**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இதய நோய்க்கு - ஆடு, மாடுகளின் உதவி

>> Friday, October 31, 2008

ஆடு, மாடுகள் என்று அலட்சியப்படுத்திட முடியாத நிலையைக் கால்நடைகள் இன்று பெற்றுள்ளன. ஆடுகளும் மாடுகளும் மனித குலத் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருப்பவை. அவற்றின் இறைச்சியும் பாலும் மனிதனுக்குத் தேவையான கொழுப்புச் சத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.

இன்றைக்கு, அவற்றின் பயன்பாடு இன்னும் ஒருபடி மேலே போய் உள்ளது. அவற்றின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் இதய வால்வுகள், மருத்துவத்தில் பெரும்பங்கை வகிக்கப் போகின்றன.

அதுவும் குழந்தைகளுக்கான இதய நோய்களின் சிகிச்சைக்குத் தேவைப்படும் வால்வுகள் இவற்றின் திசுக்களிலிருந்து தயாரிக்கலாம் என்கிற தொழில் நுட்பம், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவற்றின் விலை பெரிதும் குறையும். இப்போதைய விலையான இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து இனிமேல் 10ஆயிரம் ரூபாய்க்கே அவை கிடைக்கும்.

இதற்கான கண்டுபிடிப்பை கேரளக் கால்நடை வளர்ச்சி வாரியம், சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் நுட்ப நிலையத்தின் உதவியுடன் செய்து முடித்துள்ளது.

இந்தியாவில் இந்த வகையில் இதய மாற்று வால்வு தயாரிக்கும் நிலையம் இது மட்டுமே.

சிறார் மரணத்தில் 10 விழுக்காடு இதய நோயால் நிகழும் நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு ஏழை - எளிய மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.

தற்போது பன்றிகளின் இதய வால்வுகளிலிருந்து தயாரிக்கப்பட்டுப் பொருத்தப்படும் வால்வுகள் சிறார்களின் விசயத்தில் நன்கு செயல்படுவதில்லை. மூன்று முதல் 5 வருடங்கள் வரைதான் செயல்படுகின்றன. அதன் பின்னர் சுண்ணாம்புக் கறை படிந்து செயலிழந்து விடுகின்றன.

ஆனால் ஆடு, மாடு திசுக்களிலிருந்து செய்யப்படும் வால்வுகளில் இத்தகையக் குறைபாடுகள் இல்லை என்பது சிறப்பு.

**************************

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

நாக்கமுக்க--நாக்குமூக்கு-- நாக்குக்கு ஜிப்பு (zip) அழுவதா ? சிரிப்பதா?

>> Thursday, October 30, 2008


நாக்கை இரண்டாக அறுத்து ஜிப்பு வைத்து தைத்து வளரும் (அ)நாகரீகம்.
DOUBLE CLICK THE PICTURE
TO SEE LARGER.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

உசார். உசார், பன்றி கொழுப்பு கலந்த சாக்லெட் வகைகள்.

>> Wednesday, October 29, 2008

1 OCT 2007 க்ப்பிறகு கலாவதியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதாவது இப்பொழுது விற்பனைக்கு உள்ள அனைத்தும்.

All the below Masterfood Company Chocolate Products (Mars) are no longer Halal.

They started using Animal product rennet(pork) in it for products that have expiry date after 1 st of October 2007. 1 OCT 2007 க்ப்பிறகு கலாவதியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது இப்பொழுது விற்பனைக்கு உள்ள அனைத்தும்.


Bounty · Celebrations · Dove Chocolate · Flyte · Galaxy · Kudos (North America) · Lockets · M-Azing (North America) · Maltesers · M&M's · Mars Bar · Mars Delight · Milky Way · Minstrels (UK only) · Mars Planets (newly inroduced in UK) · Skittles · Snickers (The top-selling candy bar in the United States.

Known in the UK as Marathon until 1990.) · Starburst (Originally Opal Fruits in the UK .) · 3 Musketeers ( North America ) · Topic · Twix · Snicker's Marathon Energy Bar · AquaDrops


Check this article from BBC News http://news.%20.bbc.co.uk/%201/hi/business/%206653175.stm

And this from the Vegetarian Societyhttp://www.vegsoc.org/news/2007/mars.html ·

Please forward this message to your friends.

THANKS TO : http://munaskhan.spaces.live.com/Blog/cns!EE547136DF10B8CB!1440.entry

மேலும் படிக்க... Read more...

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?

>> Tuesday, October 28, 2008

கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், அதிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்?

அதனால்தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடு கையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன் படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்ற வற்றையும் போக்குகிறது.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றி ரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவை யல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது.
மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
*********************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

குண்டுவெடிப்பு பெண் சாமியார் (படங்கள் )

>> Monday, October 27, 2008

திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்

மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதிகளின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.
(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)

செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித்தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடாசாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ரமலான் மாதத்தில் ஈகைத் திருநாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.
இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன.
செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலேகானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் பலியானவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது.
சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.
(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)
இதில் நேர்மையான வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக்கங்களின் சதி பின்னணியில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருவது நாடறிந்த ஒன்று.

இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.

இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்’’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.

விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.

உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.

நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரணமாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.

நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணியில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.-- ஸப்ரன் ஹபீப்
http://www.tmmk.info/news/999611.htm
******************************************
படிக்கவும்:

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.

மேலும் படிக்க... Read more...

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.

>> Sunday, October 26, 2008

38 பேர் உயிரிழந்த 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் முடமாகி நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.

இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது.

சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.

குண்டுவெடிப்பு-2 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு!
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கைதாதியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மேஜர் உள்பட இரு முன்னாள் ராணுவத்தினரும் பிடிபட்டுள்ளனர்.

மாலேகானில் கடந்த மாதம் 29ம் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது.

அதில் ஒருவர் பலியானார்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.

தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் மூன்று பேரும் பெண் துறவி பிரக்யா தாகூர் என்பவருக்கு நெருக்கமானவர்கள்.

இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்து ஜாகிரண் மஞ்ச்சில் இணைந்த பின்னர் துறவியானார்.

பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ராமஜென்மபூமி போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தேமாதரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதற்கு குஜராத் அரசு நிதியுதவி அளித்ததால், குஜராத் மாநிலம் சூரத்திற்கு இடம் மாறினார் பிரக்யா.

மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கிய மோட்டார் சைக்கிள் இவரது பெயரில்தான் பதிவாகியிருந்தது. இதையடுத்தே இவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதை தொர்ந்து பெண் சாமியார் பிரக்யாவை போலீசார் கைது செய்தனர். இது சங் பரிவார் அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவத்தினருக்கு தொடர்பு:இதற்கிடையே இந்த வழக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்களும் கைதாகியுள்ளனர். இருவரும் தற்போது இந்து ராணுவப் பயிற்சிக் கழகம் என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்கள்.

இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர்.

வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கைதான பெண் சாமியார் உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்.

இதற்கிடையே மாலேகானில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
http://thatstamil.oneindia.in/news/2008/10/26/india-2-ex-armymen-including-a-major-involved-in-malegoan.html
************************************************
படிக்கவும்:
மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .

மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஆண்களின் கர்ப்பம்.

ஆண்களின் கர்ப்பம் தரிக்கும் நாள் விரைவில் வருமாம். விஞ்ஞானிகளின் குண்டு.

DOUBLE CLICK over the picture TO SEE ENLARGED
THANKS TO : DINATHANDHI.

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .

>> Saturday, October 25, 2008

இதுதான் நவீன இந்துத்துவா இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்தான் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்கள். உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தமுமுக கோரிக்கை.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை.

கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முஸ்லிம்களின் ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகைக்கு முந்தைய நாள் மாலை நோன்பு திறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மகராஷ்ரா மாநிலம் மாலேகானிலும், குஜராத்தின் மொடாசாவிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் அப்பாவி முஸ்லிம்கள் பலியாகினர். மக்கள் கூடும் நெருக்கமான பகுதியில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்கள்.

இந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகும் அரசும் புலனாய்வுத்துறையும் வழக்கம்போல சிமி, இந்தியன் முஜாஹிதீன் எனக் கூறி சில அப்பாவி முஸ்லிம்களை வளைத்து பிடித்து விசாரிக்கும் வழக்கமான அவலமும் நடந்தது.

ஆனால் தற்போது அகில இந்திய அளவில் பரந்த பாசிஷ ஹிந்துத்துவ வலைப்பின்னல் இதன் பின்ணணியில் பின்னப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலை மகராஷ்ட்ரா காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பின் பின்னனியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) நெருங்கிய தொடர்புடைய ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக மகராஷ்ர மாநில நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன்குலே தெரிவித்துள்ளதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமின்றி அந்த குண்டுகளை வைத்து நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவான துர்க்கவாஹினி அமைப்பைச் சேர்ந்த இளம் பெண் பிரக்யாசிங் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்திருக்கிறது.

நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்று தற்போது மாலேகான், மொடாசா குண்டு வெடிப்புகளில் ஹிந்துத்துவ பாசிஷ இயக்கங்களின் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் புலனாய்வு அமைப்புகள் உள்நோக்கமில்லாமல் நடுநிலைமையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஹிந்துத்துவ பாசிஷ இயக்கங்கள் பயங்கரவாத சதிகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் ஒவ்வொரு பயங்கரவாத சம்பவங்களுக்கு பின்னரும் சிமி என்ற அமைப்பின் பெயரையும் இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயரையும் கூறி பயங்கரவாத சதிகளில் இந்த இயக்கங்களே தொடர்புடையதாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு முறையும் அவர் அறிவிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.

இது புலனாய்வுத்துறை எந்த கோணத்தில் தங்கள் விசாரணையை நடத்த வேண்டும் என மறைமுகமான உத்தரவையே அதில் காண முடியும்.
புலனாய்வுத்துறையினரை தவறாக வழிநடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய முனையாமல் அப்பாவிகள் பாதிக்கப்பட காரணமாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.tmmk.info/news/999614.htm
***********************************************
மலேகான் குண்டு வெடிப்பும் மாட்டிக் கொண்ட சங்பரிவாரமும்!
9/11 உலகை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பின்லேடனின் - தாலிபான் அமைப்பினர் நடத்திய இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் யாராலும் மறக்க முடியாத பயங்கரவாத சம்பவம். உலகமே இதற்கு கண்டனக் குரல் எழுப்பியது.

பின்னர் இதை வைத்தே அமெரிக்கா பல நாடுகளை கபளிகரம் செய்து வருகிறது. இது ஏகாதிபத்திய பயங்கரவாத அரசியல்.

9/8 இது இந்தியாவை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. மகாராஷ்டிரர்களை நடுங்க வைத்த சம்பவம்.

மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் இசுலாமயர்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்... இசுலாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது. சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.

இந்த சம்பவம் நடைபெற்றவுடன் இது வெளிநாட்டு இசுலாமிய பயங்கரவாதிகளின் சதி என்று கதை கட்டி விடப்பட்டது. இதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதோடு, அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதும் செய்யப்பட்டனர். லஷ்கர் - ஈ - தொய்பா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இசுலாமிய பயங்கரவாதம் என்று கூக்குரல் எழுப்பினர்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சரியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தே வந்தது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணை ATS - Anti-Terrorist Squad பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்தக் குழுவினர் மலேகன் குண்டு தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் யார் என்று கண்டு பிடித்து அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளனர்.

அதாவது, இந்தக் குண்டுப் வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் என்ற பயங்கரவாத அமைப்புதான் இந்த பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டுள்ளது.

இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சாத்வீ புரூனா என்ற பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

இவர் யார் என்றால், தற்போது சன்னியாசியாக வேடம் தரித்துக் கொண்டுள்ள இந்துத்துவ பயங்கரவாதி.

இந்த சாத்வீ புரூனா இவர் ஏற்கனவே பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் இந்து ஜாக்ரன் மன்ச்சில் சன்னியாசியாக பணிபுரிந்து வருகிறார்.

அதாவது இவர் சன்னியாசி என்றால் ஏதோ அமைதியை விரும்பும் சன்னியாசியல்ல. மக்களின் அமைதியைக் குலைக்கும் பயங்கரவாதியாக காவியுடையில் வேடம் தரித்துள்ளார்.

அதாவது, இந்த இந்துத்துவவாதிகளின் மதவாத அரசியல் இந்தியாவில் காலாவதியாகிக் கொண்டிருப்பதால் தங்களது இசுலாமியர்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு எதிரான குரூரக் குரலை சாதாரண இந்து மக்கள் மத்தியில் விதைப்பதற்காக இதுபோன்ற வெடிகுண்டுகளை இவர்களே வெடித்துக் கொண்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனைவதுதான்.

இது ஏதோ மலேகனில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டு அவர்களது பயங்கரவாத தீச் செயல் கிழிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் இந்து முன்ன‌னியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதான் நவீன இந்துத்துவா இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்தான் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்கள்.

தேசப் பிதா மகாத்மாவை கொலை செய்த கோட்சே தனது பெயர் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டதோடு, சுன்னத்தும் செய்துக் கொண்டுதான் மகாத்மாவை சுட்டுக் கொன்றான்.

இதன் மூலம் இசுலாமிய மக்கள்தான் காந்தியைக் கொன்றாலர்கள் என்று பழியை சுமத்தி இசுலாமியர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக கொலை வெறித் தாக்குதல் தொடுக்க திட்டமிட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். எனவே இந்த முகாமிலிருந்து வெளிவரும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்?


அவர்களிடம் நாம் அகிம்சையை எதிர்பார்கக் முடியுமா? அவர்கள் விதைப்பது உள் மனதில் இம்சைதானே.

குறிப்பாக கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பல இடங்களில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அவர்கள் ஈடுபடும் கொலை வெறிச் செயல்களை உலகம் அறியம்.

இருப்பினும் அந்த மண்ணில் இவர்களால் கால் வைக்க முடியவில்லை. எனவே பாசிஸ்ட்டுகளின் வளர்ச்சி இந்திய மக்களின் அழிவு என்று அர்த்தம். எனவே இந்த இந்துத்துவா என்பது மக்களின் - மதச்சார்பின்மையின் - சகிப்புத்தன்மையின் எதிரி என்பதை நாம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.

இதன் தத்துவம் மனிதத்திற்கு விரோதமானது என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது. இவர்கள் ஹீட்லரின் தத்துவத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்து அதனை இந்தியாவில் செயலாக்க துடிக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை உலகம் அறிந்துக் கொண்டது.

இதற்கு எதிராக பன்முகப்பட்ட மக்களை திரட்ட வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம்.

மேற்கண்ட பயங்கரவாத செயல்களைத்தான் மனிதாபிமானத்தின் உயர்ந்த தத்துவம் இந்துத்துவா என்று இல. கணேசன் கூறியுள்ளார் நேற்றைய தினமணியில். இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்களை மனிதாபிமானிகளாக வேடம் தரித்துக் கொண்டு தங்களது மதவெறியை விற்பனை செய்ய முனைகிறார்கள்.

எனவே இவர்களின் முகமூடியை மக்களிடம் காண்பிக்க வேண்டியது முற்போக்குவாதிகளின் கடமையாகிறது.
THANKS TO : http://santhipu.blogspot.com/2008/10/blog-post_25.html
--***********************************************
படிக்கவும்:
குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா அமைப்பு - மஹாராஷ்டிரக் காவல்துறை!

மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!
******************************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

எங்களை காத்தவர்கள் முஸ்லிம்கள்...! மகாராஷ்ட்ரா ஹிந்துக்கள் நெகிழ்ச்சி!

>> Thursday, October 23, 2008

முஸ்லிம்களை வெறியேற்றி எந்தக் கொம்பனாலும் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வன்முறையாளர்களிடமிருந்து எங்களை அரணாக காத்தவர்கள் முஸ்லிம்கள்...! மகாராஷ்ட்ரா ஹிந்துக்கள் நெகிழ்ச்சி!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் துலே என்ற பகுதியில் முஸ்லிம்களை அவமதிக்கும் விதமாக சமூகவிரோத அமைப்பு ஒன்று சுவரொட்டிகளை நகரமெங்கும் ஒட்டியது.

அதனை ஒட்டிய சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நகர சிறுபான்மை மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.விஷமிகளைக் கைது செய்வதற்கு பதிலாக விஷமிகளோடு சேர்ந்து கொண்டு மாநில காவல்துறை ஆடிய வெறியாட்டங்களை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம்.

வன்முறையிலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதையும், 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததையும், சிகிச்சை பெறச் சென்றவர்களையும் அவர்களைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தாக்கினார்கள் என்ற செய்தி கடந்த வாரம் வெளியானது.

கூடுதல் கலெக்டர் முஷ்தாக் பட்டேல் சங்பரிவார் சமூக விரோதி களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுமியும் ஏழு வயது சிறுவனும் காயம் அடைந்தனர். இத்த னைக் கொடூர அனுபவங்களும் மற்றொரு சமூகத்தினருக்கு ஏற்பட்டிருந்தால் அந்த மாநிலமே அமளிக் காடாகி இருக்கும்.

ஆனால் சமாதான சகவாழ்வு பேணும் முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையில் மனம் வருந்தினாலும் பொறுமை காத்து கண்ணியத்தைக் கடைப்பிடித்தனர்.

ஆவேசத்திற்கு இலக்காகாமல் அமைதி காப்பதே அரிதான செயலாகப் பார்க்கப்படும் நிலையில் அடுத்து அப்பகுதி மக்கள் செய்த சிறப்புமிகு செயலைப் பார்த்தால் முஸ்லிம்களை வெறியேற்றி எந்தக் கொம்பனாலும் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

துலே பகுதியில் உள்ள ஆஸாத் நகர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். இங்குள்ள ஹிந்து மக்களைத் தாக்குவதற்காக வெளியூர்களிலிருந்து ஒரு வன்முறைக் கும்பல் வந்த போது அவர்களிடமிருந்து தங்களையும் தங்களது வழிபாட்டுத்தலமான ஹிந்துக் கோயிலையும் துலே பகுதி முஸ்லிம்கள் கேடயமாக இருந்து காத்ததாக கோயிலின் பூசாரி தெரிவித்தார்.

அந்தப் பூசாரி இத்தகவலை உம்மிட் டாட் காம் என்ற இணையதளத்தில் பிரத்தியேக பேட்டியாக வழங்கியிருக்கிறார்.

முஸ்லிம் சகோதரர்கள் எங்களுக்கு காவல் அரணாக விளங்கினார்கள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பெரும் பதட்டம் நிலவிய வேளையில், முஸ்லிம்கள் பெரும் இழப்பினை சந்தித்த போதும் கூட, தங்கள் பகுதியில் வாழ்ந்த ஹிந்து சகோதரர்களின் மீது ஒரு தூசு கூட விழாத அளவு பாதுகாத்தனர்.

ஊரடங்கு உத்தரவு முடிந்து சகஜ நிலை திரும்பும்வரை அவர்களுக்கு உணவு வழங்குதல் முதலிய உதவிகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்ட்ராவின் ஹந்தேஷ் பிராந்தி யத்தில் அமைந்துள்ள துலே பகுதியில் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஆனால் முஸ்லிம்கள் நிறைந்த ஆஸாத் நகர் மற்றும் சிவாஜி நகர் பகுதியில் ஹிந்துக்களின் ஒரு சிறு பொருட் ளுக்கு கூட முஸ்லிம் சகோதரர்களால் பாதிப்பு ஏற்பட்டதில்லை என நெகிழ்கிறார் சுமன் என்ற ஹிந்து சகோதரர்.

எல்லாவிதமான ஒத்துழைப்பையும் முஸ்லிம்கள் வழங்கினார்கள். வன்முறை என்ற இருட்டு பக்கங்களில் முன்மாதிரி பகுதிகள் வெளிச்சக் கீற்றுகளாக ஜொலிக்கின்றன என்றும் சுமன் தெரிவித்தார்.

எங்களுக்கு எதிரான எத்துனை வன்முறைகள் நிகழ்ந்தாலும், எங்கள் மார்க்கம் கற்பித்த மாண்புகளை தவறாது கடைப்பிடிப்போம் என்கிறார் முபீன் என்ற அப்பகுதி வாகன ஓட்டுனர்.

ஹிந்துக்கள் நிறைந்த பல பகுதிகளில் மதவெறி சக்தியான பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது.

ஆனால் முஸ்லிம்களை வெறியூட்டி எந்த சக்தியும் அவர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்ற உண்மை உரைக்கத் தொடங்கியதால் சில தீவிர ஹிந்துக்கள் கூட சங்பரிவார பாஜகவை வெறுக்கத் தொடங்கியிருப்பதாக கடைசி கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸப்ரன் http://www.tmmk.info/news/999622.htm
*********************************
படிக்க:>>
ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இந்துப் பெண்மணியின் தீரம். நெகிழ வைக்கும் நிகழ்வு.

ஆர்.எஸ்.எஸ். வெறிச்செயல்.மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக் கொலை

இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட நடவடிக்கை வேண்டும்...!
**********************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இந்துப் பெண்மணியின் தீரம். நெகிழ வைக்கும் நிகழ்வு.

>> Wednesday, October 22, 2008

காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் - புதுக்காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்?
ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் மகன் தாக்கூர் ரமேஷ் சிங்கோடு தன் பேரப் பிள்ளைகளையும் ஈடுபடுத்தி, ஈனர்களை எதிர்த்து நின்று விரட்டியடித்த இந்துப் பெண்மணி துல்ஜா பாயின் தீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதமும் வன்முறையும் குஜராத்தில் உச்ச நிலையைத் தொட்டதும் அதற்கு அடுத்தபடியாக அண்மையில் ஆந்திராவில் ஹிந்துத்துவ தேசவிரோதக் கும்பல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதும் வாசகர்கள் அறிந்ததே!

கடந்த 10.10.2008 இல் ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டதிலுள்ள பைன்ஸாவில், துர்கா ஊர்வலம் என்ற பெயரில் இவர்கள் நடத்திய அட்டூழியத்தை சத்தியமார்க்கம்.காம் படம் பிடித்துக் காட்டி இருந்தது நினைவிருக்கலாம்.

மனித நேயத்துக்கும் நமது நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கும் சவாலாக உருவெடுத்து வளர்ந்து வருகின்ற ஹிந்துத்துவாவினரின் வெறித்தனத்தை, 60 வயதை எட்டிய துல்ஜா பாய் என்ற இந்துப் பெண்மணி எதிர்த்து நின்ற - உள்ளத்தை நெகிழ வைக்கும் - நிகழ்வை இங்குப் பதிவு செய்து நன்றி பாராட்டுவது நமக்குக் கட்டாயமாகிறது.

குடிவெறியோடும் கொலை வெறியோடும் முஸ்லிம்களை வீடுகளுக்கு உள்ளே வைத்துத் தீவைத்துக் கொளுத்திய இந்த வன்முறைக் கும்பலிலிருந்து தனது அடுத்த வீட்டாரான ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் மகன் தாக்கூர் ரமேஷ் சிங்கோடு தன் பேரப்பிள்ளைகளையும் ஈடுபடுத்தி, ஈனர்களை எதிர்த்து நின்று விரட்டியடித்த துல்ஜா பாயின் தீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

பைன்ஸாவிலுள்ள பஞ்சேஷா மஸ்ஜிதுக்குப் பின்புறம் வசிப்பவர்கள் உஸ்மானும் அவரது குடும்பத்தினரும். "கடந்த 3-4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த துர்கா ஊர்வலத்தில் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்பட்டதில்லை என்ற தைரியத்தில் என் சகோதரர் உஸ்மான், வெளியே சென்றிருந்தார். அன்று நானும் என் பணி நிமித்தம் வெளியிலிருந்தேன்" என்று கூறினார் உஸ்மானின் சகோதரரும் ஹைதரபாத் நாளிதழ் ஒன்றின் நிருபருமான ஸய்யித் முஹம்மத் பாஷா.

"எங்கள் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ஒரு வெறிக்கும்பல் எங்கள் சந்துக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வீடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் உஸ்மானுடைய வீட்டிலிருந்து புகைமூட்டம் கிளம்பி மேலெழுந்து பரவியது.

உடனே எனது குடும்பம் மொத்தத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு உஸ்மானுடைய வீட்டுப் பக்கம் விரைந்தேன். அப்போது அந்த வீட்டுக் குழந்தைகளில் ஒன்று வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு ஓடி வந்ததைப் பார்த்தேன்.

உடனே ஓடிப்போய் வீட்டுக்குள்ளிருந்த மேலும் இரு குழந்தைகளையும் (உஸ்மானின் மனைவி) ஸஃபிய்யாவையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து எனது வீட்டில் சேர்த்து விட்டு, உஸ்மானுடைய வீட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் ஈடுபட்டோம்" என்று அன்றைய நிகழ்வின்போது, தான் செய்த செயற்கரிய செயலை மிகச் சாதாரணமாக விவரித்தார் துல்ஜா பாய்.

தனது வீட்டிலிருந்த தண்ணீரை வாளிகள் மூலம் அள்ளிக் கொண்டு போய் உஸ்மான் வீட்டுத் தீயை அணைக்கப் போன துல்ஜா பாயையும் அவரது குடும்பத்தினரையும் வன்முறைக் கும்பல் தடுத்து மிரட்டியது.

கும்பலின் மிரட்டலுக்கு அஞ்சாமல், "இது எங்க அண்டை வீடு; இது எங்க பிரச்சினை. அவங்க எங்க உறவுக்காராங்க போல. நீயெல்லாம் வெளியாளு. ஒங்க அட்டகாசத்தையெல்லாம் ஒங்க பகுதியோட நிறுத்திக்க. இங்க வேணாம்; என்னை யாரும் தடுக்க முடியாது" என்று வெறிக்கும்பலை ஒதுக்கித் தள்ளி விட்டுத் தம் கடமையைச் செய்ததாகக் கூறினார் துல்ஜா பாய்.

"வீட்டிலிருந்த சேமிப்பான 1,30,000 ரூபாய் ரொக்கம், 19 தோலா தங்க நகைகள், 40 தோலா வெள்ளி நகைகள், ஆண்டுக் கணக்கில் சேர்த்த விலையுயர்ந்த ஆடைகள் அனைத்தையும் வன்முறையாளர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டனர்.

பீரோ, கட்டில், சோஃபா அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன" என்று இழப்புகளை அடுக்கிய பாஷா, "என்றாலுமென்ன? பெரியம்மாவின் தீரச் செயலால் எங்கள் குடும்பத்தினரது உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. அவருக்கு நாங்கள் வாழ்நாள் முழுதும் கடமைப் பட்டவர்களாவோம்" என்று நன்றிப் பெருக்கோடு கூறினார் பாஷா.

"எங்களிரு குடும்பத்தின் உறவு பல நூற்றாண்டுகளைக் கடந்ததாகும். உஸ்மானுக்கு நான் பெரியம்மா மாதிரி. அப்படித்தான் என்னை அவன் அழைப்பான். அந்தக் குழந்தைகள் எல்லாரும் என் (குடும்பத்துக்) குழந்தைகள். அவர்களுக்கான என் கடமையைத்தான் நான் செய்தேன். ஆபத்தான சூழ்நிலையில் அவர்களைக் காப்பாற்றாமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியாது" என்றார் 60 வயதைக் கடந்த துல்ஜா பாய்.

துல்ஜா பாய் போன்ற மனித நேயத்தோடு துணிச்சலும் இணைந்த பெண்மணிகள் இருப்பதால்தான் நம் நாடு இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இது ஒரு போராட்டம்! காவிகளால் குனியும் நாட்டின் தலை, துல்ஜா பாய் போன்றோரால் அவ்வப்போது நிமிர்த்தப் படுகிறது.

காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் - புதுக்
காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்?
COURTESY AND THANKS TO :
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1069&Itemid=167
*****************************
படிக்க:>>
ஆர்.எஸ்.எஸ். வெறிச்செயல்.மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக் கொலை
***********************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட நடவடிக்கை வேண்டும்...!

>> Tuesday, October 21, 2008

சிங்கள ராணுவம், தமிழ் போராளிக் குழுக்கள் என இருதரப்பின் தாக்குதல்களுக்கு இலக்காகி துயர நிலையில் தமிழ்பேசும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அவல நிலையை தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், மக்களும் மறந்துவிடக் கூடாது.

தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் வேண்டுகோள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். இக்கடிதத்தின் நகல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிராக எடுத்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் தமிழர் இனத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் பயங்கரவாதத்தில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனைக் கண்டித்து தமிழகமே ஓரணியில் திரள நீங்கள் எடுத்துக் கொண்ட வலிமையான நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன். இதேபோல், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மனம்போன போக்கில் சுட்டுத் தள்ளும் இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக ஒருமித்த நடவடிக்கை எடுக்கத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இங்கே கூட்டியுள்ள தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைப் பாராட்டுகிறோம்.

இதே நேரத்தில் தமிழகம் முழுவதுமே ஓர் அணியில் இந்த பிரச்சனையை அணுகுகின்றது என்பதை எடுத்துக்காட்டக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் சில கட்சிகள் பங்கு கொள்ளாதது மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது.

இலங்கையில் நடைபெற்று வரும் வன்செயல்களுக்கு சிங்களப் பேரினவாத அரசே முழுமுதல் காரணமாகும். சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்திவரும் வன்செயல்களுக்கு முடிவுகட்ட நமது இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் அதே நேரத்தில் இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அவல நிலையை தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், மக்களும் மறந்துவிடக் கூடாது.

இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருபவர்களில் சுமார் 17 சதவிகிதத்தினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவர். தொன்மையான வரலாறு கொண்ட இவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாஷைகள் - அகிம்சை அடிப்படையிலான போராட்ட வடிவங்களாக முன் வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளார்கள். 1956ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அது தமிழுக்கு உரிய அந்தஸ்தைத் தருவதற்குத் தவறியதைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியவர் தமிழ் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஏ.எம்.ஏ. அஜீஸ் ஆவார்.

1960ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சத்தியாகிரகத்தின் போது நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம்களும் அதில் கலந்து கொண்டு சிறையை நிரப்பினர்.

இதில் முன்னணி வகித்தவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கிகளான மசூர் மௌலானா, எருக்கலம்பிட்டி கே.எஸ்.ஏ.கபூர் போன்றோர் ஆவர். 1977 தமிழீழத்துக்கான ஆணை கேட்ட போது கூடக் கல்முனை தொகுதியில் த.வி.கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் சம்சுதின் எனும் தமிழ் முஸ்லிமேயாவார்.

இதேவேளை தமிழர்களிடத்திலும் பலவகை கட்சிகள் பலவகை கொள்கை அடிப்படையிலான அமைப்புகள் இயங்கியது போல முஸ்லிம்கள் தரப்பிலும் வேறு ஒரு சில தேசியக் கட்சிகளும் அமைப்புகளும் இடம்பிடித்திருந்தன என்பதும் உண்மைதான்.

ஆனாலும் வடகிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமிழீழமானது அவர்களுக்கும் உரியது என்றே நம்பி இருந்தனர். இதன்காரணமாகவே 1977 தேர்தலைத் தொடர்ந்தும் 1983 கலவரத்தினைத் தொடர்ந்தும் வடகிழக்குப் பகுதிகளில் உருவாகிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து கொண்டனர்.

கிழக்கு இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் பெருந்தொகையாக முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் (நுஞசுடுகு) போராளிகளாய் காணப்பட்டனர்.

இப்படியாகத் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம்களும் ஒருங்கிணந்து செயல்பட்ட நிலை 1985ல் ஏற்பட்ட கலவரத்தில் இருந்து சீர்குலைந்து விட்டது. இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

ஒருபக்கம் சிங்களப் பேரினவாத அரசின் ராணுவம், இன்னொரு பக்கம் தமிழ் போராளிக் குழுக்கள் என இருதரப்பின் தாக்குதல்களுக்கு இலக்காகி துயர நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

1990களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் இருந்து ஒரு இரவுப் பொழுதிலே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்னும் அகதிகளாக தமது சொந்த நாட்டில் வாழும் அவலம் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் வாழச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடைபெற்று அங்கு வாழும் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.

மாவிலாறு அணைக்கட்டுத் தொடர்பான தகராறில் புலிகள் மூதூரில் வாழ்ந்த முஸ்லிம்களை பகடைக்காய்களாக ஒருபக்கம் பயன்படுத்த, இன்னொரு பக்கம் இலங்கை ராணுவம் மூதூரில் குண்டுகள் வீச, அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வும் வளமும் பெருமளவில் இன்று சிதைந்துவிட்டது. இதனை ஒரு எடுத்துக்காட்டாகவே குறிப்பிடுகிறேன்.

மொத்தத்தில் மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போல் ஒருபக்கம் சிங்கள பேரினவாத அரசு, இன்னொரு பக்கம் புலிகள் என இரண்டு தரப்பிற்கும் இடையே சிக்கி இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வு சின்னாபின்னமாகி விட்டது.

இச்சூழலில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளில் ஒருபகுதியாக அதன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1987ல் ஏற்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அந்த ஒப்பந்தம் தமிழ் முஸ்லிம்களை மூன்றாம்தரக் குடிமக்கள் போன்று கருதியது. அந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமையும் காப்பாற்றப்படும் வகையில் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கள பேரினவாதத்தை முறியடிக்கத் தமிழர்களும் தமிழ் முஸ்லிம்களும் ஒருங்கிணந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் முஸ்லிம்களை ஒதுக்கி வைத்துவிட்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது அறிவுடைமையாகாது.

தற்போதய மகிந்த ராஜபக்சே அரசு இராணுவ ரீதியான தீர்வை நாடியுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இந்திய அரசு தனது அனைத்து செல்வாக்குகளையும் பயன்படுத்தி தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம்.

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் என அனைத்துத் தரப்பு தமிழர்களின் வாழ்வுரிமை காக்கப்பட இன்னும் உறுதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
http://www.tmmk.info/news/999626.htm
*****************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஸ்பெசல் " காக்கா " பிரியாணி

>> Monday, October 20, 2008

'காக்கா பிரியாணி' விற்ற அக்கா-தம்பி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காகங்களை வேட்டையாடி, காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி போடும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்த அக்கா தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை வேட்டையாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியை கண்காணித்தனர்.இந்நிலையில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணும் வாலிபரும் ஏதையோ காகங்களுக்கு தூவினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் அவற்றை கொத்தித் தின்றன. சிறிது நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தன.மயங்கிய காகங்களை எடுத்து சாக்கு மூட்டையில் வைத்து கட்டினர். இதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த்னர். அவர்கள் இருவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதா, அவரது தம்பி முனியாண்டி என்பது தெரியவந்தது.

விசாரணையில், இருவரும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் தங்கி வருகின்றனர்.

கோழி, காடை, கௌதாரி போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் காகங்களை பிடித்து தரும்படி சில ஹோட்டல் உரிமையாளர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து தெர்மல் நகர் கடற்கரையில் கோழி தீவனத்தில் மரு்நது கலந்து காகங்களை வேட்டையாடியுள்ளனர். பின்னர் தோலை உரித்து இறைச்சியாக்கி தூத்துக்குடி, ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்துள்ளனர்.

ஹோட்டல்களிலும் மசாலா தடவி காடை, கௌதாரி என்று கூறி காக்கா பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹோட்டல்களில் இருந்து இவர்களுக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்களின் உற்வினர்களும் பல இடங்களில் காகங்களை வேட்டையாடி காடை, கௌதாரி என்று கூறி விற்று வருவதாகவும் கூறினர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.ரன் என்ற திரைப்படத்தில் விவேக் தனது காமெடியில் காக்கா பிரியாணி பற்றி கூறியபோது வயிறு புடைக்க் சிரித்திருப்போம். ஆனால் அது நிஜம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. THANKS: THATSTAMIL
*******************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

புயலை எழுப்பும் புதிய பைபிள்.கொந்தளிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள்.

>> Saturday, October 11, 2008

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று.

இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம்.

"இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.

`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.

"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார்.

இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம்.

அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.

"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது.

பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர்.

குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா?

அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.

பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர். மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூ கம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்?

பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்' என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர். பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும்,

இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?

இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன.

இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்? இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே?

இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?'' எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.

இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், ``கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர்.

அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார்.

இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன.

இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்'' என்றார் உறுதியாக.

கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.

FROM > http://www.kumudam.com/magazine/Reporter/2008-08-31/pg2.php
----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அமெரிக்காவில் இராணுவ ஆட்சியா? வெளியில் கசிந்த அதிர வைக்கும் உண்மை

>> Thursday, October 9, 2008

சூதாட்ட வங்கிகள்

இங்கே காசு சுண்டி விளையாடும் சூதாட்டத்தை பார்ப்போம். தலை விழுந்தால் உங்களுக்கு ரூ 100 கிடைக்கும்.

பூ விழுந்தால் நீங்கள் ரூ 100 ஐ இழப்பீர்கள். இழந்தால் கவலைவேண்டாம். இரண்டாம் முறை ரூ 200 பந்தயம் கட்டுங்கள். தலை விழுந்தால் ரூ 200 கிடைக்கும். உடனே முதலில் இழந்த ரூ 100 ஐ கட்டிவிட்டு மீதமுள்ள ரூ 100 ஐ நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

சரி பூ விழுந்தால்? கவலை வேண்டாம் மீண்டும் மூன்றாம் முறை ரூ. 400 பந்தயம் கட்டுங்கள். தலை விழுந்தால் உங்களுக்கு ரூ 400 கிடைக்கும். உடனே முதல் இரண்டு ஆட்டத்தில் இழந்த ரூ 300 (100 + 200) ஐ கட்டிவிட்டு மீதமுள்ள ரூ 100ஐ வீட்டுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக இங்கு கடன் கொடுக்க ஆள் இருக்கும் வரை தோற்பது என்பது கிடையாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தலை விழும், நீங்கள் ரூ 100 யுடன் வீடு செல்லலாம். கடன் கொடுக்க யாராவது ரெடியாக இருந்தால் லட்சக்கணக்கிலோ கோடிக்கணக்கிலோ கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடலாம். இந்த விளையாட்டிற்குப் பெயர் என்ன தெரியுமா? மார்டிங்கேல் என்று பெயர். இங்கு நான் என்ன சொல்ல விழைகிறேன்?

சமீபத்தில் வீழ்ச்சியடைந்த லெஹ்மென் பிரதரஸ் வங்கி மற்றும் வாசிங்டன் மியூட்ச்சுவல் ஆகிய நிறுவனங்களின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட இதுபோலத்தான் ஆனால் சிக்கலானவை. அதில் அடிப்படை பிழைகள் நிறைய உள்ளன. எந்த வித ரிஸ்க்கும் எடுக்காமலும் காற்றிலிருந்து பணம் சம்பாதிக்கும் வழிகள் அவை.

இவை சந்தேகத்திற்குரிவை மட்டுமல்ல கணிதவியல் படி நடக்காத காரியம் (வேறு சந்தர்ப்பத்தில் இதனை விவரிக்கலாம்). இருந்தாலும் அவை கண்கட்டி வித்தைகளாக செயல்படுத்தபட்டன.

வீழ்ச்சியின் விளிம்பில்…” என்ற கட்டுரையை நிறைவு செய்தபோது 700 பில்லியன் டாலர் கொண்டு சந்தை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் திட்டம் (அதாவது சூதாடிகளுக்கு கடன்) பற்றி கண்டோம்.

கொழுத்த பணக்காரர்களை காப்பாற்ற சாதாரண மக்களை பணயம் வைக்கும் திட்டம் தான் இது. ஆம்அவ்வளவும் மக்களின் வரிப்பணம்.

அதற்கு, 1980களில் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் திருமதி மார்க்ரெட் தாட்சர் கூறிய அதே வாசகத்தை தற்போது அமெரிக்க அதிபர் கூறிக்மெகாண்டிருக்கிறார் - TINA அதாவது There Is No Alternative. அர்த்தம் வேறு வழியில்லைஎன்பதாகும்.

முதலாளித்துவம் ஜனநாயகத்தை இவ்வாறு கருணையின்றி படுகொலை செய்துகொண்டிருக்கிறது. இது உலகெங்கும் நடக்கும் விசயம்தான். ஆனால் அமெரிக்காவில் படுபயங்கரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த சந்தை மீட்பு போராட்டம்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேல் பழி

பழி ஒரிடம் பாவம் ஓரிடம். பேராசையின் காரணமாக அமெரிக்க வங்கிகள் பணத்தை தாறுமாறாக வாரி இறைத்துவிட்டு, தற்போது அமெரிக்க அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை குறை கூறுகிறது. அவர்களின் திடீர் வெளியேறுதலால் இந்த சரிவுகள் நடக்கிறதாம்…!

அவர்கள் ஸார்ட் செல்லிங்கில் (Short Selling) ஈடுபட்டதால் வங்கிகள் மூழ்கியதாம்.

ஆகவே இந்த பரிவர்த்தனை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தை வெளியிலிருந்து எந்த வகையிலும் வீழ்த்தமுடியாது. அந்த வங்கிகளில் உட்கார்ந்திருப்பவர்கள் முட்டாள்கள் இல்லை.

ஸார்ட் செல்லிங் ஒரு தவறான முறையற்ற பங்கு பரிவர்த்தனை முறைதான் (என்னை பொறுத்தமட்டில்), ஆனால் அது வீழ்ச்சிக்குக் காரணமில்லை.

ஸார்ட் செல்லிங் என்றால் என்ன? உதாரணத்திற்கு (ஸரீயா) அஆ கம்பெனியிலிருந்து சிராஜ் ரூ1500 செலவிட்டு 100 பங்குகளை தலா ரூ 15 க்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அவர் வாங்கிய பிறகு பங்கு விலை ரூ 10க்கு சரிந்து விட்டது. அந்த நேரத்தில் செய்யது என்ற ஒருவர் சிராஜிடம் அந்த 100 பங்கு சான்றிதழ்களை வாங்கி (பணம் கொடுக்காமல் சான்றிதழ்களை மட்டும் வாங்கி) அதன் விலை ரூ8 ஆகும் போது மற்றவரிடம் விற்கின்றார். அப்போது ரூ 800 சம்பாதித்துவிடுகிறார்.

அஆ பங்குவிலை மேலும் ரூ 5 ஆகக் குறையும்போது 100 சான்றிதழ்களை சந்தையிலிருந்து வாங்கி நண்பர் சிராஜூக்கு கொடுத்துவிடுகிறார். அதற்காக ரூ 500 செலவிட்டுள்ளார். ஆக கடைசியில் அவருக்கு லாபம் ரூ 300 ஆகும். இந்த ஸார்ட் செல்லிங்கில் பங்குகளின் விலை இறங்கியே ஆகவேண்டும்.

அப்போதுதான் லாபம். ஆகவே ஸார்ட் செல்லிங் பரிவர்த்தனையில் பணமுதலைகள் ஈடுபடுட்டால் பங்கு விலைகளில் வீழ்ச்சியடையும்.

எனவே தற்போது பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் சற்று விலகியே இருத்தல் நலம். பணத்தை இழந்த முதலாளிகளின் செயலால் பங்கு சந்தை தற்காலிகமாக காலை அல்லது மதியம் ஏறி மாலைப் பொழுதில் பெரு வீழ்ச்சியடையும்.

அமெரிக்காவின் (ஆகவே உலகின்) தற்போதைய பிரச்சனை

சரிகடன் பிரச்சினை, சப் பிரைம் பிரச்சனை (வீட்டுக்கடன்) மற்றும் வங்கிகளை மீட்டெடுக்கும் வழிகள் தான் தற்போதைய முக்கிய பிரச்சனை என்றாலும், அமெரிக்காவின் முழுமுதல் பிரச்சனை என்ன தெரியுமா?

1980 வரை ஏற்றுமதியில் லாபம் ஈட்டிய அந்த நாடு 1985 லிருந்து 1997 வரை ஏற்றுமதியை இறக்குமதிக்கு சமன் செய்து சமாளித்து வந்தது. ஆனால் 2000 க்குப் பிறகு இறக்குமதி அதிகமாகி பற்றாக்குறையும் அதிகமாகியுள்ளது. மேலும் 40,000 பில்லியன் டாலர் கடன் வேறு. இதனை அமெரிக்கா என்றும் திருப்பித்தராது.

புதிய உலக இயக்கத்தின் (The New World Order) கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கையே இப்போது அந்நாட்டிற்கு வினையாக வந்துவிட்டது. வளர்ந்து வரும் நாடுகளான சீனா, இந்தியா, ரஸ்யா ஆகியவற்றில் கலப்பு பொருளாதார முறையை பின்பற்றப்படுவதால் பணத்தின் மதிப்பு, விலைகள், உற்பத்தி, ஓய்வுதியம் ஆகியவை (ஓரளவு) அரசின் கட்டுக்குள் உள்ளது.

அமெரிக்காவில் இந்த பருப்பு வேகாது. தொழிற்சாலை மற்றும் வியாபார வர்த்தகங்களை அரவணைத்து செல்லவேண்டிய கட்டாயம் அந்த அரசிற்கு.

கொழுத்த பணக்காரர்களின் புதிய உலக இயக்கம்

பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க, Regulatory Institutions எனப்படும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டு மையத்தை சரிசெய்யவில்லை அல்லது வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவில்லை. மாறாக தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடம் –-- the Treasury Secretary -- முழுவதுமாக 700 பில்லியன் டாவர்களை தந்து வங்கிகளிடம் பிரிக்கச் சொன்னதுதான் அதிருப்தியான சம்பவம்.

இந்த அதிர்ச்சியான விசயத்தை இவ்வாறு கூறலாம்: சர்வாதிகாரத்தினை நோக்கிய கொள்கைப் பயணத்திற்கு லஞ்சம் லாவன்யங்களின் உறுதுணை மட்டுமின்றி, சித்தாந்த ரீதியிலான மாற்றம் தான் காரணம் (That lurch toward dictatorship was motivated not just by crony corruption, but also by a deeper ideological shift).

இந்த ஜனநாயகநாட்டிற்கு சர்வாதிகார சீனாவும் மன்னராட்சி சவுதியும் தான் நிதி தந்து உதவுகின்றன என்பதை ஏற்கனவே கண்டதுதான். ஆக ஜனநாயகம் நோய்வாய்பட்டுவிட்டது. 700 பில்லியன் டாலர்கள் சூறையாடும் கும்பலுக்கு சூதாடக் கொடுக்கப்பட்டுள்ளது. யாரிந்த சூறையாடும் கும்பல்?

புதிய உலக இயக்கம் (The New World Order)

அது என்ன புதிய உலக இயக்கம்? இந்த இயக்கம் பற்றி எழுதுவதற்கே இன்னொரு இணையதளம் வேண்டும். இந்த இயக்கம்தான் அமெரிக்க அதிபர் தேர்வு முதல் ஈராக் போர் வரை தீர்மானிக்கும் ஆபத்தான இயக்கம்.

ஐநா சபை, ஐ எம் எஃப் ஆகியவை இதன் கட்டுப்பாட்டில். (கடந்த ஒரு வருடமாக இதனை பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பித்தேன். இன்னமும் முடிந்த பாடில்லை. டன் கணக்கில் அதிரவைக்கும் தகவல்கள்…!) இந்த இயக்கம் முற்றிலுமாக பணக்காரர்களால் தொடங்கி இயக்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் மக்கள் அல்லது நாட்டின் பிரச்சனையை பற்றி கவலைகொள்ளமாட்டார்கள். தங்களின் பணத்தையும் வியாபாரத்தையும் பற்றிதான் கவலை அவர்களுக்கு. விளைவு ஈராக் போர். அவர்களின் சொல்படிக் கேட்காமல் நீங்கள் ஒரு நிறுவனத்தை போட்டியாக நடத்தினால் நீங்கள் நசுக்கப்படுவீர்கள்.

இது பெரும்பாலான இளம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிகழ்ந்து வரும் கதி. அவர்களுக்கு நிதியுதவி அவ்வளவு சாமான்யத்தில் கிடைக்காது

காங்கிரஸ் 700 பில்லியன் டாலர் மீட்பு முயற்சியில் கையெழுத்திடவில்லையென்றால் அமெரிக்காவில் ராணுவ ஆட்சி ஏற்படும் என்று அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி 3000 முதல் 4000 இராணுவ வீரர்கள் அக்டோபர் 1 முதல் அமெரிக்க நாட்டினுள் நிறுத்தப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணங்களை ஏதேதோ சொல்லி சமாளிக்கின்றனர்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரட் ஸெர்மென் கூறுகையில் 700 பில்லியனுக்கான திட்டத்தில் கையெழுத்திடாவிடில் இராணுவ ஆட்சி ஏற்படும் என்று மிரட்டப்பட்டதாக கூறுகிறார். (வீடியோ பார்க்க ப்ளேயை கிளிக் செய்யவும்)

("The only way they can pass this bill is by creating and sustaining a panic atmosphere. That atmosphere is not justified. Many of us were told in private conversations that if we voted against this bill on Monday that the sky would fall, the market would drop two or three thousand points the first day and a couple of thousand on the second day, and a few members were even told that there would be martial law in America if we voted no. That is what I call fear-mongering. Unjustified. Proven wrong. We’ve got a week. We’ve got two weeks to write a good bill. The only way to write to pass this bad bill, keep the panic atmosphere on" )

இந்த திட்டத்தை அமல்படுத்த ஒரே வழி பய உணர்வை ஏற்படுத்தி அதனை தக்கவைத்தலேஎங்களில் பெரும்பாலோரை தனித்தனியே சந்தித்து, இந்த திட்டத்தை தடுத்தால் வானம் விழுந்துவிடும் என்றும் திங்களன்று பங்கு சந்தை 1000 புள்ளிகள் சரியும் என்றும் கூறப்பட்டது.

சிலருக்கு, இந்த திட்டத்தை வேண்டாம் என்று வாக்களித்தால் இராணுவ ஆட்சியும் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது மிரட்டல். இது தவறு. இன்னும் 1 வாரம் உள்ளது (அல்லது) 2 வாரங்கள் உள்ளன. நம்மால் நல்ல திட்டத்தை செயல் படுத்த இயலும். தற்போதைய இந்த மோசமான திட்டத்தை செயல்படுத்த ஒரே வழி இந்த பயஉணர்வை தக்கவைத்தலே ஆகும்…” என்றார். இதே இராணுவ ஆட்சி மிரட்டல் மீண்டும் ஏன் வராது?

மாயையில் மக்கள்

அமெரிக்கர்கள் உட்பட நம் அனைவரும் சினிமா, விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்குகளில் மூழ்கிவிட்டோம். இவற்றில் தலைகீழாக எதைக் கேட்டாலும் பதில் சொல்வோம்.

சிம்ரனுக்கு பிடித்த உணவு வகையிலிருந்து சச்சின் டெண்டுல்கருக்கு பிடித்த கார் வரை நம் விரல் நுனியில். ஊடகத்தின் வழியே மந்திரங்கள் ஓதி நம்மை மயக்கி வைத்திருக்கும் முதலாளித்துவ உலகம் ஒரு பக்கம். கணணி, உயர் உயிரியல் தொழில்நுட்பம், நேனோடெக்னாலஜி என்று பளபளவென்று பெயரிட்டு படித்தவர்களின் மதியையும் மயக்கியிருக்கும் கல்வி முறைகள் மறு பக்கம்.

எதற்கெடுத்தாலும் வேகம், ஓட்டம். நின்று நிதானித்து யோசிக்கவும் நேரமில்லை. அப்படி சற்று நேரம் யோசித்தால் போட்டியாளர் நம்மை விட 1 டாலர் அதிகம் சம்பாதித்துவிடுவார் என்று பயம் நம் எல்லாருக்கும். ஆகவே சுற்றியிருக்கும் நிலைமையை பற்றி யோசிக்கக் கூட நேரமின்றி பயணித்துக்கொண்டிருக்கும் நாம்.

நம்மை சுற்றி நடக்கும் விசயங்களை பகுத்து ஆழ்ந்து அறிய முடியாமல் மாய உலகில் வாழும் நமக்கு இனி வரும் காலங்களில் நடக்கவிருக்கும் சற்றும் நம்பமுடியாத எதிர்பாராத நிகழ்ச்சிகள் அதிரவைக்கப் போகின்றன.

அமெரிக்காவில் ரகஸிய கூட்டம்

நம் நாட்டில் உள்ளதுபோல் அமெரிக்காவிலும் செனட் என்றும் தி ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் என்று இரண்டு சபைகள் உள்ளன. கடந்த மார்ச், 13, 2008 – ம் ஆண்டு ரகசிய கூட்டம் ஒன்று தி ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் சபையில் நடைபெற்றது. இங்கு ரகஸியமாக் கூடினாலே ஏதோ விவகாரம் என்று விளங்கிக்கொள்ளலாம்.

கி.பி. 1812 – ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் மாதக் கூட்டம் வரை 6 முறை தான் இங்கு ரகஸியமான முறையில் கூடியுள்ளனர் (மற்றபடி வெளிப்படையான கூட்டம் தான் நடைபெறும்). அமெரிக்கா காங்கிரஸ் கடைசியாக 1983 – ம் ஆண்டு ரகஸியமாக கூடி நிகராகுவாவில் கான்ட்ராஸ் கொரில்லாவை நசுக்க ஆலோசித்து பின் நிகரகுவாவையே கவிழ்த்தனர்.

ஆனால் கடந்த மார்ச் 13 – ம் நாள் இந்த அமெரிக்க காங்கிரஸ் கூடியதற்கான காரணம் மக்கள் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு என்று வெளியில் கூறினர். ஆனால்

வெளியில் கசிந்த அதிர வைக்கும் உண்மை

உள்ளே நடந்த ரகஸியக் கூட்டத்தின் உண்மை ஆறு மாதம் கழித்து ஓரளவு கசிந்து விட்டது. அக்கூட்டத்தில் 9 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் முதலாவது செயல் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. கடந்த 10 நாட்களுக்குள் தான்

1. செப்டம்பர் 2008 – ற்குள் அமெரிக்கவின் பொருளாதார சீரழிவு – (நடந்து கொண்டிருக்கிறது)

2. ஃபிப்ரவரி 2009 – ற்குள் அமெரிக்காவின் அரசாங்க கஜானா கவிழும் வாய்ப்புள்ளது. அப்போது என்ன செய்வது?

3. இதன் மூலம் உள்நாட்டு கலவரம் வர அதிகமாகவே வாய்ப்புள்ளது. அதனை எப்படி சமாளிப்பது?

4. புதிய உலக இயக்கத்தை(The New World Order)

எதிர்ப்பவர்களை சுற்றிவளைத்து பிடிப்பது.

5. அமெரிக்கா முழுவதும் கட்டப்பட்ட (The New World Order) என்ற கேம்பில் எதிர்பாளர்களை வைத்து மற்றவர்களிடமிருந்து பிரித்துவிடுதல்.

6. எதிர்த்த காங்கிரஸாரை பழிவாங்குதல்

7. உள்நாட்டு கலவரத்தின் போது ஆதரவு காங்கிரஸ் பிரதிநிகள் மற்றும் அவர்களின் குடுபம்பத்தினரின் பாதுகாப்பு

8. இயற்கை வளமிக்க கனடாவுடனும் மனித வளமிக்க மெக்சிகோவுடனும் அமெரிக்காவை இணைப்பது

9. அமேரோ என்ற புதிய நாணயத்தை இம்மூன்று நாடுகளிடமும் அறிமுகம் செய்து பொருளாதாரத்தை நிலைநிறுத்தல்

தயாராகும் திட்டங்களும் செயல்பாடுகளும்

இதன் பயங்கரத்தை நாம் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டுள்ளோம் என்று இன்னமும் விளங்கவில்லை. ஆனால் ரகஸிய கூட்டம் திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

1. அக்டோபர் 1 முதல் சிறப்பு இராணுவ பிரிவு முகாமிடுதல் - நடந்து கொண்டிருக்கிறது.

2. இராணுவ வீரர்களின் மனநிலையை பரிசோதித்தல்

3. 800 முகாம்கள் எதிர்ப்பாளர்களுக்கு ரெடி. சிவப்பு கோடு என்றழைக்கப்படும் எதிர்ப்பாளர்கள் அரசியல் மற்றும் தலைவர்களாக இருக்கலாம். நீலக்கோடு எனப்படும் எதிர்ப்பாளர்கள் மக்கள் மற்றும் அரசியல் சாராதவர்கள் ஆவர்.

இந்த இரு பிரிவினருக்கும் தனித்தனியே முகாம்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த முகாம்கள் அவர்களை மூளைச்சலவை செய்ய பயன்படுத்தப்படும்.

ஆகவே எப்போது எது நடக்கும் என்ற கவலை உலகெங்கும் உள்ளது. அதனால் அந்தந்த நாட்டு அரசும் அமெரிக்காவும் உலக மக்களின் கவனத்தை திசைதிருப்ப உள்நாட்டு பிரச்சனையை அதிகமாக்கலாம். BY MR. HILAAL ALAM


--------------------------

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP