**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்படி பரவுகிறது? தற்காப்பது? சிகிச்சை, தடுப்பு முறைகள். அதிரடியான சந்தேகங்கள். பதில்கள்...

>> Thursday, April 3, 2008

காய்ச்சல் என்றால் என்ன? வகைகள், ஏன், எப்படி பரவுகிறது? தற்காப்பது? சிகிச்சை, தடுப்பு முறைகள். அதிரடியான சந்தேகங்கள். பதில்கள்...

காய்ச்சல் என்றால் என்ன? ஏன் வருகிறது? எப்படி எல்லாம் பரவுகிறது? தற்காத்துக் கொள்வது எப்படி? என்றெல்லாம் கேள்விக்கணைகளை, பொதுமருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பதினெட்டு வருடங்கள் அனுபவம் வாய்ந்த டாக்டர்.ஜி.எம்.ஹென்றியிடம் கேட்டோம்... இதோ அவர் அளித்த பதில்கள்...

பொதுவாக காய்ச்சல் என்றால் என்ன?

காய்ச்சல் என்பது ஒரு வியாதி அல்ல. கிருமி தாக்குதலின் அறிகுறி. அதாவது, பலவிதமான கிருமிகள் உங்கள் உடம்பைத் தாக்கியிருக்கிறது என்பதை கவனத்துக்கு ஈர்த்து உங்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் காய்ச்சல்.

காய்ச்சலில் எத்தனை வகைகள் உள்ளன? அவை என்னென்ன என்று கூறுங்களேன்?

இத்தனை வகை காய்ச்சல் இருக்கிறது என்றெல்லாம் வகை இல்லை. காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். பலவிதமான கிருமிதாக்குதலின் மூலம் காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. நெறைய காய்ச்சல் டி.பி, எய்ட்ஸ், கேன்சர் போன்ற வியாதிகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஆனால் பொதுவாக வைரஸ், பாக்டீரியா, மலேரியா (பாரசைட்) கிருமி தாக்குதலால்தான் அதிகமாக பாதிக்கப்பட்டு அவஸ்தை அடைகிறார்கள்.

எந்த வகையான காய்ச்சல் எப்படி எப்படியெல்லாம் பரவும்?

பெரும்பாலும் அதிகமான காய்ச்சல்கள் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குப் பரவும் வாய்ப்புக் குறைவுதான். இதில் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பவரிடம்தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், நெருங்கித் தொடும்போது மூச்சுக்காற்றின் மூலமும் பரவும் வாய்ப்பு உள்ளது. சாதாரண மூக்குச்சளி (Common Cold), , மூக்கிலிருந்து நீர்வருதல், சிலவகை உடம்புவலி, (FLU) மூட்டுவலிகள் இவ்வைரஸ் தாக்குவதால் ஏற்படலாம்.

அதுவே, பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்புக் குறைவு. இதில் டான்சிலைட்டிஸ் எனப்படும் த்ரோட் இன்ஃபெக்ஷன், லங்க்ஸ் இன்ஃபெக்ஷன், ஃபங்கர்ஸ் போன்ற பல விதமான கிருமிகள் அடங்கும்.

வைரஸ் ஃபீவருக்கு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்குச் சென்றால், பலவிதமான ஊசிமருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறார்களே?

வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஒரு சில வைரஸ் தாக்குதலின்போது ஏற்படும் உடம்புவலி, அசதி, உதடுகளில் சின்னச் சின்ன கொப்புளங்களுக்கு மருந்து மாத்திரைகள் மூலம் குணமாக்கலாம். மற்றபடி சாதாரண வைரஸ் காய்ச்சல் ஒரு வாரத்திற்குள்ளாக தானாகவே நின்றுவிடும்.

என் குடும்பத்திலுள்ளவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்து விட்டது. எனக்கும் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் பயப்படவே தேவையில்லை. டைஃபாய்டு கிருமி, பாதிக்கப்பட்டவரது மலத்தின் மூலம்தான் வெளிவரும். அந்த மலம் உங்கள் வயிற்றிற்குச் சென்றால்தான் பரவுமே தவிர, வேறு விதமாகப் பரவ வாய்ப்பில்லை. மேலும் ப்ளேக், வைரஸ் தொற்றுவகை நோய்கள்தான் பரவுமே தவிர, காய்ச்சல் பரவாது.

எந்தவிதமான நோய் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பாத்ரூமை நாம் பயன்படுத்தினால் நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளது?

வாந்தி, பேதி நோய் தவிர, வேறு எந்த நோயும் பாத்ரூம் பயன்படுத்துவதால் நோயாளியிடமிருந்து உங்களுக்குப் பரவாது. ஆனாலும் உங்கள் பாத்ரூமை மிகவும் சுத்தமாக பாதுகாப்போடு பயன்படுத்தினால் பரவும் வாய்ப்புக் குறைவு.

மூச்சுக்காற்றின் மூலமாகக்கூட நோய்கள், காய்ச்சல்கள் தொற்றும் வாய்ப்பு இருக்கிறதா?

டி.பி., நிமோனியா போன்ற ஒரு சில வியாதிகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. பாக்டீரியாவால் தொற்றும் டைஃபாய்டு காய்ச்சல் பரவாது.

சாப்பிட்டு வைத்த மிச்சத்தைச் சாப்பிடுவதால் நோய் பரவுமா?

பரவ வாய்ப்பில்லை.

கணவன்_மனைவி பாலுறவு வைத்துக் கொள்வதால் கணவனிடமிருந்து மனைவிக்கோ, மனைவியிடமிருந்து கணவனுக்கோ காய்ச்சல் தொற்றும் அபாயம் இருக்கிறதா?

பொதுவாக அதுபோன்ற சூழ்நிலையில் கணவன்_மனைவி ஈடுபடுவதில்லை. அப்படியே ஈடுபட்டாலும் காய்ச்சல் தொற்றாது.

பாதிக்கப்பட்டவரது சோப்பையும், ஆடையையும் பயன்படுத்தினால் காய்ச்சல் பரவுமா?

ஒருவேளை அவருக்குள்ள தோல் வியாதி ஏதேனும் உங்களுக்குத் தொற்றுமே தவிர சோப்பு + ஆடைகளைப் பயன்படுத்துவதால் தொற்றாது.

நான் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறேன். எனது தோழிக்கு டைஃபாய்டு உள்ளது. எனக்கும் தொற்றும் வாய்ப்புள்ளதா?

நிச்சயமாக உங்கள் தோழியின் மூலம் உங்களுக்கு டைஃபாய்டு தொற்றாது. டைஃபாய்டு பொதுவாக சுகாதாரமற்ற குடிதண்ணீர் மற்றும் உணவின் மூலம்தான் பரவும். அவர் எந்தமாதிரியான குடிநீர், உணவு உண்டு டைஃபாய்டால் பாதிக்கப்பட்டாரோ, அதே குடிநீரையும் உணவையும் சாப்பிட்டால் மாத்திரமே டைஃபாய்டு பரவும். அதனால் அவர் குடித்து விட்டு வைத்த தண்ணீரை குடித்ததால்தான் உங்களுக்கு பரவிவிட்டதோ என்று உங்கள் தோழியை சபித்து விடாதீர்கள்.

எனது காதலிக்கு டைஃபாய்டு காய்ச்சல் உள்ளது. எனவே அவளுக்கு நான் முத்தம் கொடுப்பதால் எனக்கும் தொற்றிக் கொள்ளுமா?

முத்தம் கொடுப்பதால் காய்ச்சல் பரவாது. தாராளமாக கொடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் காதலிக்கு மஞ்சள்காமாலை போன்ற ஒரு சில வியாதிகள் இருந்தால் அது முத்தம் கொடுக்கும்போது உமிழ்நீரின் மூலம் தொற்றிக் கொள்ளக் கூடும். உஷார்.

கொசுக்கள் மூலம் காய்ச்சல் பரவுமா?

டைஃபாய்டு, வைரஸ் காய்ச்சல்கள் பரவாது. அதுவே மலேரியா காய்ச்சல் பரவும் வாய்ப்பு உண்டு. அதாவது, எல்லாவகை கொசுக்களாலும் அல்ல. ஒரு சிலவகை கொசுக்களின் மூலம் பரவக்கூடும். புரியும்படி சொன்னால் மலேரியா கொண்ட கொசு உங்களை கடித்தால் உங்களுக்கும் மலேரியா தொற்றிக் கொள்ளும். அப்படியே அந்தக் கொசு மற்றொருவரை கடித்தால் அந்தக் கிருமி அவருக்கும் தொற்றிக் கொள்ளும்.

தும்மல், இருமல் மூலம் இம்மூன்று (வைரஸ், பாக்டீரியா மலேரியா) விதமான கிருமிகள் பரவி காய்ச்சல் தொற்றுமா?

அப்படி எல்லாம் காய்ச்சல் பரவுவதில்லை. ஒருவேளை டி.பி. போன்ற சுவாச நோய்கள் தும்மல், இருமல் மூலம் பரவ வாய்ப்பு உள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அலுவலகத்தில் என் எதிரிலேயே அமர்ந்திருக்கிறார். ஏ.சி. காற்று வேறு ஒரே ரூமில் சுற்றிச் சுற்றி குளிரூட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் எனக்கும், மற்றவர்களுக்கும் அவரிடமிருந்து காய்ச்சல் தொற்றுமா?

ஒரே ரூமின் ஏ.சி. யின் மூலமெல்லாம் காய்ச்சல் பரவாது. ஒருவேளை, சுத்தம் செய்யப்படாத ஏ.சி.யின் மூலம் நோய்கள் பரவும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்கு ஏ.சி.யினுள்ளே எலி செத்துக்கிடந்து அதன் மூலம் கூட நோய் பரவக்கூடும். மற்றபடி உங்கள் அலுவலக நண்பர் மூலம் காய்ச்சல் தொற்றாது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரது எச்சிலை அறியாமல் மிதித்து விட்டால் அவரிடமிருந்து காய்ச்சல் எனக்கும் தொற்றுமா?

எந்தக் ‘காய்ச்சலும்’ எச்சில் மூலம் பரவாது.

ஈக்கள் மூலம் எந்தவிதமான காய்ச்சல் பரவும்?

ஈக்கள் மூலம் காய்ச்சல் பரவாது. வாந்தி பேதி பரவ வாய்ப்புள்ளது. அதுவும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதும். பரவும் வாய்ப்பில்லை.

காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது எந்த வயதினர்?

வயது வித்தியாசமெல்லாம் இல்லை. கிருமி யாரைத் தொற்றுகிறதோ அவருக்கு காய்ச்சல் வரும்.

பக்கத்து வீட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களுக்கும் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. பாதுகாத்துக் கொள்ள வழி சொல்லுங்களேன்?

பக்கத்து வீட்டிலிருந்தெல்லாம் உங்களுக்கு காய்ச்சல் பரவாது. அவர்கள் எதன் மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணிகள் உங்களை காய்ச்சலுக்கு ஆழ்த்தலாம். குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் போதும்.

யார் இந்தக் காய்ச்சல் வந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எல்லோருமே ஜாக்கிரதையாக மருத்துவரின் ஆலோசனையோடு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவே வயதானவர்கள் என்றால் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது உத்தமம்.

எந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஈஸியாகத் தொற்றிக் கொள்ளும்?

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கேன்சர், கிட்னி மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தொற்றும் வாய்ப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

காய்ச்சல் வந்தவருக்கு உணவு எப்படி அமைய வேண்டும்?

பொதுவாகவே எண்ணெய், கார உணவுவகைகளை சாப்பிடக்கூடாது என்பார்கள்.

அது உண்மைதான். ஏனெனில் அப்படியே மீறிச் சாப்பிட்டாலும் உடம்பு இருக்கும் கண்டிஷனுக்கு ஏற்றுக் கொள்ளாமல் ‘வாமிட்’டாக வந்துவிடும். எனவே அதுபோன்ற நேரங்களில் ஐஸ் போடாத பழ ஜூஸ், கஞ்சி, இட்லி வகைகள் சாப்பிடுவது பெஸ்ட்.

எனது ரூமில் தங்கியிருக்கும் நண்பனுக்கு காய்ச்சல். நான்தான் கூட இருந்து கவனித்துக் கொண்டேன். எனக்கும் காய்ச்சல் வருவதுபோல தோன்றுகிறது. ஏதாவது ஆன்டிபயாடிக் போட்டுக் கொள்ளலாமா?

அப்படியெல்லாம் போடக்கூடாது. நோய் வந்துவிட்டது என டாக்டர்களின் பரிசோதனையில் தெரிய வரும்போதுதான் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலின் தீவிரம் அதிகரித்தால் உயிரிழப்பு ஏற்படுமா?

ஏற்படும் வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமான மலேரியா காய்ச்சல், வெயிலின் பாதிப்பு அதிகரித்து உடலைத் தாக்குதல், சில விதமான மூளைக் காய்ச்சல்கள் உயிருக்கு உலை வைத்துவிடும்.

சமீபத்தில் ஸ்டேன்லி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டது எந்தவிதமான காய்ச்சல்?

சிலவிதமான வைரஸ் கிருமிகளால் மூளை செயலிழந்து போய் விடுவதுதான். அதற்கான காரணங்கள், அதன் தன்மைகள் முழுமையாக ஆராய்ந்து அறிய முடியாத பட்சத்தில் மர்மமாக இருப்பதால் மர்மக்காய்ச்சல் என்ற பெயரைச் சூட்டி விடுகிறோம்.

காலரா, வயிற்றுப் போக்கு ஏற்படுவது எந்த விதமான காய்ச்சல்?

காலரா, வயிற்றுப் போக்கு என்பது கிருமிகளால் ஏற்படும் நோய். இவை காய்ச்சல் அல்ல.

என் மனைவிக்கு காய்ச்சல். அவள் சமைப்பதன் மூலம் எனக்கு காய்ச்சல் தொற்றுமா?

உணவு சுத்தமாக இல்லாததால் கிருமித் தொற்று ஏற்படுமே தவிர, உங்கள் மனைவி சமைத்துப் பரிமாறுவதால் காய்ச்சல் தொற்றாது.

சிக்கன் சாப்பிடுவதால் சிக்கன்குன்யா வருவதாக சொல்கிறார்களே, உண்மையா?

அது சிக்கன் குன்யா அல்ல. ‘சிக்குன் குனியா’. கிராமப்புறங்களில் இன்னமும் பலருக்கு இதுபோன்ற சந்தேகம் இருக்கிறது. இந்தக் காய்ச்சல் (பாரசைட்) மலேரியாக் கிருமிகளைக் கொண்ட ஒரு சில கொசுக்கள் கடிப்பதால் தொற்றிக் கொள்ளும்.

காய்ச்சல் வந்து விட்டால் சுடுதண்ணீரில்தான் மாத்திரை போடவேண்டுமா?

கட்டாயமில்லை. சுத்தமான குடிநீரில் மாத்திரை போட்டாலே போதும். ஆனால் சுத்தமான குடிநீர் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறதே. அதனால்தான் காய்ச்சிய குடிநீரில் மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

மர்மக் காய்ச்சல் என்பது எது? எப்படித் தெரிந்து கொள்வது?

சில வகை காய்ச்சல்கள் வாரக் கணக்கில் இருக்கும். ஏன் வந்தது? எப்படி வந்தது? என்ன காய்ச்சல் என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். இதுபோன்றச் சூழலில் பரிசோதனை மேல் பரிசோதனைகள் செய்ய வேண்டும். சாதாரணக் காய்ச்சல் முதல் உயிரைக் குடிக்கும் கொடிய விஷக் காய்ச்சல் வரை என பல விதங்களில் இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையும் சிகிச்சையும் மிகவும் மிக முக்கியம். சில காய்ச்சல்கள் காரணமே தெரியாமல் வரும். இப்படி மர்மமாக வரும் காய்ச்சலையே மர்மக் காய்ச்சல்கள் என்கிறோம்.

எனக்கு காய்ச்சல் இருக்கிறது. என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாஹீல் குழந்தைக்கும் காய்ச்சல் பரவுமா?

நிச்சயமாகப் பரவாது.

மழைக்காலங்களில்மட்டும், எங்குபார்த்தாலும் காய்ச்சல் பரவி மக்களை பயமுறுத்துகிறதே ஏன்?

க்ளைமேட் மாறுவது, தண்ணீர் மாசுபடுதல்அங்கங்கு இருக்கும் கிருமிகளை அடித்துக் கொண்டு வந்து ஒருங்கிணைத்து விடுகிறது.இதனால் மழை மற்றும் குளிர் காலங்களில் வைரஸ், பாக்டீரியா, மலேரியா போன்ற கிருமிகள் நன்கு வளர ஆரம்பித்து விடுகிறது. ஆனால்தான் இதை (Water Born disease)தண்ணீரால் பரவும் கிருமிகள் என்கிறோம்.

இதுபோன்ற நேரங்களில்தான் பாத்திரத்தில் உருளும்வரை தண்ணீர் நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.

சிலர் கொதிக்க வைத்த தண்ணீருடன் குளிர்ந்த நீரை கலந்து மிதமான சூட்டில் பருகுகிறார்களே அதனால் பாதிப்பா?

பாதிப்புதான். பலபேர் காய்ச்சிய குடிநீரை ஆற்ற சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு வேறு குளிர்ந்த தண்ணீரை கலந்து குடிக்கிறார்கள். அப்படி குடிப்பதால் குடிநீரைக் காய்ச்சியதின் பலனே இல்லை. ஏனெனில் காய்ச்சிய நீரோடு நார்மல் குடிநீரிலுள்ள கிருமிகள் சேர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தும்.

மூளைக்காய்ச்சல் என்பது எது?

டி.பி., பாக்டீரியா, வைரஸ், ஃப்ங்கர்ஸ், லெப்டோஸ்பைரா இதுபோன்ற கிருமிகளால் மூளை பாதிக்கப்படுவது.

செல்லப் பிராணிகளால் காய்ச்சல் தொற்றும் அபாயம் உள்ளதா?

தோல் வியாதிகள், அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படலாம்.

காய்ச்சல் தொற்றாது.

காய்ச்சல் அதிகமாக பரவுவது நகர்ப்புறமா? கிராமப்புறமா?

நகர்ப்புறத்தில்தான் கிருமி ஜாஸ்தி. ஆனால் நகர்ப்புற மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
உடல் வெப்ப நிலையானது சாதாரண அளவைவிட உயர்ந்து காணப்படும் நிலை காய்ச்சல் ஆகும். உடலின் சாதாரண வெப்பநிலை 30 டிகிரி அல்லது 98.4 டிகிரி ஆகும். இது பல ரோகங்களில் காணப்படும் ஒரு குணம்
(symptom)ஆகும்.

--இக்குணத்திற்கான ஆலோசனைகள்

சிறுபிள்ளைகட்கு அதிக காய்ச்சல் வலிப்பை
(Convulsion) ஏற்படுத்தும் என்பதால் வெப்பத்தைத் தணிக்கும் முகமாக சாதாரண நீரால் கழுவலாம்.

வலிப்பு ஏற்பட்டால் வலிப்பிலிருந்தான பாதுகாப்பு அவசியமாகின்றது.

இலகு ஆகாரங்களை உட்கொள்ளல் நன்று. (இடியாப்பம், இட்லி, பிஸ்கட்) நெருப்புக் காய்ச்சலாயின் நீராகாரம் நன்று.

காய்ச்சலுக்கு காரணம் கண்டறியப்பட்டு நிவர்த்திக்க வைத்தியருக்கு ஒத்துழையுங்கள்.

அதிக நீர் அருந்தலாம்.

ஓய்வு அவசியமாகின்றது.

தடுப்பூசியின் பின்பு ஏற்படும் காய்ச்சலாயின் அதற்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைச்
(ANTIBIOTIC) சாப்பிட வேண்டாம்.

சில சிறுவர்கள் இயற்கையிலேயே சிறிது சூடாக இருப்பர். அது காய்யச்சல் அல்ல. அதற்கு மருந்தும் தேவையற்றது.

சூலிடல் நேரத்தில் அதாவது முட்டையானது சூலகத்தில் இருந்து வெளியேறும் காலத்தில் மாதவிடாய் தொடங்கி 14_ம் நாள் பெண்கள் சிறிது சூடாக இருப்பர். அது காய்ச்சல் அல்ல.

மலேரியா காய்ச்சலில் விட்டுவிட்டுக் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல், நடுக்கம், வியர்த்தல் என்பன காணப்படும். வியர்வை ஆவியாக, காய்ச்சல் இன்றிய தோற்றப்பாடு காணப்படும். அதற்காக மருந்தைக் கைவிட வேண்டாம்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரை ஈரத்துணியால் சுற்றுவது கூடாது. காற்றோட்டமான ஆடைகளை அணிவது நன்று.

காய்ச்சலுடன் உள்ள வேறு நோய்க்கும் மருந்தெடுக்க வேண்டும்.

காய்ச்சலுக்கு பாரசிட்டமல் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கலாகாது. நோய்க்கு மருந்தெடுக்க வேண்டும். பாரசிட்டமல் தேவைக்கதிகமாய் கொடுப்பதால் சிறுநீரகத்தை (kidney) இழக்க வேண்டி ஏற்படலாம்.

உடலைக் குளிர்மையாக்கிகொள்ள, கொத்தமல்லி பற்படாகம் அவித்த நீர் பருகலாம்.

தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சலாயின் நபரைத் தனிமைப்படுத்த வேண்டும். குறிகுணங்களை கவனிக்க வேண்டும்.

காய்ச்சலுடன் ஏற்பட்ட நோய்களின் பின் போஷாக்குணவு வழங்க வேண்டும்.

காய்ச்சலின்போது உடல் வெப்பநிலையை இடையிடையே அளந்து கொள்ள முடியுமானால் வெப்பநிலை அட்டவணையைத் தயார் செய்க.

தைரோரொக்சிகோசிஸ் நோயாளிகளின் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். அதற்கு தைரொக்சினுக்கு எதிரான மருந்துகளை வைத்திய ஆலோசனையுடன் எடுப்பதே சிறந்தது. அது காய்ச்சல் அல்ல.

--டெங்கு Dengue)
Aedes Agepti எனும் கொசுவினால் பரப்பப்படும்
Aedes Agepti எனும் வைரஸால் ஏற்படுத்தப்படும் நோய் நிலையாகும்.

நோய்க்கான ஆலோசனைகள்

இந்நோயிலும் காய்ச்சல் ஏற்படும். இக்காய்ச்சலுக்கு ஆஸ்பிரின் கொடுக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்க.

இந்நோய்க்கு குறிகுண சிகிச்சையே கொடுக்கப்படும். நோய் தீர்க்க சிகிச்சை இல்லை.

இதில் தோற்றுவிக்கப்படும் Dengue haemorrhagic fever என்னும் நிலை மிகவும் அபாயமானது.

குறையாத காய்ச்சல் இருக்கும்போது உடன் மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்நோய்க்கு ஓய்வு முக்கியமானது.

இந்நோயில் நோய் சிகிச்சையைவிட நோய்த் தடுப்பிலேயே அதிக முக்கியத்துவம் தேவையாகும்.

நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தலாம் அல்லது புதைக்கலாம்.

பூச்சாடிகளுக்குள் சிறிது உப்பு நீரை விடலாம். ஏனெனில் உப்பு நீரில் கொசு வாழ மாட்டாது. மற்றும் தேக்கமடையும் நீரை அகற்றிக் கொள்ளல்.

நீர் வடிகால்களில் நீரோட்டத்தைத் தடை செய்யும் கழிவுகளை அகற்றிவிடலாம். ஏனெனில் ஓடும் நீரில் கொசு வாழமாட்டாது.

நீர் தங்கும் எல்லாவற்றையும் கவனத்திற்கு எடுக்கவும் (தண்ணீர்க் குழய்கள், தண்ணீர்த் தொட்டிகள்).

பாலித்தீன் பைகளின் பயன்பாட்டைக் குறைத்தலும் அவற்றைக் கண்டபடி வீசாது விடுதலும்.

சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

நோயாளியின் உடனடி வைத்தியசாலை அனுமதி அவரை Dengue Haemorrhagic Fever (DHF) (DH ல் இருந்து காப்பாற்றும்.

DH ல் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறின் தொடர்ச்சியான தீவிர விளைவுகளைத் தடுக்க முடியும்.

இந்நோய் நிலையில் அடிக்கடி வைத்தியரை மாற்ற வேண்டாம். அவ்வாறு மாற்றிக் கொள்ளும்போது சரியான சிகிச்சைக்கான காலதாமதம் அபாயகரமான நிலைமைக்கு இட்டுச் செல்லலாம்.

--தொற்று நோய்கள் (Infections Diseases)

ஒருவரில் இருந்து மற்றைய ஒருவருக்கு பரவக்கூடிய நோய்கள் இதனுள் அடக்கப்படும்.

பொதுவான ஆலோசனைகள்

கண்ணுக்குப் புலப்படாத வைரஸ், பாக்டீரியா, பங்கஸ் தொடக்கம் கண்ணுக்குப் புலப்படும் குடல் பூச்சிகள் வரை தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றது.

நோய்க் கிருமிகளாவது தோலினூடாகவும் சுவாசத்தினூடாகவும் உணவுடன் வாய் மூலமாகவும் சிறிஞ்சுகள் மூலமாகவும் இனப் பெருக்கப் பாதையூடாகவும் இவை மனிதனுள் நுழைகின்றன.

--தோலினூடாகப் பரவும் நோய்களாவன:

ஈர்ப்புவலி (Tetanus) விஷ நாய்க்கடி (Rabies), , குடல் பூச்சிகள், தொழு நோய் போன்றவை இதனுள் அடக்கப்படும். இதற்கு தோல் சுகாதாரம் முக்கியமாகின்றது.

--சுவாசத்தினூடாகப் பரவும் நோய்களாவன: காச நோய்(TB) , இருமல் ((Hiccough), , டிப்தீரியா (Diptheria) போன்றவை அமைகின்றது. இதற்கு நல்ல காற்றோட்டம் முக்கியமானது.

--உணவினூடாகப் பரவும் நோய்களாவன: நெருப்புக் காய்ச்சல் (Typhoid), சீதபேதி (Desentry), காலரா (Choleraஇளம்பிள்ளை வாதம் (Polio), , வைரஸ் காமாலை (Virus Hepatitis) போன்றவை இதனுள் காணப்படுகின்றன. இதற்கு உணவுப் பாதுகாப்பு முக்கியமானது. அத்துடன் கொதித்தாறிய நீரைப் பருகல் சிறந்தது.

இதர காரணங்களாலும் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. சிரிஞ் மூலம் (Aids, Hepatitis B Virus) போன்றவை ஏற்படலாம். பாலியல் தொடர்புகளால் சிபிலிஸ் (Syphilis), கொனோரியா (Gonorrhoea) போன்றவையும் தொடுகையின் பேறாக தலைப்பேன், சிரங்கு போன்றவையும் ஏற்படலாம்.

சிலவகை தொற்று நோய்கள் திடீரென ஒரு பிரதேசத்தில் ஏற்பட்டு தாக்கத்தை உண்டாக்கவல்லது. அவ்வாறானவற்றை (Epidermic Diseases) என்போம். அவ்வாறான பல நோய்கள் உள்ளன. அவ்வாறான நேரங்களில் மக்கள் மிகுந்த விழிப்புடனிருந்து தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் (உம். டெங்கு).

சிலவகை நோய்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொடர்ந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். அவ்வாறான நோய்களை (Endermic disease)
என்போம். (உ.ம்.: யானைக்கால் _ நீர்க்கொழும்பு) அவ்வாறான பிரதேசத்திற்கு செல்வோர் தடுப்பு மருந்துகளை முன்பு எடுக்கவும்.

சிலவகை நோய்கள் உலகம் பூராவும் தொடர்ந்து பரவிக் கொண்டேயிருக்கும். அவ்வாறானவற்றை pandermic diseases என்போம். (உ.ம். : (AIDS) அப்படியான நோய்களுக்கு தொடர்ந்து தடுப்பு முறைகளைப் பின்பற்றவும்.

தடுப்பு மருந்து எடுக்கும் திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு இடையிடையே அரசாங்கத்தால் வழங்கப்படும் தடுப்பு மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரத்தத்தானம் செய்ய முற்படுவோர் தமக்கு பாரதூரமான வருத்தங்கள் இருப்பின் அவற்றை முன்கூட்டியே தெரியப்படுத்துவது நன்று.

ஆடைகள் விஷயத்திலும் தோய்த்து உலர்ந்த ஆடைகளும் தன்னுடைய ஆடையையே அணிதலும் சிறப்பு. இதன் மூலம் தோல் நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்.

கால்நடைகளாலும் தொற்று நோய்கள் பரவுகின்றன. அவ்வாறு பரவும் நேரத்தில் கால்நடை வளர்ப்போரும் பண்ணைகளின் அண்மையாக வாழ்வோரும் கவனத்துடன் செயல்படவும். கால்நடைக்கு நோய் இருக்குமென சந்தேகிக்கும் நேரத்தில் கால்நடை வைத்தியரின் சேவையை நாடவும்.

நீர்த்தடாகத்தை நீராடப் பயன்படுத்தும்போது சில நோய்கள் பரவச் சந்தர்ப்பம் உண்டு. பயன்படுத்தாமல் விடுதல் நன்று. பயன்படுத்தும்போது நோயாளர் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. நீர்த் தடாகங்களில் சுத்தம் காத்தல் நன்று. (உ.ம்.: மெனிஞ்சிட்டிஸ் இவ்வாறு பரவுகிறது).

தொற்று நோய்களுக்கு நோயிருப்புக் காலம் உண்டு (Incubation Period)

அதாவது நோய்க் கிருமி தொற்றி அதன் முதல் குறிகுணம் தெரிவதற்கு இடைப்பட்ட காலம் இது. நோய்க்கு நோய் வேறுபடும். ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உணவில் விருப்பின்மை, வாந்தி, உடல் அசதி தென்படும். பின் மற்றைய குறிகுணங்கள் ஏற்படும்.

தொற்று நோய்களை பின்வரும் வகையில் சோதித்து அடையாளம் காணப்படும். (மலம் _ சீதபேதி (Decentry) இரத்தம் _ நெருப்புக்காய்ச்சல் (Typhoid) _ சளி (T.B.) வகைக்குரிய சோதனைகளால் அவை அடையாளம் காணப்படும்)

தொற்று நோய்களை ஒழிப்பதில் சிகிச்சையைவிட தடுப்பு முறைகளே சிறந்தவை ஆகும்.

--எல்லா நோயாளிகளுக்கும் பொதுவான விஷயங்கள்.

வைத்திய ஆலோசனைப்படி மருந்து எடுக்க வேண்டும்.

சில நோய்களுக்கு தொடர்ச்சியான சிரமமான மருந்து கொள்ளுதல் அவசியமானது. (உயர் குருதியழுத்தம், நீரிழிவு).

மருந்துடன் மதுபானம் பாவிக்க வேண்டாம்.

புகைத்தலையும் தவிர்க்க வேண்டும்.

காப்ஸ்யூல்களை சுடுநீருடன் உள்ளெடுக்க வேண்டாம்.

ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட நோய்களுக்காக இரு வேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருத்துவர்களுக்கு அதைத் தெரிவிக்காது மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.

நோயின் தாக்கம் அதிகரிக்கும் நேரத்தில் மருந்தின் அளவை வைத்திய ஆலோசனையின்றி அதிகரிக்க வேண்டாம். அதே நேரம் குறைக்கவும் வேண்டாம்.

மருந்துகளைத் திறந்து வைக்கவேண்டாம். கொள்கலனில் மூடிப் பாதுகாக்கவும்.

ஒரே கொள்கலனில் எல்லா மருந்துகளையும் இடவேண்டாம்.

காலவதியான (expired) மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

திரவ மருந்துகளில் வில்லைகளைக் கரைத்து குடிக்க வேண்டாம்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் தமது நிலைப்பாட்டை வைத்தியருக்கு தெரிவிக்கவும்.

மருந்துகளை குழந்தைகட்கு எட்டாதவாறு பாதுகாப்பாக வைக்கவும்.

நோயின் தாக்கத்தால் சுயநினைவு இழக்கக் கூடியவர்கள் தாம் நோயாளி என்பதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையைத் தம்முடன் வைத்திருக்கவும்.

NANDRI TO: KUMUDAM HEALTH.
------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP