கல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” வலி நிவாரண மாத்திரைகளுக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்படுவது எப்போது?
>> Saturday, April 5, 2008
“நோவார்டீஸ்” நிறுவனத்தின் வலி நிவாரண மாத்திரைகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டு பல நாடுகளில் அந்த நிறுவன மாத்திரைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மருந்துக் கடைகளில் இந்த நோவார்டீஸ் நிறுவன வலி நிவாரணமாத் திரைகள் தாராளமாகக் கிடைத்து வருகின்றன.
ஆனால் ஆஸ்தி ரேலியாவில் இந்த மாத்திரைகளை உட்கொண்ட இருவர் உயிரிழந்தனர்.
இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாம். எனவே உடனடியாக நோவார்டீஸ் மாத்திரைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
இதே போல் நியூசிலாந்து அரசும் தடைவிதித்தது.
அய்ரோப்பிய நாடுகளில் நாளொன்றுக்கு 100 மில்லி கிராம் அளவுள்ள நோவார்டீஸ் மாத்திரைகளை மட்டும் அனுமதித்து வந்தனர்.
அங்கும் கல்லீரல் பாதிப்புப் பிரச்சினைகள் முன்னுக்கு வந்தவுடன் பிரிட்டன், ஜெர்மன் ஆகிய நாடுகள் இந்த மாத்திரைகளுக்குத் தடை விதித்து விட்டன.
எலும்பு, மூட்டுவலி, பல்வலி மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலவலிகளுக்கு நிவாரணியாக இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாம்.
கல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” மாத்திரைகளுக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்படுவது எப்போது? நன்றி:“டவுன் டூ எர்த்” – 2008
-----------------------------------
மற்ற பதிவுகளுக்கு:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment