOURCE: INTERNET

மேலும் படிக்க... Read more...

ஃபிளாஸ்க் (FLASK ) பிசுபிசுப்பும், துர்நாற்றமும் இல்லாமல் தூய்மையாகவும் இருக்க........

>> Saturday, March 24, 2007

ஃபிளாஸ்க் (FLASK ) பிசுபிசுப்பும், துர்நாற்றமும் இல்லாமல் தூய்மையாகவும் இருக்க........

பால், காபி வைத்திருக்கும் பிளாஸ்க்கை எவ்வளவுதான் கழுவி சுத்தம் செய்தாலும் அதிலிருக்கும் பிசுபிசுப்பும், துர்நாற்றமும் முழுதுவம் போவதில்லயே ஏன்? அதற்கு என்ன தீர்வு...?

ஃபிளாஸ்க்குகளில் பெரும்பாலும் கறையும், துர்நாற்றமும் வருவதற்குக் காரணம், அதை நாம் சரிவர கவனிக்காமல் விடுவதுதான். பால் அல்லது காபியை வைத்திருப்போம். பாதியைக் குடித்தபின் மீதியை மறந்துவிடுவோம். அடுதது எப்பொழுது ஃபிளாஸ்க் அவசரமாகத் தேவைப்படுகிறதோ, அப்பொழுது திறந்து பார்ப்போம்.

அருவருப்பும் வெறுப்பும்தான் மிஞ்சும்... அந்த மாதிரி சமயங்களில் கொஞ்சமும் எரிச்சலைடயாமல் பழைய நியூஸ் பேப்பர் ஒன்ற எடுங்கள். உங்கள் கோபம் தீர அதை சுக்கு ஆயிரமாகக் கிழியுங்கள்.

ஃபிளாஸ்கை ஒரு முறை தண்ணீரில் அலசிவிட்டு, கிழித்து வைத்திருக்கும் சிறுசிறு துண்டுக் காகிதங்களை அதில் போடுங்கள். அத்துடன் கொஞ்சம் தண்ணீர நிரப்பி, ஒரு ஐந்து நிமிடம் நன்றாகக் குலுக்கி விட்டுக் கழுவுங்கள்.

இப்பொழுது பாருங்கள்... உங்கள் ஃபிளாஸ்க் புதிதாக வாங்கினபோல் பளபளப்பாக மட்டுமல்ல, ஒரு சிறு துர்நாற்றம்கூட இல்லாமல் தூய்மையாகவும் இருக்கும்.

அட இவ்வளவுதானா என்று நினைக்கத் தோன்றியிருக்குமே... கடலை தூர்த்தாவது காரியத்தை முடின்னு சொல்வாங்க. ஒரு துண்டு வேஸ்ட் பேப்பரை வைத்து உங்க துயரத்தை துடைத்துவிட ஃபிளாஸ்க் உள்ளவரை இனி நீங்கள் மறக்க முடியாது!
SOURCE : KUMUDAM. ---- NANDRI TO: KUMUDAM.

மேலும் படிக்க... Read more...

'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று இந்த பாழாய்ப் போன மனதிற்குத் தெரியாது.


'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று இந்த பாழாய்ப் போன மனதிற்குத் தெரியாது.

நீங்கள் மும்முரமாக ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த போன் வரும். குழையும் பெண் குரல்.

''ஹலோ... ஹேப்பி நியூஸ். உங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லிமிட் கார்டு சேங்ஷன் ஆயிருக்கு. நீங்க எங்க வேலை பார்க்கறீங்க? கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா?'' _ எடுத்த எடுப்பிலேயே உங்களுக்கு இதமான அதிர்ச்சியைத் தந்துவிடுவார்கள். ஏதோ ரொம்ப நாள் பழகிய காதலியைப் போல கொஞ்சும்போதே, 'வீட்டுக்கு வரும் அதிர்ஷ்டமா?' என்று நம் மனசு ஜிவ்வாகிவிடும். பணம் வருகிறதே.... விடுவோமா? தகவல்கள அள்ளிக் கொட்டுவோம்.

நமது பெயர் கூட நாம் சொல்லித்தான் அவர் தெரிந்து கொள்வார். உரையாடலை முடிக்கும்போது கலகலவென்று சிரித்துக் கொண்டே 'பை பை' என்பார். அந்தச் சிரிப்பிற்குப் பின்னே 'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று இந்த பாழாய்ப் போன மனதிற்குத் தெரியாது.

மறுநாள் காலை மீண்டும் அதேபோன்... அதே கலகல பெண்... ''சார், எங்க பேங்கிலிருந் இரண்டு பேர் வருவாங்க. இரண்டு போட்டோ, வீட்டு அட்ரஸ் ப்ரூஃப் மட்டும் நீங்க ரெடி பண்ணினா போதும். அப்ளிகேஷன் தருவாங்க. உங்க பெயர், அட்ரஸ், கையெழுத்தை மட்டும் போட்டாப் போதும். மற்றதை நாங்க பார்த்க்கிறோம்'' என்பார், நேற்றைய குழைவு துளியும் மாறாமல்.

வங்கியின் பிரதிநிதிகள் வருவார்கள். ஆங்கிலத்தில் கடுகு கடுகாக எழுதப்பட்ட விண்ணப்பப் படிவம் எட்டுப் பக்கத்திற்குத் தருவார்கள். அவசரமாக உங்களிடம் பல இடங்களில் கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, வேண்டிய போட்டோக்களயும் பெற்றுக் கொண்டு சிட்டாகப் பறந்துவிடுவார்கள்.

பதினந்தாவது நாளில் கிரெடிட் கார்டு அலறிக் கொண்டு உங்கள் வீடு _ அலுவலகம் தேடி வரும்! பையில் பள பள கார்டு! இனி உலகத்தில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அந்த எண்ணமே உங்களை விரைப்பாக நடக்கச் சொல்லும்.

இதுவரை எல்லாம் சுகமே. பித்துப் பிடித்து அலையப்போவது இனி வரும் கதை!

இப்படி தெரியாத்தனமாக பணத்திற்கு ஆசைப்பட்டு பைக்குள் வைதது;க் கொண்ட கடன் பிசாசு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தாத அப்பாவிகளை எல்லாம் எப்படி விரட்டியடிக்கிறது என்று அறிந்து கொள்ள, சென்னை நகரில் சிலரைச் சந்தித்தோம்.

கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்டபோல பல இளைஞர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாதி ராத்திரியில் கதவு தட்டுவது போன்ற பிரமையில் திடுக்கிட்டுப் போய் எழுபவர்கள் பலர்.

''மயிலாப்பூரில் ஒரு பெண்மணி. கணவர் எதிர்பாராவிதமாக இறந்விட்டார். கணவர் வெளிநாட்டு வங்கியின் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணியிருக்கார். அவர் வாங்கின கடனை அடைச்சு அதற்கான வட்டியயும் கட்டிட்டார். பேங்க்காரர்கள் வழக்கம் போல், இண்டரஸ்ட், பீனல் இண்டரஸ்ட் என்று ஏதேதோ போட்டு பேலன்ஸ் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் அவர் இறந்துவிட, மனைவிக்கு இந்த கணக்கு வழக்குகளே தெரியாது. அந்தம்மா புருஷன் செத்து ஒரு மாசம் கூட ஆகலை. நாலைந்து தடியர்கள், கலெக்க்ஷன் ஏஜெண்டுகள் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் வந்து அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது'' சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வேண்டிய வழக்கறிஞர் சுதன் கொதித்துப் போய்ச் சொன்னார்.

கலெக்க்ஷன் தடியர்களின் டார்ச்சர் டெக்னிக் ரொம்ப சிம்பிள். விடியற்காலை ஆறு மணிக்கே கதவைத் தட்டி வீட்டுக்குள் வந்து விடுவார்கள். அந்தப் பெண்மணி பயந்து போய் பெட்ரூமுக்குள் ஒளிந்து கொள்வாராம். ஹாலிலுள்ள பேன், லைட், டி.வி. எல்லாவற்றையும் 'ஆன்' செய்துவிட்டு விட்டு, டி.வி. வால்யூமையும் பெரிதாக வைத்துவிடுவார்கள்.

''டி.வி.யில அம்மாடி, ஆத்தாடி... என்று பாடும்போது, இவர்களும் சத்தமா பாடிக் கிட்டே நடுஹாலில் குத்தாட்டம் போடுவார்கள். சிலர் குடி போதையில் இருப்பார்கள். ரொம்ப கொடுமை சார்...'' என்று மயிலாப்பூர் பெண்மணியின் வீட்டுப் பக்கத்து போர்ஷன்காரர் வேதனையுடன் சொன்னார்.

இறுதியாக வழக்கறிஞர் சுதன், மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக வந்து புகார் தந்த பின்னரே கலெக்ஷன் ரவுடிகளை காவல் நிலையத்திற்குக் கொண்டு போய் கேஸ் பதிவு செய்தார்களாம். மயிலைப் பெண் இப்போதும் டி.வி.யில் டி.ஆரின் 'அம்மாடி, ஆத்தாடி' பாடலை சாதாரணமாக கேட்டாலே படபடக்கிறாராம்!

இப்படித்தான் கட்ட வேண்டிய வட்டி கன்னா பின்னாவென்று குட்டி போட்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன் ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது, அண்ணா நகரைச் சேர்ந்த சாமுவேலுக்கு. இதில் சோகமான தமாஷ். இவரே ஓர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

''நாலு வருஷமா மாசம் மாசம் 4500 ரூபாய் கட்டறேன். ஆனால் கடன் என்னவோ 92 ஆயிரத்திலிருந்து இறங்க மாட்டேங்குது. அவங்க பாட்டுல ஏழெட்டு சார்ஜஸ் போட்டு மாசாமாசம் 5,200 ரூபாய் சேர்த்துடறாங்க 'செட்டில் மெண்டுக்கு வா' என்றால் 'முதலில் எழுபதாயிரம் கட்டு அப்புறம் பேசலாம்' என்கிறார்கள். வீட்டுக்குப் போகவே பிடிக்கலை சார்.'' என்று கண்கலங்கினார்.

வீட்டில் இவரது வயதான தாயார் மட்டுமாம். சாமுவேல் இல்லாதபோது, வீட்டில் வசூல் குண்டர்கள் பண்ணும் அட்டகாசம் கொஞ்ச நஞ்ச மில்லையாம். நிஜம். அவர் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, அவரது தாயாரிடமிருந்து போன்.. ''பால் பாக்கெட் வாங்க வெளியே வந்தேன்டா... ரெண்டு மூணு ஆளுங்க பைக்ல உட்கார்ந்கிட்டு, 'கிழவி உன் பிள்ளை எங்க'ன்னு கத்தினான்க. உள்ள ஓடிவந்துட்டேன்'' நடுக்கத்துடன் அந்த வயதான தாய் பேசியதைக் கேட்டபோது நமக்கு மனது பாரமானது!

''ரிஸர்வ் வங்கியின் மாஸ்டர் சர்க்குலர், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத் தெளிவாகச் சொல்கிறது. ஆனால் எந்த வங்கியும் அவற்றை பின்பற்றுவதில்ல. சில தேசிய வங்கிகளைத் தவிர'' என்று ஆரம்பித்தார் பி.சுந்தரராஜன். 'சமூக பொருளாதார நீதிக்கான மையம்' என்கிற இவரது அமைப்பு மூலம் கிரெடிட் கார்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு சட்ட உதவி வழங்கி வருகிறாராம்.

''பாதிக்கப்பட்டவர்கள் குறைகளைக் கேட்க தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் யாருமே கிடையாது. போலீஸ், கலெக்ஷன் ஏஜெண்ட்களோடு கைகோர்த்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 'ஆம்பட்ஸ்மேன்' அமைப்பு இது தொடர்பாக எந்த நடவடிககையும் எடுப்பதில்லை!

அடாவடி பேங்குகளை கவனிக்க வேண்டிய மத்திய நிதியமைச்சகம் என்ன செய்கிறது என்பது யாருக்கும் புரியாத புதிர். மிரட்டல் பேங்குகளப் பொறுத்தவரை நாலு சதவிகிதம் சேவை வரியை அரசுக்கு கட்டிவிட்டால் போதும். இந்த நிலை மாறாத வரை பல அப்பாவிகளின் குரல்வளை நெறிக்கப்படும். இதனால் வாழ்க்கையை வெறுத்துப் போனவர்கள் பலர்'' என்று ஆவேசமாகச் சொன்னார் சுந்தரராஜன்.

அப்படி வெறுத்துப் போய் பாதிக்கப்பட்ட அசோக்குமாரின் கதையைக் கேட்க உங்களுக்கு நெஞ்சில் உரம் வேண்டும். பதை பதைக்கும் அவர் கதை...


கிரெடிட் கார்ட சாதுரியமாக பயன்படுத்த ஐந்து வழிகள் :

« கிரெடிட் கார்ட வைத்து பணம் எடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.

« கடன் பெற்றதும், முதலில் குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்பார்கள். அந்தத் தூண்டிலில் நீங்கள் சிக்கிவிடாதீர்கள்.

« கிரெடிட் கார்டு நிறுவனத்திலிருந்து வலியவந்து லோன் தருவதாக குழைந்து சொல்வார்கள். அப்படியரு போன் உங்களுக்கு வந்தால் ரிஸீவரை ஓசைப்படாமல் வைத்துவிடுங்கள்.

« உங்களுக்கு வரும் பில்களை தவறாமல் ஒப்பிட்டுப்பாருங்கள்!

« கெடு நாளுக்கு முன் முழுப் பணத்தையும் கட்டிவிடுவது புத்திசாலித்தனம்..
SOURCE: KUMUDAM.------- NANDRI TO : KUMUDAM

மேலும் படிக்க... Read more...

ராட்டினத்தில் சுற்றுவது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை, ஏன்?

>> Thursday, March 22, 2007

ராட்டினத்தில் சுற்றுவது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை, ஏன்? காதுக்கும், அதற்கும் சம்பந்தமுண்டா?

''நம் உடம்பின் ஒவ்வொரு அசைவும் தடுமாற்றம் இல்லாமல் இருக்கவேண்டும் என்றால், உடம்பானது தனது சமநிலையைப் பராமரிக்க வேண்டும். அந்த வேலையைச் செய்வதற்கு உடம்பில் பல்வேறு அமைப்புகள், செயல்பாடுகள் உள்ளன. அதில் காதுக்கு முக்கியமான பங்கு உண்டு.

பொதுவாக நாம் ராட்டினத்தில் சுற்றும்பொழுது உடம்பின் சமநிலை சீர்குலையும். சந்தோஷமும் அதுதான். சங்கடமும் அதுதான். நாம் ராட்டினத்தில் இருந்து இறங்கிய பின்பும் அந்த நிலை தொடரும். மீண்டும் உடம்பு தன்னை சமநிலைக்குக் கொண்டு வர சிறிது நேரம் எடுத்துக்துகொள்ளும். அது உடம்பைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு சீக்கிரம் சரியாகிவிடும். சிலருக்கு வாந்தி, மயக்கம்னு வந்து பின் சமநிலை ஏற்படும். இது ஒன்றும் ஆபத்தானதல்ல.

ஆனால், இதயநோய் உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் பிரச்னை உள்ளவர்கள் ராட்டினத்தில் ஏறக்கூடாது.

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாகச் சுத்தவே கூடாது''

உலகம் சுத்துது. நாமும் சுத்திகிட்டேதான் இருக்கோம்... யூத்தெல்லாம் ஜோடியா சுத்தறாங்க. பெரியவங்கல்லாம் பிரச்னையோடு சுத்தறாங்க. பத்தாக்குறைக்கு டி.வி., சினிமான்னு காதுல பூ வேறு சுத்தறாங்க. இதுக்கு மத்தியில ராட்டினமா? குழந்தைகளும், இளசுகளும் சுற்றட்டும்...
SOURCE: INTERNET.

மேலும் படிக்க... Read more...

அற்புத சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி.

அற்புத சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி.

ஆண்மைக் குறைவுக்கு அதிரடித் தீர்வு - நிச்சய குணம் -குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு- புற்று நோய் களுக்கு அற்புத சிகிச்சை என்ற விளம்பரங்கள் வருவாய் கருதி பாரம்பரிய மருத்துவர்கள் மட்டுமல்லாமல் அலோபதி மருத்துவர்களும் ; பத்திரிகைகள் தொலைக் காட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகைய விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிடுகின்றன.

அற்புதச் சிகிச்சை குறித்த விளம்பரங்கள் அண்மைக் காலமாக இணைய தளம் மூலமாகவும் மின் அஞ்சல் வாயிலாகவும் பரவுகின்றன. இவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும். மேலை நாடுகளிலும் இப் பிரச்சினை இன்றளவும் நிலவுவதால் பன்னாட்டு அளவில் போலி மருத்துவத்திற்கும் போலி மருந்துகளுக்கும் சாவு மணி அடிக்கும் நாள் உருவாவதே மனித சமுதாயத்தின் விடியலாகும்.

எத்தனையோ மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பயன் பெறாத நோயாளிகள் இத்தகைய விளம்பரங்களுக்கு பலியாவது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

தீராத நோய்களுக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறி நோயாளிகளுக்கு ஏராளமான பொருட்செலவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மன ரீதியில் பெரும் வேதனைகளை இத்தகைய விளம்பரங்கள் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக புற்றுநோய் உடல் பருமன் பாலியல் குறைபாடுகள் போன்றவற்றிற்கு அதிசய சிகிச்சை வழங்குவதாக ஏராளமான விளம்பரங்கள் நாள் தோறும் வெளியாகி வருகின்றன.

இத்தகைய விளம்பரங்களால் ஈர்க்கப்படும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் ஏமாற்றப்படுவதோடு நோய் முற்றும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மாயத்தாலும் மந்திரத்தாலும் நோய்கள் தீரும் என்ற மூட நம்பிக்கையை மக்கள் விட்டொழித்து ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் மட்டுமே ஏற்கும் சூழ்நிலை உருவாகவேண்டும்.

FROM: INTERNET.

மேலும் படிக்க... Read more...

மனம் ஒரு குரங்கு! - பர்வீன்

மனம் ஒரு குரங்கு! - பர்வீன்

ஒரு ஊரில் குரங்காட்டி ஒருவன் இருந்தான். அவன் தன் குரங்கை தினமும் அடித்துக் கொண்டே இருந்தான். அதைக் கண்ட அவனுடைய மனைவி, 'ஏன் அந்தக் குரங்கை தினமும் அடிக்கிறீர்கள்? அது மிகவும் பாவம்' என்று கண்டித்தாள்.

அதைக் கேட்ட குரங்காட்டி, 'நான் இதை அடித்தால்தான் அது அமைதியாக எனக்குக் கட்டுப்பட்டு இருக்கும். நான் வேண்டுமென்றால் இதை அடிக்காமலிருக்கிறேன். அப்போது இது என்னென்ன செய்கின்றது என்பதைப் பார்' என்று கூறினான்.

சில காலம் சென்றது. அந்தக் குரங்காட்டி சொன்னதுபோல் குரங்கின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாயின. அதனைக் குரங்காட்டியின் மனைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள், 'இதைக் கொஞ்சம் கண்டித்து அடக்கக் கூடாதா?' என்று தன்னுடைய கணவனிடம் முறையிட்டாள். 'நான் இந்தக் குரங்கை அடித்து அடக்கி வைத்திருந்தேன். ஆனால் நீ அதை மனம்போல் விட்டுவிடச் சொன்னதால் அது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. எனவே இதை வழிக்குக் கொண்டு வருவது இனிமேல் கொஞ்சம் சிரமம்தான்' என்று கூறினான்.

நம்முடைய மனமும் ஒரு குரங்குதான். நம்முடைய மனதை திக்ரு (இறைத்தியானம்) என்னும் சாட்டையால் அடித்து நிலைப்படுத்த வேண்டும்.

அதனை அங்குமிங்கும் அலைபாய விடக்கூடாது. நாம் இறைத்தியானம் செய்வதினால் நமது கவலைகளும், துயரங்களும் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கிறது; உடலுக்கு ஊக்கம் ஏற்படுகிறது. பாவம் செய்வதை விட்டும், தவறான காயங்களில் ஈடுபடுவதை விட்டும் பாதுகாப்பு பெற மாமருந்து, இறைத்தியானம் தவிர வேறு ஏதுமில்லை.

மனதில் ஏற்படும் கெட்ட எண்ணங்களையும், ஊசலாட்டத்தையும் தடுப்பது திக்ருதான்.

மேலும் நம்முடைய உள்ளத்தில் ஏற்படும் கசடுகளை நீக்கிப் பிரகாசத்தை ஏற்படுத்துவதும் அதுவே. நாம் ஏதேனும் ஒரு பாவத்தைச் செய்தால் நம்முடைய உள்ளத்தில் கரும்புள்ளி விழுகிறது.

இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு பாவங்களைச் செய்வதை விட்டுவிட்டால் கரும்புள்ளிகள் மறைந்து விடுகின்றன. நாம் பாவமன்னிப்பு கேட்காவிட்டால் கரும்புள்ளிகள் நம்முடைய இதயத்திலே நிலைத்துவிடுகின்றன.

இது தொடர்ந்தால் நம்முடைய இருதயம் கரும்புள்ளிகளால் நிரம்பிக் கறுத்து, கடினத் தன்மை அடைந்து, பாவமன்னிப்பு கேட்பதையே மறந்தும் விடுகிறது.

இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் அதிகமாக இறைத்தியானம் செய்து, மனதை நிலைப்படுத்த வேண்டும்; பாவங்களை விட்டு நீங்கி மரணத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்விதம் செய்தால் நம்முடைய இதயங்களிலிருந்து கசடுகள் நீங்கி, நிம்மதி (சலாமத்) கிடைக்கும்
.
அதிகமாக இறைத்தியானம் செய்வதால் நாம் பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறோம். 'திக்ரு உள்ளவன் உயிருள்ளவன்; திக்ரு அற்றவன் உயிரற்றவன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்.

எனவே இந்த மேலான செயலைத் தொடர்ந்து செய்து நம்முடைய மனதைக் கட்டுப்படுத்தி, மேலும் தூய்மைப்படுத்துவோம்! இம்மையிலும், மறுமையிலும் நாம் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் நல்லருள்புவானாக! - பர்வீன்

மேலும் படிக்க... Read more...

நாய் வாடகைக்கு கிடைக்குமா?

>> Saturday, March 17, 2007

நாய் வாடகைக்கு கிடைக்குமா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.

இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”“

"முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆய்விட்டது அவருக்கு?”
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
“இரண்டாவது பிணம்?”
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
“இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்”
==================
இணைய தளத்தில் படித்தது

மேலும் படிக்க... Read more...

ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி?, - தமீம் அன்சாரி

>> Friday, March 16, 2007

ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி?, - தமீம் அன்சாரி

கவர்ன்மெண்ட் ஆபிஸில் பைலை பாக்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸிலும் பைலை பாக்குறான்.கவர்மெண்ட் ஆபிஸில உட்கார்ந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்க்கிறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இ-மெயிலை தட்டி தட்டி கீ-போர்டை தேய்க்கிறான்.

கவர்ன்மெண்ட் ஆபிஸில் மக்களிடம் பணத்தை புடுங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து தலை மயிரை புடுங்கி(க்கி)றான்(கீ போர்டை தலைகீழாக வைத்து தட்டி பார்த்தாலே தெரியும் எத்தனை தலை மயிரை புடுங்கியிருக்கிறான்னு...).கவர்ன்மெண்ட் ஆபிஸில் தூங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இண்டர்நெட் பாக்குறான். ஆக மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்த கவர்ன்மெண்ட் ஆபிஸூம் சாஃப்ட்வேர் ஆபிஸூம் ஒன்னு தான்.

ப்ளாக் வந்ததும் வந்திச்சி சாஃப்ட்வெர் கம்பெனிகளில் புரொடக்டிவிட்டி (Productivity) குறைஞ்சாச்சி எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் (Extra curricular activities) ஜாஸ்தியாகிருச்சின்னு சொல்றாங்க. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ்ன கதை எழுதுறது கவிதை எழுதுறது கட்டுரை வரையிறது விவாதம் பண்றது. வாழ்க இணைய இலக்கிய மறுமலர்ச்சி.

ப்ளாக்குல திங்கள் முதல் வெள்ளி வரை போடும் பதிவுகளுக்கு ஹிட்டு ஜாஸ்தி. அதுவும் வெள்ளிக்கிழமை நிறைய ப்ளாக்குகள் சூப்பர் டூப்பர் ஹிட். ஏன்னா வார கடைசி மூட் எல்லாருக்கும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும். எப்போதுமே அதிகம் ஹிட் கொடுப்பவர்கள் அமெரிக்கா தோழர்களும் தோழிகளும் தான். அமெரிக்காவில் எப்படி வேலை வாங்கி வாட்டுகிறார்கள் என்பது இந்த ஹிட் மூலமே நன்றாக தெரிந்துக் கொள்ளலாம்.

சனி ஞாயிறுகளில் ஆரம்ப ஆர்வக் கோளாறால் வலைபதிவுகள் வந்து பார்க்கிறவர்கள் தான் ஜாஸ்தி. இல்லென்னா சன் டிவியில் சொத்தைபடம் போட்டால் வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்குகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வாரயிறுதியை சுபிட்சமாக கழிக்கின்றனர்.

சாஃப்ட்வேர்காரன் வேலை எப்படின்ன வேலையிறுந்தால் நாக்கு தொங்க இரவும் பகலும் தெரியாமல் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் இண்டர்நெட்டிலேயே தன் முழுநாளையும் பொது அறிவு வளர்க்க பயன்படுத்தலாம். 450-க்கு மேல தமிழர்கள் ப்ளாக் எழுதி தள்ளுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க முடியாவிட்டாலும் குமுதம் ஆனந்தவிகடன் படிக்கிற மாதிரி சில வலைப்பதிவுகளை தொடர்ந்து படிப்பது எப்படி? இதுக்கு விடை கடைசியில் தருகிறேன்.

'எவ்வளவு வேலை செய்தாலும் க்ளையண்ட் மதிக்கவே மாட்டங்கிறான் மாப்பிள்ளை' ஒரு நண்பனின் புலம்பல்

'மச்சி, எவ்வளவு வேலை செய்யுறோங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு திறமையா வேலை செய்கிறோங்கிறது தான் முக்கியம்' என்று சொல்லவோ 'மச்சி, எவ்வளோ வேலை செய்யுகிறோங்கிறது முக்கியமில்ல, எப்படி செய்கிறோங்கிறது தான் முக்கியம்' என்று சொல்லவோ நான் ஒன்றும் ஆபிஸ் வாழ்க்கையை பழம் தின்று கொட்டை போட்டவனில்லை. அதற்கு பதில் நான் இப்படி சொல்வேன். எப்படி :

'மச்சி எவ்வளோ வேலை செஞ்சோங்கிறது முக்கியமில்ல, எவ்வளோ பிலிம் காமிச்சோங்கிறது தான் முக்கியம்'

'பிலிம் காண்பிச்ச போதுமா மாப்ளே?' என்று கேட்கும் நண்பனுக்கு ஒரு கதை சொல்வது வழக்கம்.

ஒரு கசாப்புக் கடைக்கு ஒரு நாய் தினமும் வரும். நாயின் கழுத்துப்பட்டையில் தொங்கும் ஒரு சின்ன பையில் கடைக்காரனுக்கு ஒரு லெட்டரும், கொஞ்சம் காசும் கொண்டு வரும். கசாப்பு கடைக்காரன் அந்த லெட்டரை படிக்கும் போது 'அரைக்கிலோ எழும்புக்கறியும், 4 ஆட்டுக்காலையும் கொடுத்து விடவும் என எழுதியிருக்கும்'. கடைக்காரனும் தவறாமல் அதில் சொன்னமாதிரியே பார்சலைக்கட்டி, நாயின் கழுத்துப்பையிலிருந்து பைசாவை எடுத்துக் கொண்டு பார்சலை கழுத்தில் மாட்டி அனுப்புவான்.

நாய் எங்கு தான் போகிறது. யார் அதற்கு எசமானன் என்பதை பார்க்க வேண்டுமென்ற ஆவல் கடைக்காரனுக்கு ஏற்ப்பட்டது.

பார்சலை கட்டிக் கொடுத்துவிட்டு நாயின் பின்னாலேயே கசாப்பு கடைக்காரன் போனான். நாய் மிக புத்திசாலித்தனமாக எலெக்டிரிக் ட்ரெயினில் ஏறியது. வரவேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் சரியாக இறங்கியது. பிறகு பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காக காத்திருந்தது. பஸ் வந்ததும் அதில் ஏறியது. கண்டக்டரும் சரியாக பைசாவை அதன் கழுத்துப் பையிலிருந்து எடுத்து, டிக்கெட்டை வைத்தான்.

கசாப்புக்கடைக்காரனும் தொடர்ந்து கண்காணித்து வந்தான். டிரைவர் பக்கத்து ஜன்னலில் பார்த்துக் கொண்டே வந்த நாய் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக்கொண்டது. கசாப்புக்கடைகாரனும் நாயை கவனித்துக் கொண்டே இறங்கினான்.

நாயும் 4 தெருக்களை அழகாக கடந்து ஒரு பெரிய வீட்டின் முன் நின்று கேட்டின் லாக்கை அழகாகத் திறந்தது. தோட்டத்தை தாண்டி உள்ளே ஓடியது. வாசல் கதவை பூட்டியிருந்ததை அறிந்த நாய் பக்கவாட்டில் உள்ள ஜன்னலுக்கு ஓடியது. 'லொள் லொள்' என்று குலைத்தது.
பிறகு கதவு பக்கம் வந்து கால் நகத்தை வைத்து பிராண்டியது. இதையும் பின் தொடர்ந்து வந்த கசாப்புக் கடைக்காரன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

கதவை திறந்த எசமானன் நாயின் கழுத்தில் உள்ளவற்றை எடுத்துக் கொண்டு நாயை ஒரு பிரம்பால் அடித்து வெளுக்க ஆரம்பித்தான். கசாப்புக்கடைகாரன் வேகமாக ஓடிவந்து எசமானனை திட்ட ஆரம்பித்தான் 'என்னங்க இது, நாய் எவ்வளவு புத்திசாலித்தனமா கறி வாங்கிட்டு ட்ரெய்ன் ஏறி பஸ் ஏறி தெருவை கடந்து வந்து உங்ககிட்ட பத்திரமா அதை கொண்டு வந்து சேர்த்திருக்கு. இப்படி போட்டு அடிக்கிறீங்களே' என்றான் கசாப்புக் கடைக்காரன்.

'எத்தனை வாட்டி சொல்றது இந்த மடநாய்க்கு வீட்டு வாசல் சாவியை எடுத்து போ போ என்று. சாவி எடுத்துப் போகாம திரும்ப திரும்ப வந்து கதவை பிராண்டுது' என்று நாயை அடிப்பதை தொடர்ந்தார்.

பிறகு அந்த நாயை அடித்து முடித்த எசமானன் துள்ளி துள்ளி அழகாக ஓடிவந்த அழகான டாலி என்ற அவரின் இன்னொரு நாயை வாரி அணைத்து கொஞ்சியப்படி வீட்டிற்குள் சென்றான் எசமானன்.

'மச்சி, இது மாதிரி தான் மேனஜர் எசமானன்னா ப்ரோகிராமர் நாய். ப்ராஜக்ட் மேனஜர் நாய்ன்னா அவருடைய பாஸ் எசமானன்' என்பேன். அந்த நாய் மாதிரி நாம எவ்ளோ நல்லது செய்தாலும் கடைசியில் நம்மிடம் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் நம்முடைய மேலாளர்கள் (பாஸ்கள்). நம்மளையும் அந்த நாய் மாதிரி நடத்தக் கூடாதுன்னா டக்குண்ணு டாலி மாதிரி ஒரு சீனை போட்டு நல்ல பிலிம் காண்பிக்கனும்.

பிலிம் பிலிம் சொல்லிக்கிட்டே இருக்கேன். எப்படி தான் பிலிம் காண்பிப்பது....

1) கையில் எப்போதுமே எதாவது டாக்குமெண்டையோ இல்லது கம்பெனி பைலையோ தூக்கிட்டு அலைவது அப்படியே நீங்கள் கம்பெனிக்கு மாஞ்சி மாஞ்சி வேலைப்பார்ப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும்.

வெறும் கையோடு உங்க பாஸ் ஆபிஸின் முன் நடந்து சென்றால் அவர் நீங்கள் தம் அடிக்கவோ இல்ல கேண்டீனுக்கோ போகிறார் என்று நினைத்துக் கொள்வார். தவறி அன்றைய நியூஸ் பேப்பரைக் கொண்டு அலையாதீர்கள். அப்படி அலைந்தால் நீங்கள் டாய்லெட்டை நோக்கி செல்வதாக உங்கள் பாஸ் நினைத்துக் கொள்வார்.ஆகவே டாக்குமெண்ட் அல்லது கம்பெனி லோகோ போட்ட பைல் நல்ல அபிப்ராயத்துக்கு 100% உத்திரவாதம்.

2) முகத்தை எப்போதுமே சீரியஸாக வைத்துக் கொண்டு கணனி முன் உட்கார்ந்து வலைப்பதிவோ, சி.என்.எனோ, அல்லது ஆனந்த விகடனோ, அதிரை.காம் படித்துக் கொண்டிருங்கள். மறந்தும் புன் சிரிப்பை கொண்டு முகத்தில் கொண்டு வந்துவிடாதீர்கள். Alt+TAB எப்போதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். பாஸ் வந்தால் டக்கென்று பக்கத்தில் உள்ள excel> word சாஃப்ட்வேருக்கு தாவிவிடுங்கள்.

3) உங்கள் அலுவலக மேஜையை எப்போதும் குப்பையாக வைத்திருப்பதால் நீங்கள் நிறைய வேலை பார்க்கிறீர்கள் என்ற தோரனையை ஏற்படுத்தும். பிரிண்ட் அவுட்டை எக்கசக்கமாக எடுத்து தள்ளி மேஜை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்

4) பாஸ் உங்களை பார்க்கும் போது எல்லாம் நீங்கள் பொறுமையற்றவராக, ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது போல் பாவலா காட்டுங்கள். தலையை சொரியுங்கள். உஸ் உஸ் என்று சத்தம் போடுங்கள். மெதுவான குரலில் ஏதாவது முணுமுணுங்கள். பாஸ் காதுக்கு உங்கள் குரல் எட்டுமானால் மெதுவாக 'shit'என்று அடிக்கடி கூறுங்கள். உங்கள் ப்ரோகிராமோ இல்லை உங்கள்schedule-உதைக்கிறது என்று அதற்கு பொருள்படும்.

5) எந்த காலத்திலும் பாஸ் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நீங்கள் கிளம்பி விடாதீர்கள். இருக்கவே இருக்கு தமிழ்மணம் படிங்க... பின்னூட்டம் விடுங்க.

நல்ல டைம் பாஸ். ஒரு வேளை நீங்கள் கட்டாயம் பாஸ் இருக்கும் போதே வெளியேற வேண்டுமென்றால் உங்கள் ஆபிஸ் பேக்கை(office bag) உங்கள் மேஜையிலேயே பாஸ் கண்ணில் படும்படு விட்டுவிட்டு செல்லுங்கள். அது நீங்கள் இன்னும் ஆபிஸில் இருக்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும்.மறுநாள் பாஸ் ஆபிஸிற்கு வரும் முன் நீங்கள் வந்து விடுங்கள். இல்லையேல் குட்டு வெளிப்பட்டுவிடும்.

6) நல்ல பெரிய பெரிய கம்பியூட்டர் புத்தகங்களை உங்கள் மேஜை குப்பைகளுக்கு இடையில் திறந்து வைத்து அவ்வப்ப்போது அதில் ஏதோ தேடுவது போல பாவ்லா காட்டுங்கள். புத்தகத்தை எப்போதும் மூட வேண்டாம். நீங்கள் ப்ராஜக்ட் மேனஜராகயிருந்தால் கிளையண்ட்requirement> functional specification போன்ற தடிமனான பைலை உங்கள் முன் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். MS-project schedule உங்கள் முன் இருந்தால் மிகச் சேமம்.

7) வலைப்பதிவில் யாரோ இந்த பிலிமை போட்டிருந்தார்கள். அதை தொகுக்கும் பொருட்டு இங்கே கொடுக்கிறேன். எனக்கு தெரிந்து நிறைய பேர் க்யூபிக்களில் அலங்கார கண்ணாடியை வைத்திருப்பார்கள். என் அலுவலகத்தில் ஒரு காரின் சைடு கண்ணாடியே அழகாக வைத்திருந்தார். அதன் பயன் மிக எளிது. பாஸ் மெதுவாக பூனையாக உங்கள் பின்னால் வந்து பார்க்கும் முன்னர் தூரத்திலிருந்தே அந்த கண்ணாடியில் பார்த்துவிடலாம். அதற்கேற்ப அரெஞ்மெண்ட் செய்து கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கான பிலிம் காட்டும் முறைகளில் சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். இதை பயன்படுத்தி உங்கள் extra curricular activities ஐ கூட்டிக் கொள்வது உங்கள் திறமை..
NANDRI: THAMIM ANSARI
==========================
அல்வாசிட்டி.விஜய் has left a new comment on your post "ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி?, - தமீம் அன்சா...": அண்ணாச்சி,இந்த பதிவு அப்படியே நான் எழுதியது மாதிரியே தோன்றவே, பழைய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 4 2005-ஆம் ஆண்டு நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவை எழுதியது சாட்சாத் நான் தான் அய்யா.கீழிருக்கும் சுட்டியை சென்று பார்க்கவும்.http://halwacity.com/blogs/?p=163நன்றி தமீம் அண்சாரிக்கு சென்றதை பார்த்தவுடன் கொஞ்சம் திடுக்கிட்டேன்.ஒன்னும் பிரச்சனையில்லை. மையகருத்து என்னுடைய மெயிலில் வந்த ஒரு குறிப்பை தழுவியது என்றாலும், நான் பட்ட அனுபவங்களை மேலிருக்கும் பாயிண்ட்டுகளில் சொன்னது எனக்கு மட்டுமே சொந்தம்.:-))
NANDRI: HALWACITY VIJAY.

மேலும் படிக்க... Read more...

வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கெட்ட நண்பர்கள்.. ஜாக்கிரதை.

வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கெட்ட நண்பர்கள்.. ஜாக்கிரதை.

உங்கள் பிள்ளைகள் நிறைய வீடியோ கேம் விளையாடுகிறார்களா?

கவனியுங்கள் இதை. அமெரிக்காவின் இன்டியானா பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மெடிசன், வன்முறை நிறைந்த வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் மூளையில் இருக்கும் உணர்வுகளின் பகுதி தூண்டுதல்அடைவதும், அதே நேரத்தில் சுயகட்டுப்பாடு, தயக்கம், கவனிப்பு போன்ற வேலைகளில் ஈடுபடும் மூளையின் பிற பகுதிகளின் செயல்படும் தன்மை குறைவதும் கவனிக்கப்பட்டது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய வின்ஸ் மாத்யூஸ் சொல்கிற முக்கிய அறிவுரை இதுதான். 'உங்கள் பிள்ளைகள் என்ன மாதிரியான வீடியோகேம் விளையாடுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். வன்முறை நிறைந்த வீடியோகேம் விளையாட்டுகளுக்கும் மூளையின் செயல்படும் இடங்களுக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலே சொன்ன ஆய்வுக் குழுவினர் இரண்டு விதமான வீடியோ விளையாட்டுகளை ஆய்விற்கு உட்படுத்தினார்கள். முதல் ஒன்று Need for speed underground என்பது. இதில் வேகம் இருக்கும். வன்முறை இருக்காது.

அடுத்தது medal of Honour Frontline. இது வன்முறை நிறைந்தது. ஆய்வுக் குழுவினர் 44 இளம் வயதுப் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வில் பயன்படுத்தினார்கள். விளையாடி முடித்ததுமே பிள்ளைகளின் மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. வன்முறை விளையாட்டை விளையாடிய பிள்ளைகளின் மூளை காட்டிய நெகட்டிவ் விளவு, மற்றொரு விளையாட்டை விளையாடிய பிள்ளைகளிடம் இல்லை.

மூளையில் ஏற்படுகிற இந்த மாற்றங்கள் நிரந்தரமாக அப்படியே இருந்துவிடுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கெட்ட நண்பர்கள்.. ஜாக்கிரதை.

வடுவூர் குமார்

NANDRI : KUMUDAM HEALTH.

மேலும் படிக்க... Read more...

'இருதய நோயாளி என்ன இவ்வளவு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே?!

'இருதய நோயாளி என்ன இவ்வளவு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே?!

உலகம் முழுக்க இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வயதானாலே ஏதோ இருதய நோய் வந்துவிடும் போல என்று நினக்கிறது அளவுக்கு இந்த பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது.

நோய் வருவது மட்டும் அல்லாமல் இந்த நோயாளிகளுடைய மிக முக்கியமான பிரச்னை மாத்திரைகளைச் சாப்பிடுவது. ஒவ்வொரு வேளைக்கும் நான்கு அல்லது ஐந்து மாத்திரை என ஒரு நாளில் ஏகப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறது. நிறைய மாத்திரைகளைச் சாப்பிடுவதாலேயே இம்மாதிரி இருதய நோயாளிகள் மனதளவில் மிகவும் சோர்ந்து போகிறார்கள்.

'என்ன இவ்வளவு மாத்திரகளைச் சாப்பிட வேண்டி இருக்கிறதே?! என்கிற சலிப்பும் வேதனையும் ஒவ்வொரு முறை டப்பாவைத் திறந்து ஒவ்வொரு மாத்திரையாக எடுக்கும் போதும் தோன்றுவது இயல்பு. இதனால் ஏற்படுகிற மனச் சங்கடம், கசப்பு, அழுத்தம், வருத்தம் எல்லாம் சேர்ந்து மேலும் இருதயத்தைச் சோர்வடையச் செய்யக்கூடும். இவர்களுக்கு, இப்போது ஒரு ஆறுதலான செய்தி வந்திருக்கிறது.

பாலிபில் (Polypill) என்ற ஒரு மாத்திரையை வடிவமைத்திருக்கிறார்கள். என்ன இது? ஒன்றுமில்லை மாத்திரைதான்.

இருதய நோயாளிகள் சாப்பிடுகிற எல்லா மாத்திரைகளையும் சேர்த்து
ஒரே மாத்திரையாக வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு மாத்திரையில் நான்கு, ஐந்து மாத்திரை இருக்கும். சாப்பிடும்போது சிரமம் தெரியாது. ஒரே ஒரு மாத்திரைதான். ஒரு வேளைக்கு என்பதில் மனசு லேசாகிவிடும். நோயாளிகளுக்கு மனதளவில் தெம்பைக் கூட்டி, நோயின். தீவிரத்திலிருந்து விடுபட இந்த 'நான்கும் ஒன்றில்' வழி நல்ல வழியாக இருக்கிறது.

முதன் முதலில் 2003_ல் வால்ட் மற்றும் லா என்கிற இரண்டு இருதய நோய் சிகிச்சை மருத்துவர்கள் இந்த பாலிபில் என்கிற கருத்தை முன்மொழிந்தார்கள். அது பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வெளிவந்தது. அதன்பிறகு 2004_ல் பீட்டர் ஸ்லட் என்கிற இருதய நோய் மருத்துவர் இதை ஒரு சரியான வடிவத்திற்குத் திருத்தி ஒரு மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். அவருடய கருத்துப்படி ஒரு பாலிபில் மாத்திரையில் ஆறு மாத்திரைகளும், வைட்டமின்களும் இருக்கும். ஒரு மாத்திரை நான்கு விதமான இருதய நோய் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்கும். இதனால் இருதய இரத்தக் குழாய்களில் ஏற்படுகிற அடைப்புகள் பிரச்னை மற்றும் ஸ்ட்ரோக் என்கிற திடீர் செயலிழப்பு இரண்டும் 80 சதவிகிதம் குறைக்க பயன்படும் என்கிறார்.

யாருக்குக் கொடுக்கலாம்?

55 வயதுக்கு மேல் இருக்கிறவர்களில். இவர்களுக்கு இருதய நோய்கள் வரலாம் என்று கணிக்கப்படுகிறவர்களுக்கு இந்த பாலிபில் உதவும்.

இருதய நோய் சம்மந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கிட்டத் தட்ட 52 நாடுகள் இணைக்கப்பட்டிருந்தன. எல்லா நாட்டிலும் ரிஸ்க் காரணிகள் சம அளவில்தான் இருக்கின்றன. ரிஸ்க் என்று அடையாளப்படுத்தப் படுகிற மக்கள் அதிகம் இருக்கிற நாடுகளில் பாலிபில் முக்கியமாக உதவும் என்பது டாக்டர் பீட்டர் ஸ்லட்டின் கருத்து. ஜெர்மனியில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருதய நோயாளிகள் நான்கு, ஐந்து மாத்திரை சாப்பிடுகிறவர்களவிட, அவை கலந்து ஒரே மாத்திரையாக இருக்கும் பாலிபில் சாப்பிடுகிறவர்கள் விரைவாக முன்னேற்றம் அடைந்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நோயாளியும், ஒரு மாத்திரைதான் என்பதில் பதட்டம் இல்லாமல் இருக்க முடிகிறது. டாக்டருக்கு ஒரு பெரிய மருத்துவச் சீட்டில் ஒரே ஒரு மாத்திரையை எழுதுவது சுலபமாக இருந்தது. தவிர, ஒரு டாக்டர் விரும்பும் பதட்டமற்ற நோயாளியை, அவரால் இந்த பாலிபில் மூலம் கொண்டுவர முடிந்தது.

ஆறு மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து ஆறும் சரியான அளவில் வேலை செய்யும் என்று சொல்வதை உடனே ஏற்றுக்கொள்ள முடியாது என்று சில மருத்துவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். பாலிபில் பற்றி இன்னும் சரியான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்பது அவர்களது வாதம். ஸ்வீடனின் கரோலின்ஸ்கா பல்கலக்கழக மருத்துவ மனையின் டாக்டர் லார்ஸ் ரடன் பாலிபில்_ன் Safety பாதுகாப்புப் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று வற்புறுத்கிறார்.

புகைபிடிப்பது, உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படுகிற இருதயப் பிரச்னைகளுக்குக்கூட பாலிபில் பக்கம் போக வேண்டுமா? இவற்றை நோயாளிக்குப் புரியவைத்து தவிர்க்கமுடியுமே? என்கிறார்.

இவர் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றிற்கு Alternative Polypill என்று தலைப்பு வத்திருக்கிறார். இதில் அவர் பரிந்துரைக்கிற 'மாற்று பாலிபில்' என்ன தெரியுமா? உடற்பயிற்சி. நீங்கள் தொடர்ந்து செய்கிற உடற்பயிற்சிதான் உங்கள் இருதயத்துக்கு நல்ல தோழன் என்கிறார். ஒரு வாரத்திற்கு குறைந்தது 3கிலோ மீட்டர் நடந்தால் கூட உங்கள் எடை கூடுவது குறைக்கப்படுகிறது என்கிறார். இது இருதயத்திற்குப் பலம்.

ஆனால், பிரச்னையில் சிக்கி இருதய நோய்களுக்காக ஒவ்வொரு வேளையும் கை நிறைய மாத்திரகளைஅள்ளவேண்டியவர்களுக்கு, மெல்லப் பறித்துச் சூடிக்கொள்கிற ஒற்றைப் பூ மாதிரி வருகிற பாலிபில் நிச்சயம் வரம்தான்.

டாக்டர்ஜி. செங்கோட்டுவேலு இருதயநோய் சிகிச்சை நிபுணர்,
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி.

இப்போது இரண்டு மருந்து கம்பெனிகள் பாலிபில் மாத்திரகளைவிற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இதில் ஆஸ்பிரின், ராமிபிரில், அட்ரோவாஸ் டேட்டின் என்கிற மூன்று மாத்திரகள் கலந்து வந்திருக்கிறது. ஆஸ்பிரின் இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உருவாவதைத் தடுக்கிறது.

அட்ரோவாஸ்ட்டேடின் முக்கியமாக கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது. ராமிபிரில் அடைப்புகள் உருவாவதைத் தடுத்து இருதய இரத்தக்குழாய்களின் பாதுகாப்புக்கு உதவுகிறது. கூடவே அட்ரோவாஸ்டேடின் அடைப்புகள் உடைந்து சட்டென்று ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்கிறது. பாலிபில் விற்பனைக்கு வந்து விட்டாலும், இது மிக அதிக ரிஸ்க் என்று கருதப்படுகிறவர்களுக்கும், ஏற்கெனவே இருதயநோய் முற்றிலுமாக வந்துவிட்டவர்களுக்கும் உதவக்கூடும்.

ஆனால் இதில் மருந்துகள் அளவு முன்பே தீர்மானிக்கப் பட்டுவிடுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற முறையில் ஒவ்வொரு தனி மருந்தின் அளவைத் தீர்மானிக்க முடிவதில்லை. இது பாலிபில் மருந்தின் முக்கிய பிரச்னை. தற்சமயம் பெரிதாக டாக்டர்களால் இன்னும் பயன்படுத்தப் படவில்லை.

பாதுகாப்பு, பயன், தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நபர்களின் எண்ணிகை என ஒவ்வொன்றும் மேலும் நிறைய ஆய்வு முடிவுகளால் நிரூபிக்கப்படும் போது, பாலிபில் தேவை அதிகரிக்கலாம்.

இருதய நோய்களைப் பொறுத்தவரை நான் சொல்கிற முக்கியத் தடுப்பு நடவடிக்கை ஒன்றே ஒன்று தான். எக்ஸர்சஸ்!
எஸ்.எஸ்
NANDRI: KUMUDAM HEALTH.

மேலும் படிக்க... Read more...

" 786 " அல்லாவின் தொலைபேசி எண்?

>> Thursday, March 15, 2007

786 அல்லாவின் தொலைபேசி எண்?
786 is a prisioner number???? 786 Gods Phone number....Or Pondatti Number?


என்றெல்லாம் சில ' அறிவு ஜீவிகள்' கள் கேள்விகள் கேட்டுவிட்டு ........................... -- .அவர்களுக்கு விளக்கம் .

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானி;ரஹீம் -( பொருள்)அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் நிகரற்ற அன்புடையோன்!

முஸ்லிம்களில் பலர் கடிதங்களில் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" க்கு பகரமாக "இலாஹி " - " 786 " போன்றவற்றை எழுதுகின்றனர்.

" 786 " என்பது ( NUMEROLOGY) - 'அப்ஜத்' அரபி எண்ணியல் கணக்குப் பிரகாரம் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமி" ன்; கூட்டுத்தொகை என அவர்கள் கருதுகின்றனர்.

786 போன்றவற்றை எழுதுகின்ற முறையைத் தவிர்க்க வேண்டியதுள்ளது.

பிள்ளையார் சுழி (உ) சிலுவை சங்கு சக்கரம் லிங்கம் 786 பிறை-நட்சத்திரம் போன்ற நூற்றுக் கணக்கான வடிவங்கள் புழக்கத்தில் உள்ளன.
இவ்வடிவங்களின் மூலமே இவற்றை உபயோகப் படுத்துபவர்கள் யாவர் எம்மொழியினர் எந்நாட்டைச் சார்ந்தவர் என்பவற்றையெல்லாம் பெரும்பாலும் அனுமானித்துவிடலாம்.


இந்த வழக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவரிடம் மட்டும்தான் உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இதில் புனிதமிருப்பதாக நாங்கள் கருதுவதில்லை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும் தங்களது கொள்கையை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்துவதற்காக இவ்வழக்கத்தைக் கையாளுகின்றனர். அதாவது சங்கம் இயக்கம் கட்சி நிறுவனம் அமைப்பு என இவர்களும் சில அடையாளங்களை அல்லது சுலோகங்களைப் பயன் படுத்துகின்றனர்.

அத்தனை எல்லைகளையும் தாண்டி எல்லோரிடமும் இந்தப் பழக்கம் பரவியிருப்பதற்குக் காரணம் 'துவக்கம்' என்ற சந்தர்ப்பத்திற்கு இருக்கின்ற மகத்துவம்தான். 'முதல்கோணல் முற்றிலும் கோணல் ''THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION" போன்ற பழமொழிகளும் இதனையே பிரதிபலிக்கின்றன.

முஸ்லிம்களில் பலர் கடிதங்களில் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" க்கு ப்பகரமாக இலாஹி 786 போன்றவற்றை எழுதுகின்றனர். இலாஹி என்று எழுதுவதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரங்களைக் காண முடியவில்லை. 786 என்பது (NUMEROLOGY )'அப்ஜத்' அரபி எண்ணியல் கணக்குப் பிரகாரம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானி;ரஹீம் க்கு ; கூட்டுத்தொகை என அவர்கள் கருதுகின்றனர். இரு காரணங்களால் இந்த முறையைத் தவிர்க்க வேண்டியதுள்ளது.

முதலாவது காரணம் நபி (ஸல்) அவர்களில் அங்கீகாரம் இதற்கு இல்லை. அதற்கு மாறாக அன்னார் பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதியிருக்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களும் வேற்று நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹ்வைக் குறிப்பிட்டிருந்ததைப் பற்றி மேலே கண்டோம்.

எனவே 786 போன்ற வாசகங்களை எழுதுவதால் ஒரு சுன்னத்தை அகற்றிவிட்டு ஒரு பித்அத்தை அரங்கேற்றிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.

மற்றொரு காரணம் 786 என்ற கூட்டுத் தொகை "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்" என்பதற்கு மட்டும் சொந்தமானதல்ல மாறாக ஹரே கிருஷ்ணா போன்ற இஸ்லாத்திற்கே சம்பந்தமில்லாத வார்த்தைகளுக்கும் கூட இந்த எண்ணிக்கை வரும். ஏன் ஷைத்தான் மற்றும் ( PHAROH) பிர்அவ்னின் மூலம் ஏற்படும் உதவி(யால்) என்ற கருத்துள்ள அவ்னன் பி பிர்அவ்ன வ பி ஷைத்தான என்ற வாசகத்தின் எண்ணியல் கூட்டுத்தொகையும் 786 வரும்.


எண்ணியல் வழக்கத்தை அங்கீகரிக்கத் துவங்கினால் பல தீய விளைவுகள் ஏற்படும். இப்போதே கூட வாகனம் வீடு உரிமங்கள் போன்றவற்றின் பதிவு மற்றும் அடையாள எண்களில் 786 வருவதை நல்ல சகுனமாகவும் (SATAN)இப்லீஸ் என்ற வார்த்தையின் கூட்டுத் தொகையான 103-ஐ அபசகுனமாகவும் பலர் கருதுகின்றனர். இன்னொரு இரகசியம் என்ன தெரியுமா?

இப்படிப்பட்டவர்களில் பலர் பிஸ்மி என்று மட்டும் தங்கள் நிறுவனங்களுக்கோ உற்பத்திப் பொருட்களுக்கோ பெயர் வைத்துக் கொண்டு ஆனந்தமடைகின்றனர். பிஸ்மி என்பதன் கூட்டுத் தொகையும் 103 தான்.

அரசு மற்றும் தனியார் நிறுவன பதிவுகளிலும் 786 என்கிற எண் கிடைப்பதற்காக காசு கொடுப்பதற்கு மக்கள் தயாராவதைப் போல எதேச்சையாக 103 கிடைத்து விட்டால் அதை மாற்றுவதற்குப் பணம் செலவழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

அது மட்டுமல்லாமல் விவரமறியாத பலரும் இந்த எண்ணை ஆபர அணிகலன்களில் பொறித்து மகிழ்வதும் அதற்கு மரியாதை செய்யும் வகையில் அதை முத்திக்கொள்வதும் அதைச் சட்டங்களில் அடக்கி சுவர்களில் மாட்டி அதற்குப் பக்தி முத்திரை குத்தி அதற்கு ஊதுபத்தி ஏற்றுவதும், பூச்சரங்கள் சாற்றுவதும் இன்றைய இஸ்லாமியக் கலாச்சாரமாய் அறிமுகமாகி வருகின்றன.

கலை நிகழ்ச்சிகளிலும் மாற்று மதச் சின்னங்களாக சிலுவை மற்றும் சிலைகளுக்கு நிகராக இந்த 786 தான் இஸ்லாத்தின் சார்பாக இடம் பெறுகின்றது.

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளுக்கு மாற்றமான ஷிர்க் பித்அத் பிற சமுதாய கலாச்சாரத்திற்கு ஒப்பாதல் போன்ற தீமைகளை உள்ளடக்கிய இந்த எண்ணியல் வழக்கம் தேவைதானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பிஸ்மில்லாஹ் எழுதப்பட்டால் அதன் மகத்துவம் தெரியாத சிலர் அதைக் கிழித்தோ அல்லது அசிங்கப்படுத்தியோ அதன் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்துகொள்ளக்கூடும். அதைத் தவிர்க்கவே 786-ஐ நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்று சிலர் காரணம் கூறுகின்றனர்.

மாற்றுமத அரசர்களுக்குக் கடிதம் எழுதும்போது பிஸ்மில்லாஹ்வை எழுதிய நபி (ஸல்) அவர்களுக்கே ஏற்படாத அக்கறையா பிஸ்மில்லாஹ்வின் புனிதத்தைக் காப்பாற்று வதில் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது?

இன்னும் சொல்லப்போனால் தாம் எழுதியனுப்பிய கடிதத்தைக் கிழித்துப்போட்டு கொச்சைப் படுத்திய பாரசீகநாட்டு மன்னரைச் சபித்த நபி (ஸல்) (பார்க்க: இப்னு அப்பாஸ் (ரழி) புகாரீயில்) இனி பிஸ்மில்லாஹ் எழுதக்கூடாது என்றோ அதற்கு மாற்றாக எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்றோ கூறியதில்லை.

786 போன்றவற்றை எழுதுகின்ற முறையைத் தவிர்க்க வேண்டியதுள்ளது.

மேலும் படிக்க... Read more...

EXTRA METHOD TO GET HIV.

EXTRA METHOD TO GET (AIDS) HIV ----Importance: High

Dear All ,
Kindly take a couple of minutes to go thru this mail. If useful may advise others also. Please pass this on to others this happened in Paris recently and may happen elsewhere also .
A few weeks ago, in a cinema, a person felt something poking from her seat. When she got up to see what it was, she found a needle sticking out of the seat with a note attached saying "You have just been infected by HIV (AIDS )" .The Disease Control Center(in Paris) reports many similar events in many other cities recently. All tested needles were HIV Positive ...


PS: It also happened in a Monot pub in Lebanon so be careful!The Center also reports that needles have been found in cash dispensers (ATM) at public banking machines . We ask everyone to use extreme caution when faced with this kind of situation. All public chairs/seats should be inspected with vigilance and caution before use. A careful visual inspection should be enough. In addition, they ask that each of you pass this message along to all members of your family and your friends of the potential danger.

Recently, one doctor has narrated a somewhat similar instance that happened to one of his patients at the Priya Cinema in Delhi. A young girl engaged and about to be married in a couple of months, was pricked while the movie was going on. The tag with the needle had the message "Welcome to the World of HIV family".

Though the doctors told her family that it takes about 6 months before the virus grows strong enough to start damaging the system and a healthy victim could survive about 5-6 years, the girl died in 4 months, perhaps more because of the "Shock thought". We all have to be careful at public places, rest God help! Just think about saving a life by forwarding this message. Please, take a few seconds of your time to pass along.

Kindly pass this to every one. Probably your mail can help some save his/her life.

K. S. SYED AHAMED GHANI. SAUDI ARABIA

மேலும் படிக்க... Read more...

மனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக்கப் பழகுவதே நல்லது!

>> Tuesday, March 13, 2007

மனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக்கப் பழகுவதே நல்லது!

உரையாடல் ஒரு கலை என்பதை இன்னமும் நம்மில் பலர் உணர்ந்தபாடில்லை.

`சளசள’வென்று பேசிக் கொண்டே இருப்பது, நிறுத்தாது வேகமாகப் பேசிக் கொண்டே இருப்பது, தனக்குத் தெரிந்ததை யெல்லாம் அவிழ்த்துக் கொட்டிவிட இதோ ஓர் அரிய சந்தர்ப்பம் என்று உரையாடலை எண்ணி `கேட்பாளரைத்’ துளைத்தெடுப்பது இத்தியாதி இத்தியாதி உரையாடல் ஆகாது. உரையாடலில் நகைச்சுவை இருக்கலாம், நக்கல் இருக்கக் கூடாது; நையாண்டித்தனம் நெளியக் கூடாது.

சுவையான உணவைக் கூட குறிப்பிட்ட அளவோடு நாம் உண்டு, அடுத்து பரிமாற வரும்போது, போதும் என்று சொன்னால்தான், உணவின் சுவை நமக்கு ருசிக்கத் தக்கதாக இருக்கும்.

அதுபோலத்தான், `இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டாரா? இவருடன் பேசுவது, உரையாடுவது தான் எவ்வளவு இன்பமாக இருக்கிறது’ என்று எதிர்புறத்தில் இருப்பவர் நினைக்கும் வண்ணம் இருப்பதை விட சிறப்பான உரையாடல்தான் வேறு ஏது?

உரையாடலை நாம் தொடர, எதிர்புறம் `பச்சை விளக்கு’ எரிகிறதா? மஞ்சள் விளக்கு வந்து கொண்டுள்ளதா? சிவப்பு விளக்கு வந்தே விட்டதா? என்று சூழ்நிலை புரியாமல், தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்மை அடுத்த முறை காணும் அந்த நண்பர் ஓடி ஒளியத் தொடங்கி விடுவார் -இல்லையா?

சிலர், நமது உரையாடலை சுவைத்துக் கொள்கிறார்களா அல்லது சுளித்துக் கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய முடியாத நிலையில், ``உம்’’ என்பது, வெறுந்தலையாட்டுதல், காதை இவருக்குக் கொடுத்து, தம் மனதை வனத்தில் திரியும் வானரம்போல விட்டுவிட்டு இருப்பதும் உண்டு!

நம் மனங்கள், வனங்கள் ஆகக் கூடாது. காரணம், குறிப்பிட்ட செய்திகளை உரையாடலில் கூறும்போதோ, அல்லது கேட்கும்போதோ அடுத்த தரப்பினர் கருத்து நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் மனதை அதில் செலுத்துவதுதான் முறை.

தள்ளுவதோ, கொள்ளுவதோ நமது உரிமை என்பதால், சொல்வதை அவர் தனது உரிமையாகக் கருதிச் சொல்கிறார். அதில் தவறில்லை என்று நாம் உணருதல் நம் மனங்களையும், குணங்களையும் செம்மைப்படுத்த உதவும்.
குறிப்பறிதல் என்பது முக்கியம்.

அதிலும் இப்போது எதிரில் இல்லாத நிலையில்தான் தொலைப்பேசி மூலம் (கைத்தொலைப்பேசி உள்பட) பேசிடும் நிலையும் உண்டு என்பதால், அடுத்த பக்கத்தில் அவர் என்ன நிலையில், எங்கு முக்கியப் பணியில் இருக்கிறார் என்று கூட எண்ணாமல், நிற்காத தொடர் வண்டிபோல் பேசிக்கொண்டே போவது `நயத்தக்க நாகரிகம்’ ஆகாது.

நமக்கு என்னதான் நெருக்கமானவர்கள் ஆனாலும் கூட, அவர், முக்கிய ஆலோசனை யிலோ, குழுக் கூட்டத்திலோ, எழுதும்போதோ அல்லது உண்ணும்போதோ, அவருடைய சந்தர்ப்பம்பற்றி அறிந்து கொள்ளாமலேயே `வளவள’வென்று பேசுவது அவர்களை எவ்வளவு இக்கட்டான சங்கடத்தில் வைக்கும் என்பதை உணர வேண்டும்.

பசியால் களைப்புற்று, சாப்பாட்டு மேசையில் அமர்ந்து உண்ணத் தொடங்கும்போது, ஒலிக் கும் தொலைப்பேசி, அது ஏதாவது மிக முக்கியமானதாக இருந்துவிடக் கூடும் என்பதால், சாப்பிடுபவர் அதைக் கேட்க உடனே முனைகிறார்;

மறுபுறம் சோற்றினைப் பிசைந்த ஈரக்கை; ஆனால், அடுத்த முனையிலிருந்து கேட்பவரிடம், ``நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று துணிந்து கூறி, மறுமுறை அழையுங்கள்; அல்லது நானே அழைக்கிறேன்’’ என்று கூறுபவர் சிலர்தான்!

அப்படிச் சொல்வதற்கு சங்கோஜப்பட்டுக் கொண்டு, பேச்சைக் கேட்டால் கை காய்ந்து விடுவதோடு, உணவும் ஆறிப்போகும் நிலை ஏற்படும்.
எனவே, தொலைப்பேசி உரையாடலைத் தொடரும் நிலையில், ``பேசலாமா? தங்கள் வசதி எப்படி, ஏதாவது முக்கியப் பணியிலோ, உணவு எடுத்துக் கொண்டோ தாங்கள் இருப்பின் பிறகு, பேசுகிறேன்’’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விடுவது மிக நல்ல முறையாகும். நனி நாகரிகமும் ஆகும்!


சிலர் டாக்டர்களிடம் தொலைப்பேசியில் பேசும்போது, அவர்கள் தங்கள் எதிரில் உள்ள நோயாளிக்கு நேரம் கொடுத்து, அவரிடம் அவருடைய நோய்பற்றி உரை யாடும்போது, இந்த குறுக்கீடு நீண்டால், அதைவிட பெருங்குற்றம் உண்டா?

எடுத்து, `ஹலோ, சொல்லுங்கள்’ என்று கேட்பது, டாக்டரின் பெருந்தன்மை. அவர் கிளினிக்கில் நோயாளியை ஆய்வு செய்யும் நேரம் என்று பொதுவாக அறியும்போது, சுருக்கமாக, நாம் பேச வேண்டியதை முடித்துக் கொண்டால்தான், சரியான மனத்தை நாம் பெற்றுள்ளோம் என்று பொருள். இன்றேல், பரந்து அலையும் வாழ்வு முறையைப் பெற்ற வனமாகி விட்டதே மனது என்பது புரிகிறது!

மனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக்கப் பழகுவதே நல்லது! - கி. வீரமணி.
http://viduthalai.com/20070312/news05.htm

மேலும் படிக்க... Read more...

என்னவெல்லாம் சாதிக்கவேண்டும்?

என்னவெல்லாம் சாதிக்கவேண்டும்?
அதை எத்தனை வருடத்திற்குள் சாதிக்க வேண்டும்?


அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியர் ஒருவர், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''நான் இந்தியாவில் இருந்து கிளம்பும்போது, அமெரிக்கா சென்றவுடன் என்னவெல்லாம் சாதிக்கவேண்டும்?

அதை எத்தனை வருடத்திற்குள் சாதிக்க வேண்டும்? என்ற ஒரு பெரிய லட்சியக் கணக்கு வைத்திருந்தேன்.அதன்படி கடுமயாக உழைக்க ஆரம்பித்தேன்.

உழைத்ததின் பலனாக, நான் சாதிக்க நினைத்த விஷயங்களான கார், வீடு, பங்களா, குடும்பம் என எல்லாமே எனக்குக் கிடைத்தது. அதுவும் எட்டு வருடங்களுக்குள்ளாகவே.

ஆனால் எதற்காக இதைச் சாதிக்கவேண்டும் என்று நினைத்தேனோ அது எனக்கு இன்றுவரை கிடைக்கவேவில்லை'' என்று மிகவும் வருத்துடன் சொன்னார்.

இப் பிரச்னை இவருக்கு மட்டும் சொந்தமானதல்ல எல்லோருக்கும் பொதுவானதான். மனித மனதின் இயல்பே, ஒரு பொருளின் மீது தீவிரமாக ஆசைப்படுவதும், அதற்காக உங்களைத் தொடர்ந்து போராட வைப்பதும், பின் அது கிடைத்தவுடன் முழுமையாக அனுபவிக்க விடாமல், அதற்கு அடுத்தது என்ன? என்பதைப் பற்றி ஏங்க வைப்பது ஆகும்.

''ஒரு பொருள் கிடைப்பதற்கு முன், அது கடுகாகவே இருந்தாலும் மலையாகக் காட்டும். கிடைத்தபின் மலையாகவே இருந்தாலும் கடுகாய்க் காட்டும் மடமனம்''

முதலில் ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். ஒருநாள் வாங்கியும் விடுகிறீர்கள். வாங்கியவுடன் அதை முழுமையாக அனுபவிப்பதில் ஆர்வம் காட்டாமல், அடுத்தது எப்படி கார் வாங்கலாம் என்பதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பீர்கள்.

கார் வாங்கிவிட்டால், அதைவிடச் சிறந்த காரைப் பற்றிய கனவு.
இவ்வாறு அடுத்ததைப் பற்றிய கனவிலேயே மனம் இருப்பதால், ஒரு பொருளை அடைவதற்கு முன் அதன்மீது ஆசைப்படுவதில் காட்டுகின்ற ஆர்வம், அடைந்தபின் அதை அனுபவிப்பதில் காட்டுவதில்லை.

மாவீரன் நெப்போலியன். தான் இறந்தபின் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைத்து புதைக்கச் சொன்னானாம்.

ஏனெனில் உலகையே வென்ற வீரன் நெப்போலியன், கடைசியாக வெறுங்கையோடுதான் சென்றான் என்பதை அப்போதாவது மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பதற்காக.

இவையெல்லாம் இருந்தால் சந்தோசமாக வாழலாம் என நினைத்திருந்த விஷயங்கள் எதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.

இதைத்தான் ஆங்கிலத்தில் 'டிப்ரஷன் ஆஃப் சக்ஸஸ்' என்று சொல்கிறார்கள்.
பெரும்பாலான மேலை நாட்டினர் சந்திக்கிற பிரச்னை வெற்றிக்குப் பின்னரும் தொடர்கின்ற 'மனஅழுத்தம்' எனும் பிரச்னைதான்.
உண்மையில் உலகம் இறைசக்திக்குச் சொந்தமானது.


நாம் அனைவரும் தற்காலிகமாக அதை அனுபவிப்பவர்கள் அல்லது பாதுகாப்பவர்கள்தான். இதை உணராமல், உலகத்தில் எந்தப் பொருளைக் கொடுத்தாலும், அல்லது உலகையே கொடுத்தாலும் உங்கள் மனதை உங்களால் திருப்திப்படுத்த முடியாது என்பது நிதர்சனம்.
----------------------------------
இணைய தளத்தில் படித்தது..

மேலும் படிக்க... Read more...

400 வயது குரானை விற்க முயன்றவர் கைது.

>> Saturday, March 10, 2007

400 வயது குரானை விற்க முயன்றவர் கைது.

மார்ச் 08, 2007 பெங்களூர்:

ஒளரங்கசீப் காலத்து, 400 ஆண்டு பழமையான திருக்குரானை விற்க முயன்ற நபரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூர், எம்.ஜி. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பழமை வாய்ந்த பொருட்களை விற்க முயற்சி நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அந்த ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் தெரிந்ததால் அவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவரிடமிருந்து 400 ஆண்டு கால பழமை வாய்ந்த திருக்குரான், தஞ்சை மகாராஜா சரபோஜி வரைந்த ஓவியம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த திருக்குரான் முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தைச் சேர்ந்தது. அவரது கையொப்பமும் இந்த குரானில் உள்ளது. மொத்தம் 15 கிலோ, 39.9 செமீ நீளம், 20 செமீ அகலம் கொண்ட இந்த குரான் நூல், மலர்களின் வாசனையுடன், எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் நுட்பமாக தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த குரானின் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடியாகும்.

அதேபோல தஞ்சாவூர் ஓவியத்தின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். சுகுமாரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க... Read more...

"மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது'

>> Wednesday, March 7, 2007

"மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது'

'விஷயம் காதில் இல்லை. மனிதர்கள் மனதில் இருக்கிறது'

பரபரப்பான கால வேளை. போக்குவரத்து சந்தடி சத்தம். இரண்டு நண்பர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

'ஏய்... எங்கேயோ பூனைக்குட்டி கத்துற சத்தம் கேக்குது பாரு...' என்று சுற்று முற்றும் பார்த்தான் ஒரு நண்பன்.

தூரத்தில் நடைபாதை ஓரத்தில் ஒரு கல்லிடுக்கில் பூனைக்குட்டி ஒன்று சிக்கியிருந்தது. நண்பன் போய் அந்தக் கல்லை நிமிர்த்தி பூனைக்குட்டியை வெளியே எடுத்துவிட்டான்.

அடுத்த நண்பனுக்கு ஆச்சரியம்.

'ரோட்டில் இத்தனை பேர் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை. ஆனால் உனக்கு மட்டும் கேட்டிருக்கிறது. உன் காது ரொம்ப சக்தி வாய்ந்ததுதான்' என்றான்.

'விஷயம் காதில் இல்லை. மனிதர்கள் மனதில் இருக்கிறது' என்றான் பூனைக் குட்டியைத் தூக்கிவிட்ட நண்பன்.

'எப்படி சொல்கிறாய்?'

'இப்போ பார்.' என்று சொல்லி தன் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் சில்லறைக் காசுகளை நடைபாதையில் போட்டான். உடனே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

'பார்த்தாயா? இதுதான் மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது' என்றான் நண்பன்.
-------------------------
இணைய தளத்தில் படித்தது..

மேலும் படிக்க... Read more...

பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது......

பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது......

காமிலா, பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாள்.

அதற்காக, தனது ஆறு வயதுச் சிறுமி பஸீலாவை அனுப்பி, பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் விளையாடுவதுபோல், அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து வரச் சொல்வாள்.

பஸீலாவும், பக்கத்து வீடுகளில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை உளவு பார்த்து வந்து அம்மாவிடம் கூறுவாள்.

இப்படி அக்கம் பக்கத்து; வீடுகளில் நடப்பவைகளை முன் கூட்டியே வானிலை ஆராய்ச்சியாளர் போல் அறிந்து வைத்துக் கொண்டு, தனிமையில் அகப்படுபவர்களிடம் வெறும் வாயை மெல்லுவாள் காமிலா.

அன்று, பஸீலா ஓடிவந்து, ''அம்மா... ஆமினா வீட்டில் சினிமாவுக்குப் போறாங்க... நாமலும் போவோம்மா...'' என்றாள்.

''ஞாயிற்றுக்கிழமை வாப்பாவோட போகலாம், இப்ப சமர்த்தா போய் விளையாடு'' என்றாள்.

சிறிது நேரத்தில் மறுபடியும் வந்து, ''அம்மா... அம்மா... பாத்திமா வீட்டில் முறுக்கு செய்றாங்க... எனக்கும் செஞ்சுக் குடும்மா...'' என்று அடம்பிடித்தாள் ;பஸீலா.

''என்ன நீ... பக்கத்து வீட்ல செய்றதெல்லாம் கேட்குறே...'' என்று அடிக்க கை ஓங்கியவள், நிறுத்தினாள்.

தவறு தன் மீது தான் என்பதை உணர்ந்தாள்.

அன்று முதல் பஸீலாவை பக்கத்து வீடுகளுக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டாள்.
-----------------
இணைய தளத்தில் படித்தது..

மேலும் படிக்க... Read more...

என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான்

என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்.

ஒரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.

முல்லா, ‘‘முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’ என்றார்.

முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார்.

உடனே ‘‘என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’ என்றார் முல்லா.
-----------------------------
இணைய தளத்தில் படித்தது..

மேலும் படிக்க... Read more...

கண் புரை எனப்படும் கேட்ராக்ட்.

குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது கேட்ராக்ட் ஆகும். ஆக கண் புரை எனப்படும் கேட்ராக்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்.

பார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். பார்வை இழப்பிற்கான முழு முதற் காரணமாக இருப்பது கண் புரை என வழங்கப்படும் முழுமயான குணப்படுத்தக்கூடிய கேட்ராக்ட் நோய் ஆகும்.

கேட்ராக்ட் என்றால் என்ன?

கேட்ராக்ட் என்பது லத்தீன் வார்த்தை. கேட்ராக்ட் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். இங்கு நீர்வீழ்ச்சியினூடே ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தைப் போன்ற பார்வைக் கோளாறைக் குறிப்பிடுகிறது.

கேட்ராக்ட் என்பது வயோதிகம் காரணமாகவோ, பரம்பரை, விபத்துகள், நீரிழிவு நோய் போன்ற பல காரணங்களால் கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் சக்தியை இழப்பதினால் வரக்கூடிய தன்மை. இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் படர்ந்தது போன்ற சூழ்நிலையில் பார்வை தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து முழு பார்வை இழப்பிற்கும் காரணமாகிறது. இந்த நிலையே கேட்ராக்ட் எனப்படும்.

கேட்ராக்ட் என்பது பொதுவாக வயோதிகர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னையா? அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?

கேட்ராக்ட் பொதுவாக வயோதிகர்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னை என்றாலும் எல்லா வயதினர்களையும் பாதிக்கக்கூடிய கண் சார்ந்த ஒரு பிரச்னை ஆகும். குறிப்பாக,

சூரிய ஒளியிலிருந்து அதிகமாக வெளிப்படக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பணியாற்றுபவர்களுக்கும்,

 நீரிழிவு நோய் போன்ற காரணத்தினாலும்,

 கண்களில் ஏதேனும் நோய் தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,

 பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும்

 நாம் பிறப்பதற்கு முன்பே நமது தாய்க்குப் பிரசவ காலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும்,

 நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும்

 கிட்டப்பார்வை கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும்

 கண்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும்

 கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதாவது இருந்தாலும்

 புகைப்பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கும் கண்புரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

 மேலும் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்ராக்ட் உருவாகலாம்.

 புரோட்டின், வைட்டமின்கள் மேலும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக் குறைபாடு இருந்தாலும் கேட்ராக்ட் உருவாகலாம்.

கேட்ராக்ட்டின் அறிகுறிகள்:

ஒவ்வொருவரும் தமக்கு கேட்ராக்ட் இருக்கும்போது வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனாலும் கேட்ராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாக கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவகளை உணர்வது வழக்கம்.

 பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

 வர்ணங்களைப் பிரித்தறிவதில் சிரமம் மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

 சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.

 தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.

 பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

 அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.

 படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமப்படுவது. இந்நிலை பொதுவாக இரவில் சற்று அதிகமாக இருக்கலாம்.

 வெளிச்சத்தைச் சுற்றி வானவில் தெரிவது போல குறிப்பாக வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம். வர்ணங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.

கேட்ராக்ட் ஆபரேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது?

இந்தக் கேள்விக்கு சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மிகவும் பொறுமையாக அழகாக விளக்கம் தந்தார்.

தற்போது பேக்கோ எமல்ஸிபிகேஷன் என்ற புதிய முறையில் கேட்ராகக்ட் ஆபரேஷன் நடபெறுகிறது.

இந்த புதிய முறை நோயாளியின் கண்ணில் உள்ள இயற்கயான லென்ஸை அகற்றுவதற்கு, முன்பு போல 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை காயம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் நோயாளியின் கண்ணுக்குள் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள ஒரு ஊசி செலுத்தப்பட்டு ஊசியுடன் இணைந்த ஒரு புதிய உபகரணத்தின் (பேக்கோ எமல்சிஃபயர்) மூலமாக கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் சிறுசிறு துகள்களாக சிதைக்கப்பட்டு உறிஞ்சி வெளியேற்றப்பட்ட. பின்னர் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள துளை வழியாக செலுத்தக்கூடிய, மடித்து உள்ளே வைக்கக்கூடிய செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டது.

இந்த முறையில் நோயாளி மருத்துவமணையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்ட. மேலும் ஆபரேஷனின்போது தையல் போடுவதும் தவிர்க்கப்பட்டது. காயம் ஆறுவதற்கு அதிகபட்சம் ஒரு வார காலமே போதுமான. ஒரு வார காலத்திற்குள்ளாகவே நடைமுறை வாழ்ககைக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் திரும்ப முடிகிறது.

கேட்ராக்ட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பார்வை பெற முடியுமா?

புரை உரித்தல் எனப்படும் கேட்ராக்ட் ஆபரேஷன் மூலமாக மீண்டும் பார்வை பெற முடியும்.

கேட்ராக்ட் ஆபரேஷன் செய்த பிறகு எப்போது மீண்டும் பார்வை கிடைக்கும்?

கேட்ராக்ட் ஆபரேஷனப் பொறுத்தமட்டில் ஆபரேஷன் செய்தவுடனேயே மீண்டும் தெளிவான பார்வை கிடைக்கும்.

ஒருவர் கேட்ராக்ட் ஆபரேஷன் எப்போது செய்து கொள்ளலாம்?

கேட்ராக்ட் ஆபரேஷன் என்பது பொதுவாக நோயாளியின் விருப்பத்திற்கிணங்கவே செய்யப்படுகிறது. மருத்துவர்களும் நோயாளியின் கண் புரை முற்றிய பிறகு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்கிறார்கள். இங்கே நோயாளியின் விருப்பம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

உதாரணமாக நடைமுறை வாழ்க்கையில் அன்றாட வேலைகைளச் செய்வதற்கு கூட சிரமப்படுகின்ற வகையில் பார்வை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ளலாம். இது குறித்து உங்கள் கண் மருத்துவரின் நிறைவான ஆலோசனையப் பெற்றுக்கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

கண் புரை குறித்து பல தவறான ஊகங்களும் உலவி வருகின்றனது. அவற்றைப் பற்றியும் உண்மை நிலவரத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் சிறந்தது.

வைட்டமின் 'சி' மற்றும் வைட்டமின் 'இது' எடுத்துக் கொண்டால் கேட்ராக்ட் வருவதைத் தடுக்கலாம். (சரிஃதவறு)

சில ஆராய்ச்சி நிறுவனங்கள் வைட்டமின்களுக்கும் கேட்ராக்ட்டுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. சில ஆய்வுகள் வைட்டமின் 'இ' மற்றும் 'சி' எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு கேட்ராக்ட்டின் தாக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளதாகச் சொன்னாலும், ஒரு நிறைவான தீர்வு கிடைத்த பிறகே செயல்படுவது நல்ல.து

மேலும் வைட்டமின் 'இ' மற்றும் 'சி' அதிகமாக எடுத்துக்கொள்வது பல்வேறு பக்க விளைவுகைளை ஏற்படுத்தும். எனவே, அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை எடுத்துக் கொள்வது தவறு.

ஆஸ்பிரன் மருந்துகளை எடுத்துக்கொண்டால் கேட்ராக்ட் வருவதைத் தடுக்கலாம். (சரிஃதவறு)

ஆஸ்பிரன் மருந்துகளை எடுத்துக்கொண்டால் கேட்ராக்ட் வருவதைத் தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் ஆஸ்பிரன் மருந்துகளை அதிகமாக எடுத்க்கொள்வது பல்வேறு பக்க விளவுகளை ஏற்படுத்தும். எனவே, அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை எடுத்துக்கொள்வது தவறு.

உங்களுக்கு கேட்ராக்ட் என்று டாக்டர் தீர்மானித்தவுடன் ஆபரேஷன் செய்து கொள்வது நல்லது. (சரிஃதவறு)

பொதுவாக கேட்ராக்ட் கண்டறியப்பட்டவுடன் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் பட்சத்திலும், உங்களுடய வேலையில் அல்லது தொழிலில் கண் பார்வை காரணமாக சரியாக கவனம் செலுத்தப்பட முடியாத பட்சத்திலும், உங்களுடய பொழுபோக்கு மற்றும் மகிழ்ச்சியான நேரங்களில் கண் பார்வை காரணமாக சிரமம் ஏற்படக்கூடிய பட்சத்திலும் ஆபரேஷன் செய்து கொள்வது நல்லது.

லேசர் சிகிச்சை மூலம் கேட்ராக்ட்ட எளிதாக குணப்படுத்தலாம். (சரி ஃதவறு)

பொதுவாக கேட்ராக்ட் ஆபரேஷனின் போது பாதிக்கப்பட்ட இயற்கயான லென்ஸ் ஆபரேஷன் மூலம் அகற்றிய பின்னர் செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. லேசர் மூலம் அகற்றுவது தற்போது பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளது. மேலும் தற்போது வழக்கில் உள்ள கேட்ராக்ட் ஆபரேஷன் மூலம் கிடக்கும் தீர்வு, தற்போதய முறைக்குத் தேவைப்படும் நேரம் போன்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பரீட்சார்த்த நிலையிலிருக்கும் லேசர் முறையினால் குறிப்பிடத்தக்க முன்னேற்றமோ குறிப்பிடத்தக்க பயனோ ஏதும் இல்ல. இருப்பினும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றனது.

அப்படியானால் கேட்ராக்ட் ஆபரேஷனுக்கும் லேசருக்கும் தொடர்பு கிடையாதா?

கேட்ராக்ட் ஆபரேஷனின் போது இயற்கை லென்ஸின் பின்புற மென்தோல் தவிர்த்து மற்ற பகுதிகள் நீக்கப்பட்டு, பின்புற மென்தோலில் செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிற.து இருப்பினும் செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டுள்ள படலத்தில் ஒளி ஊடுருவும் தன்மை குறைவாக இருக்கலாம். இந்நிலையில் தெளிவான பார்வை கிடைக்காது. எனவே, லேசர் கற்றைகளைச் செலுத்தி ஒளி ஊடுருவும் தன்மை குறைவாக உள்ள படலத்தில் துளையிட வேண்டிய அவசியம் நேரிடலாம். இம்முறையில் யாக் லேசர் பயன்படுத்தப்படுகிறது.

கேட்ராக்ட்டை கண் சொட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். (சரி ஃ தவறு)

கேட்ராக்ட் பிரச்னைக்குத் தீர்வு ஆபரேஷன் மட்டுமே. மருந்துகள் மூலம் குணப்படுத்துவது இயலாத காரியம்.

கேட்ராக்ட் சர்ஜரி மிகவும் ஆபத்தானது. (சரி ஃ தவறு)

கேட்ராக்ட் சர்ஜரி மிகவும் எளிமையான மிக அதிக அளவில் வெற்றியளிக்கக்கூடிய ஆபரேஷன் ஆகும்.

கேட்ராக்ட் ஆபரேஷன் முடிந்த பிறகு குணமடைய சில மாதங்கள் ஆகலாம். (சரி ஃ தவறு)

பொதுவாக சாதாரணமாக கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் சில நாட்களில் நடைமுறை வாழ்க்கையைத் தொடரலாம். ஒரு வேளை கேட்ராக்ட் ஆபரேஷனுடன் மற்ற கண் ஆபரேஷன்களும் சேர்த்து செய்யப்படும்பொழுது நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு கால தாமதம் ஏற்படலாம்.

கண்களில் ஏன் கேட்ராக்ட் உருவாகிறது?

கேட்ராக்ட் என்பது வயோதிகத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மாற்றங்களால் வருவதாகும். நம் வாழ்க்கை முழுவதும் நம்முடைய உடம்பில் உள்ள பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்தப் புதிய செல்களில் புரதச் சத்தின் தன்மை மாறுவதால் ஒளி ஊடுருவும் தன்மை தடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தெளிவற்ற பார்வை ஏற்படுகிறது.

கேட்ராக்ட்டில் பல்வேறு வகைகள் உள்ளனவா?

ஆம். வயோதிகம் சார்ந்தவை _ 95% வயோதிகம் காரணமாகவே பொதுவாக 40 வயதிற்குப் பின்னர் புரை நோய் உருவாகிறது.

பிறவியிலேயே ஏற்படுவது _ பிறக்கும் பொழுதே ஏற்படுவது பொதுவாக கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்று மற்றும் வீக்கம் காரணமாகவோ சிலருக்கு பரம்பரை மூலக்கூறியல் மற்றும் மரபியல் காரணமாகவோ புரை உருவாகலாம்.

விபத்துக்கள் காரணமாக ஏற்படுவது _ கண்ணில் உள்ள லென்ஸ் கடினமாக தாக்குதல்களால் அடிபடுவது, வெட்டுப்படுவது, துளையிடப்படுவது, தாங்கமுடியாத உஷ்ண வெப்பத்தினால் அல்லது இரசாயனப் பொருட்களின் தாக்கத்தினால் புரை உருவாகலாம்.

இரண்டாம் நிலை _ சில மருந்துகளின் ஒவ்வாமை, கண் நோய்கள், கண் தொற்று நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் காரணமாக புரை உருவாகலாம். சிலருக்கு கேட்ராக்ட் ஆபரேஷனுக்குப் பின்னர் பின்புற லென்ஸின் மென் படலம் அதிகமாக ஒளி ஊடுருவும் தன்மையற்றதாக இருப்பதாலும் இவ்வகை கேட்ராக்ட் உருவாகலாம்.

நமக்கு கேட்ராக்ட் இருப்பதை டாக்டர் எவ்வாறு அடையாளம் காண்கிறார்?

உங்களுக்கு கேட்ராக்ட் இருப்பதைக் கண்டறிய டாக்டருக்கு பின்வரும் விவரங்கள் தேவைப்படலாம்.

 உங்களுடய பொதுவான மருத்துவ விவரங்கள்

 உங்கள் கண் பிரச்னைகள் மற்றும் அறிகுறிகள் பற்றிய முழுமையான விவரங்கள்

பார்வைக் துகளை சோதனை விவரம்

 பக்கவாட்டு பார்வை சோதன விவரம்

 கண்களை அசைக்கும் முறை குறித்த சோதன விவரம்

 கண் நீர் அழுத்த விவரம்

 ஸ்லிட் லேம்ப் எனப்படும் உபகரணத்தின் மூலம் பரிசோதனசெய்து, உங்களுக்கு கேட்ராக்ட் இருக்குமேயானால் அதன் அடர்த்தி பற்றிய விவரம்

 கண்களின் பாப்பா விரிவதற்காக சொட்டு மருந்திட்டு கண்ணின் உட்புறப் பகுதிகள் மற்றும் பார்வை நரம்பினை பரிசோதனை செய்து கிடைக்கும் விவரம்.

 உங்களது கண்கள் வெளிச்சத்தை எந்த அளவிற்குத் தாங்குகிறது என்பது குறித்த பரிசோதனைகளின் விவரம்.

ஆகிய விவரங்களைக் கொண்டு கேட்ராக்ட் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு ஏதாவது பின் விளைவுகள் வருமா?

பொதுவாக, கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க பின் விளைவுகள் ஏதும் வருவது கிடையாது. இருப்பினும் சிலருடைய மற்ற உடல் நலம் சார்ந்த பிரச்னைகளின் காரணமாக சிறு விளைவுகள் வரலாம். இந்த அனுபவம் அதிகபட்சம் 5% பேருக்கு மட்டுமே ஏற்படுவதுண்டு. இவை குறித்து உங்கள் கண் மருத்துவருடன் நீங்கள் ஆபரேஷனுக்கு முன்பே பேசித் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பிரச்னைகளை மூன்று பிரிவுகளில் குறிப்பிடலாம்.

1. ஆபரேஷன் நடபெறும் போது வரக்கூடிய பிரச்னைகள்:

கண் ஆபரேஷன் நடைபெறும் போது இரத்தம் வெளியேறுவது. இது பொதுவாக 300 நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே இவ்வாறு நேரிடுகிறது. மேலும் சுமார் 3%சதவீதம் நோயாளிகளுக்கு கண்ணுள்ளே இருக்கக்கூடிய விட்ரியஸ் ஹமர் என்ற திரவம் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பெரிய விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை.

2. ஆபரேஷனுக்குப் பின் வரக்கூடிய பிரச்னைகள்:

இவை பொதுவாக ஆபரேஷன் நடைபெற்றவுடன் உடனடியாக வரக்கூடிய பிரச்னைகள் எனப்படும். காயத்தில் இருந்து கசிவுகள், இரத்த ஒழுக்கு மற்றும் நோய்த் தொற்று இவை உடனடியாக கவனிக்கப்பட்டு சரிசெய்யப்படுகின்றது.

3. ஆபரேஷன் காயம் ஆறிய பின்னர் வரக்கூடிய பிரச்னைகள்:

நூறில் ஒருவருக்கு விழித்திரை பிரிதல் என்னும் பிரச்னை வரலாம். இவை ஆபரேஷன் மூலம் சரிசெய்யப்படுகிறது. கண்ணின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள செயற்கை லென்ஸ் காரணமாக முன்பகுதியான கார்னியாவில் வீக்கம் ஏற்படுதல், மேலும் விழித்திரையில் வீக்கம் ஏற்படவும் கூடும். மிக அதிகமான அளவில் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவருக்கும் குறைவாக நோய்த் தொற்று அல்லது இரத்தப் போக்கு காரணமாக ஏற்படக்கூடிய விளவுகள். ஆனாலும் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டதால் வரக்கூடிய விளைவுகள் மிகவும் அரிதே.

கேட்ராக்ட் ஆபரேஷனின் போது இயற்கையான லென்ஸின் பின்புற மென் தோல் நீக்கப்படாமல் அவற்றின் மீது செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிற.து பின்புற மென்தோல் கடினமாக இருந்தால் ஒளிக்கதிர் விழித்திரையில் குவிவை தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பார்வை தெளிவற்றதாக இருக்கும். இந்த நிலை இரண்டாம் நிலை கேட்ராக்ட் (Secondary Cataract) எனப்படும். உங்கள் கண் மருத்துவர் லேசர் சிகிச்சை மூலம் பின்புற மென் தோலில் ஒரு துளையிட்டு ஒளிக்கதிர் செல்வதற்கு வழி ஏற்படுத்தி பார்வை தெளிவானதாக இருக்க உதவி செய்வார்.

சிறு துளையிட்டு எமல்சிபிகேஷன் எனப்படும் கேட்ராக்ட் சர்ஜரி (Phacoemulsification with smaller incision) செய்யும்போது விரைவில் குணமாவதற்கும், பின் விளைவுகள் ஏதுமின்றி பாரவையை மீட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது. இது கண் மருத்துவ உலகில் சமீபத்திய உயர் மருத்வ தொழில் நுட்பம் மற்றும் அதிவேக முன்னேற்றத்தின் பயன் ஆகும். இந்த சிகிச்சையை சங்கர நேத்ராலயாவின் சிறப்பு மருத்வர்கள் குழு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்கள்.

அ.போ. இருங்கோவேள்

NANDRI: KUMUDAM HEALTH.

மேலும் படிக்க... Read more...

>> Sunday, March 4, 2007

பேயா?

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் பிஞ்சு வயதில் திணிக்கப்பட்ட மூடத்தனத் தின் கூரிய கொம்பு மட்டும் வளர்ந்து கொண்டே வருகிறது.

பிஞ்சு வயதில் அடம் பிடிக்கும் பிள்ளைக்குச் சோறூட்டுவதற்காக, அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு `அஞ்சு கண்ணன் வருவான், பேய் வரும், பூதம் வரும்’ என்று சொல்லும் வார்த்தைகள் குழந்தைகளின் நெஞ்சில் ஆழப் பதிந்து பெரியவர்களாக ஆன நிலையிலும் கூட அது ஆலமரமாக வளர்ந்து வருகிறது.

தொலைப்பேசி - அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு! மக்கள் வாழ்வில் மகத்தான `ரசாயன’ மாற் றத்தை அது உருவாக ஆகியிருக்கிறது என்றால், அது மிகையல்ல!

ஆனால், அந்தத் தொலைப் பேசியை எவ்வளவுக் கேடு கெட்ட சமாச்சாரங்களுக்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் குணக் கேடர்கள்.பொள்ளாச்சி வட்டாரத்தில் ஒரு பீதியைக் கிளப்பி விட்டுள்ளனராம்.

கைப்பேசியில் ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டால் `பேய்’ பேசுகிறது என்று கிளப்பி விட்டார்கள். அதன்படி தொடர்பு கொண்டால் எதிர்முனையில் பெண் குரலில் மலையாளம் பேசப்படுகிறது. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஒரே பதில்தான்!

காரணம் புரிகிறதா? சில குணக்கேடர்கள் குறிப்பிட்ட எண்ணில் ஒலிப்பதிவு செய்து வைத்து இந்த விஷம `வேடிக்கை களைச்’ செய்து இருக்கின்றனர்.
(இது சிலருக்குப் பொழுது போக்குக் கூட).

இதனை இதுவரை தொலைப் பேசித் துறை கண்டுபிடிக்காதது - ஏன்? என்ற கேள்வி அந்தப் பகுதியில் உள்ள விழிப்புணர்வு உள்ளவர்கள் வினா எழுப்புகின்றனர்.

திடீர் திடீர் என்று இதுபோன்ற கேவலமான மூடத்தனங்களை பக்தி வியாபாரிகள் கிளப்பி விட்டு அடிவேர் அழுகிப் போன பக்திக்கு உயிர் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்கின்றனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.

பிள்ளையார் பால் குடித்தது என்று ஒரு நாள் புரளி; ஆவியுடன் பேசும் அமுதா என்ற `கரடி’ இன்னொரு புறம்; பிறந்த வீட்டுக்கு ஆபத்து, சகோதரிகளுக்குப் பச்சைப் புடைவை வாங்கிக்கொடுங்கள் என்று சரடு மற்றொருபுறம்; காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குள் எருமை மாடு புகுந்து விட்டது; வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள் என்ற புழுதி இன்னொரு பக்கம்!

2007 ஆம் ஆண்டில்தான் நாம் வாழுகிறோமோ? இதைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு, கருத்துத் தெரிவிப்பதற்குத் திராவிடர் கழகத்தை விட்டால் நாதியுண்டா? எது எதற்கெல்லாமோ நீட்டி முழங்குகிறார்களே - மக்களை மூடமாக் கும் இந்தக் கொடிய `நஞ்சு’ பற்றி யாருக்கும் அக்கறை கிடையாதா? ஏடு நடத்துவோரின் கடமைதான் என்ன?

இதுபோன்ற அக்கப் போர் செய்திகளை கை வைத்து, மூக்கு வைத்து, இறக்கைக் கட்டி பறக்க விடுவதுதானா?

மக்களிடம் விஞ்ஞான மனப் பான்மையைப் பரப்பவேண்டும் என்று அரசமைப்புச் சட்டக் காகிதத்தில் எழுதி வைத்தால் போதுமா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

படித்தவன் பாவம் செய்தால் அய்யோ என்று போவான் என்பதெல்லாம் ஏமாற்று வேலை! நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் அவ்வளவுதான் என்றாரே தந்தை பெரியார், அதுதான் உண்மை - நூற்றுக்கு நூறு உண்மை!தந்தை பெரியார் கணிப்பது பொய்ப்பதில்லை!

- மயிலாடன்

இக்கட்டுரை 'விடுதலை'4.03.07 தினசரியில் பிரசுரமானது.

மேலும் படிக்க... Read more...

அம்பலமானது கோக் பயங்கரம் அதிரடி ஆய்வு

>> Saturday, March 3, 2007

அம்பலமானது கோக் பயங்கரம் அதிரடி ஆய்வு
- பவானந்தி
மென்டோஸ் - கோக் ராக்கெட்! குடிச்சா, மவனே நாக்அவுட்!!
“கொஞ்ச நாளாவே கோகோ கோலாவைப் பத்தி எல்லாரும் சந்தேகம் கிளப்புறாங்க. அது உண்மையான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? ஏன்னா என் குடும்ப ஆரோக்கியமும் எனக்கு முக்கியமாச்சே” என்று கோகோ கோலா தயாரிப்பு நிறுவனத்துக்குள்ளாற புகுந்து தலையில ‘சயின்டிஸ்ட்’ குல்லா, கோட் எல்லாம் போட்டுக்கிட்டு ‘கோகோ-கோலா’வால எந்தப் பாதிப்பும் இல்லைனு கமிஷன் ரிப்போர்ட் குடுக்கிறாங்க வேதியியல் ஆராய்ச்சியாளர் ராதிகா. ‘குடும்பத்தோட குடிங்க; குஜாலா இருங்க’ன்னு அட்வைஸ் வேற!

என்னாங்கடா, இதுவரைய பொண்ணுகளக் கவுக்கிறதுக்கு, மலையில் இருந்து தலைகீழ தொங்கி சாகசம் பண்றதுக்கு இப்படித்தானே ‘கோக்’ விளம்பரம் வரும், இப்ப என்னடான்னா “ஆரோக்கியமானது; சுகாதாரமானது” என்று ஆராய்ச்சி முடிவெல்லாம் தர்றானுங்களேன்னு பாத்தேன்.

அங்கங்க நடந்த போராட்டங்கள்ல மக்கள் தெளிவடைஞ்சிட்டாங்கன்னு ஆட்டம் கண்டு போயிருக்கிறது ‘கோக்’ கம்பெனி. ‘இங்க தடை பண்ணா, அமெரிக்காவில போய் குடிப்பேன்’னு ஷாரூக்கான் சொன்னாலும், அமெரிக்காவில் போய்க் குடிக்க எத்தனை பேரைத்தான் தேடும் கோக் கம்பெனி! சரி, இந்தப் பயப் புள்ளைகளைக் கவுக்க என்னாடா வழின்னு பாத்து ‘சித்தி’யைப் புடிச்சு அமுக்கிட்டானுக. ஆனா ‘உங்க பப்பு வேகலைப்பு’ குடும்ப ஆரோக்கியத்தை விட, குடும்ப பொருளாதாரம் முக்கியம்னு லட்சக் கணக்கில வாங்கிக்கிட்ட விளம்பரம் குடுக்கிறாங்கன்ன இருக்கிற பேரும் ரிப்பேரு ஆயிடுச்சு.

இருக்கிற தலைவலி பத்தாதுன்னு, இன்னொரு பக்கம் காதுல கேட்டுச்சு ஒரு தகவல். இந்த பூச்சி மருந்துக் கம்பெனிக் காரவுகள்லாம் சேந்து, “பெப்சி, கோக்னால எங்க யாவாரம் படுத்துக்கிச்சு, எல்லாரும் பொட்டாசியம் சல்பேட்டுக்கு பதிலா பெப்சியையும், நைட்ரேட்டுக்குப் பதிலா கோக்கையும் போட ஆரம்பிச்சிட்டாங்க,

அதனால அதைத் தடை பண்ணணும்”னு கேட்டு கேஸ் குடுத்திருக்காகன்னு நம்ம பயக பூச்சி கிளப்புறானுக.‘ஹார்பிக், ஸ்பார்கிள்’னு கக்கூசு கழுவுற திரவத்துக்கு பதிலா, ‘கோக்’ நல்லாருக்குன்னு துப்புரவுத் தொழிலாளர்களெல்லாம் அதுகளைக் கையில புடிச்சுகிட்டு போயிடறாங்களாம்.

இப்படி எல்லாரும் ரவுண்டு கட்டி அடிக்கிற நேரத்தில், இண்டர்-நெட்டில் வேற புதுசா ஒரு ஈமெயிலோ எறும்பு மெயிலோ வந்து கிலி கௌப்பிக்கிட்டிருக்காம்.

“மென்டாஸ் மிட்டாயைத் தின்றுவிட்டு, கோகோகோலா குடித்த பிரேசில் நாட்டு சிறுவன் உயிரிழந்தான். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு விபத்து பிரேசிலில் நடந்திருக்கிறது. எச்சரிக்கை”னு போட்டு, அதுக்குக் கீழே சில படங்களும் வந்தது.

“ஒன்றரை லிட்டர் கோக் பாட்டில், நாலஞ்சு மென்டா ஸ் மிட்டாய் எடுத்துக்கிட்டான். கோக் புட்டியைத் திறந்து, ஒரு குழாயில வரிசையா அடுக்கின மென்டாஸ் மிட்டாயை உள்ள போட்டான். பொங்குச்சு கோக் ஆறடி உசரத்துக்கு” ஆகா மிரட்டிப்புட்டாங்களே!

இது உண்மையா, என்னான்னு பார்க்கிறதுக்காக, நாங்களும் வாங்குனோம், கோக்கும் மெண்டாஸும்.
நம்ம மக்களையெல்லாம் கூப்பிட்டு வச்சு, செஞ்சு பார்த்தோம். ராதிகா மட்டும்தான் ஆராய்ச்சியாளரா என்ன, நம்மாளுகளும் ரெடி. ஒரு குழாயை எடுத்தோம். 4, 5 மென்டாஸ் மிட்டாயை உள்ள போட்டு அடியில அடைச்சுகிட்டோம். கோக் புட்டியைத் திறந்தோம். ‘புஸ்’ஸுனு கேஸ் வெளிய போச்சு. குழாயை புட்டி வாய்க்கு நேரா வச்சு, அடைச்சிருந்த கையை எடுத்தோம். மெண்டாஸ் உள்ள போன நொடி, ஆறடி உசரத்துக்கும் மேல பொங்கி வந்து முக்கால் பாட்டில் காலியாயிடுச்சு. ஆகா, இது வவுத்துக்குள்ள போனா ஏன் ராசா வினை இருக்காது.

மென்டாஸ், கோக் ரெண்டுமே சாப்பிடுற விசயம். அதுலயும், சாப்பாட்டுக்கு அப்புறம் நம்மாளுக வாயில போடுற விசயம். இது ஆபத்திலயும் ஆபத்தாச்சே!

சரி, இதப்பத்தி வேறென்னடா போட்டிருக்காங்கன்னு இண்டர்நெட்டில் பார்த்தோம். அடேங்கப்பா,PSLV ராக்கெட் பார்த்திருக்கோம், சிவகாசி ராக்கெட் பார்த்திருக்கோம். நம்ம ஆந்திரா ‘ரகு’ செஞ்ச ராக்கெட்டையும் பார்த்திருக்-கோம். ‘கோக்’ பாட்டில் ராக்கெட் பார்த்திருக்கோமா? விட்டானய்யா வெளிநாட்டில!

அதே மென்டாஸ், அதே கோக் பாட்டில் (செய்முறை தனியா இருக்குப்பா!) செல்லோ டேப்பில வரிசையா 4 மென்டாஸ் வச்சு ஒட்டி, உள்ள செருகி, மூடியப் போட்டு, தலைகீழ்க் கவுத்து 2 குலுக்கு குலுக்கி, மூடி தெறிக்கிற மாதிரி தலைகீழ் வச்சு ஒரு அடி அடிச்சான், பாருங்க, பறந்தது பாட்டில் பல அடி தூரத்துக்கு. சரின்னு அதையும் செஞ்சு பார்த்தோம். பாத்தப்பு... பக்கத்தில போஸ்ட் கம்பில உள்ள ட்யூப்லைட்டை காலி பண்ணிடப் போகுது.
(மொதல் தடவ செஞ்சி போட்டோ எடுக்கக் கூட முடியல, அந்த அளவுக்கு வேகமா பறந்துடுச்சு. இரண்டாவது தடவ போனத போட்டோ புடுச்சுட்டோம்ல)

ஏற்கெனவே பாட்டிலுக்குள்ள கேஸ் அடைச்சுத்தான் அனுப்புறாங்க. அந்த வாயு, கோக்கில கரைஞ்சு சேர்ந்துக்குது. மென்டோஸைப் போட்ட மறு நொடி, இரண்டுக்கும் ஏற்படுற வேதி வினையில வாயு பெருகி, வெளியேற வழி தேடுது. மூடி உடைஞ்சு வழி கிடைச்ச உடனே பிச்சுக்கிட்டு புறப்பட்டுடுது. ராக்கெட் பறக்கிற அதே நியூட்டன் விதி.

இது வெறும் சாதாரண ஆய்வுதான். குளிர்பான புட்டியில் நிரப்பப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாவதனாலும், அது அடைக்கப்பட்டு வெளியேற வழியில்லாததனாலும் ஏற்படும் விளைவுதான்’னு அறி-வாளிப் பயக சில பேரு பதிவு போட்டிருக்கானுக இணையத்தில! இங்கேயும்தான் கோக்கில `பூச்சி மருந்து இல்லை’னு கோக் காசு குடுத்து சர்டிபிகேட் வாங்குது.

சரிப்பா, நம்ம வவுத்துக்குள்ள போனா என்னாகும்? குடிச்சுப் பாருங்க. வெளியேற வழி இரண்டுதான். மேல ஒன்னு, கீழ ஒன்னு. சின்னப் பையன் குடிச்சான். தாங்க முடியல. அடைச்சுக்கிச்சு. ஆக்ஸிஜன் நிரம்ப வேண்டிய இடங்கள்ல கார்பன்-டை-ஆக்ஸைடு நிரம்பினா என்னப்பா ஆகும்? உசுரு நின்னுதான் போகும். அந்த ஆராய்ச்சி செய்ய நாங்க தயாரில்லை. குடும்ப ஆரோக்கியத்துக்காக, நம்ம நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களை வேணும்னா செய்யச் சொல்லிப் பார்ப்போம். என்ன நான் சொல்றது நெசந்தானுங்களே...

கோக் ராக்கெட் (Coke Rocket)
செய்முறை:
தேவை: ஒன்றரை லிட்டர் கோக் புட்டி, 4 மென்டாஸ் மிட்டாய், ஒரு செல்லோ டேப், கொஞ்சம் எச்சரிக்கை.
1. 4 மென்டாஸை வரிசையா அடுக்கி ஒரு செல்லோ டேப்புல ஒட்டி கொஞ்சம் டேப்பை வெளியில விட்டுக்குங்க.
2. கோக் புட்டியத் திறந்து, கோகோ கோலாவுக் குள்ள பட்டுடாம, பவிசா 4 மென்டாஸ் ஒட்டினதையும் உள்ளவிட்டு, மூடியைவச்சு மூடிடுங்க.
3. அதுக்கப்புறம் தலைகீழா கவுத்து புடிங்க, ரெண்டே ரெண்டு தபா குலுக்குங்க. மூடி தெறிக்கிற மாதிரி தலைகீழா வச்சு ரோட்டில அடிங்க. பறக்கும் பாருங்க நூறு அடிக்கு! இதத்தானப்பா குடிக்கி றோம்கிறாங்க.

கோக் பவுன்டெய்ன்
(Coke Fountain)
செய்முறை:
தேவை: ஒன்றரை லிட்டர் கோக் புட்டி, 5 மென்டாஸ் மிட்டாய்
1. குழயில மெண்டாஸைப் போட்டு அடியில அடைச்சுக்குங்க.
2. கோக் புட்டியைத் திறந்து வைச்சுருங்க.
3. குழாயை, கோக் வாய்க்கு நேரா வச்சு அடைச்சு இருக்கிற கையை எடுத்துடுங்க.
“கோக் கொப்புளிக்கும் கொண்டாட்டமாம்! கொண்டாட்டம்!

பெப்சி சளைத்ததல்ல!
தொடர் சர்ச்சைகளெல்லாம் கோகோ கோலாவுக்கு இணையாக பெப்சியையும் குறி வைத்தாலும், கோக்-தான் முனைப்பாக நின்று எதிர்பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி என்ற பார்ப்பனப் பெண்மணியை தனது நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியிருக்கும் பெப்சி, ‘இந்தியரின் தலைமையில் பெப்சி’ என்று தேச பக்திப் பானமாகக் காட்டும் மறைமுக முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கோக்கின் தீமைகள் சர்வ சுத்தமாக பெப்சிக்கும் பொருந்தும்.

“கோக் ஒரு திறந்த புத்தகம். யாரு விரும்பினாலும் எங்க தயாரிப்பை வந்து பாருங்க”ன்னு விளம்பரம் தர்ற கோக் நிறுவனம், தன்னுடைய தயாரிப்பு ரகசியத்தை வெளியிட மாட்டேங்குது. அந்த பார்முலா தெரிஞ்சவங்க உலகத்தில வெகு சிலர்தானாம். அவங்க ஒரே நேரத்தில விமானத்தில பறக்க விடாதாம் கோக் நிறுவனம். எல்லாரும் செத்துப் போயிட்டா. அதனால பாதுகாப்பா வச்சிருப்பாங்களாம் ரகசியத்தை. அதையும் கொஞ்சம் திறந்து காட்டுங்க.
COURTSEY: "UNMAI"

மேலும் படிக்க... Read more...

DON'T EAT MENTOS WHILE drinking COCA COLA .

FRIENDS.......!
DON'T EAT MENTOS WHILE drinking COCA COLA . Be carefulLast week a little boy died in Brazil after eating MENTOS and drinking COCA COLA together. One year before the same accident happened with another boy in Brazil . Please check the experiment that has been done by mixing Coca Cola with MENTOS…….. Be careful with your Coke
Last week a little boy died in Brazil after eating MENTOS and drinking COCA COLA together. One year before the same accident happened with another boy in Brazil . Please check the experiment that has been done by mixing Coca Cola with MENTOS…….. Be careful with your Coke

THANKS TO:Abdul Rahim
Singapore.
========================================
Water vs CokeWATER
#1. 75% of Americans are chronically dehydrated. (Likely applies to half the world population.)
#2. In 37% of Americans, the thirst mechanism is so weak that it is mistaken for hunger.
#3. Even MILD dehydration will slow down one's metabolism as 3%.
#4. One glass of water will shut down midnight hunger pangs for almost 100% of the dieters studied in a University of Washington study.
#5. Lack of water, the #1 trigger of daytime fatigue.
#6. Preliminary research indicates that 8-10 glasses of water a day could significantly ease back and joint pain for up to 80% of sufferers.
#7. A mere 2% drop in body water can trigger fuzzy short-term memory, trouble with basic math, and difficulty focusing on the computer screen or on a printed page.
#8. Drinking 5 glasses of water daily decreases the risk of colon cancer by 45%, plus it can slash the risk of breast cancer by 79%., and one is 50% less likely to develop bladder cancer. Are you drinking the amount of water you should drink every day?
COKE
#1. In many states the highway patrol carries two gallons of Coke in the trunk to remove blood from the highway after a car accident.
#2. You can put a T-bone steak in a bowl of Coke and it will be gone in two days.
#3. To clean a toilet: Pour a can of Coca-Cola into the toilet bowl and let the "real thing" sit for one hour, then flush clean. The citric acid in Coke removes stains from vitreous china.
#4. To remove rust spots from chrome car bumpers: Rub the bumper with a rumpled-up piece of Reynolds Wrap aluminum foil dipped in Coca-Cola.
#5. To clean corrosion from car battery terminals: Pour a can of Coca-Cola over the terminals to bubble away the corrosion.
#6. To loosen a rusted bolt: Apply a cloth soaked in Coca-Cola to the rusted bolt for several minutes.
#7. To bake a moist ham: Empty a can of Coca-Cola into the baking pan, wrap the ham in aluminum foil, and bake. Thirty minutes before ham is finished, remove the foil, allowing the drippings to mix with the Coke for a sumptuous brown gravy.
#8. To remove grease from clothes: Empty a can of Coke into the load of greasy clothes, add detergent, and run through a regular cycle. The Coca-Cola will help loosen grease stains. It will also clean road haze from your windshield.
For Your Information
#1. the active ingredient in Coke is phosphoric acid. It will dissolve a nail in about four days. Phosphoric acid also leaches calcium from bones and is a majorcontributor to the rising increase of osteoporosis.
#2. To carry Coca-Cola syrup (the concentrate) the commercial trucks must use a hazardous Material place cards reserved for highly corrosive materials.
#3. The distributors of Coke have been using it to clean engines of the trucks for about 20 years!Now the question is, would you like a glass of water? or Coke?
Thanks to : Syed Gani (Saudi Arabia)

மேலும் படிக்க... Read more...

தொடக்கம் - சிறு துளியாக.... சிறு முயற்ச்சியாக.

>> Friday, March 2, 2007

தொடக்கம் - சிறு துளியாக.... சிறு முயற்ச்சியாக.

''என்ன இது? சொட்டுச் சொட்டாய் சேர்ந்து மெல்லிய கோடாகச் செல்கிறோமே? பெரிய நதியாகப் பிரவாகிப்பது எப்போது?!'' என்று துவக்கத்தில் எந்த நதியாவது தயங்குகிறதா ...

ஆனால், மனிதன்தான் நானெல்லாம் சாதிக்க முடியுமா? என்று வாழ்வை மலைப்போடு பார்க்கிறான்.

தொடர்ந்து முன்னேறுவதலாயே, காண்பவர் கண்கள் விரிய, நம் கண்முன்னே எம்பிக் குதித்து வழிந்தோடுகிறது அந்த நதி.

அது சுயவிமர்சனத்தோடு அங்கேயே தேங்கி நிற்பதில்லை. துணிந்து காலடி எடுத்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.

''என் இலட்சியம் இந்த இடத்திலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதேயாகும்'' என ஓட்டமாய் ஓடும் நதி வேகமாய் முன்னேறிப் பாய்கையில், உடன் வருவது ஓடையா, சுனையா என்று பாகுபாடு பார்க்காமல் உடன் வரும் அனைவரையும் ஒன்றாக இணத்து; குதூகலத்துடன் வேகமாக அழைத்துச் செல்கிறது. சாதிக்கிறது.

நதிபோல் பாகுபாடு இல்லாமல் வாழத் தெரிந்தவருள் உற்சாகமும், குஷியும் நதி போல் பாயும்.

நதியைப் போல் வாழ்பவர். விதியைக் கூட எளிதாய் வளைத்து நெளித்து மாற்றிவிடுவார்.

நதி செல்லும் வழியில் பல தடைகள் வந்து செல்லும்போது,

''இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்தது;, மற்றவர்கள் செய்யும் சதி'' என்று புலம்பி மற்றவர் மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.

''ஐய்யோ! எவ்வளவு தடை நம் முன்னே இருக்கிறது. இது எப்போது நகர்ந்து செல்லும்'' என்று நொந்து, அந்தத் தடை, தானாக விலகும் வரை நின்று காத்திருக்காமல் தொடர்ந்து நிற்காமல் முன்னேறுவதிலேயேதான் ஒரே குறியாக இருக்கிறது

ஒரு தியாகி எவ்வாறு தான் செய்த செயலுக்காக பலனை எதிர்பார்ப்பதில்லையோ, அதே போன்று, தான் செல்லும் இடங்களயெல்லாம், கொழிக்கச் செய்தாலும் நதியான ''நம்மால்தான் அனைத்தும் நிகழ்கிறது'' என்று ஒருபோதும் அகம்பாவம் கொள்வதில்லை.

''இவ்வளவு கடினப்பட்டு, இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தோமே? அது இப்படி நம்மையே அடையாளம் தெரியாமல், காணாமல் போகச் செய்யும் கடலுக்குள் செல்வதற்காகவா?

இலட்சக்கணக்கானவர் என்னால் பயன்பெற்றனர். ஆனால் முடிவில் என் தனித்துவம் என்ற ஒன்றே இல்லாமல் போகிறதே!'' என்று கடலுக்குள் கலப்பதுபற்றி நினத்து, கண்கலங்கி நிற்பதில்லை. அதனால் தான் நதி, கடலாகிறது.

இப்படி வாழத் தெரிந்த தனி மனிதனே மக்கள் திலகமாகவோ, மகாத்மாவாகவோ, மகா ஞானியாகவோ மாறுவான்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP