**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைகள்.

>> Thursday, April 10, 2008

சிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைகள்.

சூஃபிகளைப் ( முல்லா நஸ்ருதீன்.) பொறுத்தவரை திருக்குர் ஆனின் இறை வசனங்கள் நேரடியான, எளிமையான, ஒரு பொருள் அர்த்தத்தை தருபவன அல்ல.

அவரவர் பக்குவத்தைப் பொறுத்து நாம் பல மட்டங்களில் வியாக்கியானப் படுத்திக் கொள்ள இயலுமான செறிவான அர்த்த தளங்களை கொண்டது இறை வசனங்கள் என்பர் சூஃபிக்கள்.

ஒருவர் நகைச்சுவையை தானே உருவாக்கி சிரித்துக் கொண்டிருக்க முடியாது. சிரிப்பை பகிர்ந்து கொள்ள, பற்ற வைக்க கூட ஒருவர் தேவை

‘கனவுகளுக்கும், நகைச்சுவைகளுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. கனவுகள் நமது ஆழ் மனதை தெரிவிக்கும். அது போல, பகுத்தறிவின் பிடி தளர்ந்த நிலையில் வார்த்தை களினால் நெய்யப்படும் நகைச்சுவைகளிலும் நம் ஆழ்மனம் எட்டிப் பார்க்கும்.

************************************

முல்லாவின் உடைவாள் *

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும்.முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு.

முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா ? என்று கேட்டார்.

“கள்வன் என்னை என்ன செய்வான் ? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ? “ என்றார் முல்லா.“கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும் ? “ என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்.“நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது ? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே ? “ எனக் கவலையுடன் கூறினார் முல்லா.

“கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் “ என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார்.

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.

“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.“அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் “ என்ற கள்வர்கள் மிரட்டினர்.

“கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா ? “ என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா.“ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார் முல்லா.

“என்ன யோசனை ? “ என்று கள்வர்கள் கேட்டனர்.“என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா ? “ என்றார் முல்லா.கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர்.

பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று “பிராயணம் எவ்வாறு இருந்தது” என விசாரித்தார்.“எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது” என்றார் முல்லா.

“வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா ? “ என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.“அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள்.நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச் சமாளித்து விட்டேன் “ என்றார் முல்லா.

“உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.“உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா ? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உடைவாள் என்னிடம் ஏது ? “ அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா. “கள்வனிடம் கொடுத்து விட்டீரா ?

அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
-----------------------------------------------
முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை
காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார்.

‘‘உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.
----------------------------------------------
ஒரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது.

விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ என்றார். முல்லா, ராஜாவிடம் ‘‘மிக ருசியாக இருந்தது’’ என்றார்.

ராஜா, ‘‘மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்’’ என்றார்.முல்லா கூடுதலாகவே, ‘‘நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ராஜா முல்லாவிடம், ‘‘ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.

‘‘உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸுக்கு அடிமை இல்லை’’ என்று முல்லா பதிலளித்தார்.
-----------------------------------------------------
முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.

முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.
--------

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது.

ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

‘‘முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் பாதசாரி ஒருவர்.‘‘மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்’’ என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ‘‘அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?’’ என்றார்.முல்லா கோபப்பட்டு, ‘‘எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?’’ என்றார்.
------------------------------------------------------
முல்லா சந்திப்பு

முல்லாவின் பால்யகால நண்பர் ஒருவர் திருமணத்திற்குச் செல்ல இருந்தார். அவரிடம் மேலே போர்த்திக் கொள்ள நல்ல சால்வை இல்லை.
முல்லாவிடம் வந்து முல்லா நான் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டும். போர்த்திக் கொள்ள நல்ல சால்வை என்னிடம் இல்லை. உனக்குப் பலபேர் பொன் னாடைகள் போர்த்தியிருப்பார்கள். அவற்றில் எனக்கு ஒன்று கோடு. திருமணத்திற்குப் போய் விட்டு வந்து திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றார் முல்லாவின் பால்ய நண்பர்.

முல்லாவும் பெட்டியை திறந்து நல்லதொரு சால்வையை எடுத்துத் தம் இளமைக் கால நண்பருக்குக் கொடுத்தார். அவரும் அதை அணிந்து கொண்டு திருமண வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பினார். அப்பொழுது முல்லா, நானும் அந்த வழியாகத்தான் செல்கிறேன். இருவரும் சேர்ந்தே செல்வோம் என்றhர்.

இருவரும் வீதியில் போய்க் கொண்டிருந்த பொழுது முல்லாவின் நண்பர்களில் ஒருவர் அப் பொழுது எதிர்ப்பட்டார். அவரிடம் முல்லா இவர் என்னுடைய இளமைக்கால நண்பர். இவர் அணிந்திருக்கும் சால்வை என்னுடையது தான் என்றார்.

இது முல்லாவின் நண்பருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. முல்லாவிடம் என்னை அறிமுகப்படுத்தியது ச‌ரி. சால்வை என்னுடையது அல்ல உங்களுடையது என்று ஏன் சொன்னீர்கள் அது என்னை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. இனிமேல் அதுபோல் சொல்லாதீர்கள் என்றார்.

முல்லாவும் தவறுக்கு வருந்துவதாக சொல்லி நண்பரிடம் மன்னிப்புக் கேட்டார். சற்று தூரம் சென்றதும் முல்லாவின் மற்றொரு நண்பர் எதிர்ப்பட்டார். அவாpடம் முல்லா இவர் என்னுடைய இளமைக் கால நண்பர். இவர் போர்த்திக் கொண்டிருக்கும் சால்வை என்னுடையது அல்ல என்றார்.

முல்லாவின் இந்த வார்த்தைகளும் அந்த நண்பருக்கு கோபத்தை வரவழைத்தது.

முல்லா இனி என்னை அறிமுகப்படுத்துவதுடன் நின்று கொள்ளுங்கள். சால்வையைப் பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள் என்றார் முல்லாவின் இளமைக் கால நண்பர்.

அப்படியே ஆகட்டும் என்றhர் முல்லா.
சற்று தூரம் சென்றதும் எதிரே மற்றெhரு நண்பர் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வந்ததும்- முல்லா அவாரிடம் இவர் என்னுடைய நண்பர்.. என்று ஆரம்பிக்கும்போதே முல்லாவின் இளமைக் கால நண்பர் சால்வையை கழட்டி எறிந்து விட்டு ஒரே ஓட்டமாக ஒடினார்.
-----------------------------------------

தரையில் படரும் மெல்லிய கொடியில் பெரிய பூசணிக்காய் காய்க்கிறது. அதைவிட பெரிய ஆலமரத்தில் போய், ஏன் சிறிய பழங்கள் காய்க்கின்றன என முல்லா யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மொட்டைத் தலையில் அந்த சிறிய பழம் உயரத்திலிருந்து விழுந்தும்,

அவர் தலை தப்பிப் பிழைக்க அவர் ஞானம் பெற்று இயற்கையின் ஒழுங்கை படைத்த இறைவனை தொழுத கதை எல்லோர் நினைவிலும் இருக்கும்.
-----------------------------------------------------
பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பைக் கொடுத்து விட்டு முல்லா வேகமாக ஓடுவார். ஏன் ஓடுகிறார்? என்று கேட்பவர்களுக்கு தனது இனிமை யான குரல் எவ்வளவு தூரம் போய்ச் சேருகிறது என்பதைக் கண்டறிவதற்காக ஓடுகிறேன் என்று பதில் சொல்லுவார் முல்லா.
---------------------------------------------
மீன்.

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார்.

முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் .

முல்லா ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார்.

முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.

முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா.

“நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.
---------------------------------
அதிர்ஷ்டமான மனிதன் முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர். முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா.

துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா. காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார். ‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.

CLICK TRHE FOLLOWING TO READ MORE .
முல்லா நசுருதீன் கதைகள்

http://tamizh2000.blogspot.com/2008/04/blog-post_7781.html

THANKS TO : tamil200.
---------------------------------
படிக்க:>>

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!

அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.

மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .
-----------------------------------------
முதலில் இந்த >> http://vanjoor-vanjoor.blogspot.com/
இணைப்பை தங்களின் Favorites / Book mark ல் குறித்துக் கொள்ளுங்கள் .
நன்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். வல்ல இறையவனின் அருளால் நவரசமான பதிவுகள் வளர்ந்து.... கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்..

படித்துவிட்டு சிரமம் பாராது கருத்துகளை தெரிவியுங்கள்.
----------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP